என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "லாட்டரி கைது"

    • லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக பவானி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • போலீசார் பல்வேறு பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    பவானி:

    ஈரோடு மாவட்ட பகுதிகளில் லாட்டரி சீட்டு விற்பனையை தடுக்கும் வகையில் பல்வேறு தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு எஸ்.பி. சுஜாதா உத்தரவிட்டார்.

    அதன் அடிப்படையில் மாவட்ட போலீசார் பல்வேறு பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அதன்படி ஈரோடு மாவட்டம் பவானி அருகில் உள்ள ஜீவா நகர் பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக பவானி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதனைத் தொடர்ந்து பவானி இன்ஸ்பெக்டர் முருகையன் தலைமையில் தனிப்படை ஒன்று அமைக்கப்பட்டு அப்பகுதியில் தேடுதல் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    பவானி, குருப்பநாயக்கன்பாளையம், ஜீவா நகர் பகுதியில் வசிக்கும் சரவணன் (வயது 33) என்பவர் அவரது வீட்டில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள், வெள்ளை துண்டு சீட்டில் எழுதி வைத்து கொண்டு விற்பனை செய்து வந்தது கண்டறியப்பட்டது.

    இதையடுத்து தனிப்படை போலீசார் சரவணனை கைது செய்து அவரிடம் இருந்து ரொக்கப் பணம் 8 லட்சத்தது 56 ஆயிரம் ரூபாய், 3 செல்போன்கள் மற்றும் 65 வெள்ளை துண்டு சீட்டுகள் ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இச்சம்பவத்தில் தொடர்புடையதாக கருதப்படும் மாதையன், விக்கி, கணேசன் ஆகிய 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

    • தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஒரு நம்பர் லாட்டரியை விற்பனை செய்து கொண்டிருந்தார்.
    • தலைமறைவாக உள்ள 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

    தாம்பரம்:

    சென்னை கிழக்கு தாம்பரம் வேளச்சேரி மெயின் ரோடு, பரத்வாஜ் தெரு சந்திப்பில் ஒரு நம்பர் லாட்டரி விற்பனை நடந்து வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அங்கு திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சென்னை, எண்ணூர் தகுதியை சேர்ந்த நிஜாமுதீன் (28) என்பவர் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஒரு நம்பர் லாட்டரியை விற்பனை செய்து கொண்டிருந்தார். அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 2 பிரிண்டிங் எந்திரங்களை கைப்பற்றினர்.

    அவரிடம் நடத்திய விசாரணையில் ஒரு நம்பர் லாட்டரி விற்பனையை எண்ணூரை சேர்ந்த கதிர் என்பவர் செய்து வருவதாகவும். அவரிடம் தான் வேலை செய்து வருவதாகவும் நிஜாமுதீன் தெரிவித்தார். இது தொடர்பாக தலைமறைவாக உள்ள 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

    • லாட்டரி விற்ற 5 பேர் கைது
    • திருச்சி திருவெறும்பூரில் லாட்டரி விற்ற 5 பேர் கைது


    திருவெறும்பூர், திருச்சி மாவட்ட சிறப்பு தனிப்படையினர், திருவெறும்பூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டபோது, அந்த பகுதியில் லாட்டரி சீட்டு விற்று கொண்டிருந்த, வடக்கு காட்டூர் பாரதிதாசன் நகர் 4-வது தெருவை சேர்ந்த பிரான்சிஸ் (வயது 42), அரியமங்கலம் மேல அம்பிகாபுரம் முனீஸ்வரன் கோவில் தெருவை சேர்ந்த ராதாகிருஷ்ணன் (60), வடக்கு காட்டூர் பாப்பா குறிச்சி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சிவகுமார்(48), பாத்திமாபுரம் இரண்டாவது தெருவை சேர்ந்த மாரியப்பன்( 52 ) பாரதிதாசன் நகர் 7வது தெருவை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி ( 46 ) ஆகிய 5 பேரை கைது செய்ததோடு அவர்களிடமிருந்து ரூ.3 ஆயிரம்,ஒரு மொபட், 5 செல்போன்களை பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்கள் ஐந்து பேரும், கைப்பற்றப்பட்ட பணம், பொருட்களுடன் திருவெறும்பூர் காவல் நிலையத்தில், சிறப்பு தனிப்படையினரால் ஒப்படைக்கப்பட்டனர். அவர்கள் மீது வழக்கு பதிந்த திருவெறும்பூர் போலீசார் திருச்சி 6வது குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.




    ×