

கோவை,
கோவை சரவணம்பட்டி, சிவானந்தபுரத்தை சேர்ந்தவர் சம்பத் (வயது 44). இவர் அந்த பகுதியில் நகைக்கடை நடத்தி வருகிறார்.இந்த நிலையில் அவர் சம்பவத்தன்று இரவு கடையை பூட்டிவிட்டு சென்றார். அப்போது மர்ம நபர்கள் முன்கதவு பூட்டை உடைத்து கடையில் இருந்த ரூ.1 லட்சம் மதிப்பு உடைய 6 கிலோ வெள்ளி மற்றும் ரூ.70 ஆயிரம் ரொக்கத்தை கொள்ளை அடித்து தப்பி சென்றனர். அடுத்த நாள் காலை சம்பத் கடைக்கு வந்தார். அப்போது முன்கதவு பூட்டு உடைந்து கிடப்பதும், கடைக்குள் இருந்த மேற்கண்ட பொருட்கள் கொள்ளை போனது தெரிய வந்தது. இது தொடர்பாக சம்பத் சரவணம்பட்டி போலீசில் புகார் அளித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.