என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    • மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, வழக்கத்தை விட வேகமாக காற்று வீசியது.
    • வீரமணி மட்டும் கடலில் தலைகுப்புற கிடந்த படகை பிடித்து உயிர் தப்பினார்.

    புதுச்சேரி:

    காரைக்காலை அடுத்த காரைக்கால் மேடு, மீனவ கிராமத்தைச் சேர்ந்த வீர பிரதாப் என்பவருக்கு சொந்தமான பைபர் படகில், அதே ஊரைச்சேர்ந்த சின்னையன் மகன் ஞானபிராகாசம் (வயது 33), வீரமணி (50) ஆகியோர் நேற்று முன்தினம் மாலை கடலுக்கு மீன்படிக்க சென்றனர். காரைக்கால் மேடு கடற்கரையிலிருந்து கிழக்கே 4 நாட்டிகள் மைல் தொலைவில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போ து, வழக்கத்தை விட வேகமாக காற்று வீசியது. இதன் காரணமாக படகை கரைக்கு திருப்பினர். அப்போது, பலத்த காற்று வீசியதால் படகு தலைகுப்புற கவிழ்ந்தது. இதில் மீனவர்கள் இருவரும், கடலில் விழுந்து மாயமாகினர். பல மணி நேர போராட்டத்திற்கு பிறகு, வீரமணி மட்டும் கடலில் தலைகுப்புற கிடந்த படகை பிடித்து உயிர் தப்பினார்.

    பிறகு படகை நிமிர்த்தி சரி செய்து, ஞானபிராகாசத்தை தேடினார். தேடியும் கிடைக்காததால், கரை திரும்பிய மீனவர் வீரமணி, நடந்த சம்பவத்தை சக மீனவர்களிடம் கூறினார். மாயமான மீனவர் ஞானபிராகாசத்தை தேடும் பணியில் ஐந்துக்கும் மேற்பட்ட படகுகளில் மீனவர்கள் ஈடுபட்டனர். தொடர்ந்து, அன்று இரவு காரைக்கால் மேடு கடற்கரைக்கு 200 மீட்டர் தொலைவில் கடலில் மீனவர் ஞானபிராகாசம் மிதந்து கொண்டிருந்தார். சக மீனவர்கள் ஞானபிராகாசத்தை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். இது குறித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்வம காரைக்கால் மேடு மீனவ கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • காரைக்கால் நகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கு, காரைக்கால் பறவை பேட் பகுதியில் இயங்கி வருகிறது.
    • கலெக்டர் சம்பந்தப்பட்ட நகராட்சி ஆணையர் சத்யாவிடம் கேட்டுக் கொண்டார்.

    புதுச்சேரி:

    காரைக்கால் நகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கு, காரைக்கால் பறவை பேட் பகுதியில் இயங்கி வருகிறது. இந்த குப்பை கிடங்கை கலெக்டர் குலோத்துங்கன் நேற்று மாலை ஆய்வு செய்தார். குப்பையை பிரித்து எடுக்கும் (பயோ மைனிங்) பணியை ஆய்வு மேற்கொண்ட மாவட்ட கலெக்டர், எச் .ஆர் .ஸ்கொயர் தனியார் நிறுவனம் மூலம் வீடு தோறும் எடுக்கப்பட்டு வரும் குப்பைகளை தரம் பிரித்து எடுக்கும் இயந்தி ரத்தை நிறுவு வதற்கான பணிகளையும் பார்வையிட்டார். மேலும் இப்பணிகளை விரைந்து முடிக்கும்படி கலெக்டர் சம்பந்தப்பட்ட நகராட்சி ஆணையர் சத்யாவிடம் கேட்டுக் கொண்டார்.

    ஆய்வின்போது நகராட்சி செயற்பொறியாளர் லோகநாதன் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கலந்து கொண்டார்கள். மேலும் இந்த கிடங்கு மற்றும் பணியில் வேலை செய்யும் மகளிர் மற்றும் பிறருக்கு கை உறை உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் அவசியம் வழங்கப்பட வேண்டும். அவை இல்லாமல் பணி செய்ய க்கூடாது என கலெக்டர் குலோத்துங்கன் அதிகா ரிகளுக்கு அறிவுறுத்தினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கடந்த 10 நாட்களுக்கு முன்பே முதலமைச்சர் ரங்கசாமியை வாழ்த்தி புதுவை நகர பகுதி முழுவதும் வாழ்த்து பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது.
    • புதுவையில் முக்கிய சாலை சந்திப்புகளில் முதலமைச்சர் ரங்கசாமியின் சாதனைகளை பெரிய எல்.இ.டி. திரையில் ஒளிபரப்பு செய்தனர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமிக்கு இன்று பிறந்தநாளாகும். ஒவ்வொரு ஆண்டும் ரங்கசாமி பிறந்தநாளை அவரது ஆதரவாளர்கள் வெகு விமர்சையாக கொண்டாடுவார்கள்.

    அதுபோல் இந்தாண்டும் முதலமைச்சர் ரங்கசாமியின் பிறந்தநாளை அவரது ஆதரவாளர்கள் உற்சாகமாக கொண்டாடினார்கள். கடந்த 10 நாட்களுக்கு முன்பே முதலமைச்சர் ரங்கசாமியை வாழ்த்தி புதுவை நகர பகுதி முழுவதும் வாழ்த்து பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது. ரங்கசாமிக்கு வாழ்த்து தெரிவிக்கும்வகையில் பல்வேறு நடிகர்களின் தோற்றத்திலும் காமராஜர் மற்றும் மன்னர்கள் வேடத்திலும் பேனர் வைத்துள்ளனர்.

    அதோடு அவர் மோட்டார் சைக்கிளை ஓட்டி வருவது போலும் ரங்கசாமி செய்த சாதனைகளை பட்டியலிட்டும் ஆங்காங்கே பேனர் வைத்துக்கப்பட்டுள்ளன. அதிலும் முதலமைச்சர் ரங்கசாமியை வாழ்த்தி அவரது தொண்டர்கள் நடுக்கடலில் பேனர் வைத்துள்ளனர். இதனை புதுவை கடற்கரைக்கு வந்த சுற்றுலா பயணிகள் வியப்புடன் பார்த்து சென்றனர்.

    மேலும் புதுவையில் முக்கிய சாலை சந்திப்புகளில் முதலமைச்சர் ரங்கசாமியின் சாதனைகளை பெரிய எல்.இ.டி. திரையில் ஒளிபரப்பு செய்தனர்.

    • புதுவை பல்கலைக்கழக மாணவர்கள், துணைவேந்தர் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
    • பல்கலைக்கழக மதர்தெரசா உணவு விடுதி அருகே மாணவர்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

    புதுச்சேரி:

    புதுவை பல்கலைக்கழகத்தில் போலி பில் தயாரித்து நிதி மோசடி குறித்த புகாரை சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக்கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது.

    இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, சிபிஐ வழக்குப் பதிந்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து புதுவை பல்கலைக்கழக மாணவர்கள், துணைவேந்தர் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

    இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தை சேர்ந்த மாணவர்கள் துணைவேந்தர் குர்மீத்சிங் பதவி விலக வலியுறுத்தி நேற்று நள்ளிரவில் போராட்டம் நடத்தினர். பல்கலைக்கழக மதர்தெரசா உணவு விடுதி அருகே இரவில் மாணவர்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

    • தனது தாயார் பொம்மைகள் விற்று குடும்பம் நடத்தி வருகிறார். எங்களுக்கு என்று வீடு இல்லை.
    • நான் அரசு பள்ளியில் படிக்கிறேன். பள்ளி நேரம் போக எனது தாயாருக்கு உதவியாக இருக்கிறேன்.

    புதுச்சேரி:

    அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஆபிரகாம் லிங்கன் குறித்து பலரும் அறிவார்கள். அவர் தனது 4 வயது முதல் குடும்ப சூழ்நிலை காரணமாக பல கஷ்டங்களை அனுபவித்து முன்னுக்கு வந்தவர்.

    அவர் தனது படிக்கும் காலத்தில் தெரு விளக்கு வெளிச்சத்தில் தனது பள்ளி பாடத்தை கற்றார். முயற்சி திருவினையாக்கும் என்பது போல பல கஷ்டங்களை அனுபவித்த அவர் அமெரிக்காவின் முன்னாள் அதிபர்களில் தலைசிறந்த அதிபர் என புகழப்பட்டார்.

    அதேபோலவே நமது இந்தியாவிலும் சட்டமேதை என்று அழைக்கப்படும் அம்பேத்கர் மின்சாரம் இல்லாத காலத்தில் மண்ணெண்ணெய் விளக்கு வெளிச்சத்தில் தனது பள்ளி மற்றும் கல்லூரி பாடங்களை படித்தார். இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு மேற்படிப்பிற்கு சென்ற முதல் இந்தியர் எனவும் இவர் அழைக்கப்படுகிறார்.

    இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டத்தையே மாற்றி அமைக்கக்கூடிய அளவிற்கு மிகவும் வல்லமை வாய்ந்த தலைவராக திகழ்ந்தார்.

    இதே போல நமது புதுவையிலும் தற்போது ஒரு நிகழ்வு நடந்து கொண்டிருக்கிறது. புதுவை கடற்கரை சாலையில் குடும்ப கஷ்டம் காரணமாக இருப்பதற்கு வீடு கூட இல்லாமல் தெருவில் உள்ள மின்விளக்கின் வெளிச்சத்தில் சிறுவன் தனது பள்ளி பாடத்தை படித்துக் கொண்டிருக்கிறான்.

    அவனுக்கு உறுதுணையாக அவனது தாயும் அருகிலேயே படுத்துக் கொண்டிருக்கிறார். இதனை அவ்வழியாக செல்லும் பொதுமக்கள் பார்த்து வியந்து செல்கிறார்கள். இதுகுறித்து அந்த சிறுவனிடம் கேட்டபோது, தனது தாயார் பொம்மைகள் விற்று குடும்பம் நடத்தி வருகிறார். எங்களுக்கு என்று வீடு இல்லை. தெரு ஓரத்தில் தங்கியிருக்கிறோம். நான் அரசு பள்ளியில் படிக்கிறேன். பள்ளி நேரம் போக எனது தாயாருக்கு உதவியாக இருக்கிறேன்.

    அதே வேளையில் படிப்பிலும் எனக்கு அதிகம் விருப்பம் உண்டு. மாலை வேளையில் தெரு விளக்கு வெளிச்சத்திலேயே பள்ளி பாடத்தை படித்து வருகிறேன்.

    ஆனால் இதில் எனக்கு எந்தவித வருத்தமும் இல்லை. இதற்காக நான் யாரிடமும் உதவியும் கேட்கவில்லை.

    • ஷர்மி நிஷாந்தினி தந்தை வீட்டுக்கு சென்றபோது, நெற்றியில் தையல் போட்டு இருந்தார்.
    • கணவர், மனைவி இருக்கும் இடையே சண்டை நடை பெற்றதாக தெரியவந்தது.

    புதுச்சேரி:

    கடலூர் மாவட்டம் நெய்வேலி விருதாச்சலம் ரோமாபுரி பகுதியைச்சேர்ந்தவர் ஆரோக்கியராஜ். இவர் பஞ்சாயத்து போர்டு டேங்க் ஆப்பரேட்டராக வேலை செய்து வருகிறார். இவரது மூத்த மகள் ஷர்மி நிஷாந்தினியை, (வயது19). காரைக்காலை அடுத்த திரு.பட்டினம் முதலிமேட்டைச்சேர்ந்த பிரின்ஸ் கிளிண்டன் (21) என்பவருடன், கடந்த 13.11.22 அன்று திருமணம் நடந்தது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு, ஷர்மி நிஷாந்தினி தந்தை வீட்டுக்கு சென்றபோது, நெற்றியில் தையல் போட்டு இருந்தார். தந்தை விசாரித்தபோது, கணவர் குடித்துவிட்டு அடித்துவிட்டதாக கூறினார். மேலும் கடந்த சில தினங்களுக்கு முன், ஷர்மி நிஷாந்தினி தந்தைக்கு போன் செய்து, கணவர் தினமும் குடித்துவிட்டு அடித்து கொடுமைச் செய்வதாக கூறியுள்ளார்.

    இந்நிலையில், கடந்த ஜூலை 30-ந் தேதி ஷர்மி நிஷாந்தினி தந்தைக்கு போன் செய்து, ஆடிக்கு கூப்பிட வரவில்லையா என கேட்டுள்ளார். அதற்கு தந்தை தற்போது நிலைமை சரியில்லை, பிறகு வந்து கூப்பிடுகிறேன் என கூறினார். இந்நிலையில், பிரின்ஸ் கிளிண்டன் தாய் விக்டோரியா ஆரோக்கியராஜிற்கு போன் செய்து, ஷர்மி நிஷாந்தினி வீட்டில் தூக்குபோட்டு தற்கொலைச் செய்துகொண்டதாக கூறினார். அடுத்து, ஆரோக்கியராஜ், உறவினர்களுடன் திரு.பட்டினம் சென்று விசாரித்தபோது, 1-ந் தேதி இரவு 11 மணிக்கு கணவர், மனைவி இருக்கும் இடையே சண்டை நடை பெற்ற தாகவும், அப்போது கிளிண்டன் அடித்ததால் ஷர்மி நிஷாந்தினி தனி அறையில் படுத்து தூங்கினார். காலையில் எழுந்து பார்த்தபோது, ஷர்மிநிஷாந்தினி தூக்கில் தொங்கியதாகவும் தெரியவந்தது. இது குறித்து, ஆரோக்கியராஜ், திரு.பட்டினம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தனியார் துறை முகத்தை அண்மையில் அதானி குழுமம் கையகப்ப ப்டுத்தியுள்ளது.
    • பல்வேறு ஊழியர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

    புதுச்சேரி: 

    புதுச்சேரி மாநிலம் காரைக்கால் திரு.பட்டினத்தை அடுத்துள்ள வாஞ்சூர் பகுதியில் இயங்கி வந்த, தனியார் துறை முகத்தை அண்மையில் அதானி குழுமம் கையகப்ப ப்டுத்தியுள்ளது. அதுமுதல், துறைமுகத்தின் பல்வேறு ஊழியர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, வாஞ்சூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தைச்சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பெண் துப்புரவு ஊழியர்கள், கடந்த 14 ஆண்டுகளுக்கு மேலாக தனியார் துறைமுகத்தில் வேலை செய்து வருகிறார்கள். 10 ஆண்டுகளுக்கு மேல் பணி புரியும் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்யப்ப டுவார்கள் என கூறியதாக தெரிகிறது. ஆனால், 14 ஆண்டுகள் ஆகியும் ஒரு ஊழியரை கூட பணி நிர ந்தரம் செய்யப்படவில்லை.

    இதனால் பாதிக்கப்பட்ட நூற்றுக்கு மேற்பட்ட துப்புரவு ஊழியர்கள், துறைமுகம் வாயிலில் முற்றுகையிட்டு போராட்டம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. போராட் டத்தின்போது, 14 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரியும் பெண் துப்புரவு ஊழியர்களை, உடனே பணி நிரந்தரம் செய்யவேண்டும். என வலியுறுத்தப்பட்டது. இதை அறிந்த, திரு.பட்டினம் போலீசார், போராட்டக்காரர்களுடன் அமைதியான முறையில் பேச்சுவார்த்தை நடத்தி, துறை முகம் நிர்வாகத்துடன் இது குறித்து பேசப்படும் என சமாதானம் செய்ததையடுத்து, அனைவரும் கலைந்துச் சென்றனர்.

    • ஒரு கட்டத்தில் இருவரும் நிர்வாணமாக வீடியோவில் பேசியதாக தெரிகிறது.
    • சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து சென்னை வாலிபரை பிடிக்க நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

    புதுச்சேரி:

    புதுவையைச் சேர்ந்த 18 வயது இளம்பெண் ஒருவர் செல்போன் செயலி மூலம் சென்னையை சேர்ந்த வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவியில் இந்த செயலி மூலம் இருவரும் தகவல்களை அனுப்பி பரிமாறிக்கொண்டு வந்தனர்.

    பின்னர் செல்போன் மூலம் இருவரும் பேசி பழகி வந்தனர். இதற்கிடையே இருவரும் வாட்ஸ் அப் வீடியோ காலில் பேசி வந்தனர்.

    ஒரு கட்டத்தில் இருவரும் நிர்வாணமாக வீடியோவில் பேசியதாக தெரிகிறது. இதனை அந்த வாலிபர் செல்போனில் பதிவு செய்து வைத்துக்கொண்டார்.

    இந்நிலையில் அந்த வாலிபர் நிர்வாணமாக பேசிய வீடியோவை அந்த பெண்ணுக்கு அணுப்பி தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு மிரட்டி வந்ததாக கூறப்படுகிறது.

    இது குறித்து அந்த பெண் புதுவை சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார்.

    சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து சென்னை வாலிபரை பிடிக்க நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

    • கடந்த 2008 முதல் 2016 வரை புத்தாக்க பயிற்சி அளிக்க ரூ.5 கோடி வழங்கப்பட்டுள்ளது.
    • பயிற்சி நடத்திய கணக்குகளில் ரூ.2.25 கோடிக்கு போலி பில் தயாரித்தது பல்கலைக்கழக தணிக்கையில் கண்டறியப்பட்டது.

    புதுச்சேரி:

    புதுவை பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் ஆசிரியர் மற்றும் ஊழியர்களுக்கு மனிதவள மேம்பாட்டு மையம் மூலம் புத்தாக்க பயிற்சி அளிக்க மத்திய அரசு நிதி அளிக்கிறது.

    கடந்த 2008 முதல் 2016 வரை புத்தாக்க பயிற்சி அளிக்க ரூ.5 கோடி வழங்கப்பட்டுள்ளது. இந்த பயிற்சி நடத்திய கணக்குகளில் ரூ.2.25 கோடிக்கு போலி பில் தயாரித்தது பல்கலைக்கழக தணிக்கையில் கண்டறியப்பட்டது.

    இதுகுறித்து பல்கலைக்கழக நிர்வாகம் அமைத்த விசாரணை குழு புகாரை ஆய்வு செய்து, மோசடி எதுவும் நடைபெறவில்லை என துணைவேந்தருக்கு அறிக்கை அளித்தது.

    இந்த நிலையில் முறைகேடு தொடர்பாக, துணைவேந்தர், நிதி நிர்வாக அதிகாரி, மனிதவள மேம்பாட்டு இயக்குனர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டி ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் சி.பி.ஐ.விடம் புகார் அளித்தனர். ஆனால் சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்யவில்லை. புகார் குறித்து வழக்குப்பதிந்து விசாரிக்க சி.பி.ஐ.க்கு உத்தரவிடக் கோரி ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

    வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன், புத்தாக்க பயிற்சி நடத்திய கணக்குகளில் போலி பில் வைத்திருக்க முகாந்திரம் உள்ளதாக சி.பி.ஐ. அறிக்கை அளித்துள்ளது. எனவே இந்த புகார் மீது சி.பி.ஐ. வழக்குப் பதிவு செய்து விசாரிக்க உத்தரவிட்டார்.

    • இரு தரப்பினருக்கும் இடையே பேனர்கள் வைப்பதில் மோதல் ஏற்பட்டது.
    • போலீசார் அடிதடி, கொலைமிரட்டல் உள்ளிட்ட வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    புதுச்சேரி: 

    புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமியின் பிறந்த நாள் வருகிற 4-ந் தேதி கொண்டா டப்படுகிறது. இந்நிலையில், காரைக்காலை அடுத்த கோட்டுச்சேரி மெயின் ரோட்டில், ஆளும் என்.ஆர். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அமைச்சர் சந்திர பிரி யங்கா மற்றும் எம்.எல்.ஏ. திருமுருகன் ஆதர வாளர்கள் பல்வேறு இடங் களில் டிஜிட்டல் பேனர் வைத்து வருகின்றனர்.

    இந்நிலையில், இரு தரப்பினருக்கும் இடையே பேனர்கள் வைப்பதில் மோதல் ஏற்பட்டு, பேனர் களை கிழித்தெறிந்தனர். தொடர்ந்து, சாலை மறி யலில் ஈடுபட்டனர். இத னால், அன்று இரவு சுமார் 2 மணி நேரம், காரைக்கால்- சென்னை இடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தொடர்ந்து, அமைச்சரின் தனி அலுவலர் லக்ஷ்மணபதி, கோட்டு ச்சேரி போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில், திருமுருகன் எம்.எல்.ஏ. ஆதரவாளர்கள் ராஜ்கு மார், பாலாஜி, கணபதி, சிவராமன், வேல்பாண்டி, சுகுமாரன் ஆகிய 6 பேர் மீது போலீசார் அடிதடி, கொலைமிரட்டல் உள்ளிட்ட வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அதேபோல், திருமுருகன் எம்.எல்.ஏ. ஆதரவாளர் பிரதீப் கொடுத்த புகாரின் பேரில், ஜெயக்குமார், புருணோ தேவா, தவசு முத்து, சரவணன், அய்யப்பன், கார்த்தி, நிதின், ஈஸ்வர் ஆகியோர் 8 மீது அடிதடி, கொலை மிரட்டல் உள்ளிட்ட வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், கோடுச் சேரி பகுதியில் போட்டி பேனர் வைப்பது தொடர்வ தால், மோதல் ஏற்படாமல் இருக்க, கோடுச்சேரி போலீ சார், 24 மணி நேரமும் பாது காப்பு பணியில் ஈடு பட்டு வருகின்றனர். போலீ சார் பேனர்களுக்கு காவல் நிற்கும் படங்கள், சமூக வலைதளங்களில் வைர லாகி வருகிறது.

    • இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் காரைக்கால் ெரயில்வே கேட் அருகில் சோதனைகள் ஈடுபட்டனர்.
    • சுமார் ரூ.25 ஆயிரம் மதிப்பிலான 220 கிராம் கஞ்சா பொட்டலங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    புதுச்சேரி:

    காரைக்கால் நகர போலீசாருக்கு வந்த ரகசிய தகவலை அடுத்து, இன்ஸ்பெக்டர் புருஷோத்தமன், சப்- இன்ஸ்பெக்டர் மோகன் மற்றும் போலீசார் காரைக்கால் ெரயில்வே கேட் அருகில் சோதனைகள் ஈடுபட்டனர். அப்பொழுது போலீசாரை பார்த்ததும் 4 வாலிபர்கள் ஓடினர். போலீசார் அவர்களை மடக்கி பிடித்து சோதனை செய்தனர். அப்போது, அவர்களிடம் சுமார் ரூ.25 ஆயிரம் மதிப்பிலான 220 கிராம் கஞ்சா பொட்டலங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, காரைக்கால் கோவில்பத்து பகுதியை சேர்ந்த சிவானந்தம் (வயது27), கும்பகோணம் தாராசுரத்தை சேர்ந்த ஹரிஹரன் (22), சூர்யா (23), பாபநாசத்தைச் சேர்ந்த அய்யப்பன் (26) ஆகிய 4 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து சுமார் 220 கிராம் கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர்.

    • காரைக்கால் மாவட்டத்தில் நிலவும் சிக்கல்கள் குறித்து கலெக்டர் விவரித்தார்.
    • புதுச்சேரி வளர்ச்சிக்காகவே நான் பாடுபடுகிறேன்.

    புதுச்சேரி:

    காரைக்கால் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த வளர்ச்சித் திட்ட ஆலோசனைக் கூட்டத்தில் கவர்னர் தமிழிசை பங்கேற்றார்.

    அமைச்சர் சந்திரப் பிரியங்கா, நாஜிம் எம்.எல்.ஏ, மாவட்ட கலெக்டர் குலோத்துங்கன், சீனியர் போலீஸ் சூப்பிரண்டு மணிஷ் மற்றும் அரசு துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

    கூட்டத்தில், காரைக்கால் வளர்ச்சிக்கு அனைவரும் இணைந்து பாடுபட வேண்டும் என கவர்னர் தமிழிசை கேட்டு கொண்டார்.

    தொடர்ந்து கவர்னர் தமிழிசை நிருபர்களிடம் கூறியதாவது:-

    காரைக்கால் மாவட்டத்தில் நிலவும் சிக்கல்கள் குறித்து கலெக்டர் விவரித்தார். சிக்கல்களுக்கு தீர்வு காணும் நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குடிநீர் குழாய் இணைப்பு பணிகள் அனைத்து இடங்களிலும் கிட்டத்தட்ட 80 சதவீதம் நிறைவடைந்து விட்டது.

    பள்ளிகளில் காலியாக இருக்கும் ஆசிரியர்களின் பணியிடங்கள், டாக்டர்கள், சிறப்பு டாக்டர்கள் மற்றும் காவல் துறை அதிகாரி காலி பணியிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். இது குறித்த அனைத்தும் விவாதிக்கப்பட்டது.

    காரைக்கால் பகுதியின் வளர்ச்சி எந்தவிதத்திலும் தடைபடாது. காரைக்கால் பகுதி வளர்ச்சிக்காக பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இவற்றின் மூலம் காரைக்கால் ஒரு வளர்ச்சி அடைந்த பகுதியாக உருவாவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    காரைக்கால் சிக்கல்களை குறித்த விவாதங்கள் எப்பொழுதும் நடைபெற்று வருகிறது. காரைக்கால் எந்தவிதத்திலும் புறக்கணிக்கப்படவில்லை.

    மக்களின் குறைகளை அறிந்து கொள்ள மாதந்தோறும் மாவட்ட கலெக்டர் 15-ந் தேதி பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடத்தி வருகிறார்.

    மக்கள் பிரச்சினைகள் சரியாக கவனிக்கப்பட்டு தீர்க்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. புதுச்சேரி அரசுக்கு எதிராக நான் செயல்படவில்லை. புதுச்சேரி வளர்ச்சிக்காகவே நான் பாடுபடுகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×