என் மலர்
கோயம்புத்தூர்
- அக்கம் பக்கத்தினர் பொள்ளாச்சி அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர்.
- சிறுவன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
கோவை,
கோவை கிணத்துக்கடவு அருகே உள்ள மெட்டுவாவியை சேர்ந்தவர் 15 வயது மாணவி. இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார்.
இவர் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு ஈரோட்டில் உள்ள பண்ணாரியம்மன் கோவிலுக்கு சென்றார். அப்போது மாணவிக்கு வடவேடம்பட்டியை சேர்ந்த 17 வயது சிறுவனுடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. சம்பவத்தன்று சிறுமி தனது பெற்றோரிடம் பள்ளிக்கு செல்வதாக கூறி விட்டு சென்றார். ஆனால் அவர் பள்ளிக்கு செல்லாமல் காதலனுடன் பழனிக்கு சென்றார்.
பின்னர் 2 பேரும் அங்குள்ள கோவிலில் வைத்து திருமணம் செய்தனர். பின்னர் சிறுவன் சிறுமியை அவரது வீட்டிற்கு அழைத்து சென்றார். அங்கு வைத்து 2 பேரும் கணவன்-மனைவியாக வாழ்ந்தனர். இந்த நிலையில் சிறுமி 4 மாத கர்ப்பமாக இருந்தார்.
இது குறித்து அக்கம் பக்கத்தினர் பொள்ளாச்சி அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் சம்பவஇடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணையில் 17 வயது சிறுவன், 15 வயது சிறுமியை திருமணம் செய்து கர்ப்பமாக்கியது தெரிய வந்தது. இதனையடுத்து போலீசார் சிறுமியை திருமணம் செய்து கர்ப்பமாக்கிய சிறுவன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் போலீசார் சிறுவனை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.
- உணவு, குடிநீர் தேடி குடியிருப்பு, விளை நிலங்களில் நுழைந்து பொதுமக்களையும், விவசாயிகளையும் அச்சுருத்தி வருகின்றன.
- யானையினை அடர் வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேட்டுப்பாளையம்:
மேட்டுப்பாளையம் சமயபுரம், சுக்கு காபிக்கடை உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் அடர் வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளன.
இந்த வனப்பகுதிகளில் காட்டுயானை, சிறுத்தை, காட்டுப்பன்றி, புள்ளிமான் உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் உள்ளன.
இவை அவ்வப்போது உணவு, குடிநீர் தேடி குடியிருப்பு, விளை நிலங்களில் நுழைந்து பொதுமக்களையும், விவசாயிகளையும் அச்சுருத்தி வருகின்றன.
இதனிடையே குடியிருப்பு பகுதியில் ஒரு காட்டு யானை சுற்றி வருகிறது. அத்துடன் ஒரு குட்டி யானையும் சுற்றுகிறது. இந்த யானையானது நடந்து செல்லாமல் மின்னல் வேகத்தில் செல்கிறது. அதனுடன் செல்லும் குட்டி யானை சிட்டாக நடமாடி வருகிறது.
இதனால் அப்பகுதி மக்கள் பெரிய யானைக்கு மின்னல் என்றும், சின்ன யானைக்கு சிட்டு என்றும் பெயர் வைத்து அழைத்து வருகிறார்கள்.
இந்த நிலையில் இன்று அதிகாலை மின்னல் மற்றும் சிட்டு யானைகள் வனத்தை விட்டு வெளியேறி சுக்கு காபிக்கடை பகுதிக்குள் நுழைந்தது.
அங்குமிங்கும் சுற்றி திரிந்த காட்டு யானைகள், அங்குள்ள பாலாஜி என்ப வரது வீட்டு சுற்றுச்சுவரை இடித்து தள்ளியது. மேலும் வீட்டின் அருகே நிறுத்தப்ப ட்டி ஆட்டோ வையும் சேதப்படுத்தியது.
இதில் ஆட்டோவின் கண்ணாடி சுக்குநூறாக உடைந்து நொறுங்கியது. வீடு மற்றும் ஆட்டோவை சேதப்படுத்தி விட்டு யானை அங்கிருந்து மின்னல் வேகத்தில் சென்று விட்டது.
இதை பார்த்த வீட்டு உரிமையாளர் உடனடியாக சம்பவம் குறித்து மேட்டுப்பாளையம் வனத்துறை யினருக்கு தகவல் தெரிவித்தனர். வனத்துறையினர் விரைந்து வந்து காட்டு யானைகளை குடியிருப்பு பகுதியை விட்டு வனத்திற்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதா வது:-
இன்று அதிகாலை ஊருக்குள் புகுந்த மின்னல், சிட்டு காட்டுயானைகள் எங்களது பகுதிக்குள் புகுந்து வீட்டின் சுற்றுச்சு வரை இடித்து தள்ளியதோடு, வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோவின் முன்பக்க கண்ணாடியையும் உடைத்து சேதப்படுத்தியுள்ளது.
காட்டு யானைகளின் தொடர் அட்டகாசத்தால் நாங்கள் அச்சத்துடனேயே வசித்து வருகிறோம்.
மேலும் தூக்கமின்றி நிம்மதி இழந்து தவித்து வருகிறோம். எனவே வனத்துறையினர் ஒற்றைக்காட்டு யானையினை அடர் வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
- குற்றவாளிகளை பிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் உத்தரவின் பேரில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டது.
- போதை தலைக்கேறிய நிலையில் இருந்த நாங்கள் அரிவாளுடன் கவுன்சிலர் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்தோம்
கோவை:
கோவை மலுமிச்சம்பட்டி அருகே உள்ள அவ்வை நகரை சேர்ந்தவர் ரவிக்குமார். இவரது மனைவி சித்ரா (வயது 44). தி.மு.க.வை சேர்ந்த இவர் மலுமச்சம்பட்டி ஊராட்சியில் கவுன்சிலராக உள்ளார்.
இவர்களது மகன் மோகன் (24). நேற்று முன்தினம் இரவு இவர்களது வீட்டுக்குள் முகமூடி அணிந்தபடி 5 பேர் கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் அத்துமீறி நுழைந்தனர். அவர்கள் வீட்டில் இருந்த ரவிக்குமார், கவுன்சிலர் சித்ரா, மோகன் ஆகியோரை தலை மற்றும் உடலில் அரிவாளால் வெட்டி விட்டு கொலை மிரட்டல் விடுத்து அங்கு இருந்து தப்பிச் சென்றனர். ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய 3 பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இது குறித்து செட்டிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இந்நிலையில் குற்றவாளிகளை பிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் உத்தரவின் பேரில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி தி.மு.க. கவுன்சிலரை வீடு புகுந்து வெட்டிய மலுமிச்சம்பட்டியை சேர்ந்த ராஜன் என்ற ராஜா (23), பிச்சைபாண்டி (23), வைசியாள் வீதியை சேர்ந்த முத்துப்பாண்டி (24), அம்மா நகரை சேர்ந்த மகேஷ் கண்ணன் (22), தெற்கு உக்கடத்தை சேர்ந்த ஸ்ரீரக்சித் (18) ஆகியோரை சம்பவம் நடந்த 24 மணி நேரத்தில் தனிப்படை போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் கைது செய்யப்பட்ட ராஜன், பிச்சைபாண்டி, முத்துப்பாண்டி ஆகியோர் மீது ஏற்கனவே கொலை மிரட்டல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் இருப்பது தெரிய வந்தது.
5 பேரிடம் தி.மு.க. கவுன்சிலர் மற்றும் அவரது கணவர், மகனை வீடு புகுந்து வெட்டியதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறியதாவது:-
நாங்கள் 5 பேரும் கவுன்சிலர் வீட்டின் பின் புறத்தில் உள்ள காலி இடத்தில் இரவு நேரத்தில் மது அருந்துவோம். அப்போது கஞ்சாவும் பிடிப்போம். இதனை பார்த்த சித்ரா எங்களை போலீசில் பிடித்து கொடுத்து விடுவதாக மிரட்டி வந்தார். மேலும் இங்கு வைத்து கஞ்சா மது அடிக்க கூடாது என எச்சரித்து வந்தார். இது எங்களுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. எனவே அவரை வீடு புகுந்து கொலை செய்வது என முடிவு செய்தோம்.
சம்பவத்தன்று இரவு நாங்கள் 5 பேரும் ஒன்றாக சேர்ந்து கஞ்சா குடித்தோம். போதை தலைக்கேறிய நிலையில் இருந்த நாங்கள் அரிவாளுடன் கவுன்சிலர் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்தோம். எங்களை பார்த்த கவுன்சிலரின் கணவர் ரவிக்குமார் சத்தம் போட்டார். அப்போது அவரை நாங்கள் வெட்டினோம். கணவரின் அலறல் சத்தம் கேட்டு வெளியே வந்த கவுன்சிலர் சித்ராவையும் வெட்டினோம். இதனை தடுக்க வந்த அவரது மகனையும் வெட்டி விட்டு தலைமறைவாக இருந்தோம். போலீசார் விசாரணை நடத்தி எங்களை கைது செய்து விட்டனர்.
இவ்வாறு அவர்கள் அளித்த வாக்குமூலத்தில் கூறினார்.
பின்னர் போலீசார் கைது செய்யப்பட்ட 5 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.
+2
- வாலிபால் போட்டிகள் தொண்டாமுத்தூர், காரமடை, சூலூர் ஆகிய இடங்களில் நடைபெற்றன.
- பஞ்சாயத்து தலைவர் திரு. சதானந்தம் அவர்கள் சிறப்பு விருந்தினராக பங்கேற்று போட்டிகளை தொடங்கி வைத்தார்.
தென்னிந்திய அளவில் நடத்தப்படும் 'ஈஷா கிராமோத்சவம்' விளையாட்டு திருவிழாவின் கிளெஸ்டர் அளவிலான போட்டிகள் கோவையில் இன்று கோலாகலமாக தொடங்கியது.
முதல்கட்டமாக, நூற்றுக்கணக்கான கிராமிய அணிகள் பங்கேற்ற வாலிபால் போட்டிகள் தொண்டாமுத்தூர், காரமடை, சூலூர், பொள்ளாச்சி ஆகிய இடங்களில் இன்று நடைபெற்றன. தொண்டாமுத்தூர் கிளெஸ்டர் அணிகளுக்கான போட்டிகள் சந்தேகவுண்டம்பாளையத்தில் உள்ள ஈஷா வித்யா பள்ளியில் நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கான வீரர்கள் உற்சாகமாக பங்கேற்றனர். இக்கரை போளுவாம்பட்டி பஞ்சாயத்து தலைவர் திரு. சதானந்தம் அவர்கள் சிறப்பு விருந்தினராக பங்கேற்று போட்டிகளை தொடங்கி வைத்தார்.
இதேபோல், பொள்ளாச்சியில் உள்ள என்.ஜி.எம். கல்லூரியில் நடைபெற்ற விளையாட்டு போட்டிகளை மாரியம்மன் உழவன் உற்பத்தியாளர் நிறுவனத்தின் இயக்குநர்கள் திரு. செல்வகுமாரசாமி மற்றும் திரு. கோபி ஆனந்த் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இன்றும் நாளையும் நடைபெறும் கிளெஸ்டர் போட்டிகளில் தேர்வாகும் அணிகள் அடுத்த மாதம் நடைபெறும் டிவிஸினல் போட்டிகளில் விளையாட தகுதி பெறும்.
- பம்பை இசை, பூஜையின் போதும் கிளி தலை மீது இருந்து நகருவதே கிடையாது.
- மாசாணி அம்மன் சுயம்புவாக தோன்றியதா கவும் கதை வரலாறுகள் உள்ளது.
நீலாம்பூர்,
கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ளது இருகூர் கிராமம். இந்த கிராமத்தில் பழமை வாய்ந்த மாசாணி அம்மன் கோவில் உள்ளது.
இந்த மாசாணி அம்மன் சுயம்புவாக தோன்றியதாகவும் கதை வரலாறுகள் உள்ளது.
மாதந்தோறும் அமாவாசை நாட்களில் இங்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது. இதுதவிர வெள்ளி, செவ்வாய் தினங்களிலும் பூஜைகள் நடைபெறும்.
இந்த கோவிலில் உள்ளூர் பக்தர்கள் மட்டுமின்றி, வெளியூர் பக்தர்களும் தினமும் வந்து சாமி தரிசனம் செய்து செல்வார்கள்.
ஆடி மாதத்தில் வரும் அனைத்து வெள்ளிக்கிழமைகளிலும் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெறுவது வழக்கம். ஆடி மாதம் முழுவதும் இந்த கோவிலில் உள்ள அம்மன் சிலை மீது பச்சைக்கிளி அமர்வது வழக்கம். இதனை பக்தர்களும் தரிசித்து செல்வார்கள்.
இந்த ஆண்டும் அதே போல ஆடி வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
இந்த பூஜைகளின் போது, மாசாணியம்மன் தலையிலும், வெளியே அமைக்கப்பட்டுள்ள சிவன், பார்வதி ஊஞ்சலிலும் கிளி அமர்ந்து தரிசனம் தந்து வருகிறது. இந்த ஆண்டு நடைபெற்ற சிறப்பு பூஜையிலும் கிளி அமர்ந்து தரிசனம் கொடுத்து வருகிறது.
இதனை காண்பதற்காகவும், கிளி அம்மன் தலையில் அமர்ந்திருப்பதை தரிசிப்பதற்காகவும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த மக்கள் வந்து சாமி தரிசனம் செய்து சென்றனர்.
- 2-ம் தவணை பெற்ற வியாபாரி கள் 3-ம் தவணை பெறவும் விண்ணப்பிக்கலாம்.
- ஆதார் அட்டை, வங்கி கணக்கு புத்தகம் உள்ளிட்ட ஆவணங்களுடன் வந்து விண்ணப்பித்து பயன் பெற்று கொள்ளலாம்.
கோவை,
கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் பி.எம்.சுவநிதி திட்டத்தின் கீழ் கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள சாலையோர வியாபாரிகளுக்கு கடன் வழங்கும் முகாம் நடைபெற்று வருகிறது.
இந்த முகாமினை மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் அவர் கூறியதாவது:-
பி.எம்.சுவநிதி திட்டத்தின் கீழ் கோவை மாநகராட்சிக்குட்பட்ட சாலையோர வியாபாரிகளுக்கு கடன் வழங்கும் முகாம் நடந்து வருகிறது. இந்த முகாமானது வருகிற 31-ந் தேதி வரை நடக்கிறது.
இந்த திட்டத்தின் கீழ் முதல் தவணையாக ரூ.10 ஆயிரம், 2-ம் தவணை ரூ.20 ஆயிரம், 3-வது தவணை ரூ.50 ஆயிரம் என குறைந்த வட்டியில் கடன் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த முகாமில் புதிதாக முதல் தவணை கடன் பெறவும், ஏற்கனவே முதல் தவணை கடனுக்காக விண்ண ப்பித்து கடன் கிடைக்காத வியாபாரிகள், முதல் தவணை பெற்ற வியாபாரிகள் 2-ம் தவணை பெறவும், 2-ம் தவணை பெற்ற வியாபாரி கள் 3-ம் தவணை பெறவும் விண்ணப்பிக்கலாம். ஆதார் அட்டை, வங்கி கணக்கு புத்தகம் உள்ளிட்ட ஆவணங்களுடன் வந்து விண்ணப்பித்து பயன் பெற்று கொள்ளலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
குனியமுத்தூர்,
கோவை சுந்தராபுரத்தில் கோவை மாநகர காவல் துறை மற்றும் ரத்தினம் கலை அறிவியல் கல்லூரி சார்பில் போதை பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு கோவை மாநகர தெற்கு மண்டல துணை காவல் ஆணையர் சண்முகம் தலைமை தாங்கினார். போத்தனூர் சரக உதவி ஆணையர் கரிகால் பாரி சங்கர், சுந்தராபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் நடேசன் ஆகியோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து விழிப்புணர்வு பேரணி நடந்தது. பேரணியை துணை ஆணையர் சண்முகம் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் 1500 பேர் கலந்து கொண்டனர்.
பேரணியானது ரத்தினம் கல்லூரி முன்பிருந்து சுந்தராபுரம் சிக்னல் வரை நடைபெற்றது. இதில் ரத்தினம் கல்லூரி தலைமை செயல் அதிகாரி மாணிக்கம், முதல்வர் பாலசுப்பிரமணியம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
- பூசாரியை தாக்கியதாக சிறுவன் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
- தலைமறைவாக உள்ள சத்தியசீலன் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.
கோவை,
கோவை கருமத்தம்பட்டி அருகே உள்ள பதுவம்பள்ளி இந்திரா நகரை சேர்ந்தவர் சாமிநாதன்(40). ஆட்டோ டிரைவர். இவர் அந்த பகுதியில் உள்ள கருப்பராயன் கோவிலில் பூசாரியாக இருந்து வருகிறார்.
சம்பவத்தன்று கோவிலில் திருவிழா நடந்தது. அப்போது ஒலிபெருக்கியில் சாமி பாடல் படித்துக் கொண்டிருந்தது. அப்போது அங்கு வந்த 3 பேர் சாமிநாதனிடம் விஜய் பாடல் போடகோரி தகராறு செய்தனர். இதனால் வாக்குவாதம் முற்றவே ஆத்திரம் அடைந்த 3 பேரும் பூசாரியை தாக்கி விட்டு அங்கிருந்து சென்றனர்.
இதுகுறித்து கருமத்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து பூசாரியை தாக்கிய மோப்பிரிபாளையத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவர் செல்வகுமார்(22) என்பவரை கைது செய்தனர். மேலும் அவருடன் வந்த 17 வயது சிறுவனை கைது செய்து கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர். தலைமறைவாக உள்ள சத்தியசீலன் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.
- போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் தலைமை தாங்கி கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.
- இதில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது.
கோவை.
வருகிற 15-ந் தேதி 76-வது சுதந்திர தின விழா நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.76-வது சுதந்திர தின விழாவை குறிக்கும் வகையில் கோவை மாநகர போலீஸ் சார்பில் பொது மக்களுடன் இணைந்து 76 கிலோமீட்டர் சைக்கிள் பயணம் இன்று நடந்தது.
போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இருந்து சைக்கிள் பயணம் புறப்பட்டது. போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் தலைமை தாங்கி கொடி அசைத்து பயணத்தை தொடங்கி வைத்ததுடன், தானும் சைக்கிளில் பயணம் செய்தார். இந்த பயணமானது செல்வபுரம், பேரூர், மாதம்பட்டி, ஆலந்துறை, காருண்யா நகர், ஈஷா வழியாக 76 கிலோ மீட்டர் தூரத்திற்கு செல்கிறது.
இதில் போலீஸ் கமி ஷனர் பாலகிரு ஷ்ணன், துணை போலீஸ் கமிஷனர்கள் சந்தீஷ், மதிவாணன், சுகாசினி மற்றும் காவல்துறை அதிகாரிகளும், போலீ சாரும், பொதுமக்களும் இதில் பங்கேற்றனர். 4 மணி நேரம் இந்த சைக்கிள் பயணம் நடந்தது.
இதில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது.
- 5 நாட்களாக இளம்பெண் பங்கஜ்குமார் ராமுடன் பேசாமல் இருந்து வந்தார்.
- பெரியநாயக்கன்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை,
பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் பங்கஜ்குமார் ராம்(வயது25).
இவர் கடந்த 40 நாட்களுக்கு முன்பு கோவைக்கு வந்தார். பின்னர் இடிகரை அருகே உள்ள கிருஷ்ணாபுரத்தில் உறவினர்களுடன் தங்கி இருந்து அந்த பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.
இவர் பீகாரில் இருக்கும்போது இளம்பெண் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. அந்தப் பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது.
2 பேரும் அடிக்கடி நேரில் சந்தித்தும் செல்போனில் பேசியும் காதலை வளர்த்து வந்தனர்.
இந்த நிலையில் 2 பேருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. எனவே கடந்த 5 நாட்களாக இளம்பெண் பங்கஜ்குமார் ராமுடன் பேசாமல் இருந்து வந்தார்.
இதன் காரணமாக அவர் கடந்த சில நாட்களாக மிகுந்த மனவேதனை அடைந்து காணப்பட்டார். சம்பவத்தன்று அறையில் இருந்த பங்கஜ்குமார் ராம் வாழ்க்கையில் விரக்தி அடைந்து தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதனை பார்த்து அக்கம் பக்கத்தினர் இதுகுறித்து பெரியநாயக்கன்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
உடனடியாக போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.
பின்னர் தற்கொலை செய்து கொண்ட பங்கஜ்குமார் ராமின் உடலை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு பெரிய பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.இதுகுறித்து பெரியநாயக்கன்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை.
கோவை குனியமுத்தூரில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சந்தேகத்திற்கு இடமாக 3 பேர் சுற்றி திரிந்தனர். அவர்களை போலீசார் பிடித்து விசாரித்த போது, அவர்கள் போத்தனூரை சேர்ந்த பாலசுப்ரமணி (28), குறிச்சி கார்டனை சேர்ந்த ஜாபர் சாதிக் (29), மற்றும் குனியமுத்தூரை சேர்ந்த சதாம் உசேன் (29) என்பதும் போதை மாத்திரை விற்க நின்றதும் தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் 3 பேரையும் கைது செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்து 83 போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனர்.
- உள்ளூர் மட்டுமின்றி திண்டுக்கல், பழனி, உடுமலை பகுதியில் இருந்தும் தக்காளி வரத்து அதிகரித்துள்ளது.
- தக்காளி விலை மீண்டும் சரிவால் இல்லத்தரசிகள் மற்றும் வாடிக்கையாளர்கள் சற்று ஆறுதல் அடைந்துள்ளனர்.
பொள்ளாச்சி,
பொள்ளாச்சி மார்க்கெட்டுக்கு தக்காளி வரத்து அதிகரிக்க தொடங்கி உள்ளதால் அதன் விலை ஒரு கிலோ ரூ.40 ஆக சரிந்துள்ளது.
பொள்ளாச்சி சுற்றுவட்டார கிராம பகுதிகளில் இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தாலும், மே மாதம் வரை உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து மார்க்கெட்டுக்கு தக்காளி வரத்து அதிகமாக இருந்தது.
மார்க்கெட்டுக்கு தக்காளி வரத்து அதிகரிப்பின் காரணமாக அந்நேரத்தில் ஒரு கிலோ ரூ.10 முதல் அதிகபட்சமாக ரூ.15-க்கு என குறைந்த விலையில் விற்பனையானது.
பின் கோடை மழைப்பொழிவு போதியளவு இல்லாததால், பல கிராமங்களில் தக்காளி சாகுபடி குறைந்தது. இதன் காரணமாக கடந்த சில வாரங்களாக மார்க்கெட்டுக்கு தக்காளி வரத்து வழக்கத்தைவிட மிகவும் குறைவாக இருந்தது.
இதனால் கடந்த மாதம் இறுதியில் ஒரு கிலோ தக்காளி ரூ.100 முதல் அதிகபட்சமாக ரூ.120 வரை விற்பனையானது. இதனால் பொதுமக்கள் அவதிக்கு ஆளானார்கள். இந்நிலையில், சில வாரத்துக்கு பிறகு, மார்க்கெட்டில் தற்போது தக்காளி வரத்து சற்று அதிகரித்தது. இதனால், அதன் விலை குறைய தொடங்கியது.
உள்ளூர் மட்டுமின்றி திண்டுக்கல், பழனி, உடுமலை பகுதியில் இருந்தும் தக்காளி வரத்து அதிகரித்துள்ளது. இதனால் நேற்று மார்க்கெட்டில் 14 கிலோ எடை கொண்ட ஒரு பெட்டி ரூ.500 முதல் ரூ.600-க்கு ஏலம் போனது. சராசரியாக ஒரு கிலோ ரூ.40 முதல் ரூ.45 வரை விற்பனையானது. சில வாரத்துக்கு பிறகு தக்காளி விலை மீண்டும் சரிவால் இல்லத்தரசிகள் மற்றும் வாடிக்கையாளர்கள் சற்று ஆறுதல் அடைந்துள்ளனர்.






