என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கு கடன் வழங்கும் முகாம்
- 2-ம் தவணை பெற்ற வியாபாரி கள் 3-ம் தவணை பெறவும் விண்ணப்பிக்கலாம்.
- ஆதார் அட்டை, வங்கி கணக்கு புத்தகம் உள்ளிட்ட ஆவணங்களுடன் வந்து விண்ணப்பித்து பயன் பெற்று கொள்ளலாம்.
கோவை,
கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் பி.எம்.சுவநிதி திட்டத்தின் கீழ் கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள சாலையோர வியாபாரிகளுக்கு கடன் வழங்கும் முகாம் நடைபெற்று வருகிறது.
இந்த முகாமினை மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் அவர் கூறியதாவது:-
பி.எம்.சுவநிதி திட்டத்தின் கீழ் கோவை மாநகராட்சிக்குட்பட்ட சாலையோர வியாபாரிகளுக்கு கடன் வழங்கும் முகாம் நடந்து வருகிறது. இந்த முகாமானது வருகிற 31-ந் தேதி வரை நடக்கிறது.
இந்த திட்டத்தின் கீழ் முதல் தவணையாக ரூ.10 ஆயிரம், 2-ம் தவணை ரூ.20 ஆயிரம், 3-வது தவணை ரூ.50 ஆயிரம் என குறைந்த வட்டியில் கடன் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த முகாமில் புதிதாக முதல் தவணை கடன் பெறவும், ஏற்கனவே முதல் தவணை கடனுக்காக விண்ண ப்பித்து கடன் கிடைக்காத வியாபாரிகள், முதல் தவணை பெற்ற வியாபாரிகள் 2-ம் தவணை பெறவும், 2-ம் தவணை பெற்ற வியாபாரி கள் 3-ம் தவணை பெறவும் விண்ணப்பிக்கலாம். ஆதார் அட்டை, வங்கி கணக்கு புத்தகம் உள்ளிட்ட ஆவணங்களுடன் வந்து விண்ணப்பித்து பயன் பெற்று கொள்ளலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.






