search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "his beloved wife"

    • 2 பேரும் 24-ந் தேதி பெற்றோருக்கு தெரியாமல் திருமணம் செய்தனர்.
    • புதுமண தம்பதி வெளியே சென்று விட்டு வீட்டிற்கு நடந்து வந்தனர்.

    கோவை,

    ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை சேர்ந்தவர் 25 வயது வாலிபர். கூலித் தொழிலாளியான இவர் துடியலூரில் உள்ள தனி யார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.

    அப்போது இவருக்கும், சூலூர் ஜெர்மன் கார்டனை சேர்ந்த 23 வயது பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இவர்கள் 2 பேரும் கடந்த 6 ஆண்டு களாக ஒருவரை ஒருவர் தீவிரமாக காதலித்து வந்தனர். இந்த காதல் விவகாரம் பெண்ணின் வீட்டிற்கு தெரிய வரவே அவரது பெற்றோர் காத லுக்கு எதிர்ப்பு தெரிவி த்தனர்.

    கடந்த மாதம் 15-ந் தேதி இளம்பெண் தனது பெற்றோரிடம் வேலைக்கு செல்வதாக கூறி விட்டு சென்றார். ஆனால் அவர் வேலைக்கு செல்லாமல் தனது காதலனுடன் சென்றார்.

    இதுகுறித்து அவரது பெற்றோர் தனது மகளை மீட்டு தரும்படி சூலூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் இளம்பெண்ணை தேடி வந்தனர்.

    போலீசார் தேடு வதை அறிந்த காதலர்கள் போ லீஸ் நிலையத்தில் ஆஜ ரானார்கள். அவர்களிடம் போலீசார் நடத்திய விசார ணையில் 2 பேரும் கடந்த மாதம் 24-ந் தேதி பெற்றோ ருக்கு தெரியாமல் திரும ணம் செய்தது தெரிய வந்தது.

    பெண்ணின் பெற்றோர் அவரை தங்களுடன் வரு மாறு அழைத்தனர். ஆனால் அவர் வர மறுத்து தனது காதலனுடன் சென்றார். பின்னர் 2 பேரும் சூலூர் பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து வசித்து வந்தனர்.

    கடந்த 3-ந் தேதி புதுமண தம்பதி வெளியே சென்று விட்டு வீட்டிற்கு நடந்து சென்றனர்.

    சூலூரில் உள்ள ஏ.டி.எம். மையம் அருகே சென்ற போது பெண்ணிடம், அந்த வாலிபர் தனது தாய்க்கு உடல் நிலை சரியில்லை என்றும், எனவே நான் உடனடியாக ஊருக்கு செல்ல வேண்டும் என கூறி விட்டு சென்றார்.

    அதன் பின்னர் அவர் மீண்டும் திரும்பி வர வில்லை. அவரது செல்போ னுக்கு தொடர்பு கொண்ட போது அது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. அவர் எங்கு சென்றார் என்பது தெரியவில்லை. வாலிபர் அவரது காதலி யை திருமணம் செய்த 10-வது நாளில் ரோட்டில் தவிக்க விட்டு சென்றார்.

    இதுகுறித்து அவர் தனது பெற்றோரிடம் கூறி கதறி அழுதார். அவர்கள் சூலூர் போலீசில் புகார் செய்தனர்.

    புகாரின் பேரில் காதல் மனைவியை நடுரோட்டில் தவிக்க விட்டு சென்ற வாலிபரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    • சம்பவத்தன்று செந்தில்குமாருக்கும், நதியாவுக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது.
    • செந்தில் குமாரின் பெற்றோருக்கு போன் செய்து, செந்தில்குமார் விஷம் குடித்து விட்டதாக கூறியுள்ளார்.

    ஈரோடு:

    சேலம் மாவட்டம், மேட்டூர் அருகே உள்ள கிழக்கு கோட்டையூர் பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார் (31). ஆக்டிங் டிரைவராக வேலை செய்து வந்தார்.

    இவர் கடந்த 3 வருடங்களுக்கு முன்பு ஈரோடு மாவட்டம், கவுந்தப்பாடியை சேர்ந்த மாரியப்பன் என்பவரது மகள் நதியா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒன்றரை வயதில் ஆண் குழந்தை உள்ளது.

    இந்நிலையில் கணவன், மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு உள்ளது. அப்போதெல்லாம் நதியா கோவித்துக் கொண்டு தனது பெற்றோர் வீட்டுக்கு சென்றுவிடுவார்.

    பின்னர், செந்தில்குமாரின் பெற்றோர் சமாதானம் செய்து அழைத்து வருவார்கள்.

    இந்த நிலையில் செந்தில்குமாரின் பெற்றோர் தங்களது குழந்தையை எடுத்து கொஞ்சக்கூடாது என நதியா கூறியுள்ளார். இதனால் சம்பவத்தன்று செந்தில்குமாருக்கும், நதியாவுக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது.

    இதையடுத்து கோவித்துக்கொண்டு கவுந்தப்பாடியில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார். செந்தில்குமார் பல முறை போனில் பேசி நதியாவை தங்கள் வீட்டுக்கு வருமாறு அழைத்துள்ளார். ஆனால் நதியா வரமறுத்துவிட்டார்.

    இந்த நிலையில் நேரில் சென்று நதியாவை சமாதானம் செய்து அழைத்து வருவதற்காக செந்தில்குமார் தனது பெற்றோரிடம் கூறிவிட்டு கவுந்தப்பாடி சென்றுள்ளார்.

    ஆனால் அன்று மதியம் அவர்களது உறவினர் ஒருவர் செந்தில் குமாரின் பெற்றோருக்கு போன் செய்து, செந்தில்குமார் விஷம் குடித்து விட்டதாக கூறியுள்ளார்.

    இதையடுத்து செந்தில்குமாரின் பெற்றோர் சென்று அவரை மீட்டு ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவ மனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவ க்கல்லூரி மருத்துவ மனையில் சேர்த்துள்ளனர்.

    இந்த நிலையில் அங்கு சிகிச்சை பெற்று வந்த செந்தில்குமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து கவுந்தப்பாடி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ×