என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வடவள்ளி அருகே கொள்ளையடிக்க இடையூறு-நாய்களை நாய்களை திருடும் கும்பல்
    X

    வடவள்ளி அருகே கொள்ளையடிக்க இடையூறு-நாய்களை நாய்களை திருடும் கும்பல்

    • நாய்கள் இருப்பதால் கணவன்,மனைவி இருவரும் பயமின்றி வசித்தனர்.
    • கொள்ளை சம்பவங்களுக்கு இடையூறு இருக்காது என்பதால் திருடி இருக்கலாம்

    வடவள்ளி,

    கோவை வடவள்ளி ஐ.ஓ.பி காலனி பகுதியை சேர்ந்தவர் சுகன்யா. இவர் அந்த பகுதியில் கணவருடன் வசித்து வருகிறார்.

    இந்நிலையில் வடவள்ளி போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்றினை அளித்தார். அதில் அவர் வீட்டில் 2 நாய்கள் வளர்த்ததாகவும், அந்த நாய்கள் இருப்பதால் அப்பகுதியில் வரும் வன விலங்குகள் மற்றும் அடையாளம் தெரியாத நபர்களை கண்டால் சத்தம் போட்டு காட்டிக் கொடுத்து விடும். இதனால் அவர்கள் பயமின்றி வசித்து உள்ளனர். இந்நிலையில் சம்பவத்தன்று அவர் வீட்டின் கதவை பூட்டி விட்டு உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். பின்னர் மாலை வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்த போது ஒரு நாயை காணவில்லை. உடனடியாக அக்கம்ப க்கத்தில் சிறிது நேரம் தேடி வந்துள்ளார். பின்னர் அது தானாக திரும்பி வந்து விடும் என எண்ணி வீட்டிற்கு சென்றுள்ளார்.

    இந்நிலையில் மீண்டும் இரவு நேரத்தில் நாய்கள் குறைக்கும் சத்தம் கேட்டுள்ளது. அப்பகுதியில் வன விலங்குகள் நடமா ட்டம் இருப்பதால் அதற்காக நாய்கள் சத்தம் போடுவதாக நினைத்து தூங்கியுள்ளார். பின்னர் காலை எழுந்து பார்க்கும் போது அந்த மற்றொரு நாயும் காணாமல் போனது கண்டு அதிர்ச்சி அடைந்தார். மர்ம நபர்கள் வீட்டிற்குள் வந்து சென்ற தடயங்கள் தெரிந்ததாக போலீசில் தெரிவித்து ள்ளார். மேலும் வீட்டிற்கு புகுந்து கொள்ளை அடிக்கும் நபர்கள் நாய்களின் சத்தத்தால் பயந்து வந்த நிலையில், அதனை திருடி விட்டால் இப்பகுதியில் நடக்கும் கொள்ளை சம்பவங்களுக்கு இடையூறு இருக்காது என்பதால் திருடி இருக்கலாம் என்றும் கூறினார்.

    கொள்ளையடிக்க இடையூறாக இருப்பதால் நாய்களை திருடும் மர்ம கும்பலால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    Next Story
    ×