இன்ஸ்டாகிராமில் காதல்- காதலி பேச மறுத்ததால் வாலிபர் தற்கொலை

மோகன்ராஜ் இன்ஸ்டாகிராமில் பழக்கமான இளம் பெண் ஒருவரை காதலித்து வந்தார். அவர்களுக்கிடையே திடீரென கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக தெரிகிறது.வீட்டில் உள்ள அறையில் இருந்த போது திடீரென மோகன்ராஜ் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இன்ஸ்டாகிராமில் காதல்- காதலி பேச மறுத்ததால் வாலிபர் தற்கொலை
Published on

வண்டலூர்:

ஊரப்பாக்கம் அடுத்த காரணைப்புதுச்சேரி, விநாயகபுரம், 2-வது தெருவை சேர்ந்தவர் கன்னியப்பன். இவரது மகன் மோகன் ராஜ் (வயது 24). ஏ.சி. மெக்கானிக்.

இந்த நிலையில் மோகன்ராஜ் இன்ஸ்டாகிராமில் பழக்கமான இளம் பெண் ஒருவரை காதலித்து வந்தார். இந்த நிலையில் அவர்களுக்கிடையே திடீரென கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் காதலி பேச மறுத்து உள்ளார். இதன் காரணமாக மோகன்ராஜ் மனவேதனை அடைந்தார். இரவு வீட்டில் உள்ள அறையில் இருந்த போது திடீரென மோகன்ராஜ் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்து அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து கூடுவாஞ்சேரி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

சப்-இன்ஸ்பெக்டர் சிவ குருநாதன் மற்றும் போலீசார் விரைந்து வந்து மோகன் ராஜின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com