பொள்ளாச்சி அருகே 16 வயது சிறுமியை கடத்தி பலாத்காரம் செய்த தொழிலாளி

2 நாட்களாக சிறை வைத்து கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்தார் போலீசார் சிறுமியை மீட்டு கிருஷ்ணனை கைது செய்தனர்
பொள்ளாச்சி அருகே 16 வயது சிறுமியை கடத்தி பலாத்காரம் செய்த தொழிலாளி
Published on

கோவை,

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள அங்களக் குறிச்சியை சேர்ந்தவர் 16 வயது சிறுமி. இவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆழியாரை சேர்ந்த கூலித் தொழிலாளி கிருஷ்ணன் (வயது 22) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இவர் அடிக்கடி மாணவியுடன் செல்போன் மூலமாக பேசி வந்தார்.

சம்பவத்தன்று வீட்டில் இருந்த சிறுமி நீண்ட நேரமாக செல்போனில் பேசிக்கொண்டு இருந்தார். இதனை அவரது தந்தை கண்டித்தார். பின்னர் வீட்டிற்கு வெளியே இருந்த சிறுமியை கிருஷ்ணன் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்றார். சிறுமியை அவர் மோட்டார் சைக்கிளில் செல்லாம்பா ளையம் பிரிவுக்கு அழைத்து சென்றார்.

பின்னர் மோட்டார் சைக்கிளை அங்கே நிறுத்தி விட்டு சிறுமியுடன் திண்டுக் கல்லில் உள்ள உறவினர் வீட்டிற்கு அழைத்துச் சென்றார். ஆனால் அவர் அடைக்கலம் கொடுக்க மறுத்து விட்டார்.

இதனைடுத்து கிருஷ் ணன் சிறுமியுடன் ஆனை மலை எட்டித்துறை யில் உள்ள உறவினர் வீட்டிற்கு அழைத்து சென்றார். அங்கு வைத்து அவர் சிறுமியை 2 நாட்களாக சிறை வைத்து கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்தார்.

சிறுமி மாயமானது குறித்து அவரது பெற்றோர் ஆழியாறு போலீசில் புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது சிறுமி கிருஷ்ணனுடன் இருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து அங்கு சென்ற போலீசார் சிறுமியை மீட்டனர்.

அவரை கைது செய்த கிருஷ்ணனை கைது செய்தனர். அவர் மீது போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com