என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோயைில் ெபற்றோரை பிரிந்து செல்ல முடியாமல் ஐ.டி.ஊழியர் தற்கொலை
- 2 ஆண்டுகளாக வீட்டில் இருந்தபடி வேலை பார்த்தார்.
- வாழ்க்கையில் விரக்தி அடைந்து தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கோவை,
கோவை பேரூர் அருகே உள்ள தீத்திப்பாளையத்தை சேர்ந்தவர் வெங்கடாஜ லபதி. இவரது மகன் விஷ்ணு (வயது 25). என்ஜி னீயரிங் பட்டதாரியான இவர் சென்னையில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். விஷ்ணு கடந்த 2 ஆண்டுகளாக வீட்டில் இருந்த படி வேலை பார்த்து வந்தார்.
இவர் கடந்த ஒருவாரமாக அதிக பணிச்சுமை காரணமாக மன உளைச்சலில் இருந்து வந்தார். இன்று விஷ்ணு அவரது குடும்பத்தி னரை பிரிந்து சென்னைக்கு வேலைக்கு செல்ல வேண்டியது இருந்தது.
நேற்று இரவு வீட்டில் இருந்த அவர் வழக்கம் போல இரவு உணவு சாப்பிட்டு விட்டு அவரது அறைக்கு சென்றார். அங்கு இருந்த விஷ்ணு வாழ்க்கையில் விரக்தி அடைந்து தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
நீண்ட நேரமாக மகன் வெளியே வராததால் அவரது தாய் கதவை தட்டினார். ஆனால் கதவை யாரும் திறக்கவில்லை. இதனால் சந்தேகம் அடந்த அவர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தார். அப்போது தனது மகன் தற்கொலை செய்து கொண்டது கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் இதுகுறித்து பேரூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக போலீசார் சம்பவஇட த்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
பின்னர் தற்கொலை செய்து கொண்ட ஐ.டி. ஊழியர் விஷ்ணுவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து பேரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.






