என் மலர்
உள்ளூர் செய்திகள்
- காயமடைந்து மருத்துவமனைகளில் மருத்துவம் பெற்று வரும் அனைவருக்கும் தரமான மருத்துவம் அளிக்கப்பட வேண்டும்.
- 2 உயிர்கள் பறிபோவதற்கு காரணமான விபத்துக்கு யார் காரணமாக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
சென்னை:
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் அருகே தொடர்வண்டி கடவுப் பாதையை கடக்க முயன்ற தனியார் பள்ளி மூடுந்து மீது தொடர்வண்டி மோதியதில் 2 மாணவர்கள் உயிரிழந்து விட்டதாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. உயிரிழந்தோரை இழந்து வாடும் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
காயமடைந்து மருத்துவமனைகளில் மருத்துவம் பெற்று வரும் அனைவருக்கும் தரமான மருத்துவம் அளிக்கப்பட வேண்டும். அவர்கள் அனைவரும் விரைவில் முழுமையான உடல்நலம் பெற வேண்டும் என விழைகிறேன்.
விபத்துக்கான காரணம் குறித்து பல தகவல்கள் கூறப்படும் போதிலும் எதுவும் இன்னும் உறுதி செய்யப்படவில்லை. கடவுப்பாதை பணியாளர் உறங்கி விட்டதால் கதவை மூட மறந்தது தான் விபத்துக்கு காரணம் என்று ஒரு தரப்பிலும், கதவை மூட பணியாளர் முயன்ற போது, அதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஓட்டுனர் தடையை மீறி மூடுந்தை ஓட்ட முயன்றது தான் விபத்துக்கு காரணம் என்று தொடர்வண்டித் துறை தரப்பிலும் கூறப்படுகிறது. 2 உயிர்கள் பறிபோவதற்கு காரணமான விபத்துக்கு யார் காரணமாக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
இந்தியா முழுவதும் கிட்டத்தட்ட ஆளில்லா கடவுப்பாதைகள் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டதைப் போல, கடவுப்பாதைகள் இருக்கும் இடங்கள் அனைத்திலும் மேம்பாலங்களை அமைக்க மாநில அரசுகளுடன் இணைந்து மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்; இதற்காக வல்லுனர் குழுவை அமைத்து ஆலோசனைகளை பெற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
- கேட் கீப்பர் கேட்டை மூடாமல் தூங்கியதால் பள்ளி வேன் மீது ரெயில் மோதி விபத்து ஏற்பட்டதாக கூறப்பட்டது.
- ரெயில் விபத்துக்கு பள்ளி வேன் ஓட்டுநரே காரணம் என தென்னக ரெயில்வே தெரிவித்துள்ளது.
கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் அருகே பள்ளி வேன் மீது ரெயில் மோதியதில் 2 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ரெயில் மோதியதுடன் பள்ளி வேன் 50 மீட்டர் தூரத்திற்கு இழுத்துச்சென்றதால் வேன் சுக்குநூறானது.
ரெயில் விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு மாவட்ட ஆட்சியர், எஸ்.பி.ஜெயக்குமார் ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர்.
கேட் கீப்பர் கேட்டை மூடாமல் தூங்கியதால் பள்ளி வேன் மீது ரெயில் மோதி விபத்து ஏற்பட்டதாக கூறப்பட்டது. ஆனால் ரெயில் விபத்துக்கு பள்ளி வேன் ஓட்டுநரே காரணம் என தென்னக ரெயில்வே தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், பள்ளி வேன் மீது ரெயில் மோதிய விபத்து குறித்து தகவல் அறிந்ததும் அமைச்சர்கள் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். அவர்கள் சம்பவ இடத்தில் ஆய்வு செய்த பின் முழுமையான தகவல்களை தெரிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
- மிரட்டல் விடுத்த நபர் அதே ரெயிலில் முன்பதிவு செய்யப்படாத பொது பெட்டியில் பயணம் செய்வது தெரியவந்தது.
- ரெயில் காட்பாடி ரெயில் நிலையத்திற்குள் நுழைந்ததும் பொது பெட்டிக்கு அவசர அவசரமாக போலீசார் சென்றனர்.
வேலூர்:
ஈரோடு ரெயில் நிலையத்தில் இருந்து சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையம் நோக்கி ஏற்காடு எக்ஸ்பிரஸ் புறப்பட்டு வந்து கொண்டிருந்தது.
இரவு மொரப்பூர் ரெயில் நிலையத்திற்கு ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரெயில் வந்தது. அங்கிருந்த மர்ம நபர் அவசர உதவி என் 100 மற்றும் 108-க்கு போன் செய்து ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரெயிலை கடத்த போகிறேன் என்று கூறி விட்டு போனை துண்டித்தார்.
இதனால் பதற்றம் அடைந்த போலீசார் இதுகுறித்து மொரப்பூர் ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் மிரட்டல் விடுத்த செல்போன் எண்ணை ஆய்வு செய்தனர்.
மிரட்டல் விடுத்த நபர் அதே ரெயிலில் முன்பதிவு செய்யப்படாத பொது பெட்டியில் பயணம் செய்வது தெரியவந்தது.
உஷாரான ரெயில்வே போலீசார் இது குறித்து ஜோலார்பேட்டை, காட்பாடி உள்ளிட்ட ரெயில்வே போலீஸ் நிலையங்களுக்கு தகவல் தெரிவித்தனர். அங்குள்ள போலீசார் உஷார் படுத்தப்பட்டனர்.
அதற்குள் ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரெயில் ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தை கடந்து காட்பாடி நோக்கி வந்து கொண்டு இருந்தது.
காட்பாடி ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் சித்ரா, சப்-இன்ஸ்பெக்ட்டர் பத்ம ராஜன், ரெயில்வே பாதுகாப்பு படை போஸ்ட் கமாண்டன்ட் அழகர்சாமி மற்றும் போலீசார் தயார் நிலையில் இருந்தனர்.
ரெயில் காட்பாடி ரெயில் நிலையத்திற்குள் நுழைந்ததும் பொது பெட்டிக்கு அவசர அவசரமாக போலீசார் சென்றனர். அதிகளவில் போலீசார் வருவதை கண்ட பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். அப்போது ரெயிலை கடத்த போவதாக மிரட்டிய வாலிபர் அப்பாவி போல அமர்ந்திருந்தார்.
செல்போன் மூலம் அவரை மடக்கி பிடித்த போலீசார் அங்குள்ள போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
விசாரணையில் மிரட்டல் விடுத்த வாலிபர் தர்மபுரியை சேர்ந்த சபரீசன் (வயது 25) என தெரியவந்தது.
நான் 2021-ம் ஆண்டு தமிழ்நாடு மின்சார வாரியத்தில் தற்காலிகமாக வேலை செய்தேன். தற்போது வேலை தேடி வருகிறேன்.
சென்னையில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரிய அலுவலகம் அருகே நடைபெறும் போராட்டத்தில் கலந்து கொள்ள மொரப்பூர் ரெயில் நிலையம் வந்தேன். வேலை இல்லாத விரக்தியில் ரெயிலை கடத்த போவதாக மிரட்டல் விடுத்தேன் என சபரீசன் போலீசாரிடம் தெரிவித்தார்.
காட்பாடி ரெயில்வே போலீசார் சபரீசனை சேலம் ரெயில்வே போலீசில் ஒப்படைத்தனர். சேலம் ரெயில்வே போலீசார் சபரீசனை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சேலம் ஜெயிலில் அடைத்தனர்.
போலீசாரை அலறவிட்ட இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
- விபத்தில் உயிரிழந்த மாணவர்கள் கிருஷ்ணசாமி வித்யா நிகேதன் பள்ளியை சேர்ந்தவர் என்பது தெரிய வந்துள்ளது.
- விபத்தில் வேன் பல மீட்டர் தூரத்திற்கு இழுத்து செல்லப்பட்டது.
கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் அருகே ரெயில்வே கேட்டை கடக்க முயன்ற பள்ளி வேன் மீது ரெயில் மோதியதில் மாணவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியான நிலையில் சிகிச்சைக்கு அழைத்துச் சென்றவர்களில் ஒரு மாணவியும் பலியானார். இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் கடலூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்த நிலையில், பலத்த காயமடைந்த 2 மாணவர்கள் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
விபத்தில் உயிரிழந்த மாணவர்கள் கிருஷ்ணசாமி வித்யா நிகேதன் பள்ளியை சேர்ந்தவர் என்பது தெரிய வந்துள்ளது.
உயிரிழந்தவர்களில் ஒருவர் 6-ம் வகுப்பு படிக்கும் நிவாஸ் (12) என்ற மாணவன் என்றும், 12-ம் வகுப்பு படிக்கும் சாருமதி (16) என்ற மாணவி என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
விபத்தில் வேன் பல மீட்டர் தூரத்திற்கு இழுத்து செல்லப்பட்டது. மேலும் இந்த விபத்தில் வேன் உருக்குலைந்தது. மாணவர்களின் புத்தகப் பைகள் தண்டவாளத்தில் சிதறி கிடப்பது காண்போரின் மனதை பதைபதைக்க செய்தது.
- இரண்டு இளம் மாணவர்களின் உயிர்கள் பறிபோன துயரச் செய்தியால் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.
- பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களுக்குத் தலா ஒரு லட்ச ரூபாயும், லேசான காயம் அடைந்தவர்களுக்கு ஐம்பதாயிரம் ரூபாயும் வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.
சென்னை :
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
கடலூர் செம்மங்குப்பதில் நடந்த விபத்தில், இரண்டு இளம் மாணவர்களின் உயிர்கள் பறிபோன துயரச் செய்தியால் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.
உயிரிழந்த மாணவச் செல்வங்களான நிவாஸ் மற்றும் சாருமதி ஆகியோரது பெற்றோருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்விபத்தில் காயமடைந்து கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மூவருக்கும் உயர்தர சிகிச்சை அளித்திட அறிவுறுத்தியுள்ளதோடு, அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆகியோரை நேரில் சென்று உதவிடவும் அறிவுறுத்தியுள்ளேன்.
இந்த விபத்தில் உயிரிழந்த குழந்தைகளின் பெற்றோர்களுக்கு முதலமைச்சரின் நிவாரண நிதியிலிருந்து தலா ஐந்து லட்ச ரூபாய் வழங்கிடவும் - பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களுக்குத் தலா ஒரு லட்ச ரூபாயும், லேசான காயம் அடைந்தவர்களுக்கு ஐம்பதாயிரம் ரூபாயும் வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.
- ஆசனூர் வனப்பகுதியில் யானைகள் அதிக அளவில் வசித்து வருகின்றன
- யானை கூட்டமாக சாலையை கடக்கும் காட்சியை அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
சத்தியமங்கலம்:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 10 வனச்சரகங்கள் உள்ளன. இங்கு யானை, சிறுத்தை, புலி, மான், கரடி, காட்டெருமை உள்பட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன.
சமீப காலமாக அடர்ந்த வனப்பகுதியை விட்டு வெளியேறும் யானைகள் உணவு தண்ணீர் தேடி சத்தி-மைசூர் தேசிய நெடுஞ்சாலை வருவதும், கிராமத்துக்குள் புகுந்து விளை நிலங்களை சேதப்படுத்துவதும் தொடர்கதை ஆகி வருகிறது.
ஆசனூர் வனப்பகுதியில் யானைகள் அதிக அளவில் வசித்து வருகின்றன.
இந்நிலையில் ஆசனூர் அருகே அடர்ந்த வனப்பகுதியை விட்டு வெளியேறிய யானைக் கூட்டங்கள் குட்டிகளுடன் சத்தி-மைசூர் தேசிய நெடுஞ்சாலையை கடந்து சென்றன. யானை கூட்டமாக சாலையை கடக்கும் காட்சியை அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
அவர்கள் சற்று தொலைவிலேயே வாகனங்களை நிறுத்திவிட்டனர். சிலர் யானைகள் கடக்கும் காட்சியை தங்களது செல்போனில் வீடியோவாக பதிவு செய்துள்ளனர். கிட்டத்தட்ட 10-க்கும் மேற்பட்ட யானைகள் குட்டிகளுடன் சாலையை கடந்து சிறிது நேரம் நெடுஞ்சாலை ஓரம் சுற்றி திரிந்து கொண்டிருந்தன. பின்னர் மீண்டும் அந்த யானை கூட்டம் வனப்பகுதிக்குள் சென்றது. இதன் பிறகு அந்த பகுதியில் போக்குவரத்து தொடங்கியது.
யானைகள் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு இடம்பெயர்ந்து வருகிறது. யானைகள் கூட்டமாக செல்லும்போது வாகன ஓட்டிகள் சுற்றுலா பயணிகள் அவைகளுக்கு எந்த ஒரு தொந்தரவும் செய்யக்கூடாது. ஆசனூர் வழியாக யானைகள் நடமாட்டம் அதிகமாக இருப்பதால் இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் கவனத்துடன் செல்ல வேண்டும்.
குறிப்பாக இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் எக்காரணம் கொண்டும் தங்களது வாகனத்தை வனப்பகுதியில் நிறுத்த வேண்டாம் என வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.
- உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தங்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
- படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அனைவரும் பூரண உடல் நலன் பெற வேண்டும் என எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
அ.தி.மு.க. பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் பகுதியில் பள்ளி வேன் மீது ரெயில் மோதி விபத்துக்குள்ளாகியதில் 2 மாணவர்கள் உயிரிழந்ததாக வரும் செய்தி மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது.
உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தங்களையும் தெரிவித்துக்கொள்கிறேன், படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அனைவரும் பூரண உடல் நலன் பெற வேண்டும் என எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என திமுக அரசை வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- ரெயில் விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு மாவட்ட ஆட்சியர், எஸ்.பி., ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர்.
- ரெயில்வே கீப்பர் பங்கஜ் சர்மாவை சஸ்பெண்ட் செய்து தென்னக ரெயில்வே நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் அருகே பள்ளி வேன் மீது ரெயில் மோதியதில் 2 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ரெயில் மோதியதுடன் பள்ளி வேன் 50 மீட்டர் தூரத்திற்கு இழுத்துச்சென்றதால் வேன் சுக்குநூறானது.
ரெயில் விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு மாவட்ட ஆட்சியர், எஸ்.பி.ஜெயக்குமார், ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர்.
இதனிடையே, கேட் கீப்பர் கேட்டை மூடாமல் தூங்கியதால் பள்ளி வேன் மீது ரெயில் மோதி விபத்து ஏற்பட்டதாக கூறப்பட்டது. ஆனால் ரெயில் விபத்துக்கு பள்ளி வேன் ஓட்டுநரே காரணம் என தென்னக ரெயில்வே தெரிவித்துள்ளது.
கேட்டை மூடத் தொடங்கியபோது, வேன் ஓட்டுநர் வேனை கேட்டை கடக்க அனுமதிக்க கோரியதாக தகவல் வெளியாகி உள்ளது. வேன் ஓட்டுநர் கோரியிருந்தாலும் கேட் கீப்பர் வாகனத்தை அனுமதித்திருக்க கூடாது என தென்னக ரெயில்வே கூறியுள்ளது.
இதனிடையே ரெயில்வே கீப்பர் பங்கஜ் சர்மாவை சஸ்பெண்ட் செய்து தென்னக ரெயில்வே நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
- விபத்து நடந்த இடத்தில் கடலூர் ஆட்சியர் சிபி ஆதித்ய செந்தில்குமார் ஆய்வு செய்தார்.
- கேட் கீப்பர் தவறு செய்தது உறுதியானால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் அருகே ரெயில்வே கேட்டை கடக்க முயன்ற பள்ளி வேன் மீது ரெயில் மோதியதில் மாணவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியான நிலையில் சிகிச்சைக்கு அழைத்துச்சென்றவர்களில் ஒரு மாணவியும் பலியானார். இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் கடலூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து நடந்த இடத்தில் ஆய்வு செய்த கடலூர் ஆட்சியர் சிபி ஆதித்ய செந்தில்குமார்,
பள்ளி வேன் மீது ரெயில் மோதிய விபத்துக்கான காரணம் குறித்து ரெயில்வே, காவல்துறை முறையாக விசாரணை நடத்தும் என்றும் விசாரணைக்குப்பின் கேட் கீப்பர் தவறு செய்தது உறுதியானால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
இந்த நிலையில் பள்ளி வேன் மீது ரெயில் மோதிய விபத்து தொடர்பாக கேட் கீப்பர் பங்கச் சர்மா சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
பணியில் அலட்சியமாக இருந்ததாகக்கூறி கேட் கீப்பர் பங்கச் சர்மாவை பணியிடை நீக்கம் செய்து ரெயில்வே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
- கேட் கீப்பரின் அலட்சியத்தால் தான் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
- ரெயில்கள் நடுவழியில் நிறுத்தப்பட்டுள்ளதால் பயணிகள் அவதிக்குள்ளாகி உள்ளனர்.
கடலூர் அருகே மூடப்படாத ரெயில்வே கேட்டை பள்ளி வேன் கடக்க முயன்றபோது ரெயில் மோதிய விபத்தில் மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. ரெயில்வே கேட்டை மூடாமல் ஊழியர் தூங்கிவிட்டதால் வேன் தண்டவாளத்தை கடந்த போது விபத்து ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கேட் கீப்பரின் அலட்சியத்தால் தான் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இதனிடையே, ரெயில் விபத்து காரணமாக முக்கிய ரெயில்கள் நடுவழியில் நிறுத்தப்பட்டுள்ளது.
திருச்சியிலிருந்து தாம்பரம் செல்லும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில், சிதம்பரம் ரெயில் நிலையத்தில் அரை மணி நேரமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
மயிலாடுதுறையிலிருந்து விழுப்புரம் செல்லும் பயணிகள் ரெயில் ஆலப்பாக்கம் ரெயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ரெயில்கள் நடுவழியில் நிறத்தப்பட்டுள்ளதால் பயணிகள் அவதிக்குள்ளாகி உள்ளனர்.
- வெள்ளி விலையில் மாற்றமில்லை.
- ஒரு கிராம் வெள்ளி 120 ரூபாய்க்கும் பார் வெள்ளி 1 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை:
சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது ஏற்ற, இறக்கத்தை சந்தித்து வருகிறது. நேற்று அதன் விலை குறைந்து காணப்பட்டது. அதன்படி, நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.9 ஆயிரத்து 60-க்கும், ஒரு சவரன் ரூ.72 ஆயிரத்து 480-க்கும் விற்பனை ஆனது. நேற்றைய நிலவரப்படி, கிராமுக்கு ரூ.50-ம், சவரனுக்கு ரூ.400-ம் குறைந்து ஒரு கிராம் ரூ.9 ஆயிரத்து 10-க்கும், ஒரு சவரன் ரூ.72 ஆயிரத்து 80-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில், இன்று தங்கம் விலை சற்று உயர்ந்துள்ளது. கிராமுக்கு 50 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 9,060 ரூபாய்க்கும் சவரனுக்கு 400 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் 72,480 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி 120 ரூபாய்க்கும் பார் வெள்ளி 1 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
07-07-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.72,080
06-07-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.72,480
05-07-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.72,480
04-07-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.72,400
03-07-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.72,840
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
07-07-2025- ஒரு கிராம் ரூ.120
06-07-2025- ஒரு கிராம் ரூ.120
05-07-2025- ஒரு கிராம் ரூ.120
04-07-2025- ஒரு கிராம் ரூ.120
03-07-2025- ஒரு கிராம் ரூ.121
- விபத்தில் காயமடைந்தவர்கள் கடலூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
- ரெயில்வே கேட் கீப்பர் மீது அப்பகுதி பொதுமக்கள் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் தெரிவித்தனர்.
கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் அருகே ரெயில்வே கேட்டை கடக்க முயன்ற பள்ளி வேன் மீது ரெயில் மோதியதில் மாணவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியான நிலையில் சிகிச்சைக்கு அழைத்துச்சென்றவர்களில் ஒரு மாணவியும் பலியானார். இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் கடலூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் சம்பவ இடத்தில் கடலூர் ஆட்சியர் சிபி ஆதித்ய செந்தில்குமார் நேரில் ஆய்வு செய்தார். இதையடுத்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
பள்ளி வேன் மீது ரெயில் மோதிய விபத்துக்கான காரணம் குறித்து ரெயில்வே, காவல்துறை முறையாக விசாரணை நடத்தும்.
கேட் கீப்பர் மீது பொதுமக்கள் குற்றச்சாட்டு வைத்துள்ளனர். ரெயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விசாரணைக்குப்பின் கேட் கீப்பர் தவறு செய்தது உறுதியானால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.
செம்மங்குப்பம் அருகே மூடப்படாமல் இருந்த ரெயில்வே கேட் பகுதியில் பள்ளி வேன் கடக்க முயன்ற நிலையில் ரெயில் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்துக்கு காரணமாக கூறப்படும் ரெயில்வே கேட் கீப்பர் மீது அப்பகுதி பொதுமக்கள் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் தெரிவித்தனர்.
எப்போது சென்று கூப்பிட்டாலும் கண்ணை துடைத்துக்கொண்டு தூங்கிய நிலையிலேயே வெளியில் வருவார். விபத்து ஏற்பட்டதும் அழைத்து கேட்டபோது அண்ணா தூங்கிட்டேன் என எழுந்து வந்ததாக பொதுமக்கள் தெரிவித்தனர்.






