தாம்பரத்தில் தடைசெய்யப்பட்ட லாட்டரி விற்றவர் கைது

தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஒரு நம்பர் லாட்டரியை விற்பனை செய்து கொண்டிருந்தார். தலைமறைவாக உள்ள 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
தாம்பரத்தில் தடைசெய்யப்பட்ட லாட்டரி விற்றவர் கைது
Published on

தாம்பரம்:

சென்னை கிழக்கு தாம்பரம் வேளச்சேரி மெயின் ரோடு, பரத்வாஜ் தெரு சந்திப்பில் ஒரு நம்பர் லாட்டரி விற்பனை நடந்து வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அங்கு திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சென்னை, எண்ணூர் தகுதியை சேர்ந்த நிஜாமுதீன் (28) என்பவர் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஒரு நம்பர் லாட்டரியை விற்பனை செய்து கொண்டிருந்தார். அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 2 பிரிண்டிங் எந்திரங்களை கைப்பற்றினர்.

அவரிடம் நடத்திய விசாரணையில் ஒரு நம்பர் லாட்டரி விற்பனையை எண்ணூரை சேர்ந்த கதிர் என்பவர் செய்து வருவதாகவும். அவரிடம் தான் வேலை செய்து வருவதாகவும் நிஜாமுதீன் தெரிவித்தார். இது தொடர்பாக தலைமறைவாக உள்ள 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com