search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "QR line"

    • ரசீது மொபைல் எண்ணுக்கு குறுந்தகவல் அனுப்ப வசதி செய்யப்பட்டுள்ளது.
    • கியூ ஆர் கோடு வசதியினை பயன்படுத்தி பக்தர்கள் விரைவாக நன்கொடை செலுத்த முடியும்.

    சென்னிமலை:

    ஆதி பழனி என போற்றப்படும் புகழ் பெற்ற சென்னிமலை முருகன் கோவிலிற்கு ஈரோடு மாவட்டம் அல்லாமல் தமிழகம் முழுவதும் இருந்து தினமும் ஏராளமான பக்தர்கள் தரிசனத்திற்கு வருகின்றனர்.

    வாரம் தோறும் செவ்வாய்கிழமை மற்றும் சஷ்டி, கிருத்திகை, அம்மாவாசை உள்ளிட்ட விழா காலங்களில் மிக அதிக அளவில் பக்தர்கள் வந்து நீண்ட வரிசையில் காத்திருந்து முருகப்பெருமானை வழங்கி செல்வதுடன் நன்கொடைகளை வழங்கி வருகின்றனர்.

    தரிசனத்திற்கு வருகை தரும் பக்தர்கள் தரிசனத்திற்கு தனியாகவும், நன்கொடைகள் செலுத்த திருவிழா நேரத்தில் தனியாகவும் வரிசையில் காத்திருந்து நன்கொடைகள் வழங்க அன்னதானத்திற்கு தனியாகவும், திருப்பணிகளுக்கு தனியாகவும், வேண்டுதல் செய்ய பொது நன்கொடை தனியாகவும் செலுத்துவதில் பக்தர்களுக்கு மிக சிரமம் இருந்து வருகிறது.

    மேலும் நன்கொடைகள் செலுத்தி அறநிலைய துறை பணியாளர்களிடம் நன்கொடை ரசீது பெருவதில் கூடுதல் காலதாமதம் ஏற்படுகிறது. இதை தவிர்க்கவும், பக்தர்கள் சிரமம் இன்றி நன்கொடைகள் செலுத்த வசதியாக 'கியூ ஆர் கோடு ' வசதியினை இந்து சமய அறநிலையத்துறையினர் செய்துள்ளனர்.

    இது குறித்து சென்னி மலை மலை மீது கோவில் வளாகத்தில் பிளக்ஸ் பேனர் வைத்துள்ளனர். மேலும் டிக்கெட் வழங்கும் கவுன்டரில் கியூ ஆர் கோடு ஸ்கேன் செய்ய வசதி செய்துள்ளனர். நன்கொடை செலுத்தும் பக்தர்களுக்கு அது குறித்த தகவல், ரசீது மொபைல் எண்னுக்கு குறுந்தகவல் அனுப்ப வசதி செய்யப்பட்டுள்ளது.

    இந்த கியூ ஆர் கோடு வசதியினை பயன்படுத்தி பக்தர்கள் விரைவாக நன்கொடை செலுத்த முடியும் என செயல் அலுவலர் தெரிவித்தார். 

    • வாரந்தோறும் செவ்வாய்க்கிழமைகளில் பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
    • மாநகராட்சி சார்பில் சுமார் 5 லட்சம் கியூஆர்கோடு ஸ்டிக்கர்கள் தயாரிக்கப்பட்டு உள்ளன.

    கோவை,

    கோவை மாவட்டத்தில் சிறுவாணி, பில்லூர்-1, பில்லூர்-2, ஆழியாறு, வடவள்ளி-கவுண்டம்புதூர் கூட்டு குடிநீர்த்திட்டம் ஆகியவற்றின் மூலம் ராட்சத குழாய்களில் தண்ணீர் கொண்டு வரப்பட்டு, மாநகரம் முழுவதும் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

    இதுதவிர மாநகர அளவில் போக்குவரத்து பாலங்கள், தார்சாலை, சாக்கடை கால்வாய், அங்கன் வாடிமையம், பள்ளி வகுப்பறைகள் உள்பட பல்வேறு திட்டப்பணிகள் நடந்து வருகின்றன.

    கோவை மாநகராட்சியில் வசிக்கும் பொதுமக்கள் குறை தெரிவிப்பதற்கு ஏதுவாக தொலைபேசி எண்கள் பயன்பாட்டில் உள்ளன. இதுதவிர வாரந்தோறும் செவ்வாய்க்கிழமைகளில் பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

    இதற்கிடையே கோவை மாநகராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் குடிநீர், வரிவிதிப்பு மற்றும் பல்வேறு அம்சங்கள் தொடர்பாக பொதுமக்களிடம் இருந்து செல்போன் மூலம் கருத்துக்களை பெறுவது என்று அதிகாரிகள் முடிவு செய்து உள்ளனர்.

    இதற்காக மாநகராட்சி சார்பில் சுமார் 5 லட்சம் கியூஆர்கோடு ஸ்டிக்கர்கள் தயாரிக்கப்பட்டு உள்ளன. அவற்றை வீடு-வீடாக சென்று ஒட்டும் பணியில் ஊழியர்கள் ஈடுபட உள்ளனர்.

    இதுகுறித்து கோவை மாநகராட்சி கமிஷனர் பிரதாப் கூறியதாவது:-

    மாநகர அளவில் குடிநீர் விநியோகம், சொத்து வரிவிதிப்பு உள்ளிட்ட சேவைகள் மற்றும் திட்டப்ப ணிகள் குறித்து பொது மக்களின் கருத்துகளை அறிந்து கொள்வதற்காக கியூஆர்கோடு ஸ்டிக்கர் திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

    இது மாநகரின் அனைத்து பகுதிகளிலும் ஒட்டப்படும். எனவே பொதுமக்கள் ஆன்டிராய்டு செல்போனில் கியூஆர்கோடை ஸ்கேன் செய்து, அதன்மூலம் மாந கராட்சி அலுவலகத்தை தொடர்பு கொண்டு தங்க ளின் புகார்கள் மற்றும் கருத்துக்களை தெரிவிக்கலாம் என்றார்.

    • திருச்செங்கோட்டில் பிரசித்தி பெற்ற அர்த்தநாரீஸ்வரர் கோவில் உள்ளது.
    • இக்கோவிலுக்கு வரும் பக்தர்கள் நன்கொடை மற்றும் காணிக்கை செலுத்துவதற்கு வசதியாக, பிரத்யேகமாக கியூ.ஆர்.கோடு அடங்கிய பலகை தயாரிக்கப்பட்டது.

    திருச்செங்கோடு:

    நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் பிரசித்தி பெற்ற அர்த்தநாரீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு வரும் பக்தர்கள் நன்கொடை மற்றும் காணிக்கை செலுத்துவதற்கு வசதியாக, பிரத்யேகமாக கியூ.ஆர்.கோடு அடங்கிய பலகை தயாரிக்கப்பட்டது.

    இந்த பலகை நேற்று திருச்செங்கோடு பாரத வங்கி தலைமை மேலாளரால், கோவிலின் அறங்காவலர் குழுத் தலைவர் தங்கமுத்து, கோவில் உதவி ஆணையர் ரமணிகாந்தன் மற்றும் அறங்காவலர்கள் முன்னி லையில் வழங்கப்பட்டு, கோவில் வளாகத்தில் வைக்கப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் கோவில் கண்காணிப்பாளர் சுரேஷ், திருச்செங்கோடு சரக ஆய்வர் நவீன்ராஜா மற்றும் கோவில் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    • மாணவர்கள் ெரயில் பயணிகளிடம் விழிப்புணர்வு
    • 9 இடங்களில் கியூ ஆர் கோடு ஒட்டப்பட்டுள்ளது

    அரக்கோணம்:

    அரக்கோணம் ெரயில் நிலையத்தில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கானோர் ெரயிலில் பயணிகள் செல்கின்றனர்.

    இவர்கள் டிக்கெட் எடுப்பதில் பெரும் சிரமத்திற்கு உள்ளாவதால் ெரயில் டிக்கெட் எடுக்கும் செயலி 'கியூஆர் கோடு' வசதி ஏற்படுத்த ப்பட்டுள்ளது.

    இந்த செயலி மூலம் முன்பதிவு டிக்கெட் தவிர்த்து சாதாரண ெரயில், விரைவு ெரயில், அதிவிரைவு ெரயில் நடைமேடை டிக்கெட் மற்றும் சீசன் டிக்கெட் ஆகியவற்றை பெற முடியும். அரக்கோணம் ெரயில் நிலையத்திலிருந்து 50 மீட்டர் தொலைவு வரை இந்த செயலியை பயன்படுத்தி டிக்கெட் பெற்றுக்கொள்ளலாம்.

    ெரயில் நிலைய வளாகத்திற்குள் 9 இடங்களில் கியூஆர் கோடு ஒட்டப்பட்டுள்ளது.

    செங்குட்டுவன் மற்றும் அப்துல் கலாம் சாரணர், மணிமேகலை மதர் தெரசா சாரணியர் இயக்கம் தென்னக ெரயில்வே மத்திய மாவட்டம் இணைந்து பயண சீட்டு செயலி வசதியை ஏற்படுத்தி உள்ளனர்.

    செங்குட்டுவன் சாரணர் இயக்க குழு தலைவர் குமாரசாமி தலைமையில் அப்துல் கலாம், சாரணர் இயக்க குழு தலைவர் திலீப் குமார் முன்னிலையில் தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது.

    பயண சீட்டு முதன்மை அலுவலர் காதர் ஷெரிப், ஸ்டேஷன் மாஸ்டர் சுபாஷ் குமார், ெரயில்வே பாதுகாப்பு படை உதவி ஆய்வாளர் வின்சென்ட் ஆகியோர் துவக்கி வைத்தனர்.

    கியூ ஆர் கோடு குறித்து சாரண சாரணியர் இயக்க மாணவ- மாணவிகள் ெரயில் பயணிகளிடம் விளக்கிக் கூறினர்.

    இந்நிகழ்ச்சியில் சந்திரசேகர், பிந்து புவனேஸ்வரி, ரம்யா, ஷர்வன் குமார், கஸ்தூரிபாய், ராம் தயால் போலி, கீர்த்தி வாசன், சுகன்யா, பிரியங்கா, சங்கீதா, மற்றும் சாரணர் சாரணியர் இயக்க மாணவ மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.

    ×