காதலனை கரம் பிடித்த இளம்பெண் பாதுகாப்பு கேட்டு போலீசில் தஞ்சம்

வேறு இடத்தில் திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர் 8 மாதங்களுக்கு முன்பு பாலக்காடு தட்டமங்கலத்தை சேர்ந்த டிரைவர் சக்திவேல் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.
காதலனை கரம் பிடித்த இளம்பெண் பாதுகாப்பு கேட்டு போலீசில் தஞ்சம்
Published on

கோவை,

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள கேப்டன் சிட்டியை சேர்ந்தவர் சத்திய பாமா (வயது 23). இவருக்கு கடந்த 8 மாதங்களுக்கு முன்பு பாலக்காடு தட்டமங்கலத்தை சேர்ந்த டிரைவர் சக்திவேல் (24) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது.

2 பேரும் தங்களது காதல் குறித்து அவரவர் பெற்றோரிடம் தெரிவித்தனர். அப்போது பெற்றோர்கள் காதலுக்கு சம்மதம் தெரிவித்தனர். அதன் பின்னர் கடந்த ஜூலை மாதம் 10-ந் தேதி 2 பேருக்கு பெற்றோர்கள் சம்மதத்துடன் நிச்சயதார்த்தம் நடந்தது.

இதனை தொடர்ந்து இருவீட்டாரும் திருமணம் சம்பந்தமாக பேசினர். அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதன் காரணமாக 6 மாதங்களுக்கு பின்னர் திருமணத்தை வைத்து கொள்ளலாம் என பேசி முடித்தனர்.

ஆனால் சத்தியபாமா வின் பெற்றோர் அவருக்கு வேறு இடத்தில் திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர். அதன்படி மணமகனை தேடினர்.

மாப்பிள்ளை பார்ப்பது பிடிக்காத சத்தியபாமா கடந்த 18-ந் தேதி வீட்டை விட்டு வெளியேறி அவரது காதலன் சக்திவேலுடன் கொடைக்கானலுக்கு சென்றார். பின்னர் அங்குள்ள ஒரு கோவிலில் வைத்து 2 பேரும் திருமணம் செய்து கொண்டனர். இதனை தொடர்ந்து அவர்கள் திருமணம் செய்து கொண்டது தொடர்பாக அவரவர் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். ஆனால் சத்தியபாமாவின் பெற்றோர் திருமணத்தை ஏற்க மறுத்து விட்டனர்.

இதனால் பயந்த காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு பொள்ளாச்சி அனைத்து மகளிர் போலீசில் தஞ்சம் அடைந்தனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com