என் மலர்
உள்ளூர் செய்திகள்

போட்டியை துவக்கி வைத்த எம்.எல்.ஏ மரகதம் குமரவேல்
அ.தி.மு.க சார்பில் மாமல்லபுரத்தில் 120 அணிகள் பங்கேற்கும் 2 மாத கிரிக்கெட் போட்டி
- மதுராந்தகம் தொகுதி எம்.எல்.ஏ மரகதம் குமரவேல் போட்டியை துவக்கி வைத்தார்.
- மாமல்லபுரம் பேரூராட்சி தலைவர் வளர்மதி, எஸ்வந்த்ராவ், கணேசன், சுகுமாரன், பூங்குழலி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
மாமல்லபுரம்:
திருக்கழுக்குன்றம் அ.தி.மு.க., கிழக்கு ஒன்றியம் சார்பில், மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் 120 அணிகள் பங்கேற்கும் இரண்டு மாத கிரிக்கெட் போட்டி துவங்கியது. மதுராந்தகம் தொகுதி எம்.எல்.ஏ மரகதம் குமரவேல் போட்டியை துவக்கி வைத்தார்.
முதல் பரிசு ரூ.40ஆயிரம், 2வது ரூ.30ஆயிரம், மூன்றாவது ரூ.20ஆயிரம் என பரிசுத்தொகை வழங்கப்பட உள்ளது. தொடக்க விழாவில் செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட அ.தி.மு.க செயலாளர் திருக்கழுக்குன்றம் ஆறுமுகம், மாமல்லபுரம் பேரூராட்சி தலைவர் வளர்மதி, துணைத்தலைவர் ராகவன், எஸ்வந்த்ராவ், கணேசன், சுகுமாரன், பூங்குழலி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
Next Story






