என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோவையில் போதை மாத்திரை விற்க முயன்ற 3 பேர் கைது
3 பேரிடமிருந்து 83 போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனர்.
கோவை.
கோவை குனியமுத்தூரில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சந்தேகத்திற்கு இடமாக 3 பேர் சுற்றி திரிந்தனர். அவர்களை போலீசார் பிடித்து விசாரித்த போது, அவர்கள் போத்தனூரை சேர்ந்த பாலசுப்ரமணி (28), குறிச்சி கார்டனை சேர்ந்த ஜாபர் சாதிக் (29), மற்றும் குனியமுத்தூரை சேர்ந்த சதாம் உசேன் (29) என்பதும் போதை மாத்திரை விற்க நின்றதும் தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் 3 பேரையும் கைது செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்து 83 போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனர்.
Next Story






