search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காரைக்காலில்  12 பவுன் போலி நகையை விற்க முயன்ற வாலிபர் கைது
    X

    காரைக்காலில் 12 பவுன் போலி நகையை விற்க முயன்ற வாலிபர் கைது

    • காரைக்காலில் 12 பவுன் போலி நகையை விற்க முயன்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.
    • மிஷனில் வைத்து பார்த்த போது 916 தரம் உள்ள தங்க நகை என காட்டியது.

    புதுச்சேரி:

    காரைக்கால் ராஜாத்தி நகரில் வசிப்பவர் கைலாஷ். இவர் காரைக்கால் பெரம சாமி பிள்ளை விதியில் நடத்தி வருகிறார். இவரது நகைக்கடைக்கு காரைக்கால் சின்னக்கண்ணு செட்டி வீதியைச்சேர்ந்த பரசு ராமன் (வயது30). என்ற வாலிபர் சென்றார். இவர் 12 பவுன்தங்க செயின் தன்னிடம் இருப்ப தாகவும், அவசரத் தேவைக்கு பணம் தேவைப்படுவதால், அதனை எடுத்து கொண்டு பணம் தரும்படி கேட்டுள்ளார். அதன்பேரில், கைலாஷ், நகையை கேரட் சரி பார்க்கும் மிஷனில் வைத்து பார்த்த போது, 916 தரம் உள்ள தங்க நகை என காட்டியது. ஆனால், உரசி பார்க்கும்போது சந்தேகம் எழுந்ததால், தனது பெரி யப்பா மகன் பாலமுரளிக்கு போன் செய்து விபரத்தை தெரிவித்தார். பாலமுரளி அவசரப்பட்டு பணத்தை கொடுத்துவிடாதே, நான் வந்து பார்க்கிறேன் என கூறி, ஜுவல்லரிக்கு சென்று, நகையை பரிசோதித்தார்.

    அப்போது, நகையின் மேல்புறம் மட்டும் 916 தங்கத்தால் முலாம் பூசி, உள்ளே செம்பு கம்பி போல் தெரிந்ததை அவர் உறுதி செய்தார். தொடர்ந்து, ஜுவல்லரியில் தற்போது 12 பவுனுக்கு பணம் இல்லை. நாளை வந்தால் மொத்தமாக தருகிறோம் என கூறி, பரசுராமனை சந்தேகம் வராதபடி சாதுர்யமாக அனுப்பிவைத்தனர். காரைக்கால் மாவட்டத்தில், இது போல் போலி தங்க நகைகளை விற்பனை செய்யும் நபர்கள் சுற்றிவருவதால், ஜுவல்லரி கடை உரிமையாளர்கள் சங்கத்தில் இது குறித்து, கைலாஷ் ஆலோசனை செய்து, பரசுராமை கையும் களவுமாக பிடித்து, போலீ சில் ஒப்படைக்க முடிவு செய்தனர்.

    மறுநாளான பணம் வாங்கும் சந்தோசத்தில் வந்த பரசுராமனை, கைலாஷ் மற்றும் சங்க நிர்வாகிகள் பிடித்து, காரைக்கால் நகர போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில், இன்ஸ்பெக்டர் லெனின் பாரதி உத்தரவின் பேரில், சப்-இன்ஸ்பொக்டர்கள் முத்துசாமி, மோகன் மற்றும் போலீசார் நகைக்கடைக்கு சென்று, பரசுராமனை கைது செய்தனர். பரசுராமனிடம் நடத்திய விசாரணையில், நகையை கொடுத்து விற்கச் சொன்னது திருவாரூர் மாவட்டம் கொல்லா புரத்தை சேர்ந்த ஒரு வாலி பர் என்பது தெரிய வந்தது. தொடர்ந்து, அந்த வாலி பரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் காரைக்காலில் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.

    Next Story
    ×