என் மலர்
உள்ளூர் செய்திகள்

வண்டலூர் உயிரியல் பூங்காவில் ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை
- மனஉளைச்சலில் இருந்த ரமேஷ் வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள குடியிருப்பில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
- ஓட்டேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார்கள்.
வண்டலூர்:
சென்னை வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வந்தவர் ரமேஷ் (60). அதே வளாகத்தில் உள்ள குடியிருப்பு பகுதியில் தனது குடும்பத்துடன் வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று சில அதிகாரிகள் அவரை அழைத்து பூங்காவில் அதிக மின்சாரம் பயன்பாட்டிற்கு நீங்கள் தான் காரணம் என்றும், இன்னும் 4 நாட்களில் ஓய்வுபெற உள்ளதால் இதுகுறித்து சார்ஜ் சீட்டு வழங்கப்படும் என்று மிரட்டியதாக கூறப்படுகிறது.
இதனால் மனஉளைச்சலில் இருந்த ரமேஷ் வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள குடியிருப்பில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக ஓட்டேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார்கள். அப்போது ரமேஷ் உருக்கமாக எழுதிய கடிதத்தை போலீசார் கைப்பற்றினார்கள். அதில் என் சாவுக்கு குடும்பத்தினர் காரணம் இல்லை. அதிகாரிகள் தான் காரணம் என்று கூறப்பட்டு இருந்தது.
அவரது உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






