என் மலர்
கோயம்புத்தூர்
- உண்மையில் நிலாவில் உள்ள களநிலவரம் மிகவும் சவாலானது.
- நிலவில் விண்கலத்தை தரையிறக்கும் முன்பாக வேகத்தை குறைக்க வேண்டியது அவசியம்.
கோவை:
இந்திய விண்வெளி ஆய்வு மையத்தில் தமிழகத்தை சேர்ந்த விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை இயக்குநராக வேலை பார்த்தார். அப்போது அவர் விண்வெளி துறையில் பல்வேறு சாதனைகளை படைத்து உள்ளார்.
தற்போது இந்தியாவின் சந்திரயான்-3 விண்கலம் நிலவில் கால்பதிக்க உள்ளது. இந்த நிலையில் மயில்சாமி அண்ணாதுரை நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
ரஷியா நிலவுக்கு அனுப்பிய லூனா-25 விண்கலம் தரையிறங்க முடியாமல் நொறுங்கியது அனைவருக்கும் அதிர்ச்சி தரலாம். சர்வதேச விண்வெளி துறையில் மிகுந்த அனுபவம் உடைய தேசம் எப்படி தோல்வியை தழுவியது என்று பலர் நினைக்கலாம். ஆனால் உண்மையில் நிலாவில் உள்ள களநிலவரம் மிகவும் சவாலானது.
சந்திரயான்-2 விண்கலத்துக்கு ஏற்பட்ட அதேகதி தான், லூனா-25 விண்கல த்துக்கு ஏற்பட்டு இருக்கும் என்று கருதுகிறேன். நிலவில் விண்கலத்தை தரையிறக்கும் முன்பாக வேகத்தை குறைக்க வேண்டியது அவசியம். அப்போது உயரமும் படிப்படியாக குறைந்து கொண்டே வரும்.
நிலவின் சமவெளி பகுதியில் பல கிலோமீட்டர் தொலைவுக்கு மலைமுகடு போல இருக்கும். இத்தகைய சூழ்நிலையில் அங்கு விண்கலத்தை தரையிறக்கும் போது கரடுமுரடான இடங்களில் சிக்கி அசம்பாவிதம் நிகழ வாய்ப்பு உண்டு.
ரஷியாவின் லூனா-25 விண்கலத்துக்கு அந்நிலையில் தான் பிரச்சினை ஏற்பட்டு இருக்கும் என்று கருதுகிறேன். அந்த நாட்டின் 14 ஆண்டுகால உழைப்பு நொடிப்பொழுதில் கானல் நீரானது மிகவும் வருத்தம் தருகிறது. நாம் இதுவரை பார்த்திராத இடத்தில், ஒரு சவாலான காரியத்தை மேற்கொள்ளப் போகிறோம்.
லூனா-25 விண்கலத்தின் வேகத்தை குறைக்கும்போது ரஷியாவுக்கு பிரச்சினை ஏற்பட்டது. ஆனால் நாம் சந்திரயான்-3 விண்கலத்தின் வேகத்தை 2 நாட்களுக்கு முன்பே குறைத்து வெற்றிகரமாக இயக்கி வருகிறோம்.
சந்திரயான்-2 உடன் அனுப்பப்பட்ட ஆர்பிட்டர் உடன், தற்போது சந்திரயான்-3 விண்கலத்தின் விக்ரம் லேண்டருக்கு தகவல் தொடர்பு ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இப்போது வரை நடப்பது எல்லாமே இந்தியாவுக்கு சாதகமாக உள்ளது. இதனால் உலக நாடுகளிடம் சந்திரயான்-3, விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் மீது நம்பிக்கை கலந்த எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
- முன்கதவு பூட்டை உடைத்து ரூ.1 லட்சம் மதிப்பு உடைய பொருட்களை அள்ளி சென்றனர்
- புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
கோவை,
கோவை சரவணம்பட்டி, சிவானந்தபுரத்தை சேர்ந்தவர் சம்பத் (வயது 44). இவர் அந்த பகுதியில் நகைக்கடை நடத்தி வருகிறார்.இந்த நிலையில் அவர் சம்பவத்தன்று இரவு கடையை பூட்டிவிட்டு சென்றார். அப்போது மர்ம நபர்கள் முன்கதவு பூட்டை உடைத்து கடையில் இருந்த ரூ.1 லட்சம் மதிப்பு உடைய 6 கிலோ வெள்ளி மற்றும் ரூ.70 ஆயிரம் ரொக்கத்தை கொள்ளை அடித்து தப்பி சென்றனர். அடுத்த நாள் காலை சம்பத் கடைக்கு வந்தார். அப்போது முன்கதவு பூட்டு உடைந்து கிடப்பதும், கடைக்குள் இருந்த மேற்கண்ட பொருட்கள் கொள்ளை போனது தெரிய வந்தது. இது தொடர்பாக சம்பத் சரவணம்பட்டி போலீசில் புகார் அளித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஸ்கேன் அறிக்கை பெறுவதில் சிக்கல்
- மருத்துவர் பணியில் இல்லை எனக்கூறி நோயாளிகளை அலைக்கழிப்பது வேதனையாக உள்ளது
மேட்டுப்பாளையம்,
மேட்டுப்பாளையம் நகர் பகுதியில் அரசு மருத்துவமனை உள்ளது. இங்கு மேட்டுப்பாளையம், காரமடை, சிறுமுகை என சுமார் 100-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் நோயாளிகளின் வசதிக்காக சி.டி. ஸ்கேன் மையம் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது.
மனிதனின் உடலில் நோய் தாக்குதலை கண்டறிய சி.டி. ஸ்கேன் அறிக்கை அவசியம். ஆனால் இம்மருத்துவமனையில் ரேடியால ஜிஸ்ட் பணியிடம் காலியாக உள்ளது. இதனால் அங்கு உள்ள டாக்டர்களுக்கு நோயின் தன்மை குறித்து அறிவதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. எனவே நோயாளிகள் அவதிப்பட்டு வருகின்றனர். இது குறித்து நோயாளிகள் கூறுகையில் சி.டி.ஸ்கேன் எடுக்க தனியார் மருத்துவ மனையில் ரூ. 2,500 முதல் ரூ.4,000 வரை செலவாகும். ஆனால் அரசு மருத்துவமனையில் ரூ.500 உடன் முடியும் என்பதற்காகவே நோயாளிகள் இங்கு வருகின்றனர்.
ஆனால் இங்கு எடுக்கப்படும் சி.டி.ஸ்கேனில் நோயின் தன்மை குறித்து தெரிவிக்க ரேடியாலஜிஸ்ட் பணியில் ஆள் இல்லை எனக் கூறி மருத்துவர்கள் நோயாளியை அலைக்கழித்து வருகின்றனர். இதனால் நோயாளிகள் தனியார் மருத்துவமனைக்கு தள்ளப்படும் நிலை ஏற்பட்டு உள்ளது.
நோயாளிகள் சி.டி.ஸ்கேன் எடுத்த பின்பு அறிக்கை வழங்க இயலாது, அதற்கான மருத்துவர் பணியில் இல்லை எனக் கூறி நோயாளிகளை அலைக்கழித்து வருவது வேதனையாக உள்ளது என கூறினர்.
இது குறித்து மேட்டுப்பாளையம் அரசு மருத்துவர்கள் கூறுகையில் மேட்டுப்பாளையம் மருத்துவமனையில் சி.டி.ஸ்கேன் எடுக்கும் போது பெரிய அளவிலான அறிகுறிகள் மட்டுமே நோயாளிகளுக்கு தெரிவிக்கப்பட்டு வருகிறது. மிக நுண்ணிய அளவில் உள்ள நோய் தாக்குதல்களை தெரிவிக்க வேண்டும் என்றால், ரேடியோலஜிஸ்ட் மருத்துவர் பணியிடத்தை நிரப்ப வேண்டி உள்ளது. இது தொடர்பாக அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டு உள்ளது. எனவே அரசு உடனடியாக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவ மனையில் ரேடியாலஜிஸ்ட் பணியை பூர்த்தி செய்ய வேண்டும் என கூறினர்.
- பெண்கள் முன்பு ஆடைகளை கழற்றி நிர்வாணமாக நின்றார்
- பக்கத்தில் வந்தால் குத்தி கொலை செய்வதாக மிரட்டினார்
கோவை,
கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் வின்சென்ட் (வயது 37). கூலி தொ ழிலாளி.
சம்பவத்தன்று இவர் அந்த பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்று மது குடித்தார். பின்னர் போதை தலைக்கேறிய நிலையில் கையில் கத்தியுடன் வீட்டிற்கு நடந்து செ ன்றார். அப்போது வின்சென்ட் அங்கு நின்று கொண்டு இருந்த பெண்கள் முன்பு ஆடை களை கழற்றி நிர்வாண நிலையில் முகம் சுளிக்கும்படி நடந்து கொண்டார். இதனை பார்த்த அங்கு இருந்தவர் தட்டிக்கேட்டனர். இதில் ஆத்திரம் அடைந்த அவர்கள் பெண்களை தகாத வார்த்தைகளால் பேசி யாராவது பக்கத்தில் வந்தால் குத்தி கொலை செய்து விடுவதாக கத்தியை காட்டி மிரட்டினார். பின்னர் ஆத்திரத்தில் அங்கு அங்கு இருந்த தெரு பைப்பை உடைத்து விட்டு தப்பிச் சென்றார்.
இது குறித்து அந்த பகுதியை சேர்ந்தவர்கள் வால்பாறை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் கை யில் கத்தியுடன் பெண்கள் முன்பு நிர்வா ணமாக நின்ற வின்சென்டை கைது செய்தனர். இதனை தொடர்ந்து போலீசார் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.
- போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் மரக்கன்று நட்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்
- துடியலூர், வடவள்ளி காவல் நிலையங்கள் நாளை முதல் கோவை மாநகர போலீசுடன் சேர்க்கப்பட உள்ளது.
கோவை, -
கோவை மாநகர பி.ஆர்.எஸ். மைதானத்தில் காவல் வனம் என்ற பெயரில் மரம் நடும்விழா நடைபெற்றது. இதனை மாநகர போலீசாரும், சிறுதுளி அமைப்பும் ஒருங்கிணைந்து நடத்தியது.
மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். அப்போது சுமார் 750 மரக்கன்றுகள், மியாவாக்கி முறையில் நடவு செய்யப்பட்டது.இதனை தொடர்ந்து போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் நிகழ்ச்சியில் பேசுகையில், காவல் வனத்தில் 750 வகையான மரக்கன்றுகள் நடப்பட்டு உள்ளது. இம்மரங்களை சிறுதுளி அமைப்பு பராமரிக்க உதவுகிறது.
ஏற்கனவே 1500 மரங்கள் இவ்வளாகத்தில் உள்ளன. இவை சுற்றுபுற சூழலை மேம்படுத்த உதவும். துடியலூர், வடவள்ளி காவல் நிலையங்கள் நாளை முதல் கோவை மாநகர போலீசுடன் சேர்க்கப்பட உள்ளது.
எனவே அந்த காவல் நிலைய சரகத்தில் நியமிக்கப்பட்டு உள்ள கூடுதல் போலீசார் மூலம் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளை ஒழுங்குபடுத்த முடியும், போக்குவரத்தையும் சீர்படுத்த இயலும்.
மாநகரின் ஒரு பகுதியில் குற்றம் செய்து விட்டு, பிற இடத்திற்கு தப்பி செல்லும் சூழல் இருந்து வந்தது. இந்த நிலையில் அந்த 2 காவல் நிலையங்களும் மாநகர போலீசுடன் இணைவதால், அதுபோன்ற சூழல் இனிமேல் ஏற்படாது.
மாநகரப் பகுதிகளில் அதிவேகமாகவும், தாறுமாறாகவும் சென்ற சுமார் 500 வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது. வேகத்தை கண்டறியும் சென்சார் கருவிகளை மாநகரின் மற்ற பகுதிகளிலும் விரிவுபடுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- வேறு இடத்தில் திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர்
- 8 மாதங்களுக்கு முன்பு பாலக்காடு தட்டமங்கலத்தை சேர்ந்த டிரைவர் சக்திவேல் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.
கோவை,
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள கேப்டன் சிட்டியை சேர்ந்தவர் சத்திய பாமா (வயது 23). இவருக்கு கடந்த 8 மாதங்களுக்கு முன்பு பாலக்காடு தட்டமங்கலத்தை சேர்ந்த டிரைவர் சக்திவேல் (24) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது.
2 பேரும் தங்களது காதல் குறித்து அவரவர் பெற்றோரிடம் தெரிவித்தனர். அப்போது பெற்றோர்கள் காதலுக்கு சம்மதம் தெரிவித்தனர். அதன் பின்னர் கடந்த ஜூலை மாதம் 10-ந் தேதி 2 பேருக்கு பெற்றோர்கள் சம்மதத்துடன் நிச்சயதார்த்தம் நடந்தது.
இதனை தொடர்ந்து இருவீட்டாரும் திருமணம் சம்பந்தமாக பேசினர். அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதன் காரணமாக 6 மாதங்களுக்கு பின்னர் திருமணத்தை வைத்து கொள்ளலாம் என பேசி முடித்தனர்.
ஆனால் சத்தியபாமா வின் பெற்றோர் அவருக்கு வேறு இடத்தில் திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர். அதன்படி மணமகனை தேடினர்.
மாப்பிள்ளை பார்ப்பது பிடிக்காத சத்தியபாமா கடந்த 18-ந் தேதி வீட்டை விட்டு வெளியேறி அவரது காதலன் சக்திவேலுடன் கொடைக்கானலுக்கு சென்றார். பின்னர் அங்குள்ள ஒரு கோவிலில் வைத்து 2 பேரும் திருமணம் செய்து கொண்டனர். இதனை தொடர்ந்து அவர்கள் திருமணம் செய்து கொண்டது தொடர்பாக அவரவர் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். ஆனால் சத்தியபாமாவின் பெற்றோர் திருமணத்தை ஏற்க மறுத்து விட்டனர்.
இதனால் பயந்த காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு பொள்ளாச்சி அனைத்து மகளிர் போலீசில் தஞ்சம் அடைந்தனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- திருச்சி சிவா எம்.பி பேட்டி அளித்தார்
- நீட் தேர்வு என்பது தேவையற்றது, திட்டமிட்ட சதி
கோவை,
கோவை மாவட்டம் சிறுமுகை பேரூர் தி.மு.க சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது. வடக்கு மாவட்ட செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமை தாங்கினார்.
கலைஞர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டத்தில் தி.மு.க கொள்கை பரப்பு செயலாளர் திருச்சி சிவா எம்.பி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். அவர் கூறியதாவது:-
இஸ்ரோவில் தமிழன், சந்திராயன் உருவாக்கத்தில் தமிழன், கூகுளில் தமிழன் என்று தமிழை படித்தவன் உலகத்தை ஆண்டு வருகிறான். ஒரு காலத்தில் மருத்துவம் படிக்க சமஸ்கிருதம் தெரிந்திருக்க வேண்டும் என்ற நிலை இருந்தது. ஆனால் நீதிக்கட்சி ஆட்சியின்போதுதான் மருத்துவம் படிக்க சமஸ்கிரு தம் தேவையில்லை என்று சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டது.
நீட் தேர்வு என்பது தேவையற்றது, திட்டமிட்ட சதி. செல்வ வளம் கொழிக்கும் அரபு நாடுகளில் இருந்து பல்வேறு செல்வந்தர்கள் தமிழகம் வந்திருந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். பிளஸ்-2 தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்ற ஒருவர் நீட் தேர்வில் வெற்றி பெற்றால்தான் டாக்டராக முடியும் என்ற நிலை உள்ளது. இதனால் ஏழை எளிய மாணவர்களும் கூட தனியார் பயிற்சி மையத்தில் லட்சக்கணக்கில் பணம் கட்டி நீட் தேர்வுக்கு படிக்க வேண்டிய நிலை உள்ளது.
மத்திய அரசு தற்போது இந்திய மருத்துவ கழகத்தை தேசிய மருத்துவ ஆணையமாக மாற்ற முயற்சி மேற்கொண்டு வருகிறது. அப்படி மாற்றப்பட்டால் அனைத்து மாநிலங்களுக்கும் ஒரே விதி தான்.இந்திய மருத்துவ கழகத்தை தேசிய மருத்துவ ஆணையமாக மாற்றுவ தற்கான மசோதா, லோ க்சபாவில் பெரும்பான்மை பலத்துடன் நிறைவேற்ற ப்பட்டு விட்டது.
இதனை தொடர்ந்து அந்த மசோதா மீதான விவாதம் மேல்-சபையில் நடந்தது. அப்போது ஆணைய மசோதாவில் உள்ள பிரிவுகள் 14, 15-ஐ நீக்க வேண்டும் என்று நான் குரல் கொடுத்தேன். ஆனால் இதற்கான வாக்கெடுப்பில் அ.தி.மு.க கலந்து கொள்ளாமல் வெளிநடப்பு செய்தது.
தமிழகத்துக்கு நீட் தேர்வு தேவையில்லை. வருகிற பாராளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி வெற்றி பெறும்போது நீட் தேர்வு நிச்சயமாக ரத்து செய்யப்படும். இவ்வாறு அவர் பேசினார்.
- சமூகவலைதளத்தில் நண்பராக பழகி கைவரிசை
- லண்டன் வாலிபர் கிளிண்டன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
கோவை,
கோவை காளப்பட்டி அருகே உள்ள திருமுருகன் நகரை சேர்ந்தவர் 37 வயது இளம்பெண். இவர் மாநகர சைபர் கிரைம் போலீசில் ஒரு புகார் அளித்தார். அந்த புகாரில் கூறியிருப்பதா வது:-
நான் கோவையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறேன். இந்த நிலையில் எனக்கு கடந்த மார்ச் மாதம் பேஸ்புக் பக்கம் மூலமாக லண்டனை சேர்ந்த கிளிண்டன் என்ப வருடன் பழக்கம் ஏற்பட்டது. 2 பேரும் நண்பர்களாக பழகி வந்தோம். பின்னர் வாட்ஸ்அப் எண்ணை மாற்றிக் கொண்டு அதன் மூலம் பேசி வந்தோம். அவர் என்னிடம் லண்டனில் உள்ள பிரபல கார் நிறுவ னத்தில் விற்பனை மேலாள ராக வேலை பார்த்து வருவதாக கூறினார்.
மேலும் அவர் என்னிடம் கிறிஸ்துமல் பண்டிகை சுற்றுலாவில் இந்தியாவுக்கு வர உள்ளதாக கூறினார். கிளிண்டன் என்னிடம் பல லட்சம் மதிப்புள்ள நகைகள் வைத்து இருப்பதாகவும், அதனை எனக்கு பார்சல் மூலமாக அனுப்புவதாகவும் கூறினார். பின்னர் என்னை தொடர்பு கொண்ட அவர் நகைகளை பார்சல் மூலமாக அனுப்பி விட்டதாகவும், டெல்லியில் விமான நிலையத்தில் உள்ள சுங்க த்துறை அதிகாரிகள் உங்களை தொடர்பு கொள்வார்கள் அவர்கள் கூறும் வங்கி கணக்கிற்கு வரியை செலுத்தி நகை களை பெற்றுக்கொள்ளு மாறு கூறினார். இதனை தொடர்ந்து என்னுடைய செல்போன் எண்ணுக்கு டெல்லி விமான நிலை யத்தில் இருந்து பேசுவதாக கூறி ஒருவர் பேசினார். அவர் என்னிடம் பார்சல் வந்துள்ளதாகவும், அதற்கு வரியாக ரூ.32 ஆயிரத்தை அவர் கூறி வங்கி கண க்கிற்கு அனுப்பி வைக்கு ம்படி கூறினார். இதனை உண்மை என நம்பிய நான் பணத்தை அவர் கூறி வங்கி கணக்கிற்கு அனுப்பி வைத்தேன். ஆனால் அவர் பணம் வரவி ல்லை என்று கூறி விட்டனர்.
அவர்கள் என்னிடம் நகைகள் இருப்பதாக தொடர்ந்து ஆசை வார்த்தை கூறினர்.
இதனையடுத்து நகைகளை பெற்றுக்கொ ண்டால் போதும் என்ற நோக்கில் அவர்கள் கூறிய வங்கி கணக்கிற்கு வெவ்வேறு பரிவர்த்த னைகளில் ரூ.15 லட்சத்து 22 ஆயிரம் பணத்தை அனுப்பி வைத் தேன். ஆனால் அவர்கள் கூறியபடி எனக்கு நகைகள் வந்து சேரவில்லை.
அவர்களது செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்ட போது அது சுவிட்ச்ஆப் செய்யப்பட்டு இருந்தது. அப்போது தான் இவர்கள் மோசடி நபர்கள் என்பது எனக்கு தெரிய வந்தது.
எனவே என்னிடம் பேஸ்புக் மூலம் நண்பராக பழகி நகைகள் பார்சல் அனுப்பி வைத்துள்ளதாக நம்ப வைத்து ரூ.15 லட்சத்து 22 ஆயிரம் பணத்தை மோசடி செய்த கிளிண்டன் மீது உரிய நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டு தர வேண்டும். இவ்வாறு அந்த புகாரில் கூறியிருந்தார்.
புகாரின் பேரில் பேஸ்புக் மூலம் நண்பராக பழகி தனியார் பள்ளி ஆசிரி யையிடம் ரூ.15 லட்சத்து 22 ஆயிரம் பணத்தை மோசடி செய்த கிளிண்டன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- வித்யாதரனை சாதுர்யமாக கைது செய்வது என்று போலீசார் முடிவு செய்தனர்.
- புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது இளம்பெண் தனக்கு நடந்த கொடுமைகளை தெரிவித்தார்.
கோவை:
கோவை சூலூரை சேர்ந்த இளம்பெண் சென்னையில் தங்கி வேலை பார்த்தார். அவருக்கு அதே நிறுவனத்தில் டிரைவராக வேலைபார்த்த சென்னை பெரும்பாக்கத்தைச் சேர்ந்த வித்யாதரன் (வயது 33) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.
அவருக்கு ஏற்கெனவே திருமணம் ஆகி மனைவி, குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் சூலூர் பெண்ணை வித்யாதரன் காதலிப்பதாக கூறினார். அவரது காதலை இளம்பெண் ஏற்கவில்லை.
இந்த நிலையில் சூலூர் பெண்ணுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு, உறவினர் ஒருவருடன் திருமணம் நிச்சயமானது. இதனை எப்படியோ அறிந்து கொண்ட வித்யாதரன், இளம்பெண்ணை பழிவாங்குவது என முடிவு செய்தார்.
இதன் ஒரு பகுதியாக அந்த பெண்ணின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து, அவற்றை திருமணம் நிச்சயித்த வாலிபருக்கு செல்போன் மூலம் அனுப்பி வைத்து உள்ளார். எனவே இளம்பெண்ணின் திருமணம் பாதியில் நின்று போனது. இந்த நிலையில் வித்யாதரன் மீண்டும் சூலூர் பெண்ணுக்கு காதல் வலைவீசினார். அந்த பெண் ஒப்புக்கொள்ளவில்லை.
அப்போது வித்யாதரன், உனக்கு நிச்சயித்த மணமகனுக்கு நான்தான் உன் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து அனுப்பி வைத்தேன். என்னை தவிர வேறு யாரும் உன்னை திருமணம் செய்ய விடமாட்டேன் என மிரட்டினார்.
இது அந்த பெண்ணுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. எனவே அவர் சென்னையில் இருந்து கோவைக்கு வந்து விட்டார். இந்த நிலையில் சூலூர் பெண்ணுக்கு வேறு ஒரு வாலிபருடன் திருமணம் பேசி நிச்சயிக்கப்பட்டது.
இதையடுத்து வித்யாதரன் மீண்டும் கோவைக்கு புறப்பட்டு வந்தார். அப்போது அவர் இளம்பெண்ணிடம், நான் உன்னை இப்போதும் காதலிக்கிறேன். என்னை திருமணம் செய்து கொள் என்று மிரட்டி பார்த்தார். இளம்பெண் ஏற்கவில்லை.
இதனால் வித்யாதரன் திருமணம் நிச்சயமான 2-வது வாலிபருக்கும் இளம்பெண்ணின் ஆபாச புகைப்படங்களை அனுப்பினார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த மணமகன் உடனடியாக திருமணத்தை பாதியில் நிறுத்தி விட்டார். எனவே பாதிக்கப்பட்ட இளம்பெண் சூலூர் போலீசில் புகார் அளித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது இளம்பெண் தனக்கு நடந்த கொடுமைகளை தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து வித்யாதரனை சாதுர்யமாக கைது செய்வது என்று போலீசார் முடிவு செய்தனர். இதன்படி இளம்பெண் அந்த வாலிபருக்கு போன் செய்து, நான் உன்னை காதலிக்கிறேன். எனவே நீ உடனடியாக புறப்பட்டு கோவைக்கு வா என்று தெரிவித்து உள்ளார். அதன்படி வித்யாதரன் கோவைக்கு வந்து சேர்ந்தார். அப்போது அவரை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.
- சிலையின் தாங்கு திறனை உறுதி செய்வதற்காக உட்புறத்தில் சவுக்கு கட்டைகளை பயன்படுத்தி உள்ளோம்.
- எங்களிடம் 2 அடி முதல் 10 அடி உயரம் வரை பிள்ளையார் சிலைகள் விற்பனைக்காக தயார்நிலையில் உள்ளன.
கோவை:
விநாயகர் சதுர்த்தி விழா அடுத்த மாதம் 18-ந் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. அப்போது பக்தர்கள் வீட்டில் சிறிய அளவிலான பிள்ளையார் சிலைகள் வைத்து வழிபடுவது வழக்கம். இதுதவிர பொது இடங்களிலும் பெரிய வடிவில் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்து பூஜைகள் செய்து வழிபாடு நடத்துவர்.
கோவை மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சுண்டக்காமுத்தூர், செல்வபுரம், தெலுங்குபாளையம், புட்டுவிக்கி சாலை, கவுண்டம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் பிள்ளையார் சிலைகள் தயாரிப்பு பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.
அங்கு சனீஸ்வரருடன் அமர்ந்திருக்கும் பிள்ளையார், விவசாய விநாயகர், கடல்கன்னி உருவத்தில் அருள்பாலிக்கும் பிள்ளையார், சிங்க வாகனங்களில் எழுந்தருளிய விநாயகர்.
முருகன் புல்லட் ஓட்ட பின்சீட்டில் பயணிக்கும் பிள்ளையார், ராஜகணபதி, டிராகனில் வீற்றிருக்கும் விநாயகர், மயில் மீது அமர்ந்த பிள்ளையார், சிவன் சிலையை ஏந்தி நிற்கும் பாகுபலி விநாயகர் என்று பல்வேறு வடிவங்களில் சிலைகள் வடிக்கப்பட்டு வருகின்றன.
கோவையில் விநாயகர் சிலைகளை வடிவமைக்கும் பணியில் ஈடுபட்டு வரும் கலைஞர்கள் கூறுகையில், நாங்கள் வீடுகளில் வைத்து வழிபடுவதற்காக களிமண் சிலைகளையும், பொதுஇடத்தில் வைப்பதற்காக பிரமாண்ட வடிவில் சிலைகளையும் தயாரித்து வருகிறோம்.
நாங்கள் வடிவமைக்கும் விநாயகர் சிலைகள் சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில் இருக்கும். அதாவது தண்ணீரில் எளிதாக கரையும் கிழங்கு மாவு, ஓடக்கல் மாவு, பேப்பர் கூழ் ஆகியவற்றை பயன்படுத்தி சிலைகள் தயார் செய்யப்படுகின்றன. சிலையின் தாங்கு திறனை உறுதி செய்வதற்காக உட்புறத்தில் சவுக்கு கட்டைகளை பயன்படுத்தி உள்ளோம்.
அப்படி தயாராகும் சிலைகளை 2, 3 நாட்கள் காயவைத்து, அதன்பிறகு சிமெண்ட் பேப்பர் ஒட்டி, அதில் வாட்டர் கலர் மூலம் பெயிண்ட் அடித்து சிலைகள் செய்கிறோம். அவற்றில் செயற்கை ரசாயனங்கள் மற்றும் எனாமல் கலப்பது இல்லை. எங்களிடம் 2 அடி முதல் 10 அடி உயரம் வரை பிள்ளையார் சிலைகள் விற்பனைக்காக தயார்நிலையில் உள்ளன.
தமிழகம் முழுவதிலும் விநாயகர் சிலைகள் செய்வதற்கான மூலப்பொருட்களின் விலை கணிசமாக உயர்ந்து உள்ளது. எனவே பிள்ளையார் சிலைகளின் விலையும் தற்போது சிறிய அளவில் உயர்த்தப்பட்டு உள்ளது.
அதன்படி சிறிய அளவிலான சிலைகள் ரூ.200 முதல் ரூ.2 ஆயிரம் வரையும், 10 அடி உயரம் உடைய சிலைகள் ரூ. 10 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரையும் விற்கப்பட்டு வருகிறது.
கோவையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கடந்த மே மாதம் முதலே பணிகளை தொடங்கி விட்டோம். எங்களுக்கு கோவை மட்டுமின்றி திருப்பூர், ஈரோடு, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் இருந்தும் ஆர்டர்கள் வந்து குவிந்து உள்ளன என தெரிவித்தனர்.
கோவை மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பல்வேறு வடிவங்களில் பிள்ளையார் சிலைகள் வடிவமைக்கப்பட்டு வருவது பொதுமக்களிடம் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கோவை,
கோவை மாநகர போக்குவரத்து காவல்துறை துணை கமிஷனராக இருந்த மதிவாணன், சேலத்துக்கு பணிமாற்றம் செய்யப்பட்டார்.
இதனை தொடர்ந்து சேலம் மாநகர தெற்கு துணை கமிஷனராக இருந்த ராஜராஜன், கோவை மாநகர போக்குவரத்து போலீஸ் துணை கமிஷனராக நியமனம் செய்யப்பட்டார்.
அவர் இன்று காலை கோவை மாநகர அலுவலகத்தில் போக்குவரத்து போலீஸ் துணை கமிஷனராக பொறுப்பேற்றுக் கொண்டார்.
அவருக்கு சக போலீஸ் அதிகாரிகள், இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
- தொண்டாமுத்தூரில் 140 டோக்கன்களும் முன்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
- கூடுதலாக 50 பேருக்கு டோக்கன் வினியோகம்
வடவள்ளி,
தமிழக வணிகவரி மற்றும் பதிவுத்துறை அலுவலகம் சமீபத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதில் சுபமுகூர்த்த நாட்களில் அதிகளவில் பத்திரப்பதிவுகள் நடக்கும் என்பதால் அன்றைய தினங்களில் கூடுதல் முன்பதிவு வில்லைகள் ஒதுக்கீடு செய்வது வழக்கம்.
இதன்படி ஆடிப்பெருக்கை முன்னிட்டு கடந்த 3-ந்தேதி ஒவ்வொரு சார்பதிவாளர் அலுவலகங்களிலும் கூடுதலாக 50 முன்பதிவு வில்லைகள் வழங்கப்பட்டன. இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
அதேபோல சுபமுகூர்த்த நாளான இன்று அதிக அளவில் பத்திரப்பதிவு நடக்கும் என்பதால் சார்பதிவாளர் அலுவலகங்களில் கூடுதலாக 50 பேருக்கு முன்பதிவு டோக்கன் வழங்கப்பட்டது.
கோவையில் வடவள்ளி சார்பதிவாளர் அலுவலகத்தில் 120 டோக்கன்களும் , தொண்டாமுத்தூரில் 140 டோக்கன்களும் முன்பதிவு செய்யப்பட்டு உள்ளது. இதேபோல் மற்ற சார்பதிவாளர் அலுவ லகங்களிலும் கூடுதலாக 50 டோக்கன்கள் வினியோகம் செய்யப்பட்டன.
இதனால் சுபமுகூர்த்த தினமான இன்று சார்பதிவாளர் அலுவலகங்களில் கூட்டம் அலைமோதியது.






