என் மலர்
கோயம்புத்தூர்
- தமிழக கவர்னர் மற்றும் பாரதியார் பல்கலைக்கழக வேந்தர் ஆர்.என். ரவி தலைமை தாங்கி மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார்.
- ஹிப்பாப் தமிழா ஆதி, மேலாண்மை பிரிவில் இசை தொழில் முனைவோர் என்பதை மையமாக வைத்து பி.எச்.டி. ஆராய்ச்சி படித்து முடித்துள்ளார்.
கோவை:
கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் 38-வது பட்டமளிப்பு விழா இன்று நடந்தது.
விழாவில், தமிழக கவர்னர் மற்றும் பாரதியார் பல்கலைக்கழக வேந்தர் ஆர்.என். ரவி தலைமை தாங்கி மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். இதில் 1,382 பேர் பி.எச்டி பட்டமும், 334 பேர் எம்.பில். பட்டமும் பெற்றனர்.
மேலும், கலை பாடப்பிரிவில் 10 ஆயிரத்து 958 பேர், சமூக அறிவியல் பாடப்பிரிவுகளில் 16 ஆயிரத்து 907 பேர், அறிவியல் பாடப்பிரிவுகளில் 36 ஆயிரத்து 856, கல்வியியல் பாடப்பிரிவுகளில் 846, வணிகவியல் பிரிவில் 27 ஆயிரத்து 469 என மொத்தம் 93 ஆயிரத்து 36 மாணவ, மாணவிகள் பட்டம் பெற்றனர்.
இந்த விழாவில் இணைவேந்தர் மற்றும் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, இந்திய அரசின் பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழு உறுப்பினர் சஞ்சீவ் சன்யால், உயர்கல்வித்துறை முதன்மை செயலாளர் கார்த்திக், பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் குழு உறுப்பினர் லாவ்லினா லிட்டில் பிளவர், பல்கலைக்கழக பதிவாளர் முருகவேல் உட்பட பலர் பங்கேற்றனர்.
கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழாவில், திரைப்பட நடிகரும், இசை அமைப்பாளருமான ஹிப்பாப் தமிழா ஆதி, மேலாண்மை பிரிவில் இசை தொழில் முனைவோர் என்பதை மையமாக வைத்து பி.எச்.டி. ஆராய்ச்சி படித்து முடித்துள்ளார்.
விழாவில், அவர் பட்டம் பெற்றார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
சென்னையை மையமாக வைத்து இளைஞர்கள், மாணவர்களுக்கு என மியூசிக்கல் அகாடமி திறக்க உள்ளேன். இதற்காக தான் ஆராய்ச்சி படித்து பட்டம் பெற்றேன். தற்போது, பி.டி மாஸ்டர் என்ற திரைப்படத்தில் உடற்கல்வி ஆசிரியராக நடித்து வருகிறேன். இதன் படப்பிடிப்பு நடந்து வருகிறது என்றார்.
- தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் திட்டமிட்டபடி கவர்னர் வருகைக்கு முன்பாகவே லாலி ரோடு சந்திப்பில் குவிந்தனர்.
- தொடர்ந்து கவர்னர் அந்த இடத்தை கடக்கும் முன்பாக போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்தனர்.
கோவை:
தமிழக கவர்னர் ஆர்.என். ரவி, 2 நாள் பயணமாக இன்று காலை கோவை வந்தார். கோவை பாரதியார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்று அவர் மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார்.
முன்னதாக கோவை வரும் கவர்னருக்கு அனைத்து முற்போக்கு அமைப்புகள் சார்பில் கருப்புக் கொடி காட்டி எதிர்ப்பை தெரிவிக்கப் போவதாக தந்தை பெரியார் திராவிடர் கழகம் அறிவித்து இருந்தது. நீட் தேர்வு எதிர்ப்பு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காமல் இழுத்தடித்து வருவதை கண்டித்து இந்த போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அந்த அமைப்பின் பொதுச் செயலாளர் கு.ராமகிருஷ்ணன் தெரிவித்து இருந்தார்.
கோவை லாலி ரோடு சந்திப்பு வழியாக கவர்னர் பாரதியார் பல்கலைக்கழகத்துக்கு செல்லும்போது கருப்புக் கொடி காட்ட அந்த அமைப்பினர் முடிவு செய்திருந்தனர். இதையொட்டி லாலி ரோடு சந்திப்பு உள்பட நகரின் முக்கிய பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் திட்டமிட்டபடி கவர்னர் வருகைக்கு முன்பாகவே லாலி ரோடு சந்திப்பில் குவிந்தனர். அவர்கள் கையில் கருப்புக் கொடி ஏந்தி கவர்னருக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினார்கள். இதனால் போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே சிறிது நேரம் வாக்குவாதம் ஏற்பட்டது.
தொடர்ந்து கவர்னர் அந்த இடத்தை கடக்கும் முன்பாக போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்தனர். தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச் செயலாளர் கு.ராமகிருஷ்ணன் உள்பட 39 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் 2 பேர் பெண்கள் ஆவர். அவர்கள் அருகில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். போராட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், ஆதிதமிழர் பேரவை, திராவிடர் தமிழர் பேரவை நிர்வாகிகளும் பங்கேற்றனர்.
கவர்னர் வருகையின்போது நடந்த கருப்புக் கொடி போராட்டம் கோவையில் இன்று பரபரப்பை ஏற்படுத்தியது.
- வெள்ளியங்காடு கிராம நிர்வாக அலுவலர் லட்சுமி உள்பட அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
- பழங்குடியின மக்களுக்கான நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினர்
மேட்டுப்பாளையம்,
கோவை மாவட்ட போலீசின் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் துறை சார்பில் பழங்குடியினர், ஆதிதிராவிட மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தம் நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன. அந்த வகையில் காரமடை அன்சூர் பழங்குடியின கிராமத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜசேகரன் தலைமையில் விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது.
இதில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலனுக்காக வழங்கப்பட்டு வரும் தமிழக முதல மைச்சரின் நலத்திட்டங்கள், மக்களின் உரிமைகள் ஆகியவை குறித்தும் விழிப்பு ணர்வு ஏற்படுத்தப்பட்டது.
அப்போது தீண்டாமை யை ஒழிப்போம், ஒற்றுமையை வளர்ப்போம்.சேர்ந்து வாழ்வோம்,சாதி ஏற்றத்தாழ்வுகளை மறந்து வாழ்வோம் என்பவை உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசு ரங்கள் வழங்கப்பட்டன. உறுதிமொழியும் ஏற்கப்ப ட்டது.நிகழ்ச்சியில் மேட்டுப்பாளையம் டிஎஸ்பி (பொறுப்பு) முரளி கலந்து கொண்டு பழங்குடியின மக்களுக்கான நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார். வெள்ளியங்காடு கிராம நிர்வாக அலுவலர் லட்சுமி உள்பட அரசு அதிகாரிகள்ப லர் கலந்து கொண்டனர்.
- 2 ஆண்டுகளாக வீட்டில் இருந்தபடி வேலை பார்த்தார்.
- வாழ்க்கையில் விரக்தி அடைந்து தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கோவை,
கோவை பேரூர் அருகே உள்ள தீத்திப்பாளையத்தை சேர்ந்தவர் வெங்கடாஜ லபதி. இவரது மகன் விஷ்ணு (வயது 25). என்ஜி னீயரிங் பட்டதாரியான இவர் சென்னையில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். விஷ்ணு கடந்த 2 ஆண்டுகளாக வீட்டில் இருந்த படி வேலை பார்த்து வந்தார்.
இவர் கடந்த ஒருவாரமாக அதிக பணிச்சுமை காரணமாக மன உளைச்சலில் இருந்து வந்தார். இன்று விஷ்ணு அவரது குடும்பத்தி னரை பிரிந்து சென்னைக்கு வேலைக்கு செல்ல வேண்டியது இருந்தது.
நேற்று இரவு வீட்டில் இருந்த அவர் வழக்கம் போல இரவு உணவு சாப்பிட்டு விட்டு அவரது அறைக்கு சென்றார். அங்கு இருந்த விஷ்ணு வாழ்க்கையில் விரக்தி அடைந்து தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
நீண்ட நேரமாக மகன் வெளியே வராததால் அவரது தாய் கதவை தட்டினார். ஆனால் கதவை யாரும் திறக்கவில்லை. இதனால் சந்தேகம் அடந்த அவர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தார். அப்போது தனது மகன் தற்கொலை செய்து கொண்டது கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் இதுகுறித்து பேரூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக போலீசார் சம்பவஇட த்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
பின்னர் தற்கொலை செய்து கொண்ட ஐ.டி. ஊழியர் விஷ்ணுவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து பேரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- கடிதம் எழுதி வைத்து விட்டு காதலனுடன் சென்ற ஐ.டி. ஊழியர்
- விருப்பம் இல்லாதவருடன் என்னால் வாழ முடியாது என உருக்கம்.
கோவை,
ேதனி மாவட்டத்தை சேர்ந்தவர் 23 வயது பெண் ஐ.டி.ஊழியர். இவர்கள் தற்போது குடும்பத்துடன் கோவை கோவில்பாளையம் பகுதியில் வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில் இளம்பெண்ணுக்கு வாலி பர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி நேரில் சந்தித்தும் செல்போனில் பேசியும் காதலை வளர்த்து வந்தனர்.
இந்த காதல் விவகாரம் இளம்பெ ண்ணின் வீட்டிற்கு தெரிய வரவே அவர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் அவர்கள் வாலிபரு டனான காதலை கைவிடு மாறு தங்களது மகளுக்கு அறிவுரை கூறினார். ஆனால் இளம்பெண் காதலை தொடர்ந்து வந்தார். இதனையடுத்து இளம்பெண்ணின் பெற்றோர் அவருக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்து வேறு இடத்தில் மணமகனை பார்த்து திருமணம் நிச்சயம் செய்தனர். மேலும் அவர் கள் திருமண ஏற்பாடுகளை செய்து வந்தனர். இது இளம்பெண்ணுக்கு பிடிக்க வில்லை. அவர் வீட்டை விட்டு வெளியேறி காதலனை திருமணம் செய்ய முடிவு செய்தார்.
சம்பவத்தன்று வீட்டில் இருந்த இளம்பெண் தனது பெற்றோருக்கு கடிதம் ஒன்றை எழுதினார். அதில் நீங்கள் எனது விருப்பத்துக்கு மாறாக திருமணம் ஏற்பாடுகளை செய்து வருகிறீர்கள். இது எனக்கு பிடிக்கவில்லை. விருப்பம் இல்லாதவருடன் என்னால் வாழ முடியாது. எனவே என்னை யாரும் தேட வேண்டாம். நான் விரும்பிய வாலிபருடன் செல்கிறேன் என எழுதினார். பின்னர் அவர் அவரது காதலனுடன் சென்றார்.
கடிதத்தை பார்த்து இளம்பெண்ணின் பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் அவர்கள் இதுகுறித்து கோவில்பாளையம் போலீசில் தங்களது மகளை மீட்டு தரகோரி புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து இளம்பெண்ணை தேடி வருகின்றனர்.
- பேராசிரியரின் இந்த செயல் எனக்கு மிகுந்த மன அழுத்தை ஏற்படுத்தி என்னால் படிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
- துடியலூர் போலீசார் பேராசிரியர் மீது வழக்கு ப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோவை,
கோவை மலுமிச்சம்பட்டியை சேர்ந்தவர் 35 வயது வாலிபர்.
இவர் துடியலூர் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் அளித்தார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது:-
நான் துடியலூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எச்.டி. முழு நேரமாக படித்து வருகிறேன். எனது கல்லூரியில் 50 வயது பேராசிரியர் ஒருவர் பணியாற்றி வருகிறார். அவர் அடிக்கடி நான் உணவறை மற்றும் கழிவறை ஆகிய பகுதிகளுக்கு செல்லும் போது பின் தொடர்ந்து வந்து தொடக்கூடாத இடங்களில் கை வைத்து பாலியல் தொல்லை கொடுத்து வருகிறார்.
படிப்பு சம்பந்தமாக கருத்தரங்கு ஆகியவற்றிக்கு செல்லும் போது கூட நான் ஆண் என்று தெரிந்தும் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வருகிறார். இதனை மனவேதனை அடைந்த நான் பலமுறை எச்சரித்தும் அவர் கேட்கவில்லை. தொடர்ந்து அவரது தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
பேராசிரியரின் இந்த செயல் எனக்கு மிகுந்த மன அழுத்தை ஏற்படுத்தி என்னால் படிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் கல்லூரிக்கு செல்லவே எனக்கு அச்சமாக உள்ளது.எனவே எனக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வரும் பேராசிரியர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த புகார் மனுவில் கூறியிருந்தார்.கல்லூரி மாணவரின் புகாரின் பேரில் துடியலூர் போலீசார் பேராசிரியர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- வாரந்தோறும் செவ்வாய்க்கிழமைகளில் பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
- மாநகராட்சி சார்பில் சுமார் 5 லட்சம் கியூஆர்கோடு ஸ்டிக்கர்கள் தயாரிக்கப்பட்டு உள்ளன.
கோவை,
கோவை மாவட்டத்தில் சிறுவாணி, பில்லூர்-1, பில்லூர்-2, ஆழியாறு, வடவள்ளி-கவுண்டம்புதூர் கூட்டு குடிநீர்த்திட்டம் ஆகியவற்றின் மூலம் ராட்சத குழாய்களில் தண்ணீர் கொண்டு வரப்பட்டு, மாநகரம் முழுவதும் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இதுதவிர மாநகர அளவில் போக்குவரத்து பாலங்கள், தார்சாலை, சாக்கடை கால்வாய், அங்கன் வாடிமையம், பள்ளி வகுப்பறைகள் உள்பட பல்வேறு திட்டப்பணிகள் நடந்து வருகின்றன.
கோவை மாநகராட்சியில் வசிக்கும் பொதுமக்கள் குறை தெரிவிப்பதற்கு ஏதுவாக தொலைபேசி எண்கள் பயன்பாட்டில் உள்ளன. இதுதவிர வாரந்தோறும் செவ்வாய்க்கிழமைகளில் பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
இதற்கிடையே கோவை மாநகராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் குடிநீர், வரிவிதிப்பு மற்றும் பல்வேறு அம்சங்கள் தொடர்பாக பொதுமக்களிடம் இருந்து செல்போன் மூலம் கருத்துக்களை பெறுவது என்று அதிகாரிகள் முடிவு செய்து உள்ளனர்.
இதற்காக மாநகராட்சி சார்பில் சுமார் 5 லட்சம் கியூஆர்கோடு ஸ்டிக்கர்கள் தயாரிக்கப்பட்டு உள்ளன. அவற்றை வீடு-வீடாக சென்று ஒட்டும் பணியில் ஊழியர்கள் ஈடுபட உள்ளனர்.
இதுகுறித்து கோவை மாநகராட்சி கமிஷனர் பிரதாப் கூறியதாவது:-
மாநகர அளவில் குடிநீர் விநியோகம், சொத்து வரிவிதிப்பு உள்ளிட்ட சேவைகள் மற்றும் திட்டப்ப ணிகள் குறித்து பொது மக்களின் கருத்துகளை அறிந்து கொள்வதற்காக கியூஆர்கோடு ஸ்டிக்கர் திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
இது மாநகரின் அனைத்து பகுதிகளிலும் ஒட்டப்படும். எனவே பொதுமக்கள் ஆன்டிராய்டு செல்போனில் கியூஆர்கோடை ஸ்கேன் செய்து, அதன்மூலம் மாந கராட்சி அலுவலகத்தை தொடர்பு கொண்டு தங்க ளின் புகார்கள் மற்றும் கருத்துக்களை தெரிவிக்கலாம் என்றார்.
- காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அண்ணா பிறந்த நாளில் அறிமுகம் செய்தார்.
- இத்திட்டம் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) முதல் அமலுக்கு வருகிறது.
கோவை,
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அரசு பள்ளிகளில் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அண்ணா பிறந்த நாளில் அறிமுகம் செய்தார்.
கடந்த மே 7, 2022 அன்று தமிழ்நாடு சட்டசபையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலக்கூடிய மாணவர்களுக்கு அனைத்து பள்ளி நாட்களிலும் காலை வேளையில் சத்தான சிற்றுண்டி வழங்கப்படும் என்று அறிவித்தார்.
அதன்படி, முதல்கட்டமாக, மாநகராட்சி, நகராட்சி, ஊரக (கிராம ஊராட்சி) மற்றும் மலைப்பகுதிகளில் செயல்படும், 1545 அரசு பள்ளிகளில் பயிலும் 114095 தொடக்கப் பள்ளி (1முதல் 5-ம் வகுப்பு வரை) குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தினை 2022-2023ஆம் ஆண்டில் முதற் கட்டமாக செயல்படுத்த ரூ.33.56 கோடி நிதி ஒப்பளிப்பு செய்து தமிழக அரசு ஆணை வெளியிட்டது.
முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம் தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளையும் தமிழக அரசு வெளியிட்டது. அதன்படி, இத்திட்டம், கோவை மாவட்டத்தில் கோவை மாநகராட்சியில் 121 பள்ளிகள், மதுக்கரை நகராட்சியில் 4 பள்ளிகள், மேட்டுப்பாளையம் நகராட்சியில் 11 பள்ளிகள் என மொத்தம் 136 பள்ளிகளில் அமல்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின்கீழ், 17671 மாணவ-மாணவிகள் பயன்பெற்று வந்தனர்.
இத்திட்டம் அனைத்து அரசு பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என கடந்த சுதந்திர தின விழாவின் போது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
அதன்படி, இத்திட்டம், கோவை மாவட்டத்தில், கூடலூர் நகராட்சி, காரமடை நகராட்சி, கருமத்தம்பட்டி நகராட்சி, பொள்ளாச்சி நகராட்சி, வால்பாறை நகராட்சி மற்றும் ஊரக பகுதிகளான காரமடை, பெரியநாயக்கன் பாளையம், சர்க்கார் சாமக்குளம், அன்னூர், சூலூர், தொண்டாமுத்தூர், மதுக்கரை, சுல்தான் பேட்டை, கிணத்துக்கடவு, பொள்ளாச்சி (வடக்கு), பொள்ளாச்சி (தெற்கு), ஆனைமலை ஆகிய பகுதிகளில் உள்ள 848 பள்ளிகளுக்கு விரிவுபடுத்தப்பட உள்ளது. இதன்மூலம் 43797 மாணவ-மாணவிகள் பயன்பெறுகின்றனர். இத்திட்டம் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) முதல் அமலுக்கு வருகிறது.
- 2 நாட்களாக சிறை வைத்து கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்தார்
- போலீசார் சிறுமியை மீட்டு கிருஷ்ணனை கைது செய்தனர்
கோவை,
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள அங்களக் குறிச்சியை சேர்ந்தவர் 16 வயது சிறுமி. இவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆழியாரை சேர்ந்த கூலித் தொழிலாளி கிருஷ்ணன் (வயது 22) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இவர் அடிக்கடி மாணவியுடன் செல்போன் மூலமாக பேசி வந்தார்.
சம்பவத்தன்று வீட்டில் இருந்த சிறுமி நீண்ட நேரமாக செல்போனில் பேசிக்கொண்டு இருந்தார். இதனை அவரது தந்தை கண்டித்தார். பின்னர் வீட்டிற்கு வெளியே இருந்த சிறுமியை கிருஷ்ணன் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்றார். சிறுமியை அவர் மோட்டார் சைக்கிளில் செல்லாம்பா ளையம் பிரிவுக்கு அழைத்து சென்றார்.
பின்னர் மோட்டார் சைக்கிளை அங்கே நிறுத்தி விட்டு சிறுமியுடன் திண்டுக் கல்லில் உள்ள உறவினர் வீட்டிற்கு அழைத்துச் சென்றார். ஆனால் அவர் அடைக்கலம் கொடுக்க மறுத்து விட்டார்.
இதனைடுத்து கிருஷ் ணன் சிறுமியுடன் ஆனை மலை எட்டித்துறை யில் உள்ள உறவினர் வீட்டிற்கு அழைத்து சென்றார். அங்கு வைத்து அவர் சிறுமியை 2 நாட்களாக சிறை வைத்து கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்தார்.
சிறுமி மாயமானது குறித்து அவரது பெற்றோர் ஆழியாறு போலீசில் புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது சிறுமி கிருஷ்ணனுடன் இருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து அங்கு சென்ற போலீசார் சிறுமியை மீட்டனர்.
அவரை கைது செய்த கிருஷ்ணனை கைது செய்தனர். அவர் மீது போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- கடந்த 9 மாதங்களுக்கு முன்பு காளிமுத்துவுக்கும் அவரது மனைவி ராஜேஸ்வரிக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டது.
- கணவன்-மனைவிக்கு இடையே கருத்துவேறுபாடு காரணமாக வாக்குவாதம் ஏற்பட்டது.
கோவை:
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஜமீன் ஊத்துக்குளியை சேர்ந்தவர் காளிமுத்து (வயது 65). கூலித் தொழிலாளி. இவரது மனைவி ராஜேஸ்வரி (60).
இவர்கள் 2 பேரும் கடந்த ஒரு ஆண்டுகளாக சென்னியப்ப பிள்ளை தோட்டத்தில் தங்கி இருந்து கூலி வேலை செய்து வந்தனர்.இவர்களுக்கு கவிதாமணி என்ற மகள் உள்ளார். அவர் கணவருடன் கோவையில் வசித்து வருகிறார்.
கடந்த 9 மாதங்களுக்கு முன்பு காளிமுத்துவுக்கும் அவரது மனைவி ராஜேஸ்வரிக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டது. இதனையடுத்து அவர் தனது கணவரிடம் கோபித்துக்கொண்டு கோவையில் உள்ள மகள் வீட்டில் வசித்து வந்தார். மேலும் அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஆயாவாக வேலை பார்த்து வந்தார். நேற்று மதியம் 12 மணியளவில் காளிமுத்து தனது மகள் வீட்டிற்கு சென்றார். பின்னர் அவர் தனது மனைவியை சமாதானம் செய்து தோட்டத்துக்கு அழைத்து சென்றார். அங்கு வைத்து மீண்டும் அவர்களுக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டது. இது குறித்து ராஜேஸ்வரி பொள்ளாச்சி தாலுகா போலீசில் புகார் செய்தார்.
புகாரின் பேரில் போலீசார் காளிமுத்துவை அழைத்து சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.
2 பேரும் வீட்டிற்கு சென்றனர். இரவு 9 மணியளவில் மீண்டும் கணவன்-மனைவிக்கு இடையே கருத்துவேறுபாடு காரணமாக வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த காளிமுத்து தனது மனைவியை தலையணையால் முகத்தில் வைத்து அழுத்தி மூச்சு திணறடித்து கொலை செய்தார். பின்னர் அவரும் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இன்று காலை இதனை பார்த்து அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் அவர்கள் இது குறித்து பொள்ளாச்சி மேற்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் போலீசார் கணவன்-மனைவி இருவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து பொள்ளாச்சி மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குடும்ப பிரச்சினையில் மனைவியை கொலை செய்து விட்டு கணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- கோவை வரும் கவர்னர் ஆர்.என். ரவிக்கு கருப்புக் கொடி காட்டப்போவதாக தந்தை பெரியார் திராவிடர் கழகம் அறிவித்துள்ளது.
- போராட்ட அறிவிப்பு காரணமாக கோவை வரும் கவர்னருக்கு வழக்கத்தை விட கூடுதல் போலீஸ் பாதுகாப்பு அளிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.
கோவை:
தமிழக கவர்னர் ஆர்.என். ரவி 2 நாள் பயணமாக நாளை (24-ந்தேதி) கோவை வருகிறார்.
நாளை காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு அவர் கோவை வந்தடைகிறார். பின்னர் அங்கிருந்து கோவை பாரதியார் பல்கலைக்கழக விருந்தினர் மாளிகைக்கு செல்கிறார்.
தொடர்ந்து அவர் பாரதியார் பல்கலைக்கழகத்தின் 38-வது பட்டமளிப்பு விழா நிகழ்ச்சியில் பங்கேற்று மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி உரையாற்றுகிறார். அங்கு சிறப்பு விருது பெறுபவர்களுடன் அவர் கலந்துரையாடுகிறார்.
இதையடுத்து பிற்பகலில் அவர் பாரதியார் பல்கலைக்கழகத்தில் இருந்து கார் மூலம் பழனி தண்டாயுதபாணி கோவிலுக்கு செல்கிறார். அங்கு தரிசனம் முடிந்து மீண்டும் அவர் பாரதியார் பல்கலைக்கழகம் வருகிறார். இரவு விருந்தினர் மாளிகையில் ஓய்வெடுக்கிறார்.
25-ந்தேதி பேரூரில் பேரூர் ஆதீனம் நடத்தும் நொய்யல் பெருவிழா நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். அதன்பின் அவர் கோவை புறப்பட்டுச் செல்கிறார்.
இதற்கிடையே நாளை கோவை வரும் கவர்னர் ஆர்.என். ரவிக்கு கருப்புக் கொடி காட்டப்போவதாக தந்தை பெரியார் திராவிடர் கழகம் அறிவித்துள்ளது. நீட் தேர்வு எதிர்ப்பு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காமல் கவர்னர் இழுத்தடித்து வருவதை கண்டித்து இந்த போராட்டத்தில் ஈடுபடப்போவதாக பொதுச்செயலாளர் கு.ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இந்த போராட்ட அறிவிப்பு காரணமாக கோவை வரும் கவர்னருக்கு வழக்கத்தை விட கூடுதல் போலீஸ் பாதுகாப்பு அளிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.
கோவை விமான நிலையம், பாரதியார் பல்கலைக்கழகம் உள்பட அவர் வந்து செல்லும் அனைத்து இடங்களிலும் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
+2
- கும்பாபிஷேகத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.
- பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
குனியமுத்தூர்:
கோவை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்று ஈச்சனாரி விநாயகர் கோவில். இந்த சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவிலில் திருப்பணிகள் செய்யப்பட்டு கடந்த 20-ந்தேதி கும்பாபிஷேக விழா தொடங்கியது.
அன்று காலை திருவிளக்கு வழிபாடு, திருமுறை பாராயணம் நடந்தது. தொடர்ந்து மூத்த பிள்ளையார் வழிபாடு, மண்ணெடுத்தல், காப்பணிவித்தல், திருக்குடங்களை வேள்விச்சாலைக்கு எடுத்து வருதல், முதல் கால, இரண்டாம் கால, மூன்றாம் கால வேள்வி பூஜைகள் கடந்த 3 நாட்களாக நடந்தன.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான கும்பாபிஷேகம் இன்று காலை நடந்தது. அதிகாலை 4 மணிக்கு நன்மங்கள இசை, திருமுறை பாராயணம் நடத்தப்பட்டது. தொடர்ந்து அதிகாலை 5 மணிக்கு 6-ம் கால வேள்வி பூஜையும், 5.45 மணிக்கு கலைகள் நாடிகளின் வழியாக மூலத்திருமேனியை அடைதல் நிகழ்வும் நடத்தப்பட்டது.
காலை 6.45 மணி முதல் 7.45 மணிக்குள் ஈச்சனாரி விநாயகர் கோவில் விமானம் மற்றும் ராஜகோபுரத்துக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. தொடர்ந்து விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜை நடந்தது.
கும்பாபிஷேகத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
விழாவில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு கலந்து கொண்டு வழிபட்டார். கிணத்துக்கடவு தொகுதி எம்.எல்.ஏ. தாமோதரன், கலெக்டர் கிராந்திகுமார்பாடி, மேயர் கல்பனா, துணை மேயர் வெற்றிச்செல்வன், தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கார்த்திக், தளபதி முருகேசன், தொண்டாமுத்தூர் ரவி, பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார், ராமானந்த குமரகுருபர சுவாமிகள் மற்றும் அறநிலையத்துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து அமைச்சர் சேகர்பாபு, கோவை கோனியம்மன் கோவில் மற்றும் கோட்டை ஈஸ்வரன் கோவிலுக்கு சென்று வழிபட்டார். அங்கிருந்த அதிகாரிகளுடன் அவர் சில நிமிடங்கள் ஆலோசனை நடத்தினார். கோவை கோனியம்மன் கோவிலுக்கு சொந்தமான தேர் ராஜவீதியில் நிறுத்தப்பட்டு உள்ளது. அங்கும் அமைச்சர் சேகர்பாபு சென்று ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் விமானம் மூலம் சென்னை புறப்பட்டுச் சென்றார்.






