திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் பக்தர்கள் காணிக்கை செலுத்த கியூ.ஆர். கோடு முறை அறிமுகம்

திருச்செங்கோட்டில் பிரசித்தி பெற்ற அர்த்தநாரீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு வரும் பக்தர்கள் நன்கொடை மற்றும் காணிக்கை செலுத்துவதற்கு வசதியாக, பிரத்யேகமாக கியூ.ஆர்.கோடு அடங்கிய பலகை தயாரிக்கப்பட்டது.
கோவில் வளாகத்தில் கியூ.ஆர். கோடு பலகை வைக்கப்பட்டுள்ள காட்சி. 
கோவில் வளாகத்தில் கியூ.ஆர். கோடு பலகை வைக்கப்பட்டுள்ள காட்சி. 
Published on

திருச்செங்கோடு:

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் பிரசித்தி பெற்ற அர்த்தநாரீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு வரும் பக்தர்கள் நன்கொடை மற்றும் காணிக்கை செலுத்துவதற்கு வசதியாக, பிரத்யேகமாக கியூ.ஆர்.கோடு அடங்கிய பலகை தயாரிக்கப்பட்டது.

இந்த பலகை நேற்று திருச்செங்கோடு பாரத வங்கி தலைமை மேலாளரால், கோவிலின் அறங்காவலர் குழுத் தலைவர் தங்கமுத்து, கோவில் உதவி ஆணையர் ரமணிகாந்தன் மற்றும் அறங்காவலர்கள் முன்னி லையில் வழங்கப்பட்டு, கோவில் வளாகத்தில் வைக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் கோவில் கண்காணிப்பாளர் சுரேஷ், திருச்செங்கோடு சரக ஆய்வர் நவீன்ராஜா மற்றும் கோவில் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com