என் மலர்
கோயம்புத்தூர்
- மலுமிச்சம்பட்டியில் இருந்து சுந்தராபுரம் நோக்கி ஒரு கார் அதிவேகமாக வந்து கொண்டிருந்தது.
- மக்கள் அந்த வழியாக ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
குனியமுத்தூர்,
கோவை-பொள்ளாச்சி தேசிய நெடுஞ்சாலையில் நேற்று இரவு வழக்கமாக கார், லாரி, மோட்டார் சைக்கிள்கள், வேன், பஸ் உள்ளிட்ட வாகனங்கள் கோவைக்கும், பொள்ளாச்சிக்கும் சென்ற வண்ணம் இருந்தன.
அப்போது அந்த சாலையில் மலுமிச்சம்பட்டியில் இருந்து சுந்தராபுரம் நோக்கி ஒரு கார் அதிவேகமாக வந்து கொண்டிருந்தது. அந்த காரில் 2 வாலிபர்கள் இருந்தனர்.
எல்.ஐ.சி காலனி அருகே வந்தபோது கார் இடது புறமும், வலது புறமும் வளைந்து நெளிந்து சென்றது.
மேலும் அதிவேகத்திலும் கார் வந்ததால் அந்த சாலையில் வந்த மற்ற வாகன ஓட்டிகளும், சாலை யோரம் நடந்து சென்றவர்களும் அச்சம் அடைந்தனர்.
பின்னர் வேகமாக சென்ற அந்த காரை பின்னால் வாகனங்களில் வந்தவர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் அனைவரும் சேர்ந்து அந்த காரை மடக்கி பிடித்தனர்.
அப்போது காரை ஓட்டி வந்த வாலிபர் மதுபோதையில் இருந்தார். இதையடுத்து மக்கள் அந்த வழியாக ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன் பேரில் போலீசார் மற்றும் போக்குவரத்து போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் செல்வகுமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். கார் நடுரோட்டில் நின்றதால் அந்த சாலையில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.
பின்னர் அந்த வாலிபர் ஓட்டி வந்த காரை பறிமுதல் செய்து, ரெயில் நிலை வாகன நிறுத்தும் இடத்திற்கு கொண்டு சென்றனர்.தொடர்ந்து அந்த வாலிபர் யார் என்று விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், அந்த வாலிபர் சுந்தராபுரம் காந்திநகரை சேர்ந்த விஸ்வநாதன்(21) என்பதும், கோவையில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வருவதும் தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் மாணவர் மீது வழக்கு பதிவு செய்து, காரை வேகமாகவும், மதுபோதையில் இயக்கி வந்ததற்காகவும் அபராதம் விதித்தனர். தொடர்ந்து அந்த மாணவருக்கு இனிமேல் இதுபோன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என எச்சரிக்கை விடுத்து வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் காரணமாக கோவை-பொள்ளாச்சி தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் வாகனபோக்குவரத்து தடைபட்டது. போலீசார் அதனை சரி செய்த பின்னர் வாகனங்கள் அங்கிருந்து சென்றனர்.
இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
- துறை அலுவலர்கள் கலந்து கொண்ட ஒருங்கிணைப்புக் கூட்டம் கடந்த 8-ந் தேதி நடத்தப்பட்டது.
- கூட்டத்தில் தெரிவிக்கப்பட்ட அறிவுரைகளை நடைமுறைப்படுத்த பெரும்பாலான பள்ளிகள் எந்த முயற்சியும் எடுக்கவில்லை.
கோவை,
கோவை மாநகர போக்குவரத்து காவல் பிரிவின் சார்பில் கல்வி நிறுவனங்களுக்கு அனுப்பப்பட்டு உள்ள சுற்றறிக்கை வருமாறு:-
கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் மீண்டும் தொடங்கியுள்ளதை அடுத்து பள்ளிகளுக்கு குழந்தைகளை அழைத்து வரும் வாகனங்களை ஒழுங்குபடுத்துவதற்காக, எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கோவை மாவட்ட கலெக்டர் தலைமையில் அனைத்து பள்ளி நிர்வாகத்தினர், சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் கலந்து கொண்ட ஒருங்கிணைப்புக் கூட்டம் கடந்த 8-ந் தேதி நடத்தப்பட்டது.
அந்த கூட்டத்தில் ஒவ்வொரு பள்ளியிலும் இரண்டு வாயில்கள் இருக்க வேண்டும். குழந்தைகளை அழைத்து வரும் வாகனங்கள் ஒரு வாயில் வழியாக உள்ளே சென்று, பள்ளி வளாகத்திற்குள் மட்டுமே குழந்தைகளை இறக்கிவிட்டு, மற்றொரு வாயில் வழியாக வெளியே வர வேண்டும் எனவும், பள்ளியின் நுழைவாயில் ஒலிபெருக்கி மூலம் தொடர்ந்து அறிவிப்பு செய்து பள்ளிக்கு வரும் வாகனங்களை ஒழுங்குப்படுத்த வேண்டும் எனவும், இந்த நடைமுறைகள் செயல்படுத்துவதை கண்காணிக்க தினமும் பொறுப்பான நபர்களை நியமிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில், பள்ளிகள் நேற்று திறக்கப்பட்டதைத் தொடர்ந்து, பள்ளிக் குழந்தைகளை அழைத்துச் சென்ற பெரும்பாலான வாகனங்கள், பள்ளி வளாகத்திற்குள் அனுமதிக்கப்படாமல், சாலையிலேயே வாகனங்களை நிறுத்தி குழந்தைகள் இறங்கி பள்ளிக்குள் செல்வதை காணமுடிந்தது.
மேலும், ஒலி பெருக்கிகள் நுழைவாயிலின் அருகில் நிறுவப்படவில்லை. பள்ளிக்கு வரும் வாகனங்களை ஒழுங்குபடுத்துவ தற்கென பள்ளிகளின் சார்பில் யாரையும் நியமிக்கவில்லை. கூட்டத்தில் தெரிவிக்கப்பட்ட அறிவுரைகளை நடைமுறைப்படுத்துவதற்கு பெரும்பாலான பள்ளிகள் எந்த முயற்சியும் எடுக்கவில்லை.
எனவே, பள்ளி நிர்வாகத்தினர் பள்ளிக்கு குழந்தைகளை அழைத்து வரும் வாகனங்களை ஒழுங்குபடுத்துவதற்கென தினந்தோறும் தனிக்குழுக்க ளை அமைத்து கண்காணிக்க வேண்டும். பள்ளியில் இரண்டு வாயில்களை பயன்படுத்தி, பள்ளிக்கு வரும் குழந்தைகளின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்ய வேண்டும், பள்ளிக்கு வரும் வாகனங்களால் பொது போக்குவரத்திற்கு எந்தவிதமான இடையூறும் ஏற்படாமல் செயல்பட வேண்டும். அனைத்து பள்ளிகளிலும், இந்த அறிவுரைகளை தவறாமல் பின்பற்ற வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறி உள்ளனர்.
- சிங்காநல்லூரில் உள்ள காதுகேளாதோர் சிறப்பு பள்ளியில் ரேஷ்மா மற்றும் கவுதம் ஒன்றாக படித்தனர்.
- இதுதொடர்பாக 2 தரப்பு பெற்றோரிடமும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.
சூலூர்,
சிதம்பரம் மாவட்டம் கனகசபை நகரை சேர்ந்தவர் ரேஷ்மா (வயது 23). இவர் காது கேட்பதில் குறைபாடு உள்ள மாற்றுத்திறனாளி. எம்.சி.ஏ. படித்துள்ளார்.
சூலூர் அருகே பாப்பம்பட்டியைச் சேர்ந்தவர் கவுதம் (24). இவரும் மாற்றுத்திறனாளி. இவர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர்கள் கோவை சிங்காநல்லூரில் உள்ள காதுகேளாதோர் சிறப்பு பள்ளியில் ஒன்றாக படித்தனர். அப்போது அவர்களுக்கு இடையே காதல் மலர்ந்தது.
இவர்களது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் நண்பர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் உதவியோடு அவர்கள் நேற்று திருமணம் செய்து கொண்டனர்.
பின்னர் அவர்கள் பாதுகாப்பு கேட்டு சூலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். இந்த போலீஸ் நிலையம் கடந்த வாரம் திறக்கப்பட்டது. முதல் காதல் ஜோடியாக கவுதம்-ரேஷ்மா ஆகியோர் தஞ்சம் அடைந்தனர். போலீசார் அவர்களது பெற்றோருக்கு தகவல் தெரிவித்து இன்று போலீஸ் நிலையத்துக்கு வருமாறு அழைத்து உள்ளனர்.
காதல் திருமணம் செய்து கொண்ட 2 பேரும் மேஜர் என்பதால் அவர்கள் விருப்பப்படி சேர்ந்து வாழவே போலீசார் அனுமதி அளிப்பர். இதுதொடர்பாக 2 தரப்பு பெற்றோரிடமும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். மகளிர் காவல் நிலையத்தில் பெண்கள் சம்பந்தப்பட்ட பல வழக்குகள் சுமூகமாக தீர்வு காணப்பட்டு வருவதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.
- கோவை ஜி.டி. நாயுடு மியூசியம் முன்புறம் உள்ள அவினாசி சாலையில் வாலிபர் பிணமாக கிடந்தார்.
- வாலிபர் வாகனம் மோதி இறந்தாரா, அல்லது எப்படி இறந்தார் என்பது பற்றி போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
கோவை:
கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் அலுவலகம், ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலையம் அருகே உள்ளது.
இந்த எம்.எல்.ஏ. அலுவலகத்துக்குள் நேற்று மாலை 5.50 மணி அளவில் மர்ம வாலிபர் ஒருவர் அத்துமீறி நுழைந்தார். அலுவலகத்துக்குள் நுழைந்து உள்பக்கமாக கதவை பூட்ட முயன்றார்.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அலுவலக ஊழியர் அந்த வாலிபரை விரட்டினார். அவர் செல்ல மறுத்ததால் அவரை பிடித்து அலுவலகத்தின் வெளியே தள்ளினார். அதன்பிறகு அந்த வாலிபர் அங்கிருந்து எழுந்து சென்றார்.
இந்தநிலையில் இரவு 8.30 மணி அளவில் கோவை ஜி.டி. நாயுடு மியூசியம் முன்புறம் உள்ள அவினாசி சாலையில் அதே வாலிபர் பிணமாக கிடந்தார். மாநகர போக்குவரத்து பிரிவு போலீசார் அந்த வாலிபரின் உடலை மீட்டு விசாரித்து வருகிறார்கள்.
அந்த வாலிபர் வாகனம் மோதி இறந்தாரா, அல்லது எப்படி இறந்தார் என்பது பற்றி போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
அந்த வாலிபர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர், பா.ஜ.க. எம்.எல்.ஏ. அலுவலகத்தில் அவர் எதற்காக நுழைந்தார் என்று தெரியவில்லை. இதுபற்றி போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
இதுபற்றி வானதி சீனிவாசனிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-
நேற்று மாலை எனது அலுவலகத்துக்கு அடையாளம் தெரியாத மர்ம நபர் வந்துள்ளார். அவர் எதற்காக வந்தார், எந்த நோக்கத்துக்காக வந்தார் என்று தெரியவில்லை. அப்போது நான் அலுவலகத்தில் இல்லை. அந்த நபர் வந்த தகவலை எனது உதவியாளர் எனக்கு தெரிவித்தார்.
இதுதொடர்பாக ரேஸ்கோர்ஸ் போலீஸ்நிலையத்தில் புகார் அளிக்க கூறினேன். அதன்படி அவரும் புகார் அளித்தார். இந்த நிலையில் அலுவலகத்துக்குள் நுழைந்த மர்மநபர் அவினாசி சாலையில் இறந்து கிடந்ததாக தகவல் தெரிந்தது. அவர் யார் என்று தெரியவில்லை. போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
- முதலில் பேட்டிங் செய்த கோவை அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 179 ரன்கள் குவித்தது.
- திருப்பூர் அணி 17.5 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 95 ரன்கள் மட்டுமே எடுத்தது.
டி.என்.பி.எல். என்று அழைக்கப்படும் தமிழ்நாடு பிரிமீயர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 2016-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது.
இதுவரை 6 சீசன்கள் வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ள நிலையில், 7வது சீசன் இன்று கோவையில் கோலாகலமாக தொடங்கியது.
கோவையில் நடைபெறும் முதல் லீக் போட்டியில் லைக்கா கோவை கிங்ஸ் - திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற திருப்பூர் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது.
முதலில் பேட்டிங் செய்த கோவை அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 179 ரன்கள் குவித்தது.
துவக்க வீரர்கள் விரைவில் ஆட்டமிழந்த நிலையில், மூன்றாவது வீரராக களமிறங்கிய சாய் சுதர்சன் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி நம்பிக்கை அளித்தார்.
அரை சதம் கடந்த அவர் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 86 ரன்கள் விளாசினார். முகிலேஷ் 33 ரன்கள், கேப்டன் ஷாருக் கான் 25 ரன்கள் சேர்த்தனர். திருப்பூர் அணி தரப்பில் விஜய் சங்கர் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். சாய் கிஷோர் 2 விக்கெட் எடுத்தார்.
இதையடுத்து 180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் திருப்பூர் தமிழன்ஸ் அணி களமிறங்குகியது.
இதில், அதிகபட்சமாக துஷார் ரகாஜே 33 ரன்கள் எடுத்தார். தொடர்ந்து, விஷால் வைத்யா 16 ரன்களும், அஜித் ராம் 11 ரன்களும், ராஜேந்திர விவேக் 6 ரன்களும், என்எஸ் சத்துர்வேத் 4 ரன்களும் எடுத்தனர்.
பால்சந்தர் அனிருத் 3 ரன்களும், விஜய் சங்கர் 2 ரன்களும், கணேஷ் மற்றும் சாய் கிஷோர் ஆகியோர் தலா ஒரு ரன்னும் எடுத்தனர்.
இந்நிலையில் திருப்பூர் அணி 17.5 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 95 ரன்கள் மட்டுமே எடுத்தது.
திருப்பூர் அணி 12 பந்துகளில் 85 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடி வந்தது.
இதில் புவனேஷ்வரன் 12 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். மணிகண்டன் 8 ரன்களில் அவுட்டானார்.
இந்நிலையில், திருப்பூர் தமிழன் அணி 20 ஓவரில் 10 விக்கெட் இழப்பிற்கு 109 ரன்கள் எடுத்து தோல்வியடைந்தது.
இதன்மூலம், கோவை அணி 70 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றுள்ளது.
- கோவை ஈஷா யோகா மையத்தில் தலைமைப் பண்பு மேம்பாட்டு நிகழ்ச்சியின் 7-ம் ஆண்டு நிகழ்வு நடைபெறுகிறது.
- வேலை செய்வதற்கான சிறந்த இடம் என்ற 100 நிறுவனங்களின் பட்டியலில் எங்கள் நிறுவனம் இடம்பெற்று வருகிறது.
"எங்கள் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களை வெறும் வளமாக பார்க்காமல், அவர்களை நிறுவனத்தின் பங்குதாரர்களாகவும் சேர்த்துக்கொண்டோம். இது எங்கள் நிறுவனத்தின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவியது" என உஜ்ஜீவன் ஸ்மால் பினான்ஸ் வங்கியின் நிறுவனர் சமித் கோஷ் தெரிவித்தார்.
ஈஷா லீடர்ஷிப் அகாடமி சார்பில் 'மனிதன் - ஒரு வளம் அல்ல' (Human Is Not A Resource - HINAR) என்ற தலைமைப் பண்பு மேம்பாட்டு நிகழ்ச்சியின் 7-ம் ஆண்டு நிகழ்வு கோவை ஈஷா யோகா மையத்தில் நேற்று முன்தினம் (ஜூன் 9) தொடங்கியது. 3 நாட்கள் நடைபெறும் இந்நிகழ்ச்சியில் இந்தியாவின் பல்வேறு வர்த்தக தலைவர்கள், தொழில்துறை நிபுணர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.
முதல் நாளில் 'நிறுவனத்தின் கலாச்சாரத்தை கட்டமைப்பது' குறித்து பங்கேற்பாளர்களுக்கு வல்லுநர்கள் பல்வேறு ஆலோசனைகளை வழங்கினர். அதில் குறிப்பாக, உஜ்ஜீவன் ஸ்மால் பினான்ஸ் வங்கியின் நிறுவனர் சமித் கோஷ் பேசும் போது, "பங்குதாரர்கள், வாடிக்கையாளர்கள், ஊழியர்கள், கட்டுபாட்டாளர்கள், நாம் பணியாற்றும் சமூகம் என நம்மோடு இருக்கும் அனைத்து பங்குதாரர்களிடமும் நாம் சமமான முறையில் நடந்து கொள்ள வேண்டும்.
இதற்காக, நாங்கள் நிறுவனத்தில் "எம்ப்ளாயி ஸ்டாக் ஆப்ஷன் ப்ளான்" என்ற பெயரில் நிறுவனத்தில் பங்குதாரராக இருக்கும் திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தினோம். நாங்கள் எங்கள் ஊழியர்களை வெறும் வளமாக மட்டும் பார்க்காமல் அவர்களை பங்குதாரர்களாக இணைத்து கொண்டோம். இதன்மூலம், ஊழியர்களிடம் அவர்களும் இந்நிறுவனத்தின் உரிமையாளர்கள் என்ற மனநிலையை உருவாக்க முடிந்தது. இது அவர்களுக்கு ஒரு உற்சாகத்தை அளித்து நிறுவனத்தின் வளர்ச்சிக்கும் பெரிதும் உதவியாக இருந்தது. இதனால், 'வேலை செய்வதற்கான சிறந்த இடம்' என்ற 100 நிறுவனங்களின் பட்டியலில் எங்கள் நிறுவனம் இடம்பெற்று வருகிறது" என்றார்.
ஐஐம் பெங்களூருவின் டிஜிட்டல் லேர்னிங் துறையின் தலைவரும், மனித வள மேலாண்மை துறை பேராசிரியருமான வசந்தி ஸ்ரீனிவாசன், புகழ்பெற்ற வெவ்வேறு பிராண்டுகள் மற்றும் அதன் கலாச்சார கட்டமைப்பு குறித்து பங்கேற்பாளர்களிடம் கலந்துரையாடினார். அப்போது அவர் பேசும்போது, "கலாச்சாரம் குறித்து பேசும்போது முதலில் புரிந்து கொள்ள வேண்டியது, நல்ல கலாச்சாரம் அல்லது கெட்ட கலாச்சாரம் என்ற ஒன்று இல்லை. பொருத்தமான கலாச்சாரம் மற்றும் பொருத்தமற்ற கலாச்சாரம் என்பது மட்டுமே உண்டு" என்றார்.
மேலும், "கலாச்சாரம் என்பது ஒரு முழுமையான உள் பண்பு. நிறுவனத்தின் பிம்பம் மற்றும் அடையாளம் அந்நிறுவனத்தின் கலாச்சாரத்தால் தான் கட்டமைக்கப்படுகிறது" என்றார்.
ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்தின் வாரிய உறுப்பினர் அமித் அஞ்சால் தன்னுடைய தொழில் வாழ்கை பயணத்தையும், பின்பு ஏர்டல் மற்றும் ஓலா நிறுவனத்தில் அவருக்கு நேர்ந்த மாற்றங்கள் குறித்தும் பேசினார். அஞ்சல் பேசுகையில் "ஒரு தலைவராக அல்லது ஒரு தொழில் முனைவராக நாம் கொண்டிருக்கும் நோக்கத்தில் நாம் மிக உறுதியாக இருக்கிறோம். நாம் அதை பற்றி மிக மிக உற்சாகமாகவும் உணரலாம். அதேசமயம், நம்முடைய நோக்கத்தை நம் நிறுவனத்தின் ஊழியர்களுக்கு எந்தளவிற்கு புரிய வைக்கிறோம் என்பதை பொறுத்து நம் வெற்றி இருக்கும்" என்றார்.
அவரை அடுத்து, சென்ட்ரல் ஆப் ஸ்ட்ரடெஜிக் மைன்ட்செட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியும் நிறுவனருமான ஹிமான்ஷூ சாக்சேனா பேசுகையில், "கலாச்சாரம் என்பது நம்பிக்கைகள், வணிக நடைமுறைகள் மற்றும் நடத்தைகளின் கலைவையாகும்" என்றார்.
நிகழ்வின் 2-வது மற்றும் 3-வது நாட்களில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவர் எஸ். சோமநாத், ஹிந்துஸ்தான் யூனிலீவர் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் அனுராதா ராஸ்தன், யூனிலீவர் தென் ஆசியாவின் முதன்மை மனித வள அதிகாரி, டாடா டிஜிட்டல் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பிரதிக் பால், மஹிந்த்ரா பர்ஸ்ட் சாய்ஸ் வீல்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி அசுதோஷ் பாண்டே மற்றும் ஈஷா லீடர்ஷிப் அகாடமியின் மெளமிதா சென் சர்மா ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
12 ஆண்டுகளுக்கு முன்பு, சத்குரு ஈஷா லீடர்ஷிப் அகாடமி என்ற அமைப்பை நிறுவினார். நல்வாழ்விற்கான கருவிகளுடன் வெளிப்புற திறனையும் இணைத்து உயர்தரமான தலைமைத்துவ கல்வியை வழங்குவதே இந்த அமைப்பின் நோக்கமாகும். தலைமைத்துவதை உள்ளார்ந்த பண்பாக மற்றும் உள்ளுணர்வு மிக்க பண்பாக வளர்ப்பதை நோக்கமாக கொண்டுள்ளது இந்த அமைப்பு. வெளிப்புற சூழலை மற்றும் வெளியே இருக்கும் மக்களை நிர்வகிப்பதற்கு முன்பாக ஒருவர் தன் சொந்த மனம், உடல் மற்றும் ஆற்றலை நிர்வகிப்பதன் முக்கியத்துவத்தை உணர்த்துவதே இதன் கொள்கையாகும்.
- 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் கட்டுக்கட்டாக இருக்கும் வீடியோவையும் காண்பித்தனர்.
- குற்ற வாளிகளை கைது செய்த தனிப்படை போலீசாருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் இன்று நிருப ர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறி யதாவது:-
தங்க நகை வியாபாரி பிரகாசை தொடர்பு கொண்ட இந்த கும்பல் தங்களிடம் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் அதிக மாக இருப்பதாகவும், நீங்கள் ரூ 85 லட்சம் கொடுத்தால் ஒரு கோடி ரூபாய் 2000 நோட்டுகளை தருவதாக ஆசை வார்த்தை கூறியுள்ளனர்.
மேலும் அவரை நேரில் சந்தித்து 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் கட்டுக்கட்டாக இருக்கும் வீடியோவையும் காண்பித்தனர்.
இதனை நம்பியே பிரகாஷ் கடந்த 10-ந்தேதி ரூ.1 கோடியே 27 லட்சத்து 500 பணத்துடன் பொள்ளா ச்சிக்கு சென்றார். அப்போ துதான் இந்த பணம் பறிப்பு சம்பவம் நடந்தது.
இது தொடர்பாக குற்ற வாளிகளை பிடிக்க வால்பாறை சரக டி.எஸ்.பி. கீர்த்தி வாசன் தலைமையில் 6 தனிப்படைகள் அமைக்க ப்பட்டது.
தனிப்படை போலீசார் குற்றவாளிகள் பயன்ப டுத்திய செல்போன் எண்ணை வைத்து விசாரி த்தனர்.
விசாரணையில் இந்த கும்பல் மதுரை அருகே உள்ள உசிலம்பட்டியில் பதுங்கி இருந்தது தெரிய வந்தது. தனிப்படை போலீ சார் அங்கு விரைந்து சென்று பெண் உள்பட 6 பேரையும் கைது செய்தனர்.
பின்னர் அவர்களிடம் இருந்து ரூ.1 கோடியே 27 லட்சத்து 500 பணம், 2 கார்கள் பறிமுதல் செய்ய ப்பட்டது.
சம்பவம் நடை பெற்ற 12 மணி நேரத்தில் குற்ற வாளிகள் கைது செய்யப்ப ட்டுள்ளனர்.
எனவே பொதுமக்கள் உஷாராக இருக்க வேண்டும். வங்கியிலேயே 2000 ரூபாய் நோட்டுக்களை மாற்ற அரசு உரிய அவகாசம் கொடுத்து ள்ளது. வங்கியிலேயே பணத்தை மாற்ற வேண்டும். எனவே இது போன்ற மோசடி நபர்களை நம்பி யாரும் ஏமார வேண்டாம்.
இந்த பணத்திற்கான உரிய ஆவணங்களை தங்க நகை வியாபாரியிடம் கேட்டுள்ளோம். வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளோம். அவர்கள் ஆவணங்களை சரிபார்த்து நீதிமன்றம் மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறி னார்.தொடர்ந்து குற்ற வாளிகளை கைது செய்த தனிப்படை போலீ சாரை பாராட்டி பாராட்டு சான்றி தழ் மற்றும் ஊக்க தொகையையும் வழங்கினார்.
- பஸ் நிலையத்தில் வாலிபர் கூறியபடி வெடி குண்டு ஏதும் இல்லை.
- முத்துகாதரை கோர்ட்டில் ஆஜர்ப டுத்தி ஜெயிலில் அடை த்தனர்.
சூலூர்,
சென்னையில் உள்ள போலீஸ் கட்டுப்பாட்டு அறையை கோவையில் இருந்து பேசுவதாக கூறி வாலிபர் ஒருவர் தொடர்பு கொண்டார்.
அவர் போலீ சாரிடம் கோவி ல்பாளையம் பகுதி யில் சிலர் நின்று கொண்டு சூலூர் புதிய பஸ் நிலையம் மற்றும் சூலூர் ரெயில் நிலையத்துக்கு வெடிகுண்டு வைக்கப்போவதாக பேசுவதாக கூறி விட்டு செல்போன் இணைப்பை துண்டித்து விட்டார்.
உடனடியாக கட்டு ப்பாட்டு அறையில் இருந்த போலீசார் இதுகுறித்து சூலூர் மற்றும் கோவி ல்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சூலூர் பஸ் நிலையம் மற்றும் ரெயில் நிலையத்துக்கு சென்று வெடிகுண்டு நிபுணர்கள் உதவியுடன் சோதனை செய்தனர். ஆனால் வாலி பர் கூறியபடி வெடி குண்டு ஏதும் இல்லை.
இது குறித்து சூலூர் போலீசார் போனில் பேசிய வாலிபர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு பொய் புகார் அளித்தது சூலூர் எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த கூலித் தொழிலாளி முத்து காதர் (வயது 29) என்பது தெரிய வந்தது. இதனை யடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.
அவரிடம் நடத்திய விசார ணையில் அவர் கடந்த 10-ந் தேதி இரவு வேலைக்கு சென்று விட்டு அந்த பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்று மது குடித்து உள்ளார். அப் போது அவரது செல் போன் சுவிட்ச் ஆப் ஆகி உள்ளது. இதனை யடுத்து அவர் அருகே உள்ள அவரது வீட்டிற்கு சென்று செல்போனை சார்ஜ் போட்டார். பின்னர் முத்து காதர் அவரது மனைவியின் செல்போனை எடுத்து கொண்டு வெளியே வந்து மீதமுள்ள மதுவை குடித்து உள்ளார். போதை தலைக் கேறிய நிலையில் இருந்த அவர் பொய் புகார் அளி த்தது தெரிய வந்தது.
பின்னர் போலீசார் கைது செய்யப்பட்ட முத்து காதரை கோர்ட்டில் ஆஜர்ப டுத்தி ஜெயிலில் அடை த்தனர்.
- நாய்கள் இருப்பதால் கணவன்,மனைவி இருவரும் பயமின்றி வசித்தனர்.
- கொள்ளை சம்பவங்களுக்கு இடையூறு இருக்காது என்பதால் திருடி இருக்கலாம்
வடவள்ளி,
கோவை வடவள்ளி ஐ.ஓ.பி காலனி பகுதியை சேர்ந்தவர் சுகன்யா. இவர் அந்த பகுதியில் கணவருடன் வசித்து வருகிறார்.
இந்நிலையில் வடவள்ளி போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்றினை அளித்தார். அதில் அவர் வீட்டில் 2 நாய்கள் வளர்த்ததாகவும், அந்த நாய்கள் இருப்பதால் அப்பகுதியில் வரும் வன விலங்குகள் மற்றும் அடையாளம் தெரியாத நபர்களை கண்டால் சத்தம் போட்டு காட்டிக் கொடுத்து விடும். இதனால் அவர்கள் பயமின்றி வசித்து உள்ளனர். இந்நிலையில் சம்பவத்தன்று அவர் வீட்டின் கதவை பூட்டி விட்டு உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். பின்னர் மாலை வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்த போது ஒரு நாயை காணவில்லை. உடனடியாக அக்கம்ப க்கத்தில் சிறிது நேரம் தேடி வந்துள்ளார். பின்னர் அது தானாக திரும்பி வந்து விடும் என எண்ணி வீட்டிற்கு சென்றுள்ளார்.
இந்நிலையில் மீண்டும் இரவு நேரத்தில் நாய்கள் குறைக்கும் சத்தம் கேட்டுள்ளது. அப்பகுதியில் வன விலங்குகள் நடமா ட்டம் இருப்பதால் அதற்காக நாய்கள் சத்தம் போடுவதாக நினைத்து தூங்கியுள்ளார். பின்னர் காலை எழுந்து பார்க்கும் போது அந்த மற்றொரு நாயும் காணாமல் போனது கண்டு அதிர்ச்சி அடைந்தார். மர்ம நபர்கள் வீட்டிற்குள் வந்து சென்ற தடயங்கள் தெரிந்ததாக போலீசில் தெரிவித்து ள்ளார். மேலும் வீட்டிற்கு புகுந்து கொள்ளை அடிக்கும் நபர்கள் நாய்களின் சத்தத்தால் பயந்து வந்த நிலையில், அதனை திருடி விட்டால் இப்பகுதியில் நடக்கும் கொள்ளை சம்பவங்களுக்கு இடையூறு இருக்காது என்பதால் திருடி இருக்கலாம் என்றும் கூறினார்.
கொள்ளையடிக்க இடையூறாக இருப்பதால் நாய்களை திருடும் மர்ம கும்பலால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
- பழனிச்சாமி மர மில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார்.
- பழனிச்சாமி சாலை ஓரத்தில் நடந்து வந்தார்.
மேட்டுப்பாளையம்,
மேட்டுப்பாளையம் அடுத்த காரமடை மங்களக்கரைபுதூர் பகுதியை சேர்ந்தவர் பழனிச்சாமி (75).மர மில் தொழிலாளி.
இவர் சம்பவத்தன்று சாயங்காலம் காரமடை- மேட்டுப்பாளையம் சாலை யில் உள்ள வேளாங்கண்ணி பகுதியில் சாலை ஓரத்தில் நடந்து வந்து கொண்டி ருந்தார். அப்போது காரமடையில் இருந்து மேட்டுப்பாளையம் நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்த ஹிமாலயன் என்பவர் பழனிசாமி மீது மோதி உள்ளார்.
இதில் தூக்கி வீசப்பட்ட பழனிசாமி அதே இடத்தில் மயங்கி விழுந்தார். இதனையடுத்து அங்கிருந்த பொதுமக்கள் அவரை தனியார் ஆம்புலன்ஸ் மூலம் மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சை க்காக அனுப்பி வைத்தனர்.
அங்கிருந்து அவரை மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பழனிச்சாமி நேற்று இரவு பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் காரமடை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- கார்த்திகேயன் சூப்பர்வைசராக வேலை பார்த்து வருகிறார்.
- 1½ பவுன் தங்க நகைகள், ஒரு லேப்டாப் ஆகியவற்றை கொள்ளையடிக்கப்பட்டது.
கோவை,
கோவை மதுக்கரை அருகே உள்ள போடிபாளை யத்தை சேர்ந்தவர் கார்த்திகேயன் (43). இவர் தனியார் நிறுவனத்தில் சூப்பர்வைசராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி கோமதி தனியார் கல்லூரியில் பேராசிரி யையாக வேலை பார்த்து வருகிறார். இவர்கள் தங்களது வீட்டை பூட்டி விட்டு சொந்த ஊரான மதுரைக்கு சென்றனர். அப்போது வீட்டின் முன் பக்க கதவை உடைத்து மர்மநபர்கள் உள்ளே நுழைந்தனர்.
அவர்கள் அறையில் இருந்த பீரோவை திறந்து அதில் இருந்த கம்மல், மோதிரம் உள்பட 1½ பவுன் தங்க நகைகள், ஒரு லேப்டாப் ஆகியவற்றை கொள்ளையடித்து தப்பிச் சென்றனர். இது குறித்து கார்த்திகேயன் மதுக்கரை போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- பள்ளிகள் திறக்கப்பட்டதால் மாணவ, மாணவிகள் உற்சாகம் அடைந்தனர்.
- ஆசிரியர்கள் ரோஜா பூ கொடுத்து, கை குலுக்கி வாழ்த்து தெரிவித்தனர்.
கோவை,
கோவை மாவட்டத்தில் 83 அரசு மேல்நிலைப்பள்ளி, 116 அரசு உயர்நிலை ப்பள்ளி, 232 ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, 781 ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி என்று மொத்தம் 1,212 அரசு பள்ளிகள் உள்ளன.
இந்த பள்ளிகளில் லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகிறார்கள்.
கடந்த மார்ச் மாத இறுதியில் இருந்து ஏப்ரல் மாதம் வரை மாணவ ர்களுக்கு இறுதி தேர்வு நடந்தது. இதனை தொடர்ந்து அனைத்து பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் கோடை விடுமுறைக்கு பிறகு இன்று முதல் கோவையில் பள்ளிகள் திறக்கப்பட்டது. பள்ளிகள் திறக்கப்பட்டதால் மாணவ, மாணவிகள் உற்சாகம் அடைந்தனர்.அவர்கள் காலையி லேயே எழுந்து, புறப்பட்டு, புத்தக பையை எடுத்து கொண்டு பள்ளிக்கு சென்றனர். முதல் நாள் என்பதால் பெரும்பாலான மாணவ ர்களை அவர்களது பெற்றோர் பள்ளியில் கொண்டு வந்து விட்டு சென்றனர்.
கோடைவிடுமுறை முடிந்து பள்ளிக்கு வந்த மாண வர்களுக்கு ஆசிரியர்களும் சிறப்பான வரவேற்பினை அளி த்தனர். அதன்படி பள்ளி க்கு வந்த மாணவர்களுக்கு நுழைவு வாயிலில் ஆசிரியர்கள் நின்று ரோஜா பூ உள்ளிட்டவற்றை கொடுத்து, கை குலுக்கி வாழ்த்து தெரிவித்தனர்.சில பள்ளிகளில் மாண வர்களுக்கு பேண்ட் வாத்தி யங்கள் உள்ளிட்ட இசை வாத்தியங்கள் முழங்கவும் உற்சாக வரவேற்பு அளிக்க ப்பட்டது.
வரவேற்பை முடிந்ததும், மாணவர்கள் பள்ளிக்குள் சென்று தங்கள் வகுப்ப றைக்கு சென்றனர். அங்கு நீண்ட நாட்களுக்கு பிறகு தங்களது நண்பர்களை நேரில் சந்தித்தால், அவர்க ளுடன் கை குலுக்கியும், கட்டிபிடித்தும் அன்பை பரிமாறி கொண்டனர்.
பின்னர் விடுமுறையில் நடந்தவற்றை நண்பர்க ளிடம் கூறி சந்தோஷப்ப ட்டனர். வெகுநேரம் ஒருவருக்கொருவர் பேசி மகிழ்ந்தனர். பள்ளிகள் திறந்த முதல் நாளான இன்றே மாணவ, மாணவிகளுக்கு நோட்டு புத்தகங்கள் உள்ளிட்டவை வழங்கப்பட்டது.
கோவை-திருச்சி சாலையில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் பள்ளிக்கு வந்த மாணவ, மாணவிகளை சக மாண வர்கள் பேண்ட் வாத்தி யங்கள் முழங்க உற்சாக வர வேற்புடன் வரவேற்ற னர்.
இதேபோல் மேட்டுப்பா ளையம், காரமடை, பொ ள்ளாச்சி, சூலூர், தொ ண்டாமுத்தூர் உள்ளிட்ட புறநகர் பகுதிகளில் உள்ள அரசு பள்ளி களும் திறக்கப்பட்டது. அங்கு மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்ப ட்டது.
நீலகிரி
நீலகிரி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளும் திறக்க ப்பட்டது. காலை முதலே பள்ளிகளுக்கு மாண வர்கள் தங்கள் நண்பர்க ளுடன் வந்த வண்ணம் இருந்தனர். பள்ளிகளில் மாண வர்களை ஆசிரி யர்கள் வரவேற்று வகுப்ப றைக்கு அழைத்து சென்றனர்.






