என் மலர்
புதுச்சேரி
- வெளிமாநில ஆண்களும்-பெண்களும் குடித்துவிட்டு நடனம் ஆடுவதாக பொதுமக்கள் புகார் அளித்திருந்தனர்.
- மது விருந்துக்கு பயன்படுத்திய மது பாட்டில்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
புதுச்சேரி:
புதுவை அடுத்து தமிழக பகுதியான ஆரோவில் அருகே இடையஞ்சாவடி கிராமத்தில் இருந்து திருச்சிற்றம்பலம் கூட்டுரோடு செல்லும் குதிரை பண்ணை சாலையில் தனியார் விடுதி உள்ளது.
அங்கு வெளிமாநில ஆண்களும்-பெண்களும் குடித்துவிட்டு நடனம் ஆடுவதாக பொதுமக்கள் புகார் அளித்திருந்தனர்.
சம்பவ இடத்திற்கு சென்ற ஆரோவில் இன்ஸ்பெக்டர் கிருஷ்ண மூர்த்தி விடுதி உள்ளே சென்று பார்த்தனர்.
அங்கு சுமார் 20 பெண்கள் மதுபோதையில் நடனமாடிக் கொண்டிருந்தனர்.
அவர்களுக்கு மது ஊற்றி கொடுத்து நடனமாட வைத்த ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த அனுஜ்பிரபாஜ் (வயது 30) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
மேலும் மது விருந்துக்கு பயன்படுத்திய மது பாட்டில்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
- ராகுல்காந்தி வாழ்க... வாழ்க... என கூறியபடி பிரகாஷ் மணமகள் கழுத்தில் தாலி கட்டினார்.
- ராகுல்காந்தி முன்னிலையில் இந்த திருமணம் நடைபெற வேண்டுமென இருவருமே விரும்பினர்.
புதுச்சேரி:
புதுச்சேரி காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் விழுப்புரம் மாவட்டம் வி.புதூர் கிராமத்தை சேர்ந்த கட்சி பிரமுகர் பிரகாஷ் மற்றும் புதுச்சேரி ஆண்டியார் பாளையத்தை சேர்ந்த அன்பரசி ஆகியோரது திருமணத்தை முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, மாநில தலைவர் வைத்திலிங்கம் எம்.பி. ஆகியோர் நடத்தி வைத்தனர்.
இதில் ராகுல்காந்தி வாழ்க... வாழ்க... என கூறியபடி பிரகாஷ் மணமகள் கழுத்தில் தாலி கட்டினார்.
அப்போது மாநில தலைவர் வைத்திலிங்கம் எம்.பி. கூறியதாவது:-
ராகுல்காந்தி முன்னிலையில் இந்த திருமணம் நடைபெற வேண்டுமென இருவருமே விரும்பினர்.
ஆனால் அதற்கான சூழல் அமையாத நிலையில் தற்போது கட்சி அலுவலகத்தில் அனைவரது ஆதரவோடு திருமணம் செய்து கொண்டுள்ளனர் என்றார்.
இப்போது ஆட்சியில் இருக்கிறவர்கள் நாட்டின் சுதந்திரத்தை தாங்கள் தான் கொண்டு வந்த மாதிரி பாவனை காட்டுகிறார்கள். ஆனால் சுதந்திரம் பெற உயிர் தியாகம் செய்தது காங்கிரஸ் கட்சி மட்டும்தான் என்று கூறினார்.
- கடந்த சில நாட்களுக்கு முன்பு ராஜ்குமாரை திடீரென காணவில்லை.
- அரசு ஆஸ்பத்திரியின் 2-வது தளத்தில் உள்ள கழிவறையில் இருந்து துர்நாற்றம் வீசியது.
புதுச்சேரி:
புதுவை சஞ்சீவி நகர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது32). கொத்தனார். குடிப்பழக்கத்துக்கு அடிமையான இவர் போதை மறுவாழ்வு மையத்துக்கு சென்று சிகிச்சை பெற்றும் குடிப்பழக்கத்தை கைவிடவில்லையாம்.
இந்த நிலையில் அவரது அண்ணன் கோபி சர்க்கரை நோய்க்காக கதிர்காமம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு துணையாக ராஜ்குமார் இருந்து கவனித்து வந்தார்.
இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு ராஜ்குமாரை திடீரென காணவில்லை. அவரை பல்வேறு இடங்களில் தேடியும் கண்டு பிடிக்கவில்லை.
இந்த நிலையில் அரசு ஆஸ்பத்திரியின் 2-வது தளத்தில் உள்ள கழிவறையில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதனால் சந்தேகம் அடைந்த ஆஸ்பத்திரி ஊழியர்கள் அங்கு சென்று பார்த்தனர். அப்போது ராஜ்குமார் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த கோரிமேடு போலீசார் அழுகிய நிலையில் இருந்த அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
- கொள்கை முரண்பாடுகள் இருந்தாலும் சுதந்திர தின விழா போன்றவற்றில் அனைவரும் பங்கேற்க வேண்டும்.
- இளைஞர்களுக்கு நல்ல செய்தியை சொல்வோம்.
புதுச்சேரி:
புதுவை கவர்னர் மாளிகையில் நடந்த விருந்தில் கவர்னர் தமிழிசை பேசியதாவது:-
கொள்கை முரண்பாடுகள் இருந்தாலும் சுதந்திர தின விழா போன்றவற்றில் அனைவரும் பங்கேற்க வேண்டும்.
கவர்னர் விருந்து என்பது அலட்சியம் செய்யும் விழா இல்லை. மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி சுதந்திர போராட்ட வீரர்கள், பத்ம ஸ்ரீ விருது பெற்றவர்கள், மாற்றுதிறனாளிகள் என பலரும் இங்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
இங்கு வந்தால் அவர்கள் எல்லோரையும் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கும். கலந்து கொள்ளாததால் அவர்களுக்கு தான் நஷ்டம்.
அன்போடு அழைத்ததன் பேரில் வந்தவர்களுக்கு வாழ்த்து. பிரச்னைகளை பேசி தீர்த்து கொள்வோம். இளைஞர்களுக்கு நல்ல செய்தியை சொல்வோம்.
இவ்வாறு தமிழிசை பேசினார்.
முன்னதாக கவர்னர் தேநீர் விருந்தை தி.மு.க., காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சிகள் புறக்கணித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
- பெற்றோரிடம் பார்மசி படிப்பு பிடிக்கவில்லை என்று கூறினார்.
- செல்போனை சுவிட்ச் ஆப் செய்துவிட்டு வீட்டில் உள்ள மின்விசிறி யில் புடவையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
புதுச்சேரி:
காரைக்காலில் பார்மசி படிப்பை தொடர விருப்பம் இல்லாமல் கல்லூரி மாண வன் தூக்கு போட்டு தற்கொ லை செய்து கொண்டார். காரைக்கால் அன்பு நகரை சேர்ந்தவர் லூர்து தாஸ். இவருடைய மூத்த மகன் அருள் பெனடிக் (வயது 19). இவர் நாகப்பட்டி னத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பார்மசி படித்து வந்தார். இந்நிலையில் அருள் பெனடிக் தனது பெற்றோரிடம் பார்மசி படிப்பு பிடிக்கவில்லை நண்பர்களோடு சேர்ந்து வேற படிப்பை படிக்க போவதாக கூறினார். அதற்கு அருள்பெனடிக் தந்தை லூர்து தாஸ் வேறு கல்லூரியில் சேர்த்துவிட நடவடிக்கை எடுக்கிறேன் என்று கூறினார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் லூர்து தாஸ் மனைவி மற்றும் 2-வது மகன் யுவராசுடன் உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்காக வெளி யூர் சென்றனர். நிகழ்ச்சிக்கு அருள் பெனடிக்கையும் வருமாறு பெற்றோர் அழைத்தனர். அதற்கு தனக்கு வேலை இருப்பதாக கூறி வீட்டில் இருந்தார். இதனையடுத்து அருள் பெனடிக் செல்போனை சுவிட்ச் ஆப் செய்துவிட்டு வீட்டில் உள்ள மின்விசிறி யில் புடவையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். தந்தை லூர்துதாஸ் பெனடிக்கின் செல்போனிற்கு அழைத்த போது அது சுவிட்ச் ஆப் செய்துள்ளதாக வந்தது. இதனால் அருள் பெனடிக்கின் நண்பர்களை தொடர்பு ெகாண்டு வீட்டிற்கு சென்று பார்க்க சொன்னார்.
அதன்படி அருள்பெனடி க்கின் நண்பர்கள் அவரது வீட்டிற்கு சென்று பார்த்து போது அருள் பெனடிக் தூக்கில் பிணமாக தொங்கி யதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனே வீட்டின் கதவை உடைத்து அருள்பெனடிகின் நண் பர்கள் உள்ளே சென்று தூக்கில் தொங்கிய அருள்பெனடிக்கை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் காரைக்கால் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சை க்கு சேர்த்தனர். அங்கு பெனடிக்கை பரிசோ தித்த டாக்டர்கள் இவர் ஏற்கனவே இறந்து விட்ட தாக கூறினார். இது குறித்து காரைக்கால் போலீ சார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஒவ்வொரு மாதமும், 15-ந் தேதி, பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாம், காரைக்கால் மாவட்டத்தில் நடைபெற்று வருகிறது.
- வாய்ப்பினை பயன்படுத்தி தங்கள் குறைகளுக்கு தீர்வு காணவேண்டுகிறோம்.
புதுச்சேரி:
காரைக்கால் மாவட்ட கலெக்டரின் செயலர் பக்கிரிசாமி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
புதுவை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், முதல்-அமைச்சர் ரங்கசாமி ஆகியோர் அறிவுறுத்தல்படி, ஒவ்வொரு மாதமும், 15-ந் தேதி, பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாம், காரைக்கால் மாவட்டத்தில் நடைபெற்று வருகிறது. இம்மாதம் நாளை 15-ந் தேதி சுதந்திரதினம் விடுமுறை என்பதால், அன்றைய தினம் நடைபெறவேண்டிய மக்கள் குறைதீர்ப்பு முகாம், இம்மாதம் 17-ந் தேதி நடைபெறும். முகாமில், வழக்கம் போல், அனைத்து அரசுத்துறை அதிகாகள் முன்னிலையில், கலெக்டர் குலோத்துங்கன் காலை 9.30 மணி முதல், பிற்பகல் 10 மணி வரை மக்கள் குறைகளை கேட்பார். பொதுமக்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி தங்கள் குறைகளுக்கு தீர்வு காணவேண்டுகிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- கட்சி அலுவலகம் கட்டுவதாகவும், அதற்கு பேக்கரி உரிமையாளரிடம் 20 ஆயிரம் மதிப்புள்ள சிமெண்டு மூட்டைகள் வாங்கித் தர வேண்டும் என்று கேட்டுள்ளனர்.
- ரெட்டியார்பாளையம் போலீசார் விசாரணை நடத்தினர்.
புதுச்சேரி-விழுப்புரம் சாலை, ரெட்டியார்பாளையம் போலீஸ் நிலையத்தில் இருந்து 100 மீட்டர் தூரத்தில் பேக்கரி உள்ளது.
அந்த கடைக்கு வந்த 8 பேர் கொண்ட கும்பல் அங்கு பணியில் இருந்த ஊழியர் ஆனந்திடம் தகராறு செய்தது. அடுத்த சில நிமிடத்தில் அந்த கும்பல் ஆனந்தை சுற்றி வளைத்து சரமாரியாக தாக்கி பொருட்களை சூறையாடினர்
உடனே அங்கிருந்த ஊழியர்கள் ஆனந்தை மீட்டனர். பேக்கரிக்குள் 8 பேர் கொண்ட கும்பல் ஊழியரை தாக்கும் சி.சி.டி.வி. வீடியோ காட்சி சமூக வலைத்தளத்தில் வைரலாகியது.
இது தொடர்பாக ரெட்டியார்பாளையம் போலீசார் விசாரணை நடத்தினர். கடந்த சில நாட்களுக்கு முன்பு, உழவர்கரை பகுதியைச் சேர்ந்த ஒரு கும்பல், கட்சி அலுவலகம் கட்டுவதாகவும், அதற்கு பேக்கரி உரிமையாளரிடம் 20 ஆயிரம் மதிப்புள்ள சிமெண்டு மூட்டைகள் வாங்கித் தர வேண்டும் என்று கேட்டுள்ளனர்.
பேக்கரி உரிமையாளர் சிமெண்டு வாங்கித் தருவதற்கு காலம் தாழ்த்தி வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் தான் உழவர் கரை பகுதியைச் சேர்ந்த ஆனந்த், சுப்ரமணி உள்ளிட்ட 8 பேர் கொண்ட கும்பல் பேக்கரிக்குள் புகுந்து ஊழியர் ஆனந்தை தாக்கியது விசாரணையில் தெரியவந்தது.
கடை உரிமையாளர் அளித்த புகாரின்பேரில், உழவர்கரை ஆனந்த், சுப்ரமணி உள்ளிட்ட 8 பேர் மீது கொலை மிரட்டல், கடை சூறை, அடித்து தாக்குதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
மேலும் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட உழவர்கரையை சேர்ந்த சுப்ரமணி (33) என்பவரை கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைத்தனர். மற்றவர்களை தேடி வருகின்றனர்.
- பல்வேறு அரசியல் அமைப்பினர், பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்
- சாதாரணமாக நடமாடும் நாய், பூனை, எலிகளை ஆஸ்பத்திரி நிர்வாகம் கட்டுப்படுத்த வேண்டும்
புதுச்சேரி:
காரைக்கால் நகரின் மையப் பகுதியில் அரசு ஆஸ்பத்திரி இயங்கி வருகிறது. இந்த ஆஸ்பத்திரி கடந்த பல ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் இல்லாமல் இயங்கி வருவதாக பல்வேறு அரசியல் அமைப்பினர், பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். சாதாரண ஜுரம், விபத்து என சென்றால்கூட, அண்டை மாநிலங்களுக்கு டாக்டர்கள் பரிந்துரை செய்யும் அவல நிலை உள்ளது. இந்நிலையில், அண்மையில் அரசு ஆஸ்பத்திரியின் உள்ள லிப்ட் உடைந்த நிலையில் உள்ளது.
கடந்த சில நாட்களாக நகரின் பல இடங்களில் சுற்றித்திரிந்த நாய்களின் கூட்டம், ஆஸ்பத்திரியில் உள்ளே குறிப்பாக பிரசவ பிரிவு, அவசர சிகிச்சை பிரிவு, குழந்தைகள் பிரிவு உள்ளிட்ட பல இடங்களில் சர்வ சாதாரணமாக சுற்றித் திரிவதால், நோயாளிகள் இடையே அச்சம் ஏற்பட்டுள்ளது. மேலும் பெருச்சாளி மற்றும் பூனைகள் பாதுகாக்கப்பட்ட அறுவை சிகிச்சை கூடம், மருந்தகம், கேண்டின் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பகலில் கூட நடமாடுவதால் நோயாளிகள் பெரும் அச்சத்தில் உள்ளனர். எனவே ஆஸ்பத்திரியில் சர்வ சாதாரணமாக நடமாடும் நாய், பூனை, எலிகளை ஆஸ்பத்திரி நிர்வாகம் கட்டுப்படுத்த வேண்டும் என நோயாளிகள் மற்றும் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
- கடுப்பான போலீசார் அவரை கவனிக்க வேண்டிய விதத்தில் கவனித்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.
- மணிகண்டன் மீது ஆயுதங்கள் வைத்து ரகளையில் ஈடுபட்டது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
புதுச்சேரி:
திண்டிவனம் ஏரிக்கரையோரம் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 30). இவர் தனது 6 நண்பர்களுடன் புதுச்சேரி எல்லை பகுதியான சேதராப்பட்டில் உள்ள மதுபானக் கடையில் மது அருந்தியுள்ளனர்.
அப்போது உச்சகட்ட மது போதையில் நண்பர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதனால் மணிகண்டன் தன்னுடன் வந்த நண்பர்களை விரட்டி, விரட்டி சரமாரியாக தாக்கினார். இதனால் அவருடன் வந்த 2 பேர் அங்கிருந்து தப்பி ஓடினர். ஒருவர் மணிகண்டனிடம் வசமாக சிக்கிக்கொண்டார். அவரை மணிகண்டன் பீர் பாட்டிலால் தலையில் தாக்கினார்.
அடி வாங்கிய நண்பர் அவரை விட்டு செல்லாமல் வாடா பிரச்னை ஆகப்போகுது எனக்கூறி அழைத்து செல்கிறார். பின்னர் மணிகண்டன் தன் சட்டையை கழற்றி நண்பரின் தலையில் அமுக்கி அழைத்து செல்கிறார்.
இந்த வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அங்கே மதுபானம் அருந்தி கொண்டிருந்தவர்களை பார்த்து சண்டைக்கு வாடா.. நீ வேண்ணுனா.. வந்து பார்ரா என அவ்வழியே செல்பவர்களை வடிவேலு பாணியில் அழைத்தவாறு ஆபாச வார்த்தைகளால் அர்சித்தவாறு சென்றனர்.
இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் சேதராப்பட்டு போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மது போதையில் ரகளையில் ஈடுபட்டு கொண்டிருந்த மணிகண்டனை போலீஸ் நிலையத்துக்கு வருமாறு அழைத்தனர்.
நீங்கள் காக்கி சட்டை அணிந்திருக்கிறீர்கள், எந்த கம்பெனி செக்யூரிட்டி? எனக்கூறி தொப்பியை தட்டு விட்டு போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
மேலும் நான் யாருனு தெரியுமா? என போலீசாரை தள்ளிவிட்டுள்ளார். இதில் கடுப்பான போலீசார் அவரை கவனிக்க வேண்டிய விதத்தில் கவனித்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். இந்த காட்சி வீடியோவில் பதிவாகி உள்ளது.
மேலும் அவரிடம் அடி வாங்கி ஓட்டம் பிடித்த நண்பர்கள் யாரும் புகார் கொடுக்க முன்வரவில்லை. போலீஸ் நிலையத்தில் வைத்து, மணிகண்டனிடம், வந்த இடத்தில் ஒழுங்கா குடி, இல்லாவிட்டால் தர்ம அடிதான் என அறிவுரை வழங்கினர். தொடர்ந்து மணிகண்டன் மீது ஆயுதங்கள் வைத்து ரகளையில் ஈடுபட்டது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
- விபத்தில் காரில் வந்த கணபதி, வாசிம் முசரப்,மற்றும் மோட்டார் சைக்கிளில் வந்த செல்வம் ஆகியோர் சம்பவ இடத்திலே உயிரிழந்தனர்.
- விபத்தில் 3பேர் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
காரைக்கால்:
புதுவை மாநிலம் காரைக்கால் நகரை சேர்ந்தவர்கள் அருண், சரவணன், கணபதி (வயது 25), வாசிம் முசரப் (22). இவர்கள் காரைக்கால் அடுத்த தமிழகபகுதியான மயிலாடுதுறைக்கு காரில் திரைப்படம் பார்ப்பதற்காக சென்றனர்.
திரைப்படம் பார்த்துவிட்டு காரில் காரைக்காலில் உள்ள அவர்களது வீட்டிற்கு திரும்பினர். இன்று காலை காரைக்கால் கோட்டுச்சேரி அருகே கார் வந்த போது கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மீது வேகமாக மோதியது. மோதிய வேகத்தில் அருகில் இருந்த வாய்காலில் தலைக்குப்புற கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் காரில் வந்த கணபதி, வாசிம் முசரப்,மற்றும் மோட்டார் சைக்கிளில் வந்த செல்வம் ஆகியோர் சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தனர். இதைபார்த்த அருகில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்து இதுகுறித்து காரைக்கால் போக்குவரத்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விபத்தில் காரில் சிக்கிகொண்டு படுகாயம் அடைந்த அருண், சரவணனை மீட்டு சிகிச்சைக்காக காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் விபத்தில் உயிரிழந்த கணபதி, வாசிம் முசரப், செல்வம் ஆகியோரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக காரைக்கால் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்தில் 3பேர் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- ரோபோடிக் முறையில் கணைய புற்றுநோய்க்கு இந்தியாவிலேயே முதல் முறையாக ஜிப்மரில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
- சிறு துவாரங்கள் மூலம் ரோபோடிக் முறையில் ஆபரேஷன் செய்தனர்.
புதுச்சேரி:
புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரியில் வயிற்று வலி காரணமாக 38 வயது பெண் அனுமதிக்கப்பட்டார். சி.டி.ஸ்கேன் பரிசோதனையில் அவருக்கு கணைய புற்றுநோய் இருப்பது தெரியவந்தது.
மேலும் அந்த புற்றுநோய் கல்லீரல் மற்றும் இரைப்பைக்கு ரத்தம் கொண்டு செல்லும் 'சீலியாக் ஆக்ஸிஸ்' எனப்படும் ரத்த நாளத்தை பாதித்து இருப்பது தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து புற்று நோய் எதிர்ப்பு மருந்து கொடுக்கப்பட்டது. 3 சுற்று சிகிச்சைக்கு பிறகு அவருக்கு புற்றுநோய் அளவு குறைந்தது. இருந்தபோதிலும் புற்றுநோயினால் பாதிக்கப்பட்ட ரத்த நாளத்தில் எந்தவித முன்னேற்றமும் இல்லை.
இதைத்தொடர்ந்து டாக்டர்கள் கணையம், மண்ணீரல் மற்றும் சீலியாக் ஆக்ஸிஸ் ரத்த நாளம் ஆகியவற்றை எடுக்கும் அறுவை சிகிச்சையை செய்ய முடிவு செய்தனர்.
பொதுவாக இந்த அறுவை சிகிச்சை 25 முதல் 30 செ.மீ. அளவுக்கு வயிற்று பகுதி கிழிக்கப்பட்டு திறந்த முறையில் (ஓபன் சர்ஜரி) செய்யப்படும். ஆனால், ஜிப்மர் குடலியல் அறுவை சிகிச்சை தலைவர் டாக்டர் கலையரசன் மற்றும் டாக்டர் பிஜூ போட்டாக் கட் தலைமையிலான குழுவினர் கணைய புற்றுநோய்க்கான அறுவை சிகிச்சையை ரோபோடிக் முறையில் 10 மணி நேரம் மேற்கொண்டனர்.
அதாவது, சிறு துவாரங்கள் மூலம் ரோபோடிக் முறையில் ஆபரேஷன் செய்தனர். சிகிச்சை முடிந்த 6-வது நாள் பெண் நோயாளி முழுவதுமாக குணமாகி வீடு திரும்பினார்.
'ரோபோடிக்' அறுவை சிகிச்சையில் குடலியல் அறுவை சிகிச்சை துறை முன்னோடியாக திகழ்வதாகவும், இந்த சிக்கலான அறுவை சிகிச்சையை உலகில் சிலமருத்துவ மனைகளில் மட்டுமே செய்யப்படுவதாகவும் ஜிப்மர் இயக்குனர்ராகேஷ் அகர்வால் தெரிவித்துள்ளார்.
ரோபோடிக் முறையில் கணைய புற்றுநோய்க்கு இந்தியாவிலேயே முதல் முறையாக ஜிப்மரில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாகவும், ரோபோடிக் முறையில் இதர புற்றுநோய்க்கான அறுவை சிகிச்சைகள் இதுவரை 1,400-க்கும் மேற்பட்டவை செய்யப்பட்டுள்ளதாகவும் மருத்துவ கண்காணிப்பாளர் துரைராஜன் கூறினார்.
- கோட்டுச்சேரி போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.
- சட்டைப்பையில், 210 கிராம் கஞ்சா பொட்டலங்கள் இருந்தது கண்டிப்பிடிக்கப்பட்டது.
புதுச்சேரி:
காரைக்கால் அருகே கோட்டுச்சேரி போலீஸ் சரகத்திற்குட்பட்ட அருளப்பிள்ளை தெருவில், வாலிபர் ஒருவர், அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா பொட்டலங்களை விற்பதாக, கோட்டுச்சேரி போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.
இதனையடுத்து இன்ஸ்பெக்டர் அறிவுச்செல்வம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்ற போது, வாலிபர் ஒருவர் போலீசாரை பார்த்ததும் அங்கிருந்து தப்ப முயன்றார். போலீசார் அவரை பிடித்து சோதனை செய்தபோது, அவரது சட்டைப்பையில், 210 கிராம் கஞ்சா பொட்டலங்கள் இருந்தது கண்டிப்பிடிக்கப்பட்டது. தொடர் விசாரணையில், அவர் மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி திருமைஞானம் வேப்பஞ்சே ரியைச்சேர்ந்த கிருஷ்ணகுமார்(வயது24) என்பது தெரியவந்தது. மேலும், அவரது வீட்டு குளியலறையில் மறைத்து வைத்திருந்த 500 கிராம் கஞ்சா பொட்டலங்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.






