என் மலர்
உத்தரப் பிரதேசம்
- குழந்தை ராமர் கோவிலில் தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள் வந்தவண்ணம் உள்ளனர்.
- கூட்ட நெரிசல் காரணமாவே இருவரும் இறந்ததாக சமூக ஊடகங்களில் தகவல் பரவியது.
அயோத்தி:
அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவில் கும்பாபிஷேம் நடந்து ஓராண்டு நிறைவு பெற்றதையொட்டி, அங்குள்ள குழந்தை ராமர் கோவிலில் தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள் வந்தவண்ணம் உள்ளனர். இதனால் அங்கு பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.
அரியானா மாநிலத்தை சேர்ந்த வயது முதிர்ந்த ஆணும், பெண்ணும் சாமி தரிசனம் செய்வதற்காக நீண்ட வரிசையில் காத்திருந்தனர். அப்போது அவர்கள் இருவரும், மயங்கி விழுந்தனர். அவர்கள் இருவரும் உடனடியாக ஆஸ்பத்திக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி அவர்கள் இறந்தனர்.
கூட்ட நெரிசல் காரணமாவே அவர்கள் இருவரும் இறந்ததாக சமூக ஊடகங்களில் தகவல் பரவியது. இதனை போலீசார் மறுத்துள்ளனர். மாரடைப்பு காரணமாக அவர்கள் இறந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
- மகா கும்பமேளாவில் உள்துறை அமைச்சர் அமித்ஷா புனித நீராடினார்.
- அந்நிகழ்வில் ஜெய் ஷா தனது ஆண் குழந்தையுடன் கலந்து கொண்டார்.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பி.சி.சி.ஐ.) பொதுச் செயலாளரும், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் மகனுமான ஜெய்ஷா சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) தலைவராக கடந்த மாதம் பொறுப்பேற்றார்.
இதன்மூலம் 35 வயதான ஜெய் ஷா, மிக இளம் வயதில் ஐ.சி.சி. தலைவரானவர் என்ற சாதனையை பதிவு செய்துள்ளார்.
இந்நிலையில், உத்தரபிரதேச மாநிலம் பிரக்யாராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் உள்துறை அமைச்சர் அமித்ஷா புனித நீராடினார். அந்நிகழ்வில் அவரது மகன் ஜெய் ஷா தனது ஆண் குழந்தையுடன் கலந்து கொண்டார். கும்பமேளாவிற்கு வந்திருந்த துறவிகள் ஜெய் ஷாவின் ஆண் குழந்தைக்கு ஆசீர்வாதம் வழங்கினர்.
- மகா கும்பமேளாவில் சாதி, மத ரீதியிலான எந்த பாகுபாடும் இல்லை.
- சனாதன தர்மத்தை விமர்சிப்பவர்கள், இதை நேரடியாக வந்து பாருங்கள்.
சனாதன் தர்மம் தான் இந்தியாவின் தேசிய மதம் என்று உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலம் , பிரயாக்ராஜில் நடந்து வரும் மகா கும்பமேளா குறித்து பேசிய யோகி ஆதித்யநாத், "கங்கை, யமுனை மற்றும் சரஸ்வதியின் சங்கமமான திரிவேணி சங்கமத்தில் சாதி, மதம் பார்க்காமல் கிட்டத்தட்ட ஆறு கோடி பக்தர்கள் புனித நீராடினார்கள். இங்கு எந்த பாகுபாடும் இல்லை. சனாதன தர்மத்தை விமர்சிப்பவர்கள், இதை நேரடியாக வந்து பாருங்கள்.
சனாதன தர்மம் இந்தியாவின் தேசிய மதம். இது மனிதநேயத்தின் மதம். இங்கு வழிபாட்டு முறைகள் மாறுபட்டிருக்கலாம். ஆனால் மதம் ஒன்று தான். அந்த மதம் தான் சனாதன தர்மம்" என்று தெரிவித்தார்.
மகாகும்பத்தின் முதல் 14 நாட்களில் 11 கோடி பக்தர்கள் பிரயாக்ராஜின் புனித நீரில் புனித நீராடியுள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது.
- பிப்ரவரி 26-ந்தேதி வரை 45 நாட்களுக்கு நடைபெறும்.
- இதுவரை 13 கோடிக்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகை தந்துள்ளனர்.
உத்தரபிரதேச மாநிலத்தில் மகா கும்பமேளா கடந்த 13-ந்தேதி தொடங்கியது. கங்கை, யமுனை மற்றும் சரஸ்வதி (புராண நதி) ஆகிய 3 புனித நதிகள் பிரயாக்ராஜ் நகரில் சங்கமிக்கும் 'திரிவேணி சங்கமம்' இடத்தில் முதல் நாளில் 1 கோடி பேர் நீராடினர்.
பிப்ரவரி 26-ந்தேதி வரை 45 நாட்களுக்கு நடைபெறும் கும்பமேளாவில் 40 கோடி பக்தர்கள் பங்கேற்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை 13 கோடிக்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகை தந்துள்ளனர்.
இந்த நிலையில் மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா இன்று காலை பிரயாக்ராஜ் நகருக்கு சென்றார். கும்பமேளாவில் கலந்து கொண்டு திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினார். பின்னர் அவர் படே அனுமான் கோவில் மற்றும் அபய்வத்தை பார்வையிட்டார்.
ஜூனா அகாராவுக்குச் சென்று மதிய உணவு சாப்பிட்டார். குரு சரணானந்த் ஜி மற்றும் கோவிந்த் கிரி ஜி மகராஜ் ஆகியோரையும் சந்திக்கிறார். மாலையில் அமித்ஷா டெல்லி புறப்பட்டு செல்கிறார்.
- தான் பேசும் நிலையில் இல்லாததால், எழுத்துப்பூர்வமாக போலீசாரிடம் நடந்ததைத் தெரிவித்துள்ளார்.
- தனது மைத்துனர் மற்றும் மாமியார் மீதும் அப்பெண் புகார் அளித்துள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலம் மதுரா மாவட்டத்தில் உள்ள நாக்லா கிராமத்தில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட சண்டையில் ஏற்பட்ட பயங்கர திருப்பம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
மதுராவில் உள்ள கிராமத்தில் குடும்பத் தகராறு காரணமாக, கணவன், மனைவியின் உதடுகளை பற்களால் கொடூரமாக கடித்துள்ளார். இதில் பலத்த காயம் அடைந்த பெண் ரத்த வெள்ளத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அந்த பெண்ணின் உதட்டில் மருத்துவர்கள் 16 தையல்கள் போட்டனர்.
பாதிக்கப்பட்ட பெண், தான் பேசும் நிலையில் இல்லாததால்,எழுத்துப்பூர்வமாக போலீசாரிடம் நடந்ததைத் தெரிவித்துள்ளார். கணவருடன் சேர்ந்து, தனது மைத்துனர் மற்றும் மாமியார் மீதும் அப்பெண் புகார் அளித்துள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை மாலை, மனைவி வீட்டில் வேலை செய்து கொண்டிருந்தபோது, கணவர் விஷ்ணு வீட்டிற்கு வந்து எந்த காரணமும் இல்லாமல் சண்டையிட்ட்டார். தான் சமாதானம் செய்ய முயன்றும் கணவன் தன்னை அடிக்கத் தொடங்கினான்.
அவரது சகோதரி காப்பாற்ற முயன்றபோது, கணவன் சகோதரியையும் அடித்தான். இதற்கிடையில் கணவன் திடீரென தன்னை தாக்கி உதட்டைக் கடித்ததால் ரத்தம் கொட்டியது என்று அப்பெண் தெரிவித்துள்ளார். இதனைத்தொடர்ந்து அப்பெண் அக்கம் பக்கத்தினரால் மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் குறித்து அறிந்ததும், பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். கணவனின் தாக்குதலை மாமியாரும் மைத்துனரும் தடுக்கவில்லை என்று அப்பெண் குற்றம்சாட்டியுள்ளார். புகாரை அடுத்து குற்றம் சாட்டப்பட்ட 3 பேரும் தலைமறைவாகியுள்ளனர்.
- கோரக்பூரில் வாடகை வீட்டில் தங்கி வேலை செய்து சம்பாதிப்போம்
- குறைந்த பட்சம் கணவர்களின் அடியை இனி தாங்கிக்கொண்டிருக்க வேண்டியதில்லை
குடிப்பழக்கத்துக்கு அடிமையான கணவர்களின் கொடுமை தாங்காமல் வீட்டை விட்டு ஓடி வந்த இரு பெண்கள் ஒருவரையொருவர் திருமணம் செய்து கொண்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் தியோரியாவில் ருத்ராபூரில் உள்ள சோட்டி காசி என்றும் அழைக்கப்படும் சிவன் கோயிலில் கவிதாவும், பப்லு என்கிற குஞ்சாவும் கடந்த வியாழன் மாலை மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டனர். கோரக்பூரில் இருவரும் இன்ஸ்டாகிராமில் சந்தித்துள்ளனர்.
தங்கள் இருவரின் கணவர்களும் குடிகாரர்களாகவும், தினமும் தங்களுடன் சண்டைபோட்டுத் துன்புறுத்துவதையும் குறித்து இருவரும் தத்தமது கஷ்டங்களை பகிர்ந்து கொண்டனர். ஒரு கட்டத்தில் இருவரும் இடையில் காதல் மலர்ந்துள்ளது. எனவே தற்போது வீட்டை விட்டு வெளியேறி ஓரினச்சேர்க்கை திருமணம் செய்துள்ளனர்.
திருமணம் குறித்து பேசுகையில், இருவரது கணவர்களும் மது அருந்திவிட்டு தினமும் தங்களிடம் சண்டை போடுவதாக கவிதா கூறினார். நாங்கள் இருவரும் ஏற்கனவே காதலித்தோம். எனவே இப்போது நாங்கள் திருமணம் செய்துகொண்டோம்.
நாங்கள் இருவரும் வீட்டையும் கணவர்களையும் விட்டு வெளியேறி ஒன்றாக இருக்க முடிவு செய்துள்ளோம் என்று தெரிவித்தார். திருமணம் முடிந்து இருவரும் கோரக்பூர் செல்வதாகவும், அங்கு வாடகை வீட்டில் தங்கி வேலை செய்து சம்பாதிப்போம் என்றும் கூறினார்.
சமூகம் என்ன சொல்கிறது என்பது பற்றி கவலை இல்லை என்றும் குறைந்த பட்சம் கணவர்களின் அடியை இனி தாங்கிக்கொண்டிருக்க வேண்டியதில்லை என்று அவர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றனர்.
- கார்கள் முழுவதுமாக தீப்பற்றி எரிந்ததால் அப்பகுதியில் அடர்த்தியான புகை மூட்டம் காணப்பட்டது.
- கும்பமேளாவிற்கு வந்த பக்தர்கள் தொலைதூர பகுதிகளில் இருந்து வந்து, தங்கள் வாகனங்களை இங்கு நிறுத்தி உள்ளனர்.
உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா ஜனவரி 13-ம் தேதி தொடங்கியது. இது பிப்ரவரி 26-ம் தேதி வரை நடைபெறும். கும்பமேளாவை முன்னிட்டு உலகம் முழுவதும் இருந்து திரிவேணி சங்கமத்தில் புனித நீராடுவதற்காக பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர்.
கும்ப மேளாவில் பங்கேற்க வந்துள்ள பக்தர்களுக்கான கூடாரங்கள் அமைந்துள்ள மகாகும்ப நகரின் செக்டார் 19 பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் 18 கூடாரங்கள் எரிந்து சேதமானது. இதில் எந்த உயிர்ச்சேதமும் ஏற்படவில்லை.
இந்நிலையில் பிரயாக்ராஜில் இன்று அதிகாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. மகா கும்பமேளா செல்லும் பிரதான சாலையில் நிறுத்தப்பட்டிருந்த 2 வாகனங்களில் தீ பரவியதால், அப்பகுதி மக்களிடையே பீதி ஏற்பட்டது.
கார்கள் முழுவதுமாக தீப்பற்றி எரிந்ததால் அப்பகுதியில் அடர்த்தியான புகை மூட்டம் காணப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வாகனங்கள் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தன. இந்த தீ விபத்தில் உயிர் சேதமோ, காயமோ ஏற்படவில்லை.
இதுதொடர்பாக தீயணைப்பு அதிகாரி விஷால் யாதவ் கூறுகையில்,
கும்பமேளாவிற்கு வந்த பக்தர்கள் தொலைதூர பகுதிகளில் இருந்து வந்து, தங்கள் வாகனங்களை இங்கு நிறுத்தி வைத்துள்ளனர். வாகனத்தின் என்ஜின் சூடானதால் தீ விபத்து ஏற்பட்டது.
காலை 6.30 மணிக்கு மாருதி எர்டிகா காரில் தீ விபத்து ஏற்பட்டதாக தகவல் கிடைத்தது. உடனே 6 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டு தீ கட்டுப்படுத்தப்பட்டது. தீ விபத்தில் கார் முழுவதும் எரிந்து சேதமானது.
இந்த தீ விபத்தில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று அவர் தெரிவித்தார்.
- கும்பமேளாவில் இதுவரை புனித நீராடிய பக்தர்களின் எண்ணிக்கை 10 கோடியைக் கடந்தது.
- அதிகபட்சமாக மகர சங்கராந்தி பண்டிகையின்போது 3.5 கோடி பக்தர்கள் புனித நீராடினர்.
லக்னோ:
உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா ஜனவரி 13-ம் தேதி தொடங்கியது. இது பிப்ரவரி 26-ம் தேதி வரை நடைபெறும்.
கும்பமேளாவை முன்னிட்டு உலகம் முழுவதும் இருந்து திரிவேணி சங்கமத்தில் புனித நீராடுவதற்காக பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர்.
இந்நிலையில், உத்தர பிரதேச அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
கும்பமேளாவில் இன்று மதியம் 12 மணி நிலவரப்படி புனித நீராட வந்த பக்தர்களின் எண்ணிக்கை 10 கோடியை தாண்டியது.
இன்று மட்டும் மதியம் 12 மணிக்குள் 30 லட்சம் பேர் சங்கமத்தில் நீராடினர்.
அதிகபட்சமாக மகர சங்கராந்தி பண்டிகையின்போது சுமார் 3.5 கோடி பக்தர்கள் புனித நீராடினர்.
1.7 கோடிக்கும் அதிகமானோர் பவுஷ் பூர்ணிமா விழாவில் பங்கேற்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோடிக்கணக்கான பக்தர்கள் வந்து சென்றாலும் பிரயாக்ராஜ் நகரத்தில் அன்றாட வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க பாதிப்பு எதுவும் இல்லை.
பள்ளிகள், அலுவலகங்கள் மற்றும் வணிகங்கள் தொடர்ந்து வழக்கம்போல் செயல்பட்டு வருகின்றன. மாவட்ட நிர்வாகம் முக்கிய விழா நாட்களில் மட்டுமே கட்டுப்பாடுகளை விதித்துள்ளது என தெரிவித்தது.
- கும்பமேளாவின் அடுத்த முக்கிய நிகழ்வான மவுனி அமாவாசை வருகிற 29-ந் தேதி நடைபெறுகிறது.
- மவுனி அமாவாசை அன்று தோராயமாக ஒவ்வொரு 4 நிமிடங்களுக்கும் ஒரு ரெயிலை இயக்குவதை நோக்கமாக கொண்டுள்ளது.
லக்னோ:
உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் மகா கும்பமேளா கடந்த 13-ந் தேதி தொடங்கியது. அடுத்த மாதம் (பிப்ரவரி) 26-ந் தேதி வரை தொடர்ந்து 45 நாட்களுக்கு கும்பமேளா விழா நடைபெறுகிறது. பிரயாக்ராஜ் நகரில் கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய 3 புனித நதிகள் சங்கமிக்கும் 'திரிவேணி சங்கமம்' என்ற இடத்தில் பக்தர்கள் புனித நீராடி வருகின்றனர். கும்பமேளாவின் முக்கிய நிகழ்வான ராஜ குளியல் (மகர சங்கராந்தி) கடந்த 14-ந் தேதி நடந்தது. அப்போது 3½ கோடிக்கும் அதிகமான பக்தர்கள் புனித நீராடினர்.
கும்பமேளா தொடங்கியதில் இருந்து தற்போது வரையில் 9 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் புனித நீராடியுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இந்த நிலையில் கும்பமேளாவின் அடுத்த முக்கிய நிகழ்வான மவுனி அமாவாசை வருகிற 29-ந் தேதி நடைபெறுகிறது. அன்றைய தினம் சுமார் 10 கோடி பக்தர்கள் புனித நீராடுவர்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன. மவுனி அமாவாசையையொட்டி அதிக அளவில் பக்தர்கள் வருவதை கருத்தில் கொண்டு கும்பமேளாவுக்கு 150 சிறப்பு ரெயில்களை இயக்க பிரயாக்ராஜ் கோட்டம் விரிவான திட்டங்களை வகுத்துள்ளது.
சிறப்பு ரெயில்களை இயக்குவதுடன், பயணிகளுக்கு சுமுகமான அனுபவத்தை உறுதி செய்வதற்காக, வண்ண குறியிடப்பட்ட டிக்கெட் மற்றும் தங்குமிடம் ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. பிரயாக்ராஜ் ரெயில்வே கோட்டத்தின் மூத்த மக்கள் தொடர்பு அதிகாரி அமித் மாளவியா இது குறித்து கூறியதாவது:-
ஜனவரி 29-ந் தேதி மவுனி அமாவாசை அன்று 150-க்கும் மேற்பட்ட சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும். அவற்றில் பெரும்பாலானவை பிரயாக்ராஜ் சந்திப்பில் இருந்து இயக்கப்படும்.
குறிப்பிட்ட நேரத்தில் இயக்கப்படும் வழக்கமான ரெயில்களுடன், கோட்டத்தில் உள்ள மற்ற ரெயில் நிலையங்களில் இருந்தும் சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும்.
இந்த திட்டங்களின் மூலம் பிரயாக்ராஜ் ரெயில்வே கோட்டம், மவுனி அமாவாசை அன்று தோராயமாக ஒவ்வொரு 4 நிமிடங்களுக்கும் ஒரு ரெயிலை இயக்குவதை நோக்கமாக கொண்டுள்ளது.
2019-ல் மவுனி அமாவாசையின் போது இயக்கப்பட்ட 85 ரெயில்களை விஞ்சும் வகையில், ஒரே நாளில் 150 சிறப்பு ரெயில்களை இயக்குவது ஒரு முக்கிய சாதனையாக இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- இதனால் மோனாலிசா அசைவுகர்யங்களுக்கும் ஆளாகியுள்ளார்.
- நேரடியாகச் சென்று மோனாலிசா மற்றும் அவரது குடும்பத்தினரைச் சந்தித்து விவாதிப்பதாகக் சனோஜ் மிஸ்ரா கூறியுள்ளார்.
உத்தரப் பிரதேசத்தின் பிரயாக்ராஜில் புனித நதிகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் 144 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மகா கும்பமேளா நடைபெற்று வருகிறது. ஜனவரி 12 ஆம் தேதி தொடங்கிய இந்த மகா கும்பமேளா பிப்ரவரி 26 ஆம் தேதி மகாசிவராத்திரி வரை நடைபெறும்.
சுமார் 40 கோடி பேர் இங்கு புனித நீராட வருகை தருவார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் 16 வயதான மோனாலிசா போஷ்லே என்ற 16 வயது பெண் தனது தந்தையுடன் சேர்ந்து பாசி மாலை விற்று வருகிறார்.
மோனாலிசா தனது தனித்துவமான கண்கள் மற்றும், இயற்கையான அழகால் இணையத்தில் டிரண்ட் ஆகி வருகிறார். இதனால் அவரை பேட்டி காணவும், அவருடன் செல்பி எடுத்துக்கொள்ளவும், கும்பமேளாவில் கூட்டம் அலை மோதுகிறது. இதனால் மோனாலிசா அசைவுகர்யங்களுக்கும் ஆளாகியுள்ளார். அவரின் பாசி மாலை வியாபாரமும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளது.
ஆனால் மோனாவிசாவுக்கு சினிமாவில் ஹீரோனியாக நடிக்கும் வாய்ப்பு தேடி வந்துள்ளது. பாலிவுட் இயக்குநர் சனோஜ் மிஸ்ரா மோனாலிசாவை தனது அடுத்த படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க வைக்க விருப்புவதாக தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக நேரடியாகச் சென்று மோனாலிசா மற்றும் அவரது குடும்பத்தினரைச் சந்தித்து விவாதிப்பதாகக் சனோஜ் மிஸ்ரா கூறியுள்ளார்.

'டைரி ஆஃப் மணிப்பூர்' என்ற தனது அடுத்த படத்தில் நடிக்க பொருத்தமான ஒருவருக்காக காத்திருந்ததாகவும், மோனாலிசாவின் கரிய தோல் மற்றும் தேன் போன்ற கண்கள் தனது படத்தின் கதாபாத்திரத்துக்குப் பொருத்தமாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
+2
- மகா சிவராத்திரி நாளான அடுத்த மாதம் 26-ந்தேதி வரை 45 நாட்களுக்கு இந்த நிகழ்வு நடைபெறுகிறது.
- கூட்டத்தில் கும்பமேளா ஏற்பாடுகள் குறித்த முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என தெரிகிறது.
உலகின் மிகப்பெரிய ஆன்மிக சங்கமமான மகா கும்பமேளா பிரயாக்ராஜ் நகரில் 3 நதிகள் சங்கமிக்கும் 'திரிவேணி சங்கமம்' என்ற இடத்தில் கடந்த 13-ந்தேதி கோலாகலமாகத் தொடங்கியது. மகா சிவராத்திரி நாளான அடுத்த மாதம் 26-ந்தேதி வரை 45 நாட்களுக்கு இந்த நிகழ்வு நடைபெறுகிறது.
இந்த நிகழ்வில் உலகம் முழுவதும் இருந்து சுமார் 35 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் பங்கேற்பார்கள் என்ற எதிர்பார்ப்புடன் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 45ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியிலும், தேசிய, மாநில மீட்பு படையினரும் களத்தில் உள்ளனர்.

இந்த நிலையில், வரும் மகா கும்பமேளாவையொட்டி, அம்மாநில முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் தலைமையில் சிறப்பு அமைச்சரவை கூட்டம் நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தில் கும்பமேளா ஏற்பாடுகள் குறித்த முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என தெரிகிறது.
அமைச்சரவை கூட்டம் முடிந்த பிறகு முதல்-மந்திரியுடன் அனைத்து அமைச்சர்களும் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினர்.
- 183 நோயாளிகள் ஐ.சி.யூ.வில் சிகிச்சையை பெற்றுள்ளனர்.
- நெஞ்சுவலியால் அவதிப்பட்ட மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த 2 பக்தர்கள் மத்திய மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.
உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் மகா கும்பமேளா கடந்த 13-ந்தேதி தொடங்கியது. பிப்ரவரி 26-ந்தேதி வரை 45 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் சுமார் 45 கோடி பக்தர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நேற்று வரை சுமார் 8.81 கோடி பக்தர்கள் கலந்து கொண்டு புனித நீராடி உள்ளனர்.
இதற்காக 10 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது. 1,800 ஹெக்டேர் பரப்பளவில் வாகன நிறுத்த வசதிகள், 2,750 கண்காணிப்பு கேமராக்கள், 15 ஆயிரம் துப்புரவு பணியாளர்கள், 25 ஆயிரம் தொழிலாளர்கள், 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு மையம் உள்ளிட்டவற்றை அரசு அமைத்துள்ளது.
இந்நிலையில் மகா கும்பமேளாவில் மாரடைப்பால் பாதிக்கப்பட்ட 100க்கும் மேற்பட்ட பக்தர்கள் காப்பாற்றப்பட்டுள்ளனர். மேலும் 183 நோயாளிகள் ஐ.சி.யூ.வில் சிகிச்சையை பெற்றுள்ளனர். 580 பேருக்கு சிறிய அறுவை சிகிச்சைகள் வெற்றிகரமாக செய்யப்பட்டுள்ளது. மேலும் 1.70 லட்சத்திற்கும் மேற்பட்ட ரத்த பரிசோதனைகள் நடத்தப்பட்டு, 1,00,998 பேர் சிகிச்சை பெற்றுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மகா கும்பமேளா மருத்துவ அமைப்பின் நோடல் அதிகாரி டாக்டர் கவுரவ் துபே கூறுகையில், அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய, மகா கும்பமேளாவில் உள்ள மத்திய மருத்துவமனை, லட்சக்கணக்கான பக்தர்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வை உறுதி செய்யும் வகையில், உலகத்தரம் வாய்ந்த மருத்துவ சேவையை வழங்கி வருகிறது. கும்பமேளாவில் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து வரும் பக்தர்கள் சிறப்பான சுகாதார சேவையைப் பெறுகின்றனர்.
நெஞ்சுவலியால் அவதிப்பட்ட மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த 2 பக்தர்கள் மத்திய மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். 2 நோயாளிகளுக்கும் ஈசிஜி எடுக்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டது.
ஹனுமங்கஞ்ச் புல்பூரைச் சேர்ந்த 105 வயதான பாபா ராம் ஜேன் தாஸ் வயிற்று வலிக்காக மத்திய மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார் என்று அவர் கூறினார்.






