என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    • இவர் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களை குறிவைத்து கஞ்சா விற்றார்
    • அவரிடமிருந்து ரூ.1 லட்சம் மதிப்பிலான 1 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

    புதுச்சேரி:

    காரைக்கால் தலத்தெருவைச்சேர்ந்த விஸ்னுபிரியன் (வயது21),. இவர் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களை குறிவைத்து கஞ்சா விற்றார். இதுகுறித்து நிரவி போலீசார் விஸ்னுபிரியனை கைது செய்து, அவரிடமிருந்து ரூ.1 லட்சம் மதிப்பிலான 1 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். 

    சந்தேகத்துக்குஇடமாக வந்த மினி வேனை மறித்து சோதனை செய்தனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்ட ேபாலீஸ் சூப்பிரண்டுக்கு புதுவையில் இருந்து மதுபானங்கள் கடத்தி வருவதாக ரகசிய தகவல் வந்தது. இதனை தொடர்ந்து போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா உத்தரவின் பேரில் தனிப்படை போலீசார் திண்டிவனம்- மரக்காணம் சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது சந்தேகத்துக்குஇடமாக வந்த மினி வேனை மறித்து சோதனை செய்தனர். உடனே போலீசாரை கண்டவுடன் வேனில் வந்தவர்கள் தப்பிக்க முயற்சி செய்தனர்.

    உஷாரான போலீசார் அவர்களை மடக்கி பிடித்து வாகனத்தில் சோதனை செய்தனர். சோதனையில் ரூ. 2 லட்சம் மதிப்பிலான புதுவை மது பாட்டில்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதுஅதனை போலீசார் பறிமுதல் செய்தனர். இவை அனைத்தும் திண்டிவனம் மதுவிலக்கு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது. மது பாட்டில்கள் கடத்தி வந்ததாக புதுவை மாநிலத்தை சேர்ந்த 2 பேரை கைது செய்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    • மோட்டார் சைக்கிளை வேகமாக ஓட்டிவந்து, 2 பேர் மீதும் மோதுவது போல் நிறுத்தியுள்ளார்.
    • நான் அப்படிதான் செய்வேன். என கூறி, கையில் வைத்திருந்த கத்தியால், 2 பேரையும் குத்திவிட்டு தலைமறைவாகிவிட்டார்.

    புதுச்சேரி:

    காரைக்கால் அருகே கோட்டுச்சேரி முத்துசாமி பிள்ளை வீதியைச்சேர்ந்தவர் லட்சுமணன். இவர், கோட்டுச்சேரி ஆர்த்தி நகரில் வசிக்கும் தனது தம்பி முருகராஜை, வீட்டு வாசலில் சந்தித்து பேசிகொண்டிருந்தார்.அப்போது , எதிர்வீட்டில் வசிக்கும் வாலிபர் தட்சிணாமூர்த்தி என்பவர், மோட்டார் சைக்கிளை வேகமாக ஓட்டிவந்து, 2 பேர் மீதும் மோதுவது போல் நிறுத்தியுள்ளார். ஏன் இப்படி செய்கிறாய் என இருவரும் கேட்டபோது, நான் அப்படிதான் செய்வேன் என கூறினார்.. பின்னர். அண்ணன், தம்பி இருவர் வீட்டினுள் சென்றபிறகு, தட்சிணாமூர்த்தி முருகராஜ் வீட்டின் மீது கற்களை வீசினார்

    இதனை வெளியே வந்த அண்ணன், தம்பி இருவரும் ஏன் வீட்டு மீது கல்லை வீசினாய் என கேட்டபோது, நான் அப்படிதான் செய்வேன். என கூறி, கையில் வைத்திருந்த கத்தியால், 2 பேரையும் குத்திவிட்டு தலைமறைவாகிவிட்டார்.இது குறித்து, லட்சுமணன், கோட்டுச்சேரி போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து, தட்சிணாமூர்த்தியை கைது செய்தனர். 

    • இவர் வீட்டுவேலை செய்து வருகிறார். இவருக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளது.
    • அவரது செல்போனுக்கு, ஆபசாமாக குறுஞ்செய்தி அனுப்பியதாக கூறப்படுகிறது.

    புதுச்சேரி:

    காரைக்கால் மெய்தீன்பள்ளி வீதி, ஆயிஷா காலணியை சேர்ந்தவர் தஸ்லிமா. இவர் வீட்டுவேலை செய்து வருகிறார். இவருக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளது.தஸ்லிமா ஏற்கெனவே குடியிருந்த பைபாஸ் சாலை தீன்ஸ்பார்க்கில் வசிக்கும் உசேன்(வயது21) என்பவர், அடிக்கடி மது அருந்திவிட்டு, ஆயிஷா காலணி அருகே வந்து, தஸ்லிமாவிடம், உங்கள் மூத்த மகளை காதலிப்பதாக கூறி ஆபசமாக திட்டிவந்துள்ளார். இதனால் பயந்த தஸ்லிமா, தனது மூத்த மகளை, மயிலாடுதுறையில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு அனுப்பி வைத்துவிட்டார்.மேலும் ஆயிஷா காலணியில் இருந்தால் உசேன்தொடர்ந்து சண்டை போடுவார் என பயந்து, மெய்தீன்பள்ளிவாசலில் உள்ள உறவினர் வீட்டுக்கு தஸ்லிமா சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.

    இந்நிலையில், உசேன், நேற்று முன்தினம் தஸ்லிமா செல்போனுக்கு போன் செய்துள்ளார். அதை தஸ்லீமா எடுக்க மறுத்ததால், அவரது செல்போனுக்கு, ஆபசாமாக குறுஞ்செய்தி அனுப்பியதாக கூறப்படுகிறது. இது குறித்து தஸ்லீமா உஷேனிடம் கேட்டபோது, நான் அப்படிதான் செய்வேன். மீறி கேட்டால் கொலை செய்துவிடுவேன் என கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து, தஸ்லிமா காரைக்கால் நகர போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில், போலிசார் வழக்கு பதிவுசெய்து, உசேனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    • சாரதா வீட்டில் தனியாக இருந்தார். காலை 11.30 மணியளவில் அவரின் வீட்டில் பலத்த வெடி சத்தம் கேட்டது.
    • போலீசார் விரைந்து வந்து படுகாயமடைந்த சாரதாவை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    புதுச்சேரி:

    புதுவை ரெயின்போ நகர் 3-வது குறுக்குத்தெருவை சேர்ந்தவர் குருமூர்த்தி (வயது 50). வட்டிக்கடை நடத்தி வருகிறார்.

    இவரது மனைவி சாரதா(43). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இன்று காலை வழக்கம்போல குருமூர்த்தியும், மகன்களும் வட்டிக்கடைக்கு சென்றுவிட்டனர். சாரதா வீட்டில் தனியாக இருந்தார். காலை 11.30 மணியளவில் அவரின் வீட்டில் பலத்த வெடி சத்தம் கேட்டது.

    அருகிலிருந்தவர்கள் ஓடிச்சென்று பார்த்தனர். வீட்டின் மெயின்கதவு நிலையோடு பெயர்ந்து கிடந்தது. அருகிலிருந்த வீட்டின் ஜன்னல் விரிசல் விட்டிருந்தது. வீட்டுக்குள் சாரதா காயமடைந்து கிடந்தார். உடனடியாக போலீசார், தீயணைப்பு துறைக்கு தகவல் தரப்பட்டது.

    போலீசார் விரைந்து வந்து படுகாயமடைந்த சாரதாவை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தீயணைப்புத்துறையினர் அங்கு வந்து தீயை அணைத்தனர். சிலிண்டர் வெடித்திருக்கலாம் என சந்தேகம் ஏற்பட்டது.

    ஆனால் 2 சிலிண்டரும் முழுமையாக இருந்தது. இதனால் வீட்டில் வெடிசத்தம் ஏற்பட்டது எதனால்? வெடிமருந்து வைத்திருந்தார்களா? நாட்டு வெடிகுண்டு ஏதும் வீசப்பட்டதா? எனபோலீசார் விசாரித்து வருகின்றனர்.

    இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • அம்பகரத்தூர் தாமானாங்குடி அருகே, ஏற்கெனவே வலுவிழந்து காணப்பட்ட சிறிய பாலம் ஒன்று உள் வாங்கி இடிந்து விழுந்தது.
    • வாகனங்களை திருப்பிவிட்டதோடு, பாலத்தை உடனடியாக சரி செய்ய கலெக்டர் உத்தரவிட்டார்.

    புதுச்சேரி:

    காரைக்கால் முதல் அம்பகரத்தூர் வரை செல்லும் பிரதான சாலையின் குறுக்கே, பல்வேறு பெரிய பாலம் மற்றும் சிறிய பாலங்கள் உள்ளது. இத்தகைய பாலங்கள் வழியே கனரக வாகனங்கள் உள்ளிட்ட பல்வேறு வாகனங்கள் தினசரி சென்று வருகின்றது. இவற்றில் பல சிறிய பாலங்கள் வலுவிழந்து காணப்படுவதால், சம்பந்த ப்பட்ட பாலங்களையும், பாலத்தை ஒட்டிய சாலைகளையும் சரி செய்யவேண்டும் என, பொதுமக்கள் கடந்த பல மாதமாக வலியுறுத்தி வந்தனர். ஆனால், மாவட்ட பொதுப்பணித்துறை இந்த புகார் குறித்து, கண்டும் கானாமல் இருந்துவந்தது. மாவட்ட நிர்வாகமும், பொதுப்பணித்துறையை பாலஙக்ளை சரி செய்ய வலியுறுத்தவில்லை.

    இந்நிலையில், கடந்த சில நாட்களாக பெய்த தொடர்மழையில், அம்பகரத்தூர் தாமானாங்குடி அருகே, ஏற்கெனவே வலுவிழந்து காணப்பட்ட சிறிய பாலம் ஒன்று உள் வாங்கி இடிந்து விழுந்தது. இதன்காரணமாக, காரைக்கால் முதல் அம்பகரத்தூர், பேரளம், கும்பகோணம் வழியே போக்குவரத்து துண்டி க்கப்பட்டது. பொதுமக்கள் இறங்கி, வேறு வாகனங்களில் செல்லும் நிலை உருவானது. விபரம் அறிந்த காரைக்கால் மாவட்ட கலெக்டர் முகம்மது மன்சூர், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் சந்திரசேகர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் சென்று, இடிந்த பாலத்தை ஆய்வு செய்து மாற்று பாதையில் வாகனங்களை திருப்பி விட்டதோடு, பாலத்தை உடனடியாக சரி செய்ய கலெக்டர் உத்தரவிட்டார். பாலம் சரி செய்யும் பணியில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

    • உலக நாதன் மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படையில் அதிகாரியாக பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றுள்ளார்.
    • உலகநாதன் குறிப்பிட்ட அந்த செயலி மூலம் பிட்காயினில் ரூ.15 லட்சத்தை முதலீடு செய்தார்.

    புதுச்சேரி:

    புதுவை கோரிமேடு பூபாலன் நகரை சேர்ந்தவர் உலக நாதன் (வயது 49). மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படையில் அதிகாரியாக பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றுள்ளார்.

    தற்போது புதுவையில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். உலகநாதன் பிட்காயினில் முதலீடு செய்ய விரும்பினார். அதற்காக கடந்த சில மாதங்களுக்கு முன் இணைய தள செயலியை செல்போனில் பதிவிறக்கம் செய்தார். அதில் இருந்த செல்போன் எண்ணில் உலக நாதன் தொடர்பு கொண்டு பேசினார்.

    அப்போது எதிர்முனையில் பேசிய நபர் தன்னை ஆன்லைன் வர்த்தக மேலாளர் மனோஜ் என்றும், பிட்காயினில் முதலீடு செய்தால் அதிக லாபம் பெற முடியும், இதில் முதலீடு செய்த பலர் கோடி கோடியாக சம்பாதித்துள்ளனர் என்று ஆசை வார்த்தைகளை அள்ளிவிட்டார்.

    இதனை உண்மை என்று நம்பிய, உலகநாதன் குறிப்பிட்ட அந்த செயலி மூலம் பிட்காயினில் ரூ.15 லட்சத்தை முதலீடு செய்தார். அடுத்த சில நாட்களில் அந்த செயலியின் அனைத்து இணைப்புகளும் துண்டிக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த உலகநாதன், மனோஜை தொடர்பு கொள்ள முயன்றார். ஆனால் அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது.

    இதனால் தான் மோசடி செய்யப்பட்டதை அறிந்த உலகநாதன், இதுகுறித்து புதுவை சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் கீர்த்தி வழக்குப்பதிவு செய்து, மோசடி நபர் குறித்து விசாரித்து வருகிறார்.

    நகையை மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த ஊர்க்காவல் படை வீரர்

    புதச்சேரி:

    காரைக்கால் மாவட்ட காவல் துறையில், ஊர்க்காவல்படை வீரராக பணிபுரிந்து வருபவர் ராஜேஷ்கண்ணா. இவர் நேற்று முன்தினம், காரைக்கால் காத்தா பிள்ளை கோடி சிக்னலில் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார். அப்போது ரூ. 75 ஆயிரம் மதிப்புடைய தங்க செயின் ஒன்று சாலையில் கிடந்துள்ளது.

    இதனை கண்டெடுத்த ராஜேஷ் கண்ணா, உரிய விசாரணை மற்றும் காவல்துறை தலைமையகம் உத்தரவின் பேரில், உரியவரிடம் ஒப்படைத்தார். இதுகுறித்து தகவல் அறிந்த காரைக்கால் மாவட்ட சீனியர் போலீஸ் சூப்பிரண்டு லோகேஸ்வரன் ராஜேஷ் கண்ணாவை பொன்னாடை போர்த்தி பாராட்டினார். விபரம் அறிந்த பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களும் ராஜேஷ் கண்ணாவை பாராட்டி வருகின்றனர். இந்த விவரம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    • காரைக்கால் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோர எல்லைகளில் தொடர் மழை பெய்துவரு கிறது.
    • கடல் சீற்றம் காரணமாக மாவட்ட மீன்வளத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது,

    புதுச்சேரி:

    இலங்கை அருகே தென்மேற்கு வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்ட லம் நிலை கொண்டுள்ள தால், காரைக்கால் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோர எல்லைகளில் தொடர் மழை பெய்துவரு கிறது.நேற்று முன்தினம் இரவு முதல், விடிய, விடிய லேசான மழை பெய்தது. நேற்று காலை 10 மணிக்கு மேல், காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. காற்றின் வேகம் அதிகரித்து காணப்பட்டது. தொடர்ந்து பெய்து வந்த மழை மாலை 3 மணிக்கு மேல் மீண்டும் காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. கடற்கரையில் கடல் சீற்ற மாக காணப்பட்டது.

    லேசான மழை பெய்து வருகிறது. தொடர் மலை மற்றும் கடல் சீற்றம் காரணமாக மாவட்ட மீன்வளத்துறை எச்சரிக்கையைத் தொடர்ந்து, மீனவர்கள் நேற்று 3-வது நாளாக மீன் பிடிக்க செல்ல வில்லை. கடலில் ஏற்கெனவே மீன் பிடித்து கொண்டிருந்த மீனவர்களும் தற்போது கரை திரும்பி வருகின்றனர். 500க்கும் மேற்பட்ட விசைப் படகுகளும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பைபர் படகு களும் துறைமுகம் மற்றும் மீனவ கிராமங்களில் பாது காப்பாக நிறுத்திவைக் கப்பட்டுள்ளது. காரைக்கா லில் 11 மீனவ கிராமங்களை சேர்ந்த சுமார் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் மற்றும் மீனவத் தொழிலாளர்கள் கடலுக்கு செல்லவில்லை.   காரைக்கால் கடல் கொந்தளிப்புடன் சீற்றமாக காணப்படுவதால் கடற்கரை பகுதியில், பொது மக்களுக்கும் சுற்றுலா வாசி களுக்கும் குளிக்க தடை விதித்து போலீசார் பாது காப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றதொடர் மழையால் காரைக்கால் மாவட்டத்தில பள்ளிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டு உள்ளது. காரைக்காலில் பல்வேறு பகுதிகளில் உள்ள சாலைகள் மற்றும் தாழ்வான பகுதிகலில் மழை நீர் வெள்ளம் போல் சூழ்ந்து காணப்படுவதால் போக்கு வரத்து பெரிதும் பாதிக் கப்பட்டுள்ளது. காரைக்காலில் பெரும்பா லான பகுதிகளில் சாலை கள் குண்டும் குழியு மாக இரு ப்பதால் போக்கு வரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. வயல்வெளிகளில் அறு வடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் மழையின் காரணமாக சாய்ந்து இருப்பதால் அறுவடை பணி பாதிக்க ப்பட்டுள்ளது. இதனால் அறுவடைப்படி பெரும் பாதிப்புக்கு உள்ளா னாலும், விவசாயிகள் நெல்லின் ஈரப்பதத்தை அதிகரிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். 

    • சிறுவர்கள் ஓட்டுனர் உரிமம் இல்லாமல் இருசக்கர வாகனத்தை ஓட்டி செல்வது அதிகரித்து வருகிறது.
    • பெற்றோர்கள் தங்களுடைய குழந்தைகள் ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வாகனத்தை இயக்க அனுமதிக்க வேண்டாம்.

    புதுச்சேரி:

    புதுவை போக்குவரத்து துறை ஆணையர் சிவகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    புதுவையில் சிறுவர்கள் ஓட்டுனர் உரிமம் இல்லாமல் இருசக்கர வாகனத்தை ஓட்டி செல்வது அதிகரித்து வருகிறது. வாகனம் ஓட்டும் சிறுவர்களின் பெற்றோருக்கு 3 ஆண்டு ஜெயில் தண்டனை மற்றும் ரூ.25 ஆயிரம் அபராதம் விதிப்பதோடு, வாகனத்தின் பதிவுச் சான்று ஓராண்டிற்கு ரத்து செய்யப்படும்.

    மேலும் வாகனத்தை ஓட்டிய சிறுவர்களுக்கு 25 வயது வரை பழகுனர் மற்றும் ஓட்டுனர் உரிமம் தகுதி ரத்து மற்றும் சிறார் சட்டத்தின் கீழ் வழக்கு தொடரப்படும். எனவே, பெற்றோர்கள் தங்களுடைய குழந்தைகள் ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வாகனத்தை இயக்க அனுமதிக்க வேண்டாம்.

    மேலும் புதுவையில் பலர் போக்குவரத்து விதிமுறைகளை மீறி வாகனம் ஓட்டுவது ஊர்ஜிதம் ஆகியுள்ளது. ஹெல்மெட் அணியாதது உள்ளிட்ட விதிமீறல்களில் ஈடுபடுவோருக்கு முதல்முறை ரூ.ஆயிரம் அபராதம் விதிப்பதோடு, 3 மாதத்திற்கு ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்படும்.

    வாகனம் ஓட்டும்போது ஓட்டுனர் உரிமத்தின் ஒரிஜினல் வைத்திருக்க வேண்டும். இல்லையெனில் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும்.

    இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

    • கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காரைக்காலில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
    • மழையால் திருவாரூர் மாவட்டத்திலும் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    காரைக்கால்:

    தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த பகுதியானது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியதால் ராமநாதபுரம், வேதாரண்யம், திருச்சி, மயிலாடுதுறை, சிவகங்கை, தஞ்சாவூர், கும்பகோணம், மானாமதுரை, புதுக்கோட்டை, கொடைக்கானல், நத்தம் உள்ளிட்ட இடங்களில் மழை பெய்தது.

    இதற்கிடையே, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. இதன்படி தமிழ்நாட்டில் ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் மிக கனமழையும், குமரி, தென்காசி, சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர் நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. அந்த வகையில் காரைக்கால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்துவருகின்றது.

    இந்நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காரைக்கால் மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளுக்கு மட்டும் 3-ம் தேதி (நாளை) விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

    ஏற்கனவே, மழை காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    • கூட்டமைப்பினர் குடிமைப்பொருள் வழங்கல்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு கோஷம் எழுப்பினர்.
    • ரேசன் கடைகளை ஒரு மாதத்திற்குள் திறக்காவிட்டால் ஆயிரக்கண்க்கான பெண்களுடன் மீண்டும் முற்றுகை போராட்டம் நடத்துவோம் என்றார்.

    புதுச்சேரி:

    அனைத்து பெண்கள் கூட்டமைப்பு சார்பில் ரேஷன்கடைகளை திறந்து இலவச அரிசி மற்றும் அத்தியாவசிய பொருட்களை வழங்க வலியுறுத்தி இன்று குடிமைப்பொருள் வழங்கல்துறை முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என அறிவித்திருந்தனர்.

    இதற்காக சாரம் பழைய கலெக்டர் அலுவலகம் முன்பு கூட்டமைப்பு நிர்வாகிகள் ஒன்று திரண்டனர். அங்கிருந்து ஜனநாயக மாதர் சங்க செயலாளர் இளவரசி தலைமையில் ஊர்வலமாக புறப்பட்டனர். ஊர்வலத்தை அகில இந்திய மாதர் சங்க செயற்குழு உறுப்பினர் சுதா சுந்தர்ராமன் தொடங்கி வைத்தார்.

    ஊர்வலத்தில் இந்திய தேசிய மாதர் சங்க செயலாளர் அமுதா, தலித் பெண்கள் கூட்டமைப்பு சரளா, சமம் பெண்கள் சுய சார்பு இயக்கம் சிவகாமி, ஜனநாயக மாதர் சங்க நிர்வாகிகள் முனியம்மாள், சத்யா, உமா, ஹேமலதா உட்பட 100க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்றனர்.

    ஊர்வலம் கிழக்கு கடற்கரை சாலையில் வந்தபோது திடீரென சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து நின்றது. சாலையில் அமர்ந்து பெண்கள் கூட்டமைப்பினர் கோஷம் எழுப்பினர்.

    இதையடுத்து போலீசார் அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்த முயன்றனர். ஆனால் பெண்கள் போராட்டத்திற்கு ஒரு பெண் போலீசார்கூட இல்லை. இதனால் பெண்கள் மீது கை வைத்ததால் போலீசாருக்கும், அவர்களுக்கும் வாக்குவாதம், தள்ளு, முள்ளு ஏற்பட்டது.

    இதையடுத்து கூட்டமைப்பினர் குடிமைப்பொருள் வழங்கல்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு கோஷம் எழுப்பினர். வேண்டாம், வேண்டாம் ரெஸ்டோ பார் வேண்டாம், வேண்டும், வேண்டும் ரேஷன்கடைகள் வேண்டும் என கோஷமிட்டனர். மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு செயலாளர் ராஜாங்கம், நிர்வாகிகள் ராமச்சந்திரன், ராம்ஜி, பிரபுராஜ் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.

    இது குறித்து கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் இளவரசி நிருபர்களிடம் கூறும்போது, ரேசன் கடைகளை ஒரு மாதத்திற்குள் திறக்காவிட்டால் ஆயிரக்கண்க்கான பெண்களுடன் மீண்டும் முற்றுகை போராட்டம் நடத்துவோம் என்றார்.

    ×