என் மலர்
செங்கல்பட்டு
- சி20 என்பது, ஜி20-ன் அதிகாரப்பூர்வ குழுக்களில் ஒன்றாகும்.
- மாநாட்டின் 2-ம் நாளில் இசையமைப்பாளர் இளையராஜா கலந்து கொண்டு இசை நிகழ்ச்சி நடத்தினார்.
மாமல்லபுரம்:
சர்வதேச சி-20 மாநாடு 3நாட்களாக மாமல்லபுரத்தில் நடைபெற்றது. இதனை கவர்னர் ஆர்.என்.ரவி குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.
சி20 என்பது, ஜி20-ன் அதிகாரப்பூர்வ குழுக்களில் ஒன்றாகும். இந்த சி-20 மாநாட்டில் ஆன்மிகம், ஒருமைப்பாடு மேலாண்மை, கலாச்சாரம், எளிமைத்துவம், மோதல் தவிர்ப்பு, சுற்றுச்சூழல் உணர்வு உள்ளிட்டவை பற்றி ஆராய்ந்து விவாதிக்கப்பட்டது.
மாநாட்டின் 2-ம் நாளில் இசையமைப்பாளர் இளையராஜா கலந்து கொண்டு இசை நிகழ்ச்சி நடத்தினார். நிறைவு நாளான நேற்று தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
- பட்டா கத்தியுடன் வந்த 2 வாலிபர்கள் மோட்டார் சைக்கிளை திருடி செல்லும் காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக வைரலானது.
- பொத்தேரி பகுதியில் பட்டா கத்தியுடன் சென்று மோட்டார் சைக்கிளை திருடியதை ஒப்புக்கொண்டனர்.
பொத்தேரி:
செங்கல்பட்டு மாவட்டம் பொத்தேரி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் சுகுமார், இவரது வீட்டு வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் கடந்த சில தினங்களுக்கு முன்பு பட்டா கத்தியுடன் வந்த 2 வாலிபர்கள் திருடி செல்லும் காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக வைரலானது.
இதுகுறித்து மறைமலைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மோட்டார் சைக்கிளை திருடிய வாலிபர்களை வலைவீசி தேடி வந்தனர்.
இந்த நிலையில் நேற்று மறைமலைநகர் டாஸ்மாக் கடை அருகே சந்தேகப்படும்படி மது குடித்து கொண்டிருந்த 2 வாலிபர்களை போலீசார் பிடித்து விசாரித்தபோது அவர்கள் இருவரும் முன்னுக்குப்பின் முரணான தகவல்களை அளித்தனர். பின்னர் போலீசார் இருவரையும் மறைமலைநகர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்தபோது பொத்தேரி பகுதியில் பட்டா கத்தியுடன் சென்று மோட்டார் சைக்கிளை திருடியதை ஒப்புக்கொண்டனர்.
இதுகுறித்து மறைமலைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்த சென்னை அம்பத்தூர் பகுதியை சேர்ந்த சஞ்சய் (வயது 19), ஆவடியை சேர்ந்த சதீஷ்குமார் (21) ஆகியோரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
- மதுராந்தகம் தொகுதி எம்.எல்.ஏ மரகதம் குமரவேல் போட்டியை துவக்கி வைத்தார்.
- மாமல்லபுரம் பேரூராட்சி தலைவர் வளர்மதி, எஸ்வந்த்ராவ், கணேசன், சுகுமாரன், பூங்குழலி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
மாமல்லபுரம்:
திருக்கழுக்குன்றம் அ.தி.மு.க., கிழக்கு ஒன்றியம் சார்பில், மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் 120 அணிகள் பங்கேற்கும் இரண்டு மாத கிரிக்கெட் போட்டி துவங்கியது. மதுராந்தகம் தொகுதி எம்.எல்.ஏ மரகதம் குமரவேல் போட்டியை துவக்கி வைத்தார்.
முதல் பரிசு ரூ.40ஆயிரம், 2வது ரூ.30ஆயிரம், மூன்றாவது ரூ.20ஆயிரம் என பரிசுத்தொகை வழங்கப்பட உள்ளது. தொடக்க விழாவில் செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட அ.தி.மு.க செயலாளர் திருக்கழுக்குன்றம் ஆறுமுகம், மாமல்லபுரம் பேரூராட்சி தலைவர் வளர்மதி, துணைத்தலைவர் ராகவன், எஸ்வந்த்ராவ், கணேசன், சுகுமாரன், பூங்குழலி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
- உயர் அதிகாரிகள் கண்டித்ததால் ரமேஷ் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
- ரமேஷ் தற்கொலை செய்வதற்கு முன்பு அவர் எழுதி வைத்திருந்த கடிதத்தை போலீசார் கைப்பற்றியதாக கூறப்படுகிறது.
வண்டலூர்:
வண்டலூர் பூங்காவில் எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வந்தவர் ரமேஷ் (வயது60). இவர் பூங்கா வளாகத்தில் உள்ள குடியிருப்பு பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்தார். ரமேஷ் இன்னும் 4 நாட்களில் ஓய்வு பெற இருந்தார்.
இந்நிலையில் நேற்று காலை வீட்டில் உள்ள அறையில் ரமேஷ் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது உடலை ஓட்டேரி போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தினர். உயர் அதிகாரிகள் கண்டித்ததால் ரமேஷ் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
நேற்று முன்தினம் பூங்கா அதிகாரிகள் ரமேசை அழைத்து பூங்காவில் அதிகமாக மின்சாரம் பயன்பாட்டிற்க்கு நீங்கள் தான் காரணம் என்றும் இன்னும் நான்கு நாட்களில் ஓய்வு பெற உள்ளதால் இது குறித்து சார்ஜ் சீட்டு வழங்கப்படும் என்றும் கூறியதாக கூறப்படுகிறது.
இதில் மனவேதனை அடைந்த ரமேஷ் தற்கொலை செய்து இருக்கலாம் என்று தெரிகிறது. மேலும் ரமேஷ் தற்கொலை செய்வதற்கு முன்பு அவர் எழுதி வைத்திருந்த கடிதத்தை போலீசார் கைப்பற்றியதாக கூறப்படுகிறது. அதில் தனது தற்கொலை முடிவுக்கான காரணம் குறித்து குறிப்பிட்டு உள்ளதாக தெரிகிறது. இதைத்தொடர்ந்து பூங்கா அதிாகரிகளிடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்து உள்ளனர்.
- மோட்டார் சைக்கிளில் இருந்த ரமேஷ், தம்பிரான் ஆகிய 2பேரும் தூக்கி வீசப்பட்டனர்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து கார் டிரை வரை தேடி வருகின்றனர்.
செங்கல்பட்டு:
செங்கல்பட்டு அடுத்த மாமண்டூர், மசூதி தெருவை சேர்ந்தவர் ரமேஷ்(வயது45). இறைச்சி கடை வைத்து உள்ளார். இவரது கடையில் அதே பகுதியை சேர்ந்த தம்பிரான் (61) என்பவர் வேலைபார்த்து வந்தார்.
இந்த நிலையில் இன்று அதிகாலை அவர்கள் 2 பேரும் மோட்டார் சைக்கிளில் செங்கல்பட்டு நோக்கி வந்து கொண்டு இருந்தனர். செங்கல்பட்டு அருேக பழவேலி வந்போது, திண்டிவனத்தில் இருந்து சென்னை நோக்கி சென்ற கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்ற மோட்டார் சைக்கிளின் பின்பக்கத்தில் வேகமாக மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்த ரமேஷ், தம்பிரான் ஆகிய 2பேரும் தூக்கி வீசப்பட்டனர்.
பலத்த காயம் அடைந்த ரமேஷ் சம்பவ இடத்திலேயே பலியானார். படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிய தம்பிரானை மீட்டு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி தம்பிரானும் இறந்து போனார்.
விபத்து நடந்ததும் கார் டிரைவர் தப்பி ஓடிவிட்டார்.இது குறித்து செங்கல்பட்டு தாலுக்கா போலீசார் வழக்கு பதிவு செய்து கார் டிரை வரை தேடி வருகின்றனர்.
- மோகன்ராஜ் இன்ஸ்டாகிராமில் பழக்கமான இளம் பெண் ஒருவரை காதலித்து வந்தார். அவர்களுக்கிடையே திடீரென கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக தெரிகிறது.
- வீட்டில் உள்ள அறையில் இருந்த போது திடீரென மோகன்ராஜ் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
வண்டலூர்:
ஊரப்பாக்கம் அடுத்த காரணைப்புதுச்சேரி, விநாயகபுரம், 2-வது தெருவை சேர்ந்தவர் கன்னியப்பன். இவரது மகன் மோகன் ராஜ் (வயது 24). ஏ.சி. மெக்கானிக்.
இந்த நிலையில் மோகன்ராஜ் இன்ஸ்டாகிராமில் பழக்கமான இளம் பெண் ஒருவரை காதலித்து வந்தார். இந்த நிலையில் அவர்களுக்கிடையே திடீரென கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் காதலி பேச மறுத்து உள்ளார். இதன் காரணமாக மோகன்ராஜ் மனவேதனை அடைந்தார். இரவு வீட்டில் உள்ள அறையில் இருந்த போது திடீரென மோகன்ராஜ் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்து அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து கூடுவாஞ்சேரி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
சப்-இன்ஸ்பெக்டர் சிவ குருநாதன் மற்றும் போலீசார் விரைந்து வந்து மோகன் ராஜின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- மாமல்லபுரத்தில் சி-20 சர்வதேச மாநாடு இன்று தொடங்கியது.
- இந்த மாநாட்டை தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தொடங்கி வைத்தார்.
மாமல்லபுரம்:
உலகம் ஒரே குடும்பம் என்ற நோக்குடன் வசுதெய்வ குடும்பகம் என்ற பெயரில் சின்மயா மிஷன் நடத்தும் சி-20 சர்வதேச 3நாள் மாநாடு மாமல்லபுரம் போர் பாயிண்ட்ஸ் ஷெரட்டன் அரங்கத்தில் இன்று தொடங்கியது. தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.
சி-20 இந்தியா-2023 என்பது ஜி20-ன் அதிகாரப்பூர்வ குழுக்களில் ஒன்றாகும்.
இந்த சி-20 மாநாட்டில் ஆன்மிகம், ஒருமைப்பாடு மேலாண்மை, கலாசாரம், எளிமைத்துவம், மோதல் தவிர்ப்பு, சுற்றுச்சூழல் உணர்வு உள்ளிட்ட முன்னுதாரணங்களைப் பற்றி ஆராய்ந்து விவாதிக்க உள்ளனர்.
நாளை இசையமைப்பாளர் இளையராஜாவும், நாளை மறுநாள் தெலுங்கானா ஆளுநரும் புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜனும் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கின்றனர்.
- கிளாம்பாக்கம் பஸ் நிலையத்துக்கு பயணிகள் எளிதாக வந்து செல்ல வசதியாக அங்கு மின்சார ரெயில் நிலையம் அமைக்கப்படுகிறது.
- மின்சார ரெயிலில் இருந்து வரும் பயணிகளும், ஜி.எஸ்.டி. சாலையில் இருந்து வரும் பயணிகளும் சாலையை கடந்து பஸ் நிலையத்துக்குள் வருவதில் சிரமம் உள்ளது.
வண்டலூர் அருகே கிளாம்பாக்கத்தில் புதிய பஸ்நிலையம் கட்டப்பட்டுள்ளது. இங்கிருந்து தென் மண்டலங்களுக்கு செல்லும் பஸ்கள் இயக்கப்பட உள்ளன.
இந்த பஸ்நிலையத்துக்கு கலைஞர் நூற்றாண்டு பஸ் நிலையம் என பெயரிடப்பட்டுள்ளது. இந்த பஸ் நிலையம் திறப்பு விழாவுக்கு தயாராக உள்ளது. ஜூலை மாதத்துக்குள் பஸ் நிலையம் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தினமும் தென்மண்டலங்களில் இருந்து 65 ஆயிரம் பயணிகள் இந்த பஸ் நிலையத்துக்கு வந்து செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பண்டிகை காலங்களில் இந்த எண்ணிக்கை ஒரு லட்சம் வரை உயரும்.
கிளாம்பாக்கம் பஸ் நிலையத்துக்கு பயணிகள் எளிதாக வந்து செல்ல வசதியாக அங்கு மின்சார ரெயில் நிலையம் அமைக்கப்படுகிறது. மின்சார ரெயிலில் இருந்து வரும் பயணிகளும், ஜி.எஸ்.டி. சாலையில் இருந்து வரும் பயணிகளும் சாலையை கடந்து பஸ் நிலையத்துக்குள் வருவதில் சிரமம் உள்ளது.
இதையடுத்து கிளாம்பாக்கம் ரெயில் நிலையம் மற்றும் ஜி.எஸ்.டி. சாலையை புதிய பஸ் நிலையத்துடன் இணைக்கும் வகையில் ஆகாய நடை மேம்பாலம் அமைக்கப்பட உள்ளது. இந்த ஆகாய நடை மேம்பாலத்துக்கான வடிவமைப்பு தயாரிக்கப்பட்டுள்ளது.
கும்டா நிறுவனம் இந்த ஆகாய நடை மேம்பாலத்துக்கான வடிவமைப்பை உருவாகி உள்ளது. புதிய பஸ் நிலையத்தை, ரெயில் நிலையத்துடன் இணைக்கும் வகையிலும், ஜி.எஸ்.டி. சாலையை பயணிகள் எளிதாக கடக்கும் வகையிலும் இந்த ஆகாய நடை மேம்பாலம் வடிவமைக்கப்பட உள்ளது.
ஆகாய நடை மேம்பாலம் அமைப்பதற்காக 1.5 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. மேலும் ரெயில் நிலையம் அமைக்கவும் நிலம் கையகப்படுத்தப்பட்டு வருகிறது.
நிலம் கையகப்படுத்தும் பணிகள் முடிந்ததும் ஆகாய நடைமேம்பாலம் அமைப்பதற்காக டெண்டர்கள் விடப்படுகிறது. இதையடுத்து ஆகாய நடை மேம்பாலம் அமைக்கும் பணிகள் விரைவில் தொடங்கி ஒரு வருடத்தில் முடிவடையும் என்று தெரிவிக்கப்படுகிறது.
இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:- கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் அமைக்கப்பட உள்ள ஆகாய நடைமேம்பாலம் 450 மீட்டர் நீளமும், 10 மீட்டர் அகலமும் கொண்டது. ஒரு மணி நேரத்தில் 5 ஆயிரம் பேர் இந்த ஆகாய நடை மேம்பாலத்தில் சென்று வர முடியும். இந்த பாலம் பல இடங்களில் தரையில் இறங்கும் வகையில் அமைக்கப்படுகிறது. ஜி.எஸ்.டி. சாலை, ரெயில் நிலையம், பஸ் நிலையத்தில் பிரதான நுழைவு வாயில், மாநகர பஸ்கள் நிறுத்துமிடம் ஆகிய இடங்களிலும் இறங்கும் வகையில் வடிவமைக்கப்படுகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- மனஉளைச்சலில் இருந்த ரமேஷ் வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள குடியிருப்பில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
- ஓட்டேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார்கள்.
வண்டலூர்:
சென்னை வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வந்தவர் ரமேஷ் (60). அதே வளாகத்தில் உள்ள குடியிருப்பு பகுதியில் தனது குடும்பத்துடன் வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று சில அதிகாரிகள் அவரை அழைத்து பூங்காவில் அதிக மின்சாரம் பயன்பாட்டிற்கு நீங்கள் தான் காரணம் என்றும், இன்னும் 4 நாட்களில் ஓய்வுபெற உள்ளதால் இதுகுறித்து சார்ஜ் சீட்டு வழங்கப்படும் என்று மிரட்டியதாக கூறப்படுகிறது.
இதனால் மனஉளைச்சலில் இருந்த ரமேஷ் வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள குடியிருப்பில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக ஓட்டேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார்கள். அப்போது ரமேஷ் உருக்கமாக எழுதிய கடிதத்தை போலீசார் கைப்பற்றினார்கள். அதில் என் சாவுக்கு குடும்பத்தினர் காரணம் இல்லை. அதிகாரிகள் தான் காரணம் என்று கூறப்பட்டு இருந்தது.
அவரது உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஒரு நம்பர் லாட்டரியை விற்பனை செய்து கொண்டிருந்தார்.
- தலைமறைவாக உள்ள 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
தாம்பரம்:
சென்னை கிழக்கு தாம்பரம் வேளச்சேரி மெயின் ரோடு, பரத்வாஜ் தெரு சந்திப்பில் ஒரு நம்பர் லாட்டரி விற்பனை நடந்து வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அங்கு திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சென்னை, எண்ணூர் தகுதியை சேர்ந்த நிஜாமுதீன் (28) என்பவர் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஒரு நம்பர் லாட்டரியை விற்பனை செய்து கொண்டிருந்தார். அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 2 பிரிண்டிங் எந்திரங்களை கைப்பற்றினர்.
அவரிடம் நடத்திய விசாரணையில் ஒரு நம்பர் லாட்டரி விற்பனையை எண்ணூரை சேர்ந்த கதிர் என்பவர் செய்து வருவதாகவும். அவரிடம் தான் வேலை செய்து வருவதாகவும் நிஜாமுதீன் தெரிவித்தார். இது தொடர்பாக தலைமறைவாக உள்ள 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
- விவசாயிகள் அறுவடை செய்யும் நெல்களை அரசு எடைபோட்டு வாங்குவதில் காலதாமதம் ஆகிறது.
- நெல் கொள்முதல் களத்திற்கு வரும் விவசாயிகள் அங்கு நாட்கணக்கில் காத்து கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
மாமல்லபுரம்:
திருக்கழுக்குன்றம் அடுத்த கீரப்பாக்கத்தில் உள்ள நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் நெல் கொள்முதல் நிலையத்தில் எடை இயந்திரம், அடிக்கடி பழுதடைந்து போவதால் விவசாயிகள் அறுவடை செய்யும் நெல்களை அரசு எடைபோட்டு வாங்குவதில் காலதாமதம் ஆகிறது.
இதனால் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து நெல் கொள்முதல் களத்திற்கு வரும் விவசாயிகள் அங்கு நாட்கணக்கில் காத்து கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதேபோல் திருக்கழுக்குன்றம், திருப்போரூர், செய்யூர் பகுதிகளிலும் பெரும்பாலான இடங்களில் பழைய எடை இயந்திரமே உள்ளது. எடைபோட காலதாமதம் ஆவதால் விவசாயிகள் தங்கள் நெல்களை குறைந்த விலைக்கு வியாபாரிகளிடம் விற்கும் நிலை ஏற்படுகிறது. இதனால் மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்து பழைய மிஷின்களை அகற்றி புதிய டிஜிட்டல் மிஷின் வைக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
- உண்டியல் பணம் எண்ணும் பணியையொட்டி பக்தர் கள் செல்ல தடை விதிக்கப்பட்டது.
- போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது.
திருப்போரூரில் உள்ள புகழ்பெற்ற கந்தசுவாமி கோவிலில் உண்டியல்கள் திறக்கப்பட்டு பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய பணம் எண்ணப்பட்டது.
இந்து சமய அறநிலைத் துறை ஆய்வாளர் பாஸ்கர் முன்னிலையில், திருப்போரூர் கோவில் செயல் அலுவலர் தியாகராஜன், ஆளவந்தார் அறக்கட்டளை செயல் அலுவலர் சக்திவேல், மதுராந்தகம் ஏரி காத்த ராமர் கோவில் செயல் அலுவலர் மேகவண்ணன், திருப்போரூர் கோவில் மேலாளர் வெற்றிவேல் ஆகியோர் மேற்பார்வையில் கோவில் ஊழியர்கள் மற்றும் சென்னையைச் சேர்ந்த தன்னார்வலர்கள், பக்தர்கள் ஏராளமனோர் இதில் ஈடுபட்டனர்.
இதில் ரொக்கமாக ரூ.28 லட்சத்து 80 ஆயிரத்து 639-ம், 288 கிராம் தங்கமும், 2,305 கிராம் வெள்ளியும் காணிக்கையாக கிடைத்தன. உண்டியல் பணம் எண்ணும் பணியையொட்டி பக்தர் கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. மேலும் போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது.






