என் மலர்tooltip icon

    கோயம்புத்தூர்

    • பொதுமக்கள் யானையின் பின் சென்று புகைப்படம் எடுக்கின்றனர்.
    • யானைகள் விவசாய நிலங்களில் புகுந்தால், வனத்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

    மேட்டுப்பாளையம்,


    மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் ஏராள மான யானைகள் உள்ளன. இதில், ஒரு ஆண் யானை மட்டும் கடந்த ஒரு ஆண் டாக மேட்டு ப்பாளையம், சிறுமுகை ஆகிய வனப்பகு திகளில் சுற்றி வருகிறது.

    இந்த ஆண் யானைக்கு பொதுமக்கள் பாகுபலி என்று பெயரிட்டு வருகி ன்றனர். இந்த யானை இதுவரை யாரையும் தொல்லை செய்யவில்லை. விவசாய நிலங்களுக்கு சென்று அதிகமான பயி ர்களை சேதம் செய்வதும் இல்லை. கடந்த ஒரு வாரமாக இந்த யானை, நெல்லி மலையில் இருந்து வெல்ஸ்புரம், சுக்கு காபி கடை, மேட்டுப்பாளையம் ஊட்டி சாலை, வனத்துறை மர டெப்போ, சிறுமுகை வனப்பகுதி ஆகிய பகுதி களில் சுற்றி வரு கிறது.

    பொதுமக்கள் குடியி ருப்பு பகுதி வழியாக பவானி ஆற்றுக்கு தண் ணீர் குடிக்க செல்கிறது. அதே போன்று மேட்டுப் பாளையம் வனப்பகுதி, ஊட்டி சாலையில் இந்த யானை கடந்து செல்கிறது.

    அப்போது பொது மக்கள் யானையின் முன் பும், பின்னுமாக சென்று மொபைல் போனில் புகை ப்படம் எடுக்கின்றனர். சிலர் சத்தமிட்டு விரட்டு கின்றனர். இதனால் கடந்த சில நாட்களாக அமைதி யாக சென்று வந்த இந்த யானை, தற்போது ஆக் ரோஷமாக சென்று வருகிறது.

    இதுகுறித்து மேட்டுப்பாளையம் வனச்சரக அலுவலர் ஜோசப் ஸ்டாலின் கூறியதாவது:-

    மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் ஆண் யானை ஒன்று சாலை யிலும், குடியிருப்பு பகுதியிலும் சுற்றி வருகிறது. இந்த யானை மிகவும் சாதுவாக உள்ளதால் யாரும் அதை துன்புறுத்தவும், விரட்டவும் வேண்டாம். விரட்டும் நடவடிக்கையில் ஈடுபடு பவர்கள் யானைக்கு தொல்லை கொடுத்தால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

    எனவே, யானைகள் விவசாய நிலங்களில் புகுந்தால், உடனடியாக வனத்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 5 வயதுக் குட்பட்ட குழந்தைகளின் இறப்பு 10 சதவீதம் வயிற்றுப் போக்கினால் ஏற்படுகிறது
    • 5 வயதுக்குட்பட்ட 3.17 லட்சம் குழந்தைகள் பயன்பெறுவார்கள்.

    கோவை,

    கோவையில் இன்று முதல் வருகிற 25-ந் தேதி வரை தீவிர வயிற்றுப ்போக்கு தடுப்பு முகாம் நடைபெற உள்ளதாக சுகாதாரத்துறை துணை இயக்குநர் அருணா தெரி வித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்ப தாவது:-

    இந்தியாவில் 5 வயதுக் குட்பட்ட குழந்தைகளின் இறப்பு 10 சதவீதம் வயிற்றுப் போக்கினால் ஏற்படுகிறது. நிமோனியாவுக்கு அடுத்தப்படியாக இது ஒரு பொது சுகாதார பிரச்சினை ஆகும்.

    நம் நாட்டில் ஆண்டுக்கு சுமார் 1 லட்சம் குழந்தைகள் வயிற்றுப்போக்கினால் இறந்து போகிறார்கள். இதனை கருத்தில் கொண்டு தமிழக அரசு 'இரு வார கால தீவிர வயிற்றுப் போக்கு தடுப்பு முகாம் நடத்த திட்டமிட்டுள்ளது. ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளில் வயிற்றுப் போக்கினால் ஏற்படும் மரணத்தை முற்றிலும் தவிர்ப்பதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கம் ஆகும்.

    இத்திட்டமானது கோவை மாவட்டத்தில் இன்று முதல் அங்கன்வாடி மையங்கள், துணை சுகாதார நிலையங்கள், அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவ மனைகளில் நடைபெறும். பொது சுகாதார துறை. பள்ளி கல்விதுறை மற்றும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம் உள்ளிட்ட அனைத்து துறைகளை சார்ந்த களப்பணி யாளர்கள் மற்றும் மேற்பா ர்வையாளர் கள் இந்த பணியில் ஈடுபடு வார்கள்.இம்முகாமில் அங்கன் வாடி பணியா ளர்கள் மற்றும் சுகாதார செவிலி யர்கள், சுகாதாரத்தின் முக்கியத்துவத்தை பயிற்று விப்பார்கள். ஐந்து வயதுக் குட்பட்ட குழந்தை கள் உள்ள குடும்பங்களுக்கு ஒரு ஓஆர்எஸ் பொட்டலம் (குழந்தைக்கு ஒன்று வீதம்) விநியோகிப்பார்கள்.

    மேலும், வயிற்றுப் போக்கு உள்ள குழந்தை களை கண்டுபிடித்து ஓஆர் எஸ் மற்றும் ஜிங்க் மாத்திரை அளித்து அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு பரிந்துரை செய்வார்கள். இத்திட் டத்தின் மூலம் ஐந்து வயதுக் குட்பட்ட 3.17 லட்சம் குழந்தைகள் பயனடைய உள்ளனர்.

    • 2 பேரும் 24-ந் தேதி பெற்றோருக்கு தெரியாமல் திருமணம் செய்தனர்.
    • புதுமண தம்பதி வெளியே சென்று விட்டு வீட்டிற்கு நடந்து வந்தனர்.

    கோவை,

    ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை சேர்ந்தவர் 25 வயது வாலிபர். கூலித் தொழிலாளியான இவர் துடியலூரில் உள்ள தனி யார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.

    அப்போது இவருக்கும், சூலூர் ஜெர்மன் கார்டனை சேர்ந்த 23 வயது பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இவர்கள் 2 பேரும் கடந்த 6 ஆண்டு களாக ஒருவரை ஒருவர் தீவிரமாக காதலித்து வந்தனர். இந்த காதல் விவகாரம் பெண்ணின் வீட்டிற்கு தெரிய வரவே அவரது பெற்றோர் காத லுக்கு எதிர்ப்பு தெரிவி த்தனர்.

    கடந்த மாதம் 15-ந் தேதி இளம்பெண் தனது பெற்றோரிடம் வேலைக்கு செல்வதாக கூறி விட்டு சென்றார். ஆனால் அவர் வேலைக்கு செல்லாமல் தனது காதலனுடன் சென்றார்.

    இதுகுறித்து அவரது பெற்றோர் தனது மகளை மீட்டு தரும்படி சூலூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் இளம்பெண்ணை தேடி வந்தனர்.

    போலீசார் தேடு வதை அறிந்த காதலர்கள் போ லீஸ் நிலையத்தில் ஆஜ ரானார்கள். அவர்களிடம் போலீசார் நடத்திய விசார ணையில் 2 பேரும் கடந்த மாதம் 24-ந் தேதி பெற்றோ ருக்கு தெரியாமல் திரும ணம் செய்தது தெரிய வந்தது.

    பெண்ணின் பெற்றோர் அவரை தங்களுடன் வரு மாறு அழைத்தனர். ஆனால் அவர் வர மறுத்து தனது காதலனுடன் சென்றார். பின்னர் 2 பேரும் சூலூர் பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து வசித்து வந்தனர்.

    கடந்த 3-ந் தேதி புதுமண தம்பதி வெளியே சென்று விட்டு வீட்டிற்கு நடந்து சென்றனர்.

    சூலூரில் உள்ள ஏ.டி.எம். மையம் அருகே சென்ற போது பெண்ணிடம், அந்த வாலிபர் தனது தாய்க்கு உடல் நிலை சரியில்லை என்றும், எனவே நான் உடனடியாக ஊருக்கு செல்ல வேண்டும் என கூறி விட்டு சென்றார்.

    அதன் பின்னர் அவர் மீண்டும் திரும்பி வர வில்லை. அவரது செல்போ னுக்கு தொடர்பு கொண்ட போது அது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. அவர் எங்கு சென்றார் என்பது தெரியவில்லை. வாலிபர் அவரது காதலி யை திருமணம் செய்த 10-வது நாளில் ரோட்டில் தவிக்க விட்டு சென்றார்.

    இதுகுறித்து அவர் தனது பெற்றோரிடம் கூறி கதறி அழுதார். அவர்கள் சூலூர் போலீசில் புகார் செய்தனர்.

    புகாரின் பேரில் காதல் மனைவியை நடுரோட்டில் தவிக்க விட்டு சென்ற வாலிபரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    • 2 நாட்களாக பருவமழை பெய்து வருவதால் அணையின் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
    • அணையில் இருந்து குடிநீருக்காக 10 கோடி லிட்டர் தண்ணீர் எடுக்கப்பட்டு வந்தது.

    கோவை,

    கோவை மாநகரில் 26 வார்டுகள், 20-க்கும் மேற்ப ட்ட நகரையொட்டிய கிரா மங்களுக்கு நீராதார மாக சிறுவாணி அணை விளங்கு கிறது. 49.50 அடி கொள்ள ளவு கொண்ட இந்த அணையில் இருந்து குடிநீருக்காக 10 கோடி லிட்டர் தண்ணீர் எடுக்கப்ப ட்டு வந்தது.

    வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்ததால் கட ந்த பிப்ரவரி மாதத்தின் இறுதியில் அணையின் நீர்மட்டம் படிப்படியாக குறையத் தொடங்கியது. ஏப்ரல், மே மாதங்களில் அணையின் நீர்மட்டம் 5 அடிக்கு கீழ் குறைந்தது.

    இந்நிலையில் கேரளத்தில், தற்போது தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், சிறுவாணி அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த 2 நாள்களாக 15 மி.மீ முதல் 20 மி.மீ வரை மழை பெய்து வருகிறது. இதனால் அணைக்கு செல்லும் முக்தியாறு, பட்டியலாற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ள்ளது.

    இது குறித்து மாநகராட்சி ஆணையர் பிரதாப் கூறியதாவது:-

    சிறுவாணி அணையின் நீர்மட்டம் வெகுவாக குறை ந்தாலும் சிறுவாணியில் உள்ள பழமையான தடுப்ப ணையில் 3 அடிக்கு உள்ள தண்ணீர் மூலம் குடிநீர் விநியோகம் தடைபடாமல் வழங்க ஏற்பாடு செய்யப்ப ட்டது. தற்போது கேர ளத்தில் பருவமழை தொ டங்கி யுள்ளதால் அணை யின் நீர்மட்டம் உயரத் தொடங்கியுள்ளது. வரும் நாள்களில் பருவ மழை தீவிரமடைந்து அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்தால் குடிநீருக்காக எடுக்கப்படும் நீரின் அளவு அதிகரி க்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

    • வீடுகளுக்கு மின் கட்டண உயர்வு இல்லை.
    • தமிழகத்தில் எங்குமே மின் தடை என்பது இல்லை.

    கோவை:

    கோவை மேட்டுப்பாளையம் ரோடு எம்.ஜி.ஆர் மார்க்கெட்டில் மூலதன மானிய நிதி திட்டத்தின் கீழ் ரூ.3.7 கோடி மதிப்பில் புனரமைத்தல் மற்றும் கூடுதல் அபிவிருத்தி பணிகளை அமைச்சர் செந்தில்பாலாஜி தொடங்கி வைத்தார்.

    பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கோவை மாநகராட்சி பகுதிகளில் பழுதடைந்த சாலைகளை சீரமைக்க முதலமைச்சர் ரூ.200 கோடி சிறப்பு நிதி ஒதுக்கினார்.

    தற்போது அந்த நிதியின் மூலம் பணிகள் நடைபெற்று வருகிறது. பல்வேறு இடங்களில் சாலை பணிகள் நிறைவுற்று அவை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இன்று ரூ.71 கோடி மதிப்பீட்டில் சாலை அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.

    மின்கட்டண உயர்வை பொருத்தவரை தமிழக அரசு மிக தெளிவான விளக்கம் கொடுத்து விட்டது. அதன்படி வீடுகளுக்கு மின் கட்டண உயர்வு இல்லை. மேலும் விசைத்தறி, கைத்தறி, விவசாயத்திற்கு வழங்கப்பட்டும் வரும் இலவச மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும். வணிக நிறுவனங்களுக்கு வழங்கப்படும் மின் கட்டணத்தில் மட்டுமே சிறிய அளவிலான மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    அந்த மாற்றத்தையும், மத்திய அரசின் அறிவுறுத்தலின் படியே மின்சார ஒழுங்கு முறை ஆணையம் மாற்றம் செய்துள்ளது.

    மின்வெட்டு தொடர்பாக ஓ.பி.எஸ். அறிக்கை வெளியிட்டு இருக்கிறார். நான் கேட்கிறேன் ஓ.பி.எஸ். வீட்டில் மின் தடை ஏற்பட்டதா? அல்லது அவரது தோட்டத்தில் மின் தடை ஏற்பட்டதா?.

    தமிழகத்தில் எங்குமே மின் தடை என்பது இல்லை. சீராக மின் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. ஓ.பி.எஸ் தானும் இருக்கிறேன் என்பதை காட்டி கொள்வதற்காகவே அறிக்கைகளை வெளியிட்டு வருகிறார்.

    அரசியலுக்காகவும், அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே தமிழகத்தில் மின்தடை உள்ளது என குற்றச்சாட்டுகளை சொல்லி வருகிறார்கள்.

    சென்னை விமான நிலையத்தில் அமித் ஷா வருகையின் போது ஏற்பட்ட மின்தடை என்பது எதிர்பாராத வகையில் நடந்த நிகழ்வு. அதுவும் உடனடியாக சரி செய்யப்பட்டு விட்டது.

    எனவே எதில் அரசியல் செய்ய வேண்டும் என்பதை மறந்து எதை வேண்டுமானாலும் அரசியல் செய்யலாம் என நினைப்பவர்களின் எண்ணம் திராவிட மண்ணில் எடுபடாது.

    பா.ம.க தலைவர் அன்புமணி, மது விற்பனையில் ரூ.2 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறுகிறார். தமிழகத்தில் ஆண்டிற்கே ரூ.45 ஆயிரம் கோடிக்கு தான் மது விற்பனை நடக்கிறது. அப்படி இருக்கும் போது எப்படி ரூ.2 லட்சம் கோடி இழப்பு ஏற்படும்.

    புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி போன்றோர் பாராளுமன்ற தேர்தலில் ஒரு சீட் வாங்குவதற்காகவே சில கருத்துக்களையும், அறிக்கைகளையும் வெளியிட்டு வருகிறார்கள். அவர்களுக்கு மக்கள் நலனில் எந்த அக்கறையும் கிடையாது.

    இப்படி அறிக்கை விடுபவர்கள் மக்கள் நலன் சார்ந்த குற்றச்சாட்டுகளை வைத்தால் அரசு பரிசீலித்து நடவடிக்கை எடுக்கும். மற்றபடி அரசியலுக்காக சொல்லப்படும் கருத்துகளை யாரும் பொருட்படுத்த தேவையில்லை.

    வருமான வரித்துறை அதிகாரிகள் என் வீட்டிற்கு வரவில்லை. வருமான வரித்துறை சோதனைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கப்பட்டது. அதிகாரிகள் கேட்ட அனைத்து ஆவணங்களையும் சோதனை நடைபெற்ற இடத்தில் இருந்தவர்கள் கொடுத்துள்ளனர். கூடுதல் ஆவணங்கள் கேட்டாலும் அவர்கள் சமர்ப்பிக்க தயாராக உள்ளார்கள்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    பேட்டியின் போது மாவட்ட கலெக்டர் கிராந்தி குமார்பாடி, மேயர் கல்பனா, மாநகராட்சி கமிஷனர் பிரதாப், தி.மு.க. மாவட்ட செயலாளர் கார்த்திக் மற்றும் பலர் இருந்தனர்.

    • நகை வியாபாரியிடம் பணம் பறித்த கும்பல் யார் எந்த ஊரை சேர்ந்தவர்கள் என்பது குறித்து விசாரணை நடத்தினர்.
    • குட்டி, மீனா, பாண்டியன், அழகர்சாமி, சவுமியன், கவாஸ்கர் ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

    பொள்ளாச்சி:

    கோவை தெலுங்குபாளையத்தை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது44). இவர் தங்க நகை வாங்கி விற்கும் தொழில் செய்து வருகிறார். பிரகாசுக்கு வங்கி மேலாளர் ஒருவரின் மூலமாக பொள்ளாச்சியை சேர்ந்த குட்டி என்பவர் அறிமும் ஆனார்.குட்டி தன்னை ரியல் எஸ்டேட் செய்து வருவதாக பிரகாஷிடம் அறிமுகப்படுத்தி கொண்டார்.

    சம்பவத்தன்று பிரகாஷை குட்டி செல்போனில் தொடர்பு கொண்டார். அப்போது, தனக்கு தெரிந்த நபரிடம் ரூ.1 கோடிக்கு 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் உள்ளது.அதனை தங்க நகை விற்பனை தொழிலில் கைமாற்றி விட்டு விட்டு, உங்களுக்கான கமிஷனை எடுத்து கொண்டு, ரூ.85 லட்சத்துக்கு 500 ரூபாய் நோட்டுகளை மட்டும் திரும்ப தந்தால் போதும் என தெரிவித்தார்.

    கூடுதலாக 500 ரூபாய் நோட்டுகள் கொடுத்தாலும், அதை விட அதிக தொகைக்கு 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை தருவதாகவும் கூறினார். இதற்கு பிரகாசும் மாற்றி தருவதாக ஒப்புக்கொண்டார். மேலும் பணத்தை பொள்ளாச்சியில் மாற்றிக்கொள்ளலாம் என திட்டமிட்டனர்.

    அதன்படி சம்பவத்தன்று மாலை பிரகாஷ் தனது டிரைவர் மற்றும் வங்கி மேலாளருடன் தனது காரில் தன்னிடம் 500 ரூபாய் நோட்டுகளாக இருந்த ரூ.1 கோடியே 27 லட்சத்து 50 ஆயிரத்தை எடுத்து கொண்டு பொள்ளாச்சிக்கு சென்றார். அங்கு குட்டி மற்றொரு காரில் வந்தார். அந்த காரில் அவருடன் பெண் உள்பட 2 பேர் இருந்தனர்.

    காரை விட்டு இறங்கிய குட்டி, இவர்களிடம் தான் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் உள்ளது. அவர்கள் அம்பாரம்பாளையத்தில் நிற்பார்கள். அங்கு சென்று மாற்றி கொள்ளலாம் என பிரகாஷிடம் தெரிவித்தார்.

    இதையடுத்து அவர்கள் அனைவரும் ஆள்நடமாட்டம் இல்லாத இடத்திற்கு சென்றனர். அங்கு ஏற்கனவே காத்திருந்த 2 பேருடன் மேலும் 4 பேர் இருந்தனர்.

    அவர்களிடம் 500 ரூபாய் நோட்டுகளை காட்டும்படி பிரகாஷிடம் குட்டி தெரிவித்தார். அவரும் பணத்தை காட்டினார். அப்போது திடீரென பணத்தை மாற்ற வந்த கும்பல், பிரகாஷ் மற்றும் அவருடன் வந்த டிரைவர் ஆகியோரை தாக்கி விட்டு அவரிடம் இருந்து ரூ.1¼ கோடி பணத்தை பறித்து விட்டு காரில் தப்பினர்.

    இதுகுறித்து பிரகாஷ் ஆனைமலை போலீசில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, நகை வியாபாரியிடம் பணம் பறித்த கும்பல் யார் எந்த ஊரை சேர்ந்தவர்கள் என்பது குறித்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில், நகை வியாபாரியிடம் பணம் பறித்தது பொள்ளாச்சியை சேர்ந்த குட்டி என்ற சின்னகுட்டி (43) மற்றும் அவரது கூட்டாளிகளான திண்டுக்கல் நிலக்கோட்டையை சேர்ந்த மீனா (38), தேனி பெரியகுளத்தை சேர்ந்த பாண்டியன் (52), தேவதாசன்பட்டி அழகர்சாமி (45), மதுரையை சேர்ந்த சவுமியன் (29), கவாஸ்கர் (26) ஆகியோர் என்பது தெரியவந்தது.

    இதில் குட்டி இவர்களுக்கு தலைவனாக செயல்பட்டுள்ளார். இவர் தான், தங்க நகை வியாபாரியான பிரகாஷிடம் அதிக பணம் இருப்பதை அறிந்து அதனை பறிக்க திட்டம் தீட்டியுள்ளார்.

    அதன்படி 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்றி தாருங்கள் என கேட்டு, அவரிடம் உள்ள பணத்தை பறித்து விடலாம் என கூறியுள்ளார். இதற்கு அவர்களும் சம்மதித்தனர். அதன்படி பிரகாசை வரவழைத்து, பணத்தை பறித்து சென்றது தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் அவர்களை தேடி வந்தனர். இந்த நிலையில் பொள்ளாச்சி பகுதியில் பதுங்கி இருந்த குட்டி, மீனா, பாண்டியன், அழகர்சாமி, சவுமியன், கவாஸ்கர் ஆகிய 6 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது. இந்த சம்பவத்தில் இவர்களை தவிர வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா? என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கடந்த சில நாட்களுக்கு முன்பு காதலனின் பெற்றோர் மாணவியை பெண் கேட்டு வீட்டிற்கு வந்தனர்.
    • இது குறித்து மாணவியின் பெற்றோர் மேட்டுப்பாளையம் போலீசில் புகார் அளித்தனர்.

    கோவை,

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் 19 வயது மாணவி. இவர் காரமடையில் உள்ள அரசு கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

    கடந்த ஒரு மாதங்களுக்கு முன்பு மாணவிக்கு இன்ஸ்டாகிராம் மூலமாக சேலத்தைச் சேர்ந்த வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது காதலாக மாறியது.

    2 பேரும் செல்போனில் அடிக்கடி பேசி தங்களது காதலை வளர்த்து வந்தனர். இந்த காதல் விவகாரம் மாணவியின் பெற்றோருக்கு தெரிய வரவே அவர்கள் தங்களது மகளை கண்டித்தனர். அப்போது அவர்களிடம் மாணவி தான் இனிமேல் காதலனுடன் பேச மாட்டேன் என கூறினார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு காதலனின் பெற்றோர் மாணவியை பெண் கேட்டு வீட்டிற்கு வந்தனர்.

    ஆனால் மாணவியின் பெற்றோர் மறுப்பு தெரிவித்து விட்டனர். சம்பவத்தன்று மாணவி தனது பெற்றோரிடம் கல்லூரிக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றார். ஆனால் நீண்ட நேரம் ஆகியும் அவர் வீட்டுக்கு திரும்பி வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த பெற்றோர் அக்கம் பக்கத்தில் தேடினர்.

    அப்போது மாணவி தனது இன்ஸ்டாகிராம் காதலனுடன் ஓட்டம் பிடித்தது தெரியவந்தது. இது குறித்து மாணவியின் பெற்றோர் மேட்டுப்பாளையம் போலீசில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவியை தேடி வருகின்றனர்.

    • இளம்பெண்ணுக்கு அதே பகுதியைச் சேர்ந்த வாலிபர் ஒருவருடன் செல்போன் மூலமாக பழக்கம் ஏற்பட்டது.
    • இது குறித்து கணவர் மாயமான தனது மனைவியை கண்டுபிடித்து தரும்படி ஆழியாறு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    கோவை,

    கோவை மாவட்டம் ஆழியாறு அருகே உள்ள அங்காளக்குறிச்சியை சேர்ந்தவர் 19 வயது இளம்பெண். இவருக்கு திருமணம் ஆகி 1 ½ வயதில் பெண் குழந்தை உள்ளது.

    இந்த நிலையில் இளம்பெண்ணுக்கு அதே பகுதியைச் சேர்ந்த வாலிபர் ஒருவருடன் செல்போன் மூலமாக பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது.

    இளம் பெண் கணவர் வீட்டில் இல்லாத நேரத்தில் தனது கள்ளக்காதலனை வீட்டிற்கு அழைத்து அவருடன் ஜாலியாக இருந்து வந்தார். இந்த கள்ளக்காதல் விவகாரம் அக்கம் பக்கத்தினர் மூலமாக இளம் பெண்ணின் கணவருக்கு தெரிய வந்தது. இதனையடுத்து அவர் தனது மனைவியை கண்டித்தார்.

    இதன் காரணமாக கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்த இளம்பெண் தனது 1 ½ வயது குழந்தையை தூங்க வைத்துவிட்டு கள்ளக்காதலுடன் ஓட்டம் பிடித்தார். வீட்டிற்கு திரும்பிய கணவர் மனைவி வீட்டில் இல்லாதது கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அவர் இது குறித்து மாயமான தனது மனைவியை கண்டுபிடித்து தரும்படி ஆழியாறு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து 1 ½ வயது குழந்தையை தவிக்க விட்டு கள்ளக்காதலுடன் ஓட்டம் பிடித்த இளம்பெண்ணை தேடி வருகின்றனர்.

    • 2022-23 நிதியாண்டில் இதுவரை இல்லாத அளவில் அதிகபட்சமாக ரூ.1,34,630 கோடியாக அதிகரித்துள்ளது.
    • ஊரகப் பகுதிகளில் 9,54,899 புதிய வேலைவாய்ப்புகளை காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையம் உருவாக்கியுள்ளது.

    கோவை,

    பிரதமர் நரேந்திரமோடி தலைமையின் கீழ் 'தற்சார்பு இந்தியா திட்டத்தை' புதிய உயரத்திற்கு கொண்டு செல்லும் வகையில், காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையம் வலுவான இந்தியாவின் தோற்றத்தை உலக நாடுகள் முன்வைத்துள்ளது.

    சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் முதன் முறையாக, காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையப் பொருட்களின் விற்பனை ரூ.1.34 லட்சம் கோடியைக் கடந்து சாதனை படைத்துள்ளது.

    ஊரகப் பகுதிகளில் வசிக்கும் கைவினைஞர்களால் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட காதி பொருட்களின் விற்பனை, கடந்த 9 ஆண்டுகளில் 332 சதவீதம் என்ற இமாலய வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.

    2013-14 நிதியாண்டில் ரூ.31,154 கோடியாக இருந்த இந்த ஆணைய பொருள்களின் விற்பனை, 2022-23 நிதியாண்டில் இதுவரை இல்லாத அளவில் அதிகபட்சமாக ரூ.1,34,630 கோடியாக அதிகரித்துள்ளது.

    அதேபோல ஊரகப் பகுதிகளில் 9,54,899 புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கி காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையம் மற்றொரு புதிய சாதனையையும் படைத்துள்ளது.

    "மகாத்மா காந்தியால் எழுச்சி பெற்று, பிரதமர் நரேந்திரமோடி மற்றும் நாட்டின் கடைகோடி கிராமங்களில் உள்ள கைவினைக் கலைஞர்களின் அயராத கடின உழைப்பினால் இந்த சாதனை நிகழ்ந்துள்ளது.

    உள்ளூர் பொருட்களுக்கு குரல் கொடுத்தல் மற்றும் 'மேக் இன் இந்தியா' ஆகிய திட்டங்களின் மீது நாட்டு மக்கள் கொண்டுள்ள நம்பிக்கைக்கு இது ஒரு சான்றாகும்." என்று ஆணையத்தின் தலைவர் மனோஜ் குமார் தெரிவித்தார்.

    மேலும் அவர் கூறுகையில்," மத்தியில் மோடி அரசின் 9 ஆண்டு கால ஆட்சியில், காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையத்தின் முயற்சியோடு காதி தயாரிப்புகளுக்கு புதிய வாழ்வு அளிக்கும் வகையில் 'தன்னிறைவிலிருந்து வளம்' என்பதை வலியுறுத்தி 9 சாதனைகள் படைக்கப்பட்டுள்ளன" என்றார்.

    • கருத்தரங்கை பொள்ளாச்சி எம்.பி.சண்முகசுந்தரம் தொடங்கிவைத்தார்.
    • மண்ணின் தன்மையை அறிந்து பயிரிட்டால் விளைச்சல் அதிகரிக்கும்,

    பொள்ளாச்சி,

    வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை, பொள்ளாச்சி தொழில் வர்த்தக சபை சார்பில் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கான கருத்தரங்கு பொள்ளாச்சியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்றது.

    கருத்தரங்கை பொள்ளாச்சி எம்.பி.சண்முகசுந்தரம் தொடங்கிவைத்தார். சப்-கலெக்டர் பிரியங்கா, வேளாண் வணிகத்துறை இயக்குநர் பெருமாள்சாமி, மாவட்ட தொழில்மைய பொது ேமலாளர் திருமுருகன், பொள்ளாச்சி தொழில் வர்த்தக சபைத் தலைவர் ஜி.டி. கோபாலகிருஷ்ணன், சக்தி குழுமங்களின் தலைவர் ம.மாணிக்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். விழாவில் கலெக்டர் கிராந்திகுமார் பாடி பேசியதாவது:-

    சிறுதானிய பொருள்களுக்கு சர்வதேச அளவில் வரவேற்பு உள்ளது. கோவையில் சிறுதானியங்களால் ஆன பொருள்களை விவசாயிகள் உற்பத்தி செய்யும் போது வர்த்தக ரீதியான பயன்கள் கிடைக்கும்.

    உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் உற்பத்தி செய்யும் பொருட்களுக்கு என்று தனித்தன்மையினை உருவாக்குதல், சந்தைப்படுத்துதல், தொழில் நுட்பங்களை புகுத்துதல் உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள தேவையான உதவிகள் முதல் 3 ஆண்டுகளுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.

    சில விவசாயிகள் 40 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரே நிலத்தில் ஒரே விதமான பயிரினை விளைவித்து வருகின்றனர். இதனால் மண்ணின் வளம் பாதிக்கப்படுவதுடன், போதுமான விளைச்சலும் இருக்காது.

    மண்ணின் தன்மையை அறிந்து பயிரிட்டால் விளைச்சல் அதிகரிக்கும், அதிகமான உற்பத்தி, சந்தைப்படுத்துதல் போன்றவற்றில் புதிய தொழில்நுட்பங்களை புகுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • சுடலைகுட்டி பொதுமக்கள் நோயாளிகள் வந்து செல்லக்கூடிய இடம். இங்கு வேகமாக செல்லாமா என கேட்டார்.
    • இது குறித்து ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் ஜெயிலில் அடைத்தனர்.

    கோவை,

    கோவை பேரூர் அருகே உள்ள ஆறுமுக கவுண்டனூரை சேர்ந்தவர் சுடலைகுட்டி (வயது 59).

    இவர் கோவை அரசு ஆஸ்பத்திரியில் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று சுடலைகுட்டி பணியில் இருந்தார். அப்போது அரசு ஆஸ்பத்திரிக்குள் 3 வாலிபர்கள் ஒரே மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்து கீழே விழுந்தனர்.

    இதனை பார்த்த காவலாளி அந்த வாலிபர்களின் அருகே சென்று பொதுமக்கள் நோயாளிகள் வந்து செல்லக்கூடிய இடம். இங்கு வேகமாக செல்லாமா என கேட்டார்.

    இதில் ஆத்திரம் அடைந்த அந்த 3 வாலிபர்களும் சேர்ந்து காவலாளி சுடலை குட்டியை தகாத வார்த்தைகளால் பேசி ஹெல்மெட்டால் தாக்கினர்.

    பின்னர் அங்கு இருந்து தப்பிச் சென்றனர். தாக்குதலில் படுகாயம் அடைந்த காவலாளியை அங்கு இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி காலாளியை தாக்கி சிவகங்கையை சேர்ந்த கட்டிட தொழிலாளி மகேஸ்வரன் (27), சுகுமார் (29), பாலமுருகன் (27) ஆகியோரை கைது செய்தனர்.

    பின்னர் போலீசார் 3 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    • பணத்தை வாங்கிய வேகத்தில் குட்டி, ஏற்கனவே அங்கு தயாராக நின்ற மற்றொரு காரில் ஏறி தப்பியோடி விட்டார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து பணத்தை பறித்து காரில் தப்பிய கும்பலை தேடி வருகின்றனர்.

    பொள்ளாச்சி,

    கோவை தெலுங்குபாளையம் மீனாட்சி நகரை சேர்ந்தவர் பிரகாஷ்(வயது44). இவர் நகைகள் வாங்கி, விற்கும் தொழில் செய்து வருகிறார்.

    இவர் அடிக்கடி வேலை விஷயமாக கோவையில் ஒரு தனியார் வங்கிக்கு சென்று வருவார். அப்போது அந்த வங்கியில் வேலை பார்க்கும் வீட்டுக்கடன் மேலாளர் அறிமுகம் ஆனார்.

    அவர், பொள்ளாச்சியை சேர்ந்த குட்டி என்ற நபரை பிரகாசுக்கு அறிமுகப்படுத்தினார். குட்டி, தன்னை ரியல் எஸ்டேட் மற்றும் பல தொழில் செய்து வருவதாக கூறினார்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று குட்டி, பிரகாசுக்கு போன் செய்தார். அப்போது தன்னிடம் 2½ கிலோ தங்க நகைகள் இருக்கிறது. அதனை விற்று தந்தால் கமிஷன் தருவதாக கூறினார்.

    இதனை உண்மை என நம்பிய பிரகாசும், நீ யாரிடமோ விற்பதற்கு பதிலாக என்னிடம் கொடுத்தால் நானே வாங்கி கொள்கிறேன். அதற்கான பணத்தையும் தந்து விடுகிறேன் என தெரிவித்தார்.

    அதற்கு குட்டி, நான் பொள்ளாச்சியில் இருக்கிறேன். நீங்கள் வேண்டுமானால் அங்கு வந்து வாங்கி கொள்கிறீர்களா என கேட்டார். இதையடுத்து பிரகாசும் நகையை வாங்குவதற்காக அதற்கு தேவையான பணத்தை எடுத்து கொண்டார்.

    மேலும் தன்னுடன், வங்கி மேலாளர் மற்றும் டிரைவருடன் தனது காரில் பொள்ளாச்சிக்கு புறப்பட்டார். பொள்ளாச்சி சென்றதும் குட்டிக்காக அவர் சொன்ன இடத்தில் காத்திருந்தனர். ஆனால் நீண்ட நேரமாகியும் வரவில்லை.

    நீண்ட நேரம் கழித்து குட்டி ஒரு காரில் வந்து இறங்கினார். அவருடன் ஒரு ஆணும், பெண்ணும் இருந்தனர். அவர்களை போக சொல்லி விட்டு குட்டி மட்டும் இறங்கி கொண்டார்.

    பின்னர் குட்டி, நகை வியாபாரி பிரகாஷ் மற்றும் மேலாளர், டிரைவர் பிரகாசின் டிரைவர் ஆனந்த் ஆகியோருடன் பொள்ளாச்சி அம்பாரம்பாளையம் பகுதிக்கு சென்றனர்.

    அப்போது குட்டியுடன் ஏற்கனவே காரில் வந்த ஆணும், பெணும் அங்கு இருந்தனர். வேறு யாரையாவது பார்க்க வந்திருப்பர் என பிரகாஷ் நினைத்தார்.

    காரை விட்டு இறங்கியதும், குட்டி பிரகாசை பார்த்து நீங்கள் கொண்டு வந்த பணத்தை காட்டுங்கள் என தெரிவித்தார். அவரும் பேக்கில் வைத்திருந்த ரூ.1 கோடியே 37 லட்சத்து 50 ஆயிரம் பணத்தை திறந்து காண்பித்தார். நீங்கள் பணத்தை கொடுங்கள் நான் நகையை தருகிறேன் என்றார்.

    அவரும் நம்பி பணத்தை கொடுத்தார். பணத்தை வாங்கிய வேகத்தில் குட்டி, ஏற்கனவே அங்கு தயாராக நின்ற மற்றொரு காரில் ஏறி தப்பியோடி விட்டார்.

    இதனால் அதிர்ச்சியான பிரகாஷ் தனது காரில் அவர்களை துரத்தி சென்றார். ஆனால் குட்டி சென்ற கார் எங்கு சென்றது என்றே தெரியவில்லை.

    இதையடுத்து பிரகாஷ் ஆனைமலை போலீஸ் நிலையம் சென்று, நகை இருப்பதாக கூறி தன்னிடம் இருந்து ரூ.1.37 கோடியை பறித்து சென்ற குட்டி என்பவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார் அளித்தார்.

    அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பணத்தை பறித்து காரில் தப்பிய கும்பலை தேடி வருகின்றனர்.

    ×