என் மலர்
உத்தரப் பிரதேசம்
- இந்தியாவின் ரோகன் போபண்ணா, யுகி பாம்ப்ரி ஜோடி மொராக்கோ ஜோடியை வென்றது
- 43 வயதான ரோகன் போபண்ணாவுக்கு இதுவே கடைசி டேவிஸ் கோப்பை போட்டியாகும்.
லக்னோ:
டேவிஸ் கோப்பை டென்னிசில் உலக குரூப் 2 சுற்றில் இந்தியா, மொராக்கோ அணிகள் இடையிலான ஆட்டம் உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் தொடங்கியது.
முதல் நாளில் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர்களில் சுமித் நாகல் வெற்றி பெற்றார். சசிகுமார் முகுந்த் காயத்தால் பாதியில் விலகினார்.
இந்நிலையில், 2-வது நாளான நேற்று இரட்டையர் பிரிவு ஆட்டத்தில் அனுபவம் வாய்ந்த இந்தியாவின் ரோகன் போபண்ணா, யுகி பாம்ப்ரி ஜோடி 6-2, 6-1 என்ற நேர் செட்டில் மொராக்கோவின் பென்செட்ரிட், யுனெஸ் லலாமி லாரோசி ஜோடியை எளிதில் வென்றது.
பெங்களூருவைச் சேர்ந்த 43 வயதான ரோகன் போபண்ணாவுக்கு இதுவே கடைசி டேவிஸ் கோப்பை போட்டி ஆகும். இந்தப் போட்டியில் இருந்து அவர் வெற்றியோடு விடைபெற்றார்.
இதையடுத்து, நடந்த மாற்று ஒற்றையர் ஆட்டங்களில் சுமித் நாகல் 6-3, 6-3 என்ற நேர் செட்டில் யாசினே டிலிமியையும், இந்தியாவின் திக்விஜய் பிரதாப் சிங் 6-1, 5-7, 10-6 என்ற செட் கணக்கில் மொராக்கோவின் வேலிட் அஹோடாவையும் வீழ்த்தினர். முடிவில் இந்தியா 4-1 என்ற கணக்கில் மொராக்கோவை தோற்கடித்தது.
- ஏராளமான கட்டிடங்கள் இடிந்துள்ளதால் இடிபாடுகளுக்கிடையே தேடுதல் தொடர்கிறது
- புலந்தர் கிராமத்தில் வயல்வெளியில் ஒரு குழந்தையின் அலறல் சத்தம் கேட்டது
மொராக்கோவில் இம்மாதம் 8-ஆம் தேதியன்று ரிக்டர் அளவுகோலில் 6.8 அளவில் ஒரு கடும் நிலநடுக்கம் தாக்கியது. இதில் தற்போது வரை சுமார் 3 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். ஏராளமான கட்டிடங்கள் இடிந்துள்ளதால், இடிபாடுகளுக்கிடையே இன்னும் தேடுதல் தொடர்கிறது.
இந்நிலையில் சமூக வலைதளங்களில் ஒரு வீடியோ வைரலானது.
அதில், பிறந்து சில மணி நேரங்களே ஆன ஒரு குழந்தை புதையுண்டிருப்பதையும், அதனை வெளியே ஒருவர் எடுப்பதும் தெரிகிறது. இக்குழந்தை மொராக்கோ நிலநடுக்கத்தில் இடிபாடுகளுக்கிடையில் புதையுண்டு இறந்த குழந்தை என ஒரு தகவலும் அந்த வீடியோவில் இடம் பெறுகிறது.
ஆனால், ஆய்வில் இந்த வீடியோ உண்மையல்ல என தெரிய வந்துள்ளது.
இந்தியாவில் உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள கான்பூர் தேஹட் மாவட்டத்தில் உள்ள மூசா நகர் பகுதியில் புலந்தர் கிராமத்தில் ஒரு குழந்தையின் அலறல் சத்தம் கேட்ட ராஜேஷ், ரேஷ்மா எனும் தம்பதியினர் பிறந்து சில மணி நேரமே ஆகியிருந்த ஒரு குழந்தை பூமியில் அரைகுறையாக புதைக்கப்பட்டிருப்பதை கண்டனர். உடனே அதனை வெளியே எடுத்து மருத்துவமனையில் சேர்த்து காவல்துறையினருக்கும் தகவல் அளித்தனர்.
குழந்தையை புதைத்தவர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
அப்போது குழந்தையை வெளியே எடுக்கும் போது எடுக்கப்பட்ட வீடியோ, மொராக்கோ நிலநடுக்கத்துடன் தொடர்புபடுத்தபட்டு தவறாக சித்தரித்து இணையத்தில் பரவியிருக்கிறது.
இணையத்திலும், ஊடகங்களிலும், சமூக வலைதளங்கள் மற்றும் தொலைக்காட்சிகளிலும் வெளிவரும் அனைத்து செய்திகளும் முழுவதுமே உண்மை என நம்புவது தவறு என செய்தித்துறை வல்லுனர்கள் எச்சரிக்கின்றனர்.
- துப்பட்டாவை இழுத்ததால் நிலை தடுமாறி விழுந்தவர் மீது பைக் மோதியது
- குற்றவாளிகள் காவல் துறையினரை சுட்டு தப்பிக்க முயன்றனர்
உத்தர பிரதேசத்தில் உள்ளது அம்பேத்கர் நகர் மாவட்டம்.
இரு தினங்களுக்கு முன் இந்த மாவட்டத்தில் உள்ள ஹன்ஸ்வார் பகுதியில், ஹிராபூர் அங்காடி தெருவில் ஒரு 17-வயது பள்ளி மாணவியும், அவரது தோழியும் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். அப்போது இரு சக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேர் அந்த மாணவியை பின் தொடர்ந்து வந்து சீண்டலில் ஈடுபட்டு வந்தனர். அந்த இரு மாணவிகளும் அவர்களிடமிருந்து தப்பிக்க ஒதுங்கி சென்றாலும் அவர்கள் பலவந்தமாக தவறாக நடக்க முயன்றனர்.
இதில் இரு சக்கர வாகனத்தின் பின் இருக்கையில் அமர்ந்திருந்த ஒருவன் அம்மாணவியின் துப்பட்டாவை பிடித்து இழுத்தான். இதில் அந்த மாணவி நிலை தடுமாறி சைக்கிளிலிருந்து கீழே விழுந்தார். அப்போது பின்னால் வந்த வேறொரு இரு சக்கர வாகனம் அந்த மாணவியின் மீது மோதியது. இதில் அவர் தலையில் பலத்த காயங்கள் ஏற்பட்டது. அத்துடன் அவரது தாடை பகுதி நொறுங்கியது. கீழே விழுந்த மாணவி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
அங்குள்ள கண்காணிப்பு கேமிராக்களில் இந்த சம்பவத்தின் காட்சிகள் பதிவாகி, அவை சமூக வலைதளத்தில் பரவி வருகிறது.
சம்பவத்திற்கு காரணமான இருவர் மற்றும் மாணவி மீது மோதிய வாகனத்தை ஓட்டி வந்தவர் ஆகிய 3 பேரையும் கேமிரா காட்சிகள் உதவியுடன் காவல்துறையினர் கண்டுபிடித்தனர். அப்போது அவர்கள் காவல் அதிகாரிகளின் துப்பாக்கியை பிடுங்கி கொண்டு தப்பிக்க முயன்றதால், அவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தி காவல்துறையினர் மடக்கி பிடித்தனர். காயமடைந்த அவர்கள் மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.
- ஜிம்மில் உடல் பயிற்சி செய்துக் கொண்டிருந்த மற்ற நபர்கள் சித்தார்த்துக்கு முதலுதவி செய்தனர்.
- சிசிடிவி வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி "ஃபிட்னஸ் ஃப்ரீக்"குகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
உத்தரப் பிரதேசம் மாநிலம் காசியாபாத் நகரில் உள்ள சரஸ்வதி விஹாரில் இயங்கி வரும் ஜிம் ஒன்றில் ஒருவர் திரெட்மில்லில் ஓடிக் கொண்டிருந்தபோது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஜிம்மில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சியின்படி,காஜியாபாத்தை சேர்ந்த சித்தார்த் என்ற நபர் ஜிம்மில் உடற் பயிற்ச்சி செய்துக் கொண்டிருந்தார்.திரெட்மில்லில் சித்தார்த் ஓடிக் கொண்டிருந்தபோது திடீரென நின்று மெதுவாக சுயநினைவை இழந்து திரெட்மில் அருகே சரிந்து விழுவது போன்ற காட்சி பதிவாகியுள்ளது.
இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த ஜிம்மில் உடல் பயிற்சி செய்துக் கொண்டிருந்த மற்ற நபர்கள் சித்தார்த்துக்கு முதலுதவி செய்தனர். பின்னர், மருத்துவமனைக்கு தூக்கி சென்றபோது அவர் ஏற்கனவே இறந்துவிட்டதை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவத்தின் சிசிடிவி வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி "ஃபிட்னஸ் ஃப்ரீக்"குகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
- வாட்ஸ்அப் சேனல்- 'Cheif Minister Office, Uttar Pradesh' என்ற பெயரில் அறிமுகம்.
- இதன் மூலம் தகவல்களை பொது மக்களுக்கு எளிதில் கொண்டுசேர்க்க முடியும்.
பொது மக்களுடன் நேரடியாக தொடர்பில் இருக்கும் வகையில், முதல்வர் யோகி ஆதித்யநாத், "முதலமைச்சர் அலுவலகம், உத்தர பிரதேசம்" (Cheif Minister Office, Uttar Pradesh) என்ற பெயரில் வாட்ஸ்அப் சேனல் ஒன்றை துவங்கி இருக்கிறார். இதன் மூலம் பொதுமக்கள் நேரடியாக முதலமைச்சர் அலுவலகத்தை தொடர்பு கொள்ள முடியும்.
இந்த வாட்ஸ்அப் சேனல் மூலம், பொது மக்கள் தங்களது கருத்துக்கள் மற்றும் குறைகளை முதலமைச்சர் அலுவலகத்தில் முறையிடலாம். இதற்கான அதிகாரப்பூர்வ வாட்ஸ்அப் சேனலை, முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் துவங்கி வைத்துள்ளார்.
முதலமைச்சர் அலுவலகத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் அக்கவுண்டில், "முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்-க்கு உத்தர பிரதேச மாநிலத்தை சேர்ந்த 25 கோடி பேரும் 'ஒரே குடும்பம்'. முதலமைச்சரின் தலைமையில், உத்தர பிரதேச அரசங்கம் 'குடும்பத்தின்' ஒவ்வொருத்தர் நலம் மற்றும் வளர்ச்சிக்காக பணியாற்றி வருகிறது."
"உத்தர பிரதேச குடும்பத்தின் ஒவ்வொருத்தாருடன் எளிதில் தகவல் பரிமாற்றம் செய்யவும், தகவல் பரிமாற்றம்தான் ஜனநாயகத்தின் ஆத்மா என்று நினைக்கும் முதலமைச்சர் சார்பில் மாநில அரசு அதிகாரப்பூர்வ வாட்ஸ்அப் சேனல்- 'Cheif Minister Office, Uttar Pradesh' என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது," என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
இந்த புதிய திட்டத்தின் மூலம் பொதுநலன் மற்றும் அரசு துறை திட்டங்கள் தொடர்பான தகவல்களை பொது மக்களுக்கு எளிதில் கொண்டுசேர்க்க முடியும். இந்த சேனலில் யார் வேண்டுமானாலும் இணைந்து கொள்ளலாம்.
- சாஹலின் தலைமுடி தற்போது 146 செ.மீ. (4 அடி 9.5 அங்குலம்) அளவுக்கு வளர்ந்துள்ளது.
- மத நம்பிக்கைகளுக்கு கவுரவம் சேர்க்க வேண்டும் என்பதற்காக ஒருபோதும் தலைமுடியை வெட்டியதில்லை.
சாஹலின் தலைமுடி தற்போது 146 செ.மீ. (4 அடி 9.5 அங்குலம்) அளவுக்கு வளர்ந்துள்ளது.லக்னோ:
உத்தர பிரதேசத்தின் கிரேட்டர் நொய்டா நகரை சேர்ந்த சிறுவன் சிடக்தீப் சிங் சாஹல் (வயது 15). சிறு வயது முதலே சாஹலுக்கு நீண்ட தலைமுடி இருந்தது. இதனால், மகிழ்ச்சியற்ற நிலையில் இருந்த சாஹல், தனது பெற்றோரிடம் அவற்றை நீக்கி விடும்படி கேட்டிருக்கிறார்.
ஆனால் வளர்ந்ததும், அதன்மீது தனி கவனம் செலுத்த தொடங்கியதுடன், தலைமுடி தன்னில் ஒரு பகுதி என்ற உணர்வும் சாஹலுக்கு ஏற்பட்டது. சீக்கிய மதத்தினை சார்ந்த சாஹல், மத நம்பிக்கைகளுக்கு கவுரவம் சேர்க்க வேண்டும் என்பதற்காக ஒருபோதும் தலைமுடியை வெட்டியதில்லை.
சாஹலின் தலைமுடி தற்போது 146 செ.மீ. (4 அடி 9.5 அங்குலம்) அளவுக்கு வளர்ந்துள்ளது. இந்நிலையில், சாஹலின் நீண்ட தலைமுடியானது கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்து உள்ளது.
இதுபற்றிய வீடியோ ஒன்றை கின்னஸ் உலக சாதனை அமைப்பு வெளியிட்டு உள்ளது. இதில் சாஹல், தன்னுடைய தலைமுடி பராமரிப்பு பற்றி பேசியுள்ளார். தலைமுடியை அலசி, சுத்தம் செய்து, எப்படி தலைமுடியை வாருவது என்பது பற்றி சாஹலின் தாயார் உதவி செய்திருக்கிறார். அப்படி அவர் உதவவில்லை எனில், நாள் முழுவதும் அதற்காக செலவிட வேண்டி இருக்கும் என சாஹல் கூறுகிறார்.
அப்படி தலைமுடியை அலசாமல் அல்லது காய வைக்காமல் இருக்கும்போது, சீக்கிய முறையை பின்பற்றுபவர்களிடையே காணப்படுவது போன்று, அதனை உருண்டையாக சுற்றி வைத்து, டர்பன் அணிந்து கொள்கிறார். இந்த சாதனையை பற்றி மற்றவர்களிடம் கூறும்போது, அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். நான் பொய் கூறுகிறேன் என நினைத்துவிட்டனர். அதன்பின்பு, அவர்களை நம்ப வைக்க சில சான்றுகள் தேவைப்பட்டன என அந்த வீடியோவில் கூறுகிறார். கின்னஸ் உலக சாதனை புத்தகம் 2024-ல் தன்னுடைய சாதனையும் ஒரு பகுதியாக இருப்பதற்காக சாஹல் அதிக மகிழ்ச்சியில் திளைத்துள்ளார்.
- இன்று காலை திடீரென வீட்டின் கான்கிரீட் கூரையின் ஒருபகுதி இடிந்து விழுந்தது
- துப்புறவு பணியாளர்கள் பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்
உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள ஆலம்பாக் காவல்நிலையற்திற்கு உட்பட்ட ஆனந்த் நகர் ரெயில்வே காலனியில் இன்று, ஒரு வீட்டின் கான்கிரீட் கூரையின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் வீட்டில் சதிஷ் சந்திராவின் குடும்பத்தினர் ஐந்து பேரும் பலியாகினர்.
கூரை இடிந்து விழுந்தது குறித்து துப்பரவு பணியாளர்கள் போலீசாருக்கு தகவல் கொடுக்க, போலீசார் மற்றும் தேசிய பேரிடர் மீட்புப்படை குழு சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்புப்பணியில் ஈடுபட்டனர்.
சதிஷ் சந்திரா (40), அவரது மனைவி சரோஜினி தேவி (35), குழந்தைகள் ஹர்ஷித் (13), ஹர்ஷிதா (10), அன்ஷ் (5) ஆகியோர் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தனர். அவர்களது உடல்களை மீட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- பணியில் ஈடுபட்ட தொழிலாளர்கள் கட்டுமான பொருட்களை லிப்டில் எடுத்து சென்றனர்.
- படுகாயத்துடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த தொழிலாளர்களை மீட்டு சிகிச்கைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
உத்தரபிரதேச மாநிலம் நொய்டா பிஸ்ராக் கோட்வாலி பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பு வளாகத்தில் புதிதாக கட்டிடம் கட்டும் பணி நடந்து வருகிறது. இன்று காலை இப்பணியில் ஈடுபட்ட தொழிலாளர்கள் கட்டுமான பொருட்களை லிப்டில் எடுத்து சென்றனர். அப்போது லிப்ட் திடீரென அறுந்து விழுந்தது.
இதில் லிப்டில் சென்ற 4 தொழிலாளர்கள் பரிதாபமாக இறந்தனர். பலர் படுகாயம் அடைந்தனர். இது பற்றி அறிந்ததும் தீயணைப்பு படையினர் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். படுகாயத்துடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த தொழிலாளர்களை மீட்டு சிகிச்கைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் நடந்த போது லிப்டில் 12 பேர் இருந்தனர். அதிக பாரம் தாங்காமல் இந்த விபத்து நடந்ததாக கூறப்படுகிறது. மதிக்க முடிவு செய்துள்ளனர். பக்தர்கள் வந்து செல்லும் வகையில் தடுப்புகள் அமைக்கப்பட உள்ளது. மாடவீதிக்கு வெளியே காத்திருக்கும் பக்தர்களை வரிசையில் அனுமதித்து கருட சேவையில் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர்.
- ராஜூ உடலை தள்ளுவண்டியில் ஏற்றி அவரது தாயும், தம்பியும் பல மணி நேரம் கொண்டு சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.
- வீடியோ வைரலானதை தொடர்ந்து மீரட் மருத்துவக்கல்லூரி முதல்வர் அகிலேஷ் மோகன் விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார்.
மீரட்:
உத்தரபிரதேச மாநிலம் மீரட் பகுதியை சேர்ந்தவர் ராஜூ. இவர் நேற்று முன்தினம் அப்பகுதியில் உள்ள ஒரு மதுக்கடை அருகே இறந்து கிடந்து உள்ளார்.
பல மணி நேரமாக அவரது உடல் அங்கேயே கிடந்துள்ளது. இதுபற்றிய தகவல் அறிந்ததும் அவரது குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர்.
மேலும் ராஜூவின் தாயும், தம்பியும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ராஜூ உடலை பார்த்து கதறி அழுதனர்.
பின்னர் இறுதி சடங்கு செய்வதற்காக அவரது உடலை சுடுகாட்டுக்கு எடுத்து செல்ல வாகன உதவியை நாடினர். ஆனால் பல மணி நேரமாக கேட்டு பார்த்தும் உடலை எடுத்து செல்ல எந்த வாகனமும் கிடைக்கவில்லை.
இதனால் ராஜூ உடலை தள்ளுவண்டியில் ஏற்றி அவரது தாயும், தம்பியும் பல மணி நேரம் கொண்டு சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.
இந்நிலையில் வாகனம் கிடைக்காததால் மனமுடைந்த தாய்-மகன் இருவரும் இறுதி சடங்கு செய்வதற்கும் போதிய பணம் இல்லாமல் கஷ்டப்பட்டனர்.
இதையடுத்து அவர்கள் உதவிக்காக அருகே உள்ள போலீஸ் நிலையத்தை நாடினர். அங்கு பணியில் இருந்த சப்-இன்ஸ்பெக்டர் அமித்குமார் மாலிக் நிதி உதவி செய்ததோடு மேலும் சிலரிடமும் நிதி திரட்டி இறந்த ராஜூ உடலை இறுதி சடங்கு செய்ய உதவினார். பின்னர் இறுதி சடங்கு நடைபெற்றுள்ளது.
இதற்கிடையே வாலிபர் உடலை தள்ளுவண்டியில் ஏற்றி சென்ற வீடியோ வைரலானதை தொடர்ந்து மீரட் மருத்துவக்கல்லூரி முதல்வர் அகிலேஷ் மோகன் இது தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார்.
அதன் பேரில் விசாரணை நடைபெற்று வருகிறது. அறிக்கை கிடைத்த பிறகு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் கூறினார்.
- சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும் என உதயநிதி ஸ்டாலின் பேச்சு
- உதயநிதி ஸ்டாலினுக்கு கண்டனங்கள் வலுத்து வரும் நிலையில் தற்போது வழக்குப்பதிவு
தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மகனும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், சென்னையில் நடைபெற்ற மாநாட்டில் சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும் என பேசியிருந்தார். இவரது பேச்சுக்கு இந்தியா அளவில் கண்டனம் தெரிவிக்கப்பட்டு வருகிறது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் விமர்சனம் செய்துள்ளனர்.
ஆனால், உதயநிதி ஸ்டாலின் அந்த கருத்தை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.
இந்த நிலையில் உத்தர பிரதேச மாநிலம் ராம்பூரில் உள்ள காவல் நிலையத்தில் உதயநிதி ஸ்டாலின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சனாதன தர்மம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக வழக்கறிஞர்கள் அளித்த புகார் அடிப்படையில் இந்திய தண்டனைச் சட்டம் 153ஏ, 295ஏ ஆகிய பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. உதயநிதி ஸ்டாலின் உடன் கர்நாடக மாநில மந்திரி பிரியங்க் கார்கே மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்கிடையே தனது கருத்துக்கு மன்னிப்பு கேட்கப்போவதில்லை என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
- தினேஷ் சர்மாவை தவிர வேறுயாரும் வேட்புமனு தாக்கல் செய்யப்படவில்லை
- முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் முன்னிலையில் வேட்புமனு தாக்கல் செய்தார்
உத்தர பிரதேச மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஹர்த்வார் துபே. இவரது பதவிக் காலம் 2026 வரை இருந்த நிலையில், காலமானார். இதனால் செப்டம்பர் 15-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
பா.ஜனதா சார்பில் தினேஷ் சர்மா வேட்பாளர் அறிவிக்கப்பட்டார். அவருக்கு எதிராக எந்தக்கட்சியின் வேட்பாளரை நிறுத்தவில்லை. இதனால் தினேஷ் சர்மா போட்டியின்றி வெற்றி பெற்றார்.
தினேஷ் சர்மா அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், துணை முதல்வர் பிரஜேஷ் பதாக், கேஷவ் பிரசாத் மயூரா உள்ளிட்டோர் முன்னிலையில் வேட்புமனு தாக்கல் செய்தார்.
வெற்றி பெற்ற தினேஷ் சர்மா பிரதமர் மோடி, முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் கட்சியின் மூத்த தலைவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
2017 முதல் 2022 வரை யோகி ஆதித்யநாத் ஆட்சியில் துணை முதல்வராக பதவி வகித்தவர் தினேஷ் சர்மா.
- உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் காவல் நிலையங்களில் புகார்.
- அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைக்கு ரூ. 10 கோடி கொடுப்பதாக அறிவிப்பு.
சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறிய கருத்துக்கு நாடு முழுக்க கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது. மேலும் பா.ஜ.க. கட்சியை சேர்ந்த தலைவர்கள், உறுப்பினர்கள் மற்றும் பலர் உதயநிதி ஸ்டாலினுக்கு கண்டனத்தை தெரிவித்து வருகிறார்கள்.
இது தொடர்பான கருத்துக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டும், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் காவல் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டு வருகிறது. சனாதன விவகாரம் நாடு முழுக்க பேசுபொருளாகி இருக்கும் நிலையில், அயோத்தியை சேர்ந்த துறவியின் அறிவிப்பு தற்போது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

அயோத்தியை சேர்ந்த சாமியார் பரமஹம்ச ஆச்சாரியா என்பவர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைக்கு ரூ. 10 கோடி கொடுப்பதாக அறிவித்து இருக்கிறார். இதோடு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் புகைப்படத்தை வாளால் கிழித்து, அதனை அந்த சாமியார் தீயிட்டு கொளுத்தும் வீடியோ வெளியாகி, தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
முன்னதாக இதே சாமியார் இந்தியாவை இந்து நாடாக அறிவிக்க வேண்டும் என்றும் அவ்வாறு அறிவிக்கவில்லை என்றால், ஜல சமாதி (நீரில் இறங்கி உயிரை மாய்த்துக் கொள்வது) அடைவேன் என்று 2021-ம் ஆண்டு அறிவித்து இருந்தார். ஆனால், இவர் அவ்வாறு செய்யவில்லை. அந்த வகையில், இவர் விளம்பரத்திற்காகவே இவ்வாறு செய்து இருப்பார் என்று கூறப்படுகிறது.






