என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கணையம்"

    • கணையம் உடலில் அமிலம், புரதம், கொழுப்பு ஆகியவற்றை உடைக்கவும், சிறுகுடலில் செரிமானத்தை மேம்படுத்தவும் செய்கிறது.
    • புற்றுநோய், இன்சுலின் உற்பத்தி குறைந்து ரத்த சர்க்கரை சமநிலை இழந்தாலும் கணையம் பாதிக்கப்படுகிறது.

    கணையம் என்பது மனித உடலில், வயிற்றுக்கு பின்னால் உள்ள ஒரு முக்கிய உறுப்பாகும்.

    இது உணவு செரிமானம் மற்றும் ரத்த சர்க்கரையை கட்டுப்பாட்டில் வைக்க முக்கிய பங்கு வகிக்கிறது. செரிமான சுரப்பி மற்றும் உட்சுரப்பி என்று 2 விதமாக செயல்படும். செரிமான சுரப்பியாக செயல்படும் நிலையில், என்சைம்கள் என்ற நொதிகளை உற்பத்தி செய்து உணவை செரிக்க உதவுகிறது. உடலில் அமிலம், புரதம், கொழுப்பு ஆகியவற்றை உடைக்கவும், சிறுகுடலில் செரிமானத்தை மேம்படுத்தவும் செய்கிறது.

    உட்சுரப்பி நிலையில் செயல்படும்போது, ரத்த சர்க்கரை அளவை ஒழுங்குபடுத்த இன்சுலின் மற்றும் குளூகோகான் என்ற ஹார்மோன்களை சுரக்கிறது. கணையத்தில் இருக்கும் பீட்டா செல்கள், கணையத்தின் லாங்கர்ஹான்ஸ் என்ற பகுதியில் இருக்கும் சிறப்பு நாளமில்லா செல்கள், ஹார்மோன்களை சுரந்து உடலில் சர்க்கரையின் சமநிலையை பேண உதவும் வகையில் இன்சுலினை வெளியிடுகின்றன.

    அதிகமாக மது குடிப்பது, பித்தக்கற்கள், கணைய சாற்றுநீர் வெளியேறும் பாதை தடைபடுவது, அழற்சி ஏற்படுவது போன்றவற்றால் கணையம் வலுவிழக்கிறது. புற்றுநோய், இன்சுலின் உற்பத்தி குறைந்து ரத்த சர்க்கரை சமநிலை இழந்தாலும் கணையம் பாதிக்கப்படுகிறது. அதிக கொழுப்பு, கணையச் செல்களுக்கு நேரடி காயம், தொற்று போன்றவையும் கணைய செயல் இழப்புக்கு காரணமாக வாய்ப்பு உள்ளது.

    • ரோபோடிக் முறையில் கணைய புற்றுநோய்க்கு இந்தியாவிலேயே முதல் முறையாக ஜிப்மரில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
    • சிறு துவாரங்கள் மூலம் ரோபோடிக் முறையில் ஆபரேஷன் செய்தனர்.

    புதுச்சேரி:

    புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரியில் வயிற்று வலி காரணமாக 38 வயது பெண் அனுமதிக்கப்பட்டார். சி.டி.ஸ்கேன் பரிசோதனையில் அவருக்கு கணைய புற்றுநோய் இருப்பது தெரியவந்தது.

    மேலும் அந்த புற்றுநோய் கல்லீரல் மற்றும் இரைப்பைக்கு ரத்தம் கொண்டு செல்லும் 'சீலியாக் ஆக்ஸிஸ்' எனப்படும் ரத்த நாளத்தை பாதித்து இருப்பது தெரியவந்தது.

    இதைத் தொடர்ந்து புற்று நோய் எதிர்ப்பு மருந்து கொடுக்கப்பட்டது. 3 சுற்று சிகிச்சைக்கு பிறகு அவருக்கு புற்றுநோய் அளவு குறைந்தது. இருந்தபோதிலும் புற்றுநோயினால் பாதிக்கப்பட்ட ரத்த நாளத்தில் எந்தவித முன்னேற்றமும் இல்லை.

    இதைத்தொடர்ந்து டாக்டர்கள் கணையம், மண்ணீரல் மற்றும் சீலியாக் ஆக்ஸிஸ் ரத்த நாளம் ஆகியவற்றை எடுக்கும் அறுவை சிகிச்சையை செய்ய முடிவு செய்தனர்.

    பொதுவாக இந்த அறுவை சிகிச்சை 25 முதல் 30 செ.மீ. அளவுக்கு வயிற்று பகுதி கிழிக்கப்பட்டு திறந்த முறையில் (ஓபன் சர்ஜரி) செய்யப்படும். ஆனால், ஜிப்மர் குடலியல் அறுவை சிகிச்சை தலைவர் டாக்டர் கலையரசன் மற்றும் டாக்டர் பிஜூ போட்டாக் கட் தலைமையிலான குழுவினர் கணைய புற்றுநோய்க்கான அறுவை சிகிச்சையை ரோபோடிக் முறையில் 10 மணி நேரம் மேற்கொண்டனர்.

    அதாவது, சிறு துவாரங்கள் மூலம் ரோபோடிக் முறையில் ஆபரேஷன் செய்தனர். சிகிச்சை முடிந்த 6-வது நாள் பெண் நோயாளி முழுவதுமாக குணமாகி வீடு திரும்பினார்.

    'ரோபோடிக்' அறுவை சிகிச்சையில் குடலியல் அறுவை சிகிச்சை துறை முன்னோடியாக திகழ்வதாகவும், இந்த சிக்கலான அறுவை சிகிச்சையை உலகில் சிலமருத்துவ மனைகளில் மட்டுமே செய்யப்படுவதாகவும் ஜிப்மர் இயக்குனர்ராகேஷ் அகர்வால் தெரிவித்துள்ளார்.

    ரோபோடிக் முறையில் கணைய புற்றுநோய்க்கு இந்தியாவிலேயே முதல் முறையாக ஜிப்மரில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாகவும், ரோபோடிக் முறையில் இதர புற்றுநோய்க்கான அறுவை சிகிச்சைகள் இதுவரை 1,400-க்கும் மேற்பட்டவை செய்யப்பட்டுள்ளதாகவும் மருத்துவ கண்காணிப்பாளர் துரைராஜன் கூறினார்.

    ×