என் மலர்tooltip icon

    அரியலூர்

    அரியலூர் பேருந்து நிலையம் அருகில் சிறுபான்மை பிரிவு கிறிஸ்தவ கூட்டமைப்பு சார்பில் காவிரி மேலாண்மை வாரியம் வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    தாமரைக்குளம்:

    அரியலூர் பேருந்து நிலையம் அருகில் சிறுபான்மை பிரிவு கிறிஸ்தவ கூட்டமைப்பு சார்பில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும், கிறிஸ்தவ தேவாலயங்கள், மதபோதகர்கள், சிறு பான்மை பிரிவினர் தாக்கப்படுவதை கண்டித்தும், தகுந்த பாதுகாப்பு அளிக்க கோரியும், மத்திய மாநில அரசுகளை கண்டித்தும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டத்திற்கு வின்சென்ட் ஞானபிரகாசம் தலைமை தாங்கினார். மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவசங்கர் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். ராபர்ட் ரஜினிகாந்த், சாலமோன் செல்வராஜ், பிரின்ஸ் பக்தசிங், ஒருங்கிணைப்பாளர் ராதாகிருஷ்ணன், அருள்ஜோதி, டாக்டர் முஸ்தபா, அப்துல் மஜீத் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். #tamilnews
    அரியலூரில் நகராட்சி துப்புரவு பணியாளர்களுக்கு மார்ச் மாதத்துக்கான சம்பளம் வழங்கப்படாததால் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    அரியலூர்:

    அரியலூர் நகராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளை சுத்தப்படுத்தவும், கழிவு நீர் வாய்க்கால்களை தூய்மைப்படுத்தும் பணியில் 45 துப்புரவு பணியாளர்கள் நிரந்தர பணியாளர்களாக பணியாற்றி வருகின்றனர். துப்புரவு பணியாளர்களுக்கு கடந்த மார்ச் மாதத்துக்கான சம்பளம் இதுவரை வழங்கப்படவில்லை. இதுகுறித்து நகராட்சி அலுவலகத்தில் பணியாளர்கள் கேட்டனர். அதற்கு ஆணையர் மாற்றலாகி விட்டதால் காசோலையில் கையொப்பம் யார் இடுவது என்பதால் காலதாமதம் ஏற்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் சம்பளம் கிடைக்காததால் துப்புரவு பணியாளர்கள் வாழ்க்கை நடத்துவதில் பெரும் சிரமம் ஏற்பட்டது. இதுகுறித்து பலமுறை கோரிக்கை விடுத்தும் சம்பளம் வழங்கவில்லை.

    இதனால் ஆத்திரமடைந்த துப்புரவு பணியாளர்கள் நகராட்சி அலுவலக வளாகத்தில் நேற்று உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த தாசில்தார் முத்துலட்சுமி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து துப்புரவு பணியாளர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினார். அப்போது துப்புரவு பணியாளர்கள் தங்களது சம்பளம் குறித்து உறுதியாக கூறினால் தான் போராட்டத்தை கைவிடுவதாக கூறினார்கள். 

    இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் பேசி சம்பளம் உடனடியாக வழங்கப்படும் என உறுதியளித்ததை யடுத்து போராட்டத்தை கைவிட்டு அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தினால் நகராட்சி அலுவலகம் பரபரப்பாக காணப்பட்டது. 
    அரியலூர் மாவட்டத்தில் புகை இல்லா கிராமங்களை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தஞ்சை மண்டல விற்பனை உதவி மேலாளர் தெரிவித்துள்ளார்.
    அரியலூர்:

    அரியலூர் ராஜாஜி நகரில் பாரத் பெட்ரோலிய நிறுவனம் சார்பில் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு தஞ்சை மண்டல விற்பனை உதவி மேலாளர் சுனில் பத்துலா தலைமை தாங்கி பேசியதாவது:-

    இந்திய எண்ணெய் மற்றும் எரிவாயு துறை சார்பில் வருகிற 26-ந்தேதி நாடு முழுவதும் உஜ்வாலா தினம் கொண்டாடப்பட உள்ளது. உஜ்வாலா திட்டம் மூலம் பாதுகாப்பான மற்றும் நீடித்த எரிவாயு பயன்பாட்டை கிராம மக்களிடம் எடுத்துக்கூறி புகை இல்லாத கிராமங்களை அமைக்க உள்ளோம்.

    அரியலூர் மாவட்டத்தில் அயன் தத்தனூர், குழுமூர், நமங்குணம், காட்டாத்தூர், வெட்டியார்வெட்டு, காட்டகரம், இளையபெருமாள்நல்லூர், பொட்டவெளி, சென்னிவனம் ஆகிய 9 கிராமங்கள் முதல் கட்டமாக புகை இல்லா கிராமமாக மாற்றப்படும்.

    உஜ்வாலா திட்டம் தொடர்பாக வருகிற 20-ந்தேதி முகாம் நடத்தப்படுகிறது. இந்த முகாமில் மேற்கண்ட கிராமங்களுக்கு இலவச எரிவாயு இணைப்பு வழங்கப்படும்.

    இதே போல் கள்ளங்குறிச்சி, வானதிராயன்பட்டினம், கூவத்தூர், செந்துறை, இடங்கன்னி, அண்ணிமங்கலம், பெரியதிருக்கோணம், மணகெதி ஆகிய கிராமங்களை சேர்ந்தவர்கள் தகுந்த சான்றிதழ்களுடன் முகாமில் கலந்து கொண்டு இலவச எரிவாயு இணைப்பை பெற்றுக்கொள்ளலாம்.

    இவ்வாறு கூறினார். கூட்டத்துக்கு இப்ராகிம் முன்னிலை வகித்தார். அனுராதாபார்த் சாரதி வரவேற்றுப்பேசினார். இதில் பாரத்பெட்ரோலிய நிறுவன அதிகாரிகள் கலந்து கொண்டனர்.  
    அரியலூர் அருகே வெள்ளாற்றில் மணல் கொள்ளையை தடுத்த கடலூர் மாவட்ட இளைஞர்கள் 2 பேர் கடத்தப்பட்டனர்.
    செந்துறை:

    அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே சன்னாசி நல்லூர் முதல் கோட்டைக் காடு வரையிலான வெள் ளாற்றில் தினமும் நூற்றுக் கணக்கான மாட்டு வண்டிக ளில் மணல் அள்ளி வந்தனர். சிலர் குழுவாக சேர்ந்து ஓரி டத்தில் மணலை சேகரித்து லாரிகளில் வெளி மாவட்டத் திற்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இரவு நேரங்களில் பலர் பொக்லைன் எந்திரம் மூலமாக மணலை திருடி வந்தனர். இவர்கள் மீது அவ் வப்போது தளவாய் மற் றும் குவாகம் போலீசார் வழக்கு பதிந்து நடவடிக்கை எடுத்து வந்தனர். ஆனாலும் அரசியல் கட்சிகளின் பின் புலத்தில் தொடர்ந்து மணல் கொள்ளை நடந்து வந்தது.

    இதனால் கடலூர் மாவட்டத்தில் விவசாயம் பெருமளவில் பாதிக்கப்படு வதாகவும், நிலத்தடி நீர் மட்டம் குறைந்து வருவதா கவும் புகார்கள் எழுந்தன. எனவே மணல் கொள் ளையை தடுக்க அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டது.

    அத்துடன் இதுதொடர் பாக அரியலூர், கடலூர் மாவட்ட மக்களிடையே அடிக்கடி மோதலும் ஏற்பட் டது.

    இந்த நிலையில் வெள் ளாற்று பாதுகாப்பு சங் கத்தலைவர் தனவேல் தலைமையில் கடந்த மாதம் 15-ந்தேதி மணல் கொள்ளையை முழுவதும் தடுத்து நிறுத்த கோரி வெள் ளாற்றில் கஞ்சி காய்ச்சும் போராட்டம் அறிவித்து இருந்தனர்.

    அதனை தொடர்ந்து செந்துறை தாசில்தார் உமா சங்கரி மற்றும் அரியலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு மோகன்தாஸ் தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்றது.

    இந்த பேச்சு வார்த்தையில் தளவாய், குவாகம் போலீ சார் மற்றும் வருவாய் துறையினர் இணைந்து குழு அமைப்பது எனவும், இந்த குழுவினர் நாள்தோறும் ஷிப்டு முறையில் பிரிந்து முழு கண்காணிப்பில் ஈடுபடுவது என்றும், 24 மணி நேரமும் முழுமையான கண்காணிப் பில் ஈடுபட்டு மணல் கொள் ளையை தடுப்பது என்று முடிவு செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து வெள் ளாற்று பாதுகாப்பு நலச்சங் கத்தினர் கஞ்சி காய்ச்சும் போராட்டத்தை கைவிட் டனர்.

    ஆனாலும் ஒருபுறம் மணல் திருட்டு தொடர் கதையாகவே இருந்தது. இந்த நிலையில் இன்று காலை வெள்ளாற்று பகுதியில் அரி யலூர் மாவட்டத்தை சேர்ந்த வர்கள் மணல் அள்ளி வந் துள்ளனர். இதனையறிந்த கடலூர் மாவட்டம் செம் பேரி கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள் மற்றும் பொது மக்கள் அங்கு திரண்டு வந் தனர்.

    அவர்கள் இங்கு மணல் அள்ளக்கூடாது என்று எச் சரித்தனர். ஆனால் மணல் கொள்ளையர்கள் அதனை கண்டுகொள்ளாததால் இரு மாவட்டத்தை சேர்ந்த வர்களுக்கும் மோதல் உரு வானது. இதில் ஆத்திரம டைந்த கடலூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் மணல் அள்ள பயன்படுத்தப்பட்ட பொக் லைன் எந்திரத்தை அடித்து நொறுக்கினர்.

    இதற்கிடையே மணல் திருட்டை தடுத்த செம்பேரி கிராமத்தை சேர்ந்த மணி கண்டன், பாலாஜி ஆகிய இரண்டு வாலிபர்களை மணல் கடத்தல் கும்பல் தங் களது வாகனத்தில் கடத்தி சென்றது. அத்துடன் பலர் மீது தாக்குதலும் நடத்தியது. இந்த சம்பவத்தில் காயம் அடைந்தவர்கள் கடலூர் மாவட்ட மருத்துவமனைக ளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் கள்.

    இதனை கண்டித்து கட லூர் மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள், பொதுமக்கள் ஏராளமானோர் திரண்டு அரியலூர் மாவட்ட எல்லைக்குள் வந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். மேலும் அவர் கள் கையில் உருட்டுக்கட்டை கள், ஆயுதங்களை வைத் திருந்தனர். இதனால் அங்கு பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
    அரியலூர் அருகே பா.ஜ.க. கொடிக்கம்பத்தில் காலணி தொங்கவிடப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    அரியலூர்:

    அரியலூர் அருகே உள்ள ஓட்டக்கோவில் கிராமத்தில் பா.ஜ.க.சார்பில் கொடிகம்பம் அமைக்கப்பட்டு அக்கட்சியின் கொடி ஏற்றப்பட்டிருந்தது. இந்தநிலையில் இன்று காலை அந்த கொடி கம்பத்தின் கயிற்றில் செருப்பு ஒன்று தொங்கவிடப்பட்டிருந்தது.

    இதையறிந்த அப்பகுதியை சேர்ந்த பா.ஜ.க.வினர் அங்கு திரண்டனர். மேலும் இது குறித்து அரியலூர் ஒன்றிய செயலாளர் முத்துவேல் போலீசில் புகார் செய்தார். இதைத்தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். பின்னர் கொடி கம்பத்தில் தொங்க விடப்பட்டிருந்த செருப்பை அப்புறப்படுத்தினர்.

    நேற்று நள்ளிரவு மர்ம நபர்கள் இந்த செயலில் ஈடுபட்டுள்ளது போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது. அவர்கள் யார், எதற்காக செருப்பை தொங்கவிட்டனர் என்பது தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய பா.ஜ.க. அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் அரசியல் கட்சியினர், விவசாயிகள், மாணவர்கள், இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதன் காரணமாக இந்த சம்பவம் நடந்திருக்கலாம் என தெரிகிறது.
    அரியலூர் அருகே புதிய தேர் வெள்ளோட்ட நிகழ்ச்சியில் பக்தர் ஒருவர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    செந்துறை:

    அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே ஈச்சங்காட்டில் பிரசித்தி பெற்ற லட்சுமி நரசிம்ம பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவிலின் தேர் கடந்த 2010-ம் ஆண்டு மே மாதம் தேர்த்திருவிழாவின்போது தேரின் அச்சு முறிந்து திரு விழா நிறுத்தப்பட்டது. தேரை சீரமைக்க வலியுறுத்தி இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளிடம் கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    இதைத்தொடர்ந்து இந்து சமய அறநிலையத்துறை ரூ.22 லட்சம் மதிப்பில் தேரை புதுப்பிக்கும் பணியை தொடங்கியது. பணிகள் முடிவடைந்த நிலையில் இன்று காலை 10.30 மணியளவில் புதிய தேர் வெள்ளோட்டம் நிகழ்ச்சி நடந்தது. இதில் சுற்றியுள்ள சிலுப்பனூர், சேந்தமங்கலம் உள்பட 10-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கலந்து கொண்டனர்.

    அப்போது தேரின் சக்கரத்தை முட்டுக்கட்டை கொடுத்து நிறுத்த முயன்ற சேந்தமங்கலம் கிராமத்தை சேர்ந்த பக்தர் பெரியசாமி மீது தேர் சக்கரம் ஏறியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து தளவாய் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    புதிய தேர் வெள்ளோட்ட நிகழ்ச்சியில் பக்தர் ஒருவர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை மெரினாவில் போராட்டம் நடத்த உள்ளோம் என்று அய்யாக்கண்ணு கூறியுள்ளார். #caveryissue

    அரியலூர்:

    தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தமிழகம் முழுவதும் மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகளால் ஏற்படும் தீமைகளை மக்களிடம் எடுத்து கூறும் விதமாக விழிப்புணர்வு பிரசாரம் நடத்தி வருகிறார். அரியலூரில் நடந்த விழிப்புணர்வு பிரசாரத்தின் போது அய்யாக்கண்ணு நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகத்தில் உள்ள விவசாயிகளை விரட்டிவிட்டு கார்ப்பரேட் நிறுவனங்கள் கொண்டு வரும் மரபணு செய்யப்பட்ட விதைகளை சாகுபடி செய்து மத்திய அரசு லாபம் பார்க்க நினைக்கிறது. இதனால் வருங்கால இளைஞர்கள் ஆண்மையை இழக்க நேரிடும். அதே போன்று பெண்கள் கருத்தரிக்கும் சக்தியை இழப்பார்கள். தமிழக விவசாயிகள் எதிர்க்கும் இந்த திட்டத்தை பிரதமர் வளர்க்க முனைப்பாக உள்ளார். தமிழகத்தில் பெட்ரோல், டீசல், ஹைட்ரோ கார்பன், மீத்தேன் உள்ளிட்டவற்றை எடுத்தால் மத்திய அரசுக்கு ஆண்டுக்கு ரூ.10 லட்சம் கோடி வருமானம் கிடைக்கும் என்பதால் இங்கு அத்திட்டங்களை செயல்படுத்துகிறார்கள்.

    பூமியிலிருந்து தண்ணீரை நாம் எப்படி பிரித்து எடுக்கிறோமோ? அதுபோல மழை காலங்களில் வீணாக செல்லும் தண்ணீரை பூமிக்குள் கொண்டு செல்லும் முறையை அரசு நடைமுறைபடுத்த வேண்டும். வரும் கோடைகாலங்களில் ஏரி,குளங்கள், வரத்து வாய்க்கால்களை தூர்வார வேண்டும். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை மெரினாவில் போராட்டம் நடத்த உள்ளோம். பிரதமர் மோடி விவசாயிகளை கேவலமாக தற்போது பார்க்கிறார். தேர்தல் நேரத்தில் விவசாயிகளே நாட்டின் முதுகெலும்பு என பேசுவார். பின்னர் விவசாயிகளை மறந்து விடுவார்.

    இவ்வாறு அவர் கூறினார். #caveryissue

    சிங்கப்பூரில் பணிபுரியும் இடத்தில் கம்போடியா நாட்டைச் சேர்ந்த பெண்ணுடன் திண்டுக்கல்லை சேர்ந்த பார்த்திபனுக்கு ஏற்பட்ட காதலால், பெற்றோர் சம்மதத்துடன் கிராம மக்கள் முன்னிலையில் திருமணம் நடந்தது.
    செந்துறை:

    திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ள பூசாரிபட்டியைச் சேர்ந்தவர் ஜெகநாதன். இவரது மகன் பார்த்திபன் (வயது 29). கட்டிட தொழிலாளியான இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சிங்கப்பூரில் வேலைக்கு சென்றார். இவர் பணிபுரிந்த இடத்தின் அருகே ஒரு சூப்பர் மார்க்கெட்டில் கம்போடியா நாட்டைச் சேர்ந்த தென்மாவோ (30) வேலை பார்த்து வந்தார்.

    இருவரும் நட்பு ரீதியாக பேசி பழகி வந்தனர். இந்த பழக்கம் காதலாக மாறியது. இருவரும் 4 ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர்.

    பெற்றோரின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்வதாக உறுதி அளித்து பார்த்திபன் நத்தம் வந்தார்.

    தனது காதல் குறித்து பார்த்திபன் பெற்றோரிடம் கூறினார். ஆரம்பத்தில் தயங்கிய பெற்றோர் பின்னர் தனது மகனின் விருப்பத்தை நிறைவேற்றுவதற்காக ஒத்துக் கொண்டனர். இதனையடுத்து தென்மாவோவின் பெற்றோரும் சம்மதம் தெரிவித்தனர். இவர்களது திருமணத்தை சொந்த கிராமமான பூசாரிப்பட்டியில் நடத்த முடிவு செய்தனர்.

    தென்மாவோ, அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் பூசாரிப்பட்டிக்கு வந்தனர். கிராம மக்கள் முன்னிலையில் இவர்களது திருமணம் நடைபெற்றது. தங்களது கிராமத்துக்கு வந்த வெளிநாட்டு மருமகளை பூசாரிப்பட்டி கிராம மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்ததோடு மணமக்களை வாழ்த்தினர்.

    வங்கி கட்டிடத்தின் பின்புறம் உள்ள ஜன்னல் கம்பி அறுத்து கொள்ளையடிக்க முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
    அரியலூர்:

    அரியலூர் பெருமாள் கோவில் தெருவில் தேசியமயமாக்கப்பட்ட வங்கி உள்ளது. கடந்த 9-ந்தேதி காலை வழக்கம் போல் ஊழியர்கள் வங்கி கதவுகளை திறந்து உள்ளே சென்றனர். அப்போது வங்கி கட்டிடத்தின் பின்புறம் உள்ள ஜன்னல் கம்பி அறுக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. 

    இதுகுறித்து வங்கி மேலாளர் அமுதன் அரியலூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்தநிலையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் அந்த பகுதி மக்களிடம் விசாரணை நடத்தி கொண்டிருந்தனர். அப்போது அங்கு ஒரு வாலிபர் கையில் பையுடன் நின்று கொண்டிருந்தார். 

    இதைபார்த்த போலீசார் பொதுமக்களிடம் அந்த வாலிபர் குறித்து விசாரித்த போது அந்த வாலிபர் அப்பகுதியில் 2 நாட்களாக வந்து செல்வதாக கூறினர். இதனை தொடர்ந்து போலீசார் அந்த வாலிபரை அழைத்த போது அவர் அங்கிருந்து ஓட தொடங்கினார். இதையடுத்து போலீசார் அவரை பொதுமக்கள் உதவியுடன் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவரது பெயர் செந்தில்குமார் (வயது 23) என்பதும், என்ஜினீயரிங் படித்துள்ளதும் தெரியவந்தது. மேலும் அவரது தந்தை வெங்கடேசன் போலீஸ் அதிகாரியாக பணியாற்றுவதாகவும், தான் வங்கியில் கொள்ளையடிக்க முயற்சி செய்ததையும் ஒப்பு கொண்டார். 

    இதையடுத்து போலீசார் செந்தில்குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
    அரியலூரில் நடந்து சென்ற பெண்ணிடம் மயக்க பொடியை முகத்தில் தூவி ரூ.4 லட்சம் மதிப்புள்ள நகையை 2 பெண்கள் பறித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    அரியலூர்:

    அரியலூர் ரெயில்வே ஸ்டேசன் ரோடு பகுதியை சேர்ந்தவர் மகாதேவன் . இவர் இந்திய ஜனநாயக கட்சியின் மாவட்ட பொறுப்பாளராக உள்ளார். இவரது மனைவி தனலட்சுமி (வயது 60). இவர் பூக்கார தெருவில் உள்ள மாரியம்மன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்து விட்டு , வீட்டிற்கு நடந்து சென்றார்.

    அப்போது அவரை பின்தொடர்ந்து நடந்து வந்த 2 பெண்கள், திடீரென தனலட்சுமியிடம் நைசாக பேச்சு கொடுத்ததோடு, அவர் மீது மயக்க பொடியை தூவியுள்ளனர். இதில் தனலட்சுமி மயங்கி கீழே விழவே, அவர் அணிந்திருந்த ரூ.4 லட்சம் மதிப்புள்ள 20 பவுன் தங்க செயினை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பியோடி விட்டனர். பின்னர் மயக்கம் தெளிந்து எழுந்து பார்த்த போது செயின் காணாததை கண்டு தனலட்சுமி அதிர்ச்சியடைந்தார். மேலும் 2 பெண்கள் நகையை பறித்து சென்றதும் தெரியவந்தது.

    இது குறித்து அவர் அரியலூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் பார்த்தீபன் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி செயினை பறித்து சென்ற பெண்களை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    காவிரி மேலாண்மை வாரி யம் அமைக்க வலியுறுத்தி அரியலூர் மாவட்டத்தில் இன்று பா.ம.க. சார்பில் கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது. #Cauveryissue

    அரியலூர்:

    காவிரி மேலாண்மை வாரி யம் அமைக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் விவசாயிகள், அரசியல் கட்சியினர், பல்வேறு அமைப்பினர் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சார்பில் கடந்த 5-ந்தேதி முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது.

    இந்த நிலையில் பா.ம.க. சார்பில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு தி.மு.க. ஆதரவு தெரிவித்திருந்தது.

    இதையடுத்து தமிழகத்தில் இன்று சில இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டன. அரியலூர் மாவட்டத்தில் 90 சதவீத கடைகள் அடைக்கப்பட்டன. மாவட்டத்திற்கு உட்பட்ட திருமானூர், செந்துறை, ஜெயங்கொண்டம், ஆண்டிமடம், தா.பழூர் உள்ளிட்ட இடங்களில் சுமார் 4 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.

    அரியலூரில் சின்னக் கடை, பெரியகடை தெரு மற்றும் பஸ் நிலைய பகுதி உள்ளிட்ட இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டன. இதனால் அப்பகுதி பொது மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டன.

    மேலும் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். இன்று மதியம் அரியலூர் ரெயில் நிலையத்தில் குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயிலை மறித்து பா.ம.க.வினர் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். இதையொட்டி அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. #Cauveryissue

    தமிழகத்தை ஆளும் தகுதியை அ.தி.மு.க. இழந்துவிட்டது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.

    அரியலூர்:

    அரியலூரில் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சார்பில் காவிரி உரிமை மீட்பு பயண பொதுக்கூட்டம் நடைபெற்றது.

    இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் பேசியதாவது:-

    உச்சநீதிமன்றத்தின் தற்போதைய உத்தரவை பார்க்கும் போது, கர்நாடக தேர்தல் மட்டுமல்ல, நாடாளுமன்ற தேர்தல் வரை இழுத்தடிக்கும் முயற்சியாகவே தெரிகிறது. நரேந்திர மோடிக்கு துணை போகும் தீர்ப்பாக இந்த தீர்ப்பு அமைத்துள்ளது. மோடி ஆட்சி இருக்கும் வரை காவிரி மேலாண்மை வாரியம் அமையாது. எனவே, ஆட்சிக்கு முடிவு கட்டவேண்டும்.

    எடப்பாடி பழனிசாமி அனைத்து கட்சியினரை அழைத்து பேசியிருக்க வேண்டும். அ.தி.மு.க. தமிழகத்தை ஆளுகின்ற தகுதியை இழந்து விட்டது. காவிரி உரிமையை மீட்கும் வரை நாங்கள் ஓய மாட்டோம் என்றார்.

    விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் பேசியதாவது:-

    காவிரியில் நாம் கேட்ட அளவிற்கு தண்ணீர் கிடைக்க வில்லை. நீதிமன்ற தீர்ப்பில் மிகவும் குறைத்து வழங்கப்பட்டுள்ளது. மத்திய அரசு எதிர்பார்ப்பதை நீதிமன்றம் தருகிறது. மத்திய அரசை நீதிமன்றம் தண்டித்திருக்க வேண்டும். ஆனால் அது போல் நடக்க வாய்ப்பில்லை. தற்போது உச்சநீதிமன்றம் அளித்துள்ள உத்தரவு மேலும் பல மாதங்களுக்கு இழுத்தடிக்கவே வாய்ப்பாக அமையும்.


    உச்சநீதிமன்றம் மே 3-ந் தேதிக்குள் மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என உத்தரவிட்டு இருக்க வேண்டும். ஆனால் அது போல் நீதிமன்றம் சொல்ல வில்லை. வரைவு அறிக்கை திருத்தத்திற்கும் விவாதத்திற்கும் வழிவகுக்கும்.

    தமிழகத்தில் அனைவரும் ஒத்த கூரல் எழுப்ப வேண்டும். மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், பிரதமரை சந்திக்க தமிழகத்தில் இருந்து யாரும் கடிதம் தரவில்லை என கூறியுள்ளார். இதற்கு முதல்வர் என்ன பதில் சொல்லப்போகிறார்.

    மோடி அரசின் தமிழர் விரோத போக்கை அம்பலப்படுத்தவே இந்த மீட்பு பயணம் தொடங்கப்பட்டுள்ளது. இதற்காக நடத்தப்பட்ட முழு அடைப்பு போராட்டம் முழு வெற்றி பெற்றது. மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை போராட்டம் தொடரும் என்றார்.

    திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி பேசியதாவது:-

    உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு நம்ப வைத்து கழுத்தை அறுத்த கதையாக உள்ளது. இதே போல் தான் நீட் தேர்விலும் கழுத்தை அறுத்தார்கள். இதனால் தான் மாணவி அனிதாவை இழந்தோம். இன்னொரு சோமாலியாவாக தமிழகம் ஆக வேண்டுமா? மத்திய அரசால் இந்த திட்டம் 6 வாரத்தில் உருவாக்கப்பட வேண்டும் என கூறிவிட்டு, தற்போது, அது எந்த திட்டத்தின் கீழ் உருவாக்க போகிறீர்கள் என விளக்கம் கேட்டு உத்தரவிட்டுள்ளது.


    ஏற்கனவே அறிவிக்கப்பட்ட உத்தரவில் ஒவ்வொரு மாதமும் எவ்வளவு தண்ணீர் திறந்து விட போகிறீர்கள் என்றெல்லாம் சொல்லி விட்டு, தற்போது உச்சநீதி மன்றமே தங்களது வாக்குறுதியை மீறிவிட்டது.

    மக்களை நம்புவதை தவிர வேறு யாரையும் நம்பி பிரயோஜனம் இல்லை. உச்சநீதிமன்றம் கொடுத்த இறுதி தீர்ப்பில் எக்காரணம் கொண்டும் கால நீட்டிப்பு கிடையாது என அறிவித்து தீர்ப்பளித்தது. அதனை உச்ச நீதிமன்றம் மீறியுள்ளது என்றார்.  #tamilnews

    ×