என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    • எய்ட்ஸ் நோய்க்கு எதிரான விழிப்புணர்வு மாரத்தான் போட்டியை இன்று காலை நடத்தியது.
    • 500-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.

    புதுச்சேரி: 

    புதுச்சேரி எய்ட்ஸ் கட்டுப்பாட்டு மையம் மற்றும் காரைக்கால் மாவட்ட நிர்வாகம் இணைந்து எய்ட்ஸ் நோய்க்கு எதிரான விழிப்புணர்வு மாரத்தான் போட்டியை இன்று காலை நடத்தியது. இந்த மாரத்தான் போட்டி காரைக்காலில் உள்ள அரசு விளையாட்டு அரங்கத்தில் தொடங்கி, காரைக்காலில் உள்ள முக்கிய வீதி வழியாக சென்று மாவட்ட கலெக்டர் அலுவலகம் வந்தடைந்தது. இந்த மாரத்தான்போட்டியினை காரைக்கால் மாவட்ட முதுநிலை போலீஸ் சூப்பிரண்டு மணீஷ் தொடங்கி வைத்தார். மாரத்தான் போட்டியில் காரைக்கால் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் கல்லூரிகளை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் போலீஸ் சூப்பரண்டு சுப்பிரமணியன், முதன்மை கல்வி அதிகாரி விஜய மோகனா, நலவழித்துறை துணை இயக்குனர் டாக்டர் சிவராஜ்குமார் மற்றும் எய்ட்ஸ் கட்டுப்பாட்டு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு மையம் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் சார்பில் பரிசு வழங்கப்பட்டது.

    • நீங்கள் அதிக பொருட்கள் வாங்கி இருப்பதால் ரூ.12 லட்சம் மதிப்புள்ள கார் உங்களுக்கு பரிசாக கிடைத்துள்ளது என்று கூறினார்.
    • தான் மோசடி செய்யப்பட்டதை உணர்ந்த குமாரசாமி இதுகுறித்து சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி கல்மண்டபத்தைச் சேர்ந்தவர் குமாரசாமி (வயது 47). விவசாயி. இவர் ஒரு வர்த்தக செயலி மூலம் நிறைய பொருட்கள் வாங்கினார்.

    இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு அவரது செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்தது. எதிர்முனையில் பேசிய நபர், வர்த்தக நிறுவன மேலாளர் பேசுகிறேன் என முதலில் அறிமுகமாகி கொண்டார்.

    பின்னர் நீங்கள் அதிக பொருட்கள் வாங்கி இருப்பதால் ரூ.12 லட்சம் மதிப்புள்ள கார் உங்களுக்கு பரிசாக கிடைத்துள்ளது என்று கூறினார்.

    தொடர்ந்து அவர் கேட்ட சில தகவல்களை குமாரசாமி கொடுத்தார். பின்னர் அவர் பரிசீலனை கட்டணம் செலுத்த வேண்டும் என்று கூறினார். அதன்படி குமாரசாமி 2 தவணையாக ரூ.8 லட்சத்து 69 ஆயிரத்தை செலுத்தினார். ஆனால் அவர்கள் காரை அவருக்கு கொடுக்கவில்லை.

    மாறாக மேலும் பணம் செலுத்தும்படி கூறினர். இதனால் தான் மோசடி செய்யப்பட்டதை உணர்ந்த குமாரசாமி இதுகுறித்து சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    இன்ஸ்பெக்டர் கீர்த்தி வழக்குப்பதிவு செய்து குமாரசாமியிடம் ரூ.8 லட்சத்து 69 ஆயிரம் மோசடி செய்தது யார் என்று விசாரணை நடத்தி வருகிறார்.

    மற்றொரு சம்பவம்...

    புதுச்சேரியை சேர்ந்தவர் ரோகிணி. தனியார் நிறுவன அதிகாரி. இவருக்கு டெலிகிராம் செயலி மூலம் ஒரு குறுஞ்செய்தி வந்தது. அதில் நீங்கள் இணைய வழியில் முதலீடு செய்தால் தினந்தோறும் 10 சதவீதம் உங்களுக்கு வருமானம் தருகிறோம் என்று கூறப்பட்டு இருந்தது. இதனை நம்பிய அவர் ரூ.6 லட்சத்து 58 ஆயிரம் முதலீடு செய்தார்.

    பின்னர் அவரால் அந்த பணத்தை எடுக்க முடியவில்லை. இதனால் தான் மோசடி செய்யப்பட்டதை அறிந்த அவர் இதுகுறித்து சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    இதேபோல் புதுச்சேரியை சேர்ந்த கார்த்திகேயன் என்பவர் ரூ.3 லட்சத்து 50 ஆயிரமும், வில்லியனூரை சேர்ந்த விமல கோபாலன் என்பவர் ரூ.55 ஆயிரமும் இழந்தனர்.

    இது குறித்து அவர்கள் அளித்த புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீசார் தனித்தனியாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • பள்ளி நிர்வாகம் மாணவனை கண்டித்து, நாளை பெற்றோரை அழைத்து வருமாறு கூறினர்.
    • அப்பகுதி மீனவர்கள் காரைக்கால் நகர போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

    புதுச்சேரி:

    தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள செட்டி மண்டபம் பகுதியை சேர்ந்தவர் கார்த்திகேயன். டைல்ஸ் வேலை பார்த்து வரும் இவரது மகன் சிவராஜன் (வயது16). இவர், அதேபகுதியில் உள்ள தனியார் பள்ளியில், பிளஸ்-1 படித்து வந்தார். சிவராஜன் பள்ளிக்கு செல்போனை எடுத்துச் சென்றதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, பள்ளி நிர்வாகம் மாணவனை கண்டித்து, நாளை பெற்றோரை அழைத்து வருமாறு கூறினர்.

    இதனால் பயந்து போன மாணவன் வீட்டுக்கு செல்லாமல், பள்ளியி லிருந்து காரைக்கால் கடற்கரைக்கு சென்றார். இந்நிலையில், சிவராஜன் உடல், காரைக்கால் முகத்துவாரத்தை ஒட்டிய, அரசலாற்று பகுதியில் மிதந்தை கண்டு அப்பகுதி மீனவர்கள் காரைக்கால் நகர போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில், மாவட்ட சீனியர் போலீஸ் சூப்பிரண்டு மணீஷ் மற்றும் போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று, உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக, காரைக்கால் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து நகர போலீசார் வழக்கு பதிவு செய்து, அந்த மாணவன் கடலில் விழுந்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கடந்த 14-ந்தேதி இரவு பாலமுருகன் புதுவை பஸ் நிலையத்துக்கு வந்தார்.
    • கொலை தொடர்பாக உருளையன்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் பாபுஜி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    புதுச்சேரி:

    கடலூர் திருப்பாதிரிப்புலியூர் மாரியம்மன்கோவில் வீதியை சேர்ந்தவர் ஓசை மணி. இவரது மகன் பாலமுருகன் (வயது 28). ரவுடியான இவர் அதே பகுதியை சேர்ந்த காமராஜ் என்பவர் கொலையில் தொடர்புடையவர்.

    இந்த நிலையில் கடந்த 14-ந்தேதி இரவு பாலமுருகன் புதுவை பஸ் நிலையத்துக்கு வந்தார். திருநங்கை ஒருவரை பஸ் ஏற்றிவிட அவர் காரைக்கால் பஸ்கள் நிற்கும் இடத்துக்கு வந்துள்ளார்.

    அப்போது அங்கு வந்த ஒரு கும்பல் பாலமுருகனை தாக்கி கீழே தள்ளி வயிற்றில் மிதித்து தாக்கியது. இதில் சுருண்டு விழுந்த அவரை அங்கிருந்துவர்கள் மீட்டு சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக னியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    இந்த கொலை தொடர்பாக உருளையன்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் பாபுஜி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் முன்விரோதம் காரணமாக கடலூரை சேர்ந்த சூர்யா (25), விஷ்ணு (22) தேவ் (23) மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோர் சேர்ந்து பாலமுருகனை கொலை செய்தது தெரியவந்தது. அவர்களை போலீசார் வலைவீசி தேடி வந்தனர்.

    இந்த நிலையில் அவர்கள் கடலூரில் பதுங்கி இருந்தது தெரியவந்தது. உடனே போலீசார் அங்கு விரைந்து சென்று சூர்யா, விஷ்ணு, தேவ் உள்பட 4 பேரையும் கைது செய்தனர். பின்னர் அவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு காலாப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

    • சிவகாளிமுத்து கடந்த 2020-ம் ஆண்டு திரு.பட்டினம் போலீசில் புகார் அளித்திருந்தனர்.
    • தாதா எழிலரசியை போலீ சார் கைது செய்தனர்.

    புதுச்சேரி:

    காரைக்கால் மாவட்ட பிரபல பெண் தாதா எழிலரசி, கடந்த 2019-ம் ஆண்டு வாஞ்சூர் பகுதியில் உள்ள மறைந்த தொழில் அதிபர் ராமுவின் முதல் மனைவி வினோதாவின் மகன்கன் அஜேஸ் ராமு, சிவகாளி முத்து ஆகியோ ருக்கு சொந்தமான மதுபான கடையை கூலிப்படை யினர் மூலம் தாக்குதல் நடத்தியது, அஜேஷ் ராம் மற்றும் சிவகாளி முத்துவை மிரட்டி மதுபான கடையை எழுதி வாங்கியது தொடர்பாக அஜேஷ் ராம் மற்றும் சிவகாளிமுத்து கடந்த 2020-ம் ஆண்டு திரு.பட்டினம் போலீசில் புகார் அளித்திருந்தனர்.

    அதன் பேரில், பெண் தாதா எழிலரசியை போலீ சார் கைது செய்தனர். அதன் பிறகு ஜாமினில் வெளியே வந்த எழிலரசி, கடந்த சில தினங்களுக்கு முன்பு, கூலிப்படையினரை கொண்டு சிவகாளி முத்து வுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக கூறப்படு கிறது. இந்த கொலை மிரட்டல் தொடர்பாக சிவகாளிமுத்து அளித்த புகாரை தொடர்ந்து, திருப்பட்டினம் போலீசார், நிரவியில் உள்ள சிவகாளி முத்து வீட்டுக்கு துப்பாக்கி ஏந்திய போலீசார் 2 பேர் பாதுகாப்பு பணியில் ஈடு பட்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • கலெக்டர், புதிய தாக அமைய இருக்கும் தீவிர சிகிச்சை பிரிவு, சித்த மருத்துவப்பிரிவு, புறநோயாளிகள் பிரிவு ஆகிய 3 இடங்களையும் பார்வையிட்டார்.
    • விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வரும்படியும் பொதுப் பணித்துறை செயற்பொறியாளரிடம் கலெக்டர் கேட்டுக் கொண்டார்.

    புதுச்சேரி:

    காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில், கலெக்டர் குலோத் துங்கன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது, ஆஸ்பத்திரி மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர். கண்ணகி, பொதுப்பணித்துறையை செயற்பொறியாளர் சிதம்பரநாதன் மற்றும் டாக்டர்கள், பொதுப்பணித்துறை அதிகாரிகள் உடன் சென்றனர். ஆஸ்பத்திரியின் பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்ட கலெக்டர், புதிய தாக அமைய இருக்கும் தீவிர சிகிச்சை பிரிவு, சித்த மருத்துவப்பிரிவு மற்றும் புறநோயாளிகள் பிரிவு ஆகிய 3 இடங்களையும் பார்வையிட்டார். பின்னர், அரசு ஆஸ்பத்திரியை மேம்படுத்துவது குறித்து சில ஆலோசனை களை வழங்கினார்.

    மேலும், சிறுநீரகம் சம்பந்தப்பட்ட டயாலிசிஸ் மையத்தை பார்வையிட்ட கலெக்டர், கூடுதல் டயாலிசிஸ் மையங்களை அமைத்து, அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும் அறி வுறுத்தினார். குறிப்பாக, இப்பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வரும்படியும் பொதுப் பணித்துறை செயற்பொறியாளரிடம் கலெக்டர் கேட்டுக் கொண்டார். அதேபோல், அரசு ஆஸ்பத்திரியின் அனைத்து பகுதிகளும் தினசரி தூய்மையாக பராமரிக்கவும், குடிநீர் வழங்கவும், டாக்டர்கள் மற்றும் ஆம்புலன்ஸ் ஓட்டு நர்கள் 24 மணி நேரமும் ஆஸ்பத்திரியில் இருக்கவும் கண்காணிப் பாளரிடம் அறிவுறுத்தினார்.

    • படுகாயமடைந்த திருமலை சிகிச்சைக்காக ஜிப்மரில் அனுமதிக்கப்பட்டார்.
    • வழக்கில் போலீசாரால் தேடப்பட்டு வந்த சக்தி, ஆகாஷ், மகேந்திரன், சுபாஷ் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

    புதுச்சேரி:

    புதுவை லாஸ்பேட்டை நாவலர் நெடுஞ்செழியின் அரசு பள்ளியில் படித்து வரும் பிளஸ்-2 மற்றும் பிளஸ்-1 மாணவர்கள் இருவருக்கு இடையே சம்பவத்தன்று தகராறு ஏற்பட்டது.

    இதுபற்றி பிளஸ்-1 மாணவனின் சகோதரர் சந்தானராஜ் தட்டிகேட்ட போது பிளஸ்-2 மாணவனின் நண்பர்கள் அவரை தாக்கினர்.

    இதையடுத்து சந்தானராஜ் தனது நண்பர்கள் 10 பேருடன் சாரம் பகுதியில் வசித்து வந்த பிளஸ்-2 மாணவன் அவரது நண்பர்களுடன் இருந்த போது மோதலில் ஈடுபட்டனர்.

    இதில் சந்தானராஜின் நண்பரான கல்லூரி மாணவர் திருமலையை (வயது18)எதிர்தரப்பினர் கத்தியால் குத்திவிட்டு தப்பினர்.

    படுகாயமடைந்த திருமலை சிகிச்சைக்காக ஜிப்மரில் அனுமதிக்கப்பட்டார்.

    இதுகுறித்த புகாரின்பேரில் கோரிமேடு போலீசார் கொலை முயற்சி உள்பட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து சாரம் ஞானபிரகாசம் நகரை சேர்ந்த சக்தி (19), ஆகாஷ் (20), மகேந்திரன் (22), சுபாஷ் (19) ஆகியோரை தேடிவந்தனர்.

    இந்த வழக்கில் போலீசாரால் தேடப்பட்டு வந்த சக்தி, ஆகாஷ், மகேந்திரன், சுபாஷ் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களை போலீசார் கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தி காலாப்பட்டு ஜெயிலில் அடைத்தனர்.

    மேலும் இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள ஆண்ட்ரோஸ், பெரியசாமி ஆகியோரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    • சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் திருக்கனூர் போலீசார் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து கார்த்திக்கை கைது செய்தனர்.
    • பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.1 லட்சம் நிவாரண உதவி வழங்கவும் உத்தரவிட்டார்.

    புதுச்சேரி:

    புதுவை திருக்கனூரை சேர்ந்த 13 வயது சிறுமி கடந்த 2020-ம் ஆண்டு இயற்கை உபாதை கழிக்க அப்பகுதியில் உள்ள சவுக்கு தோப்புக்கு சென்றார். அப்போது அதே பகுதியை சேர்ந்த பெயிண்டர் கார்த்திக் (வயது 38). என்பவர் சிறுமியை தடுத்து நிறுத்தி சவுக்கு மரத்தில் கட்டி வைத்து பாலியல் பலத்காரம் செய்ய முயன்றார்.

    சிறுமி கூச்சலிட்டதால் கார்த்திக் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இருந்த போதிலும் மரத்தில் கைகள் கட்டப்பட்டதால் இரவு முழுவதும் அந்த சிறுமி சவுக்கு தோப்பிலேயே தவித்துக்கொண்டிருந்தார். காலையில் அங்கு சென்றவர்கள் அந்த சிறுமியை மீட்டனர்.

    இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் திருக்கனூர் போலீசார் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து கார்த்திக்கை கைது செய்தனர்.

    இந்த வழக்கு போக்சோ சிறப்பு கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கினை விசாரித்த நீதிபதி சோபனா தேவி நேற்று தீர்ப்பு அளித்தார்.

    குற்றம் சாட்டப்பட்ட கார்த்திக்கு 2½ ஆண்டு ஜெயில் தண்டனையும் ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.1 லட்சம் நிவாரண உதவி வழங்கவும் உத்தரவிட்டார். 

    • முதற்கட்டமாக ரூ.70 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாக அறிந்தோம்.
    • 3 திட்டங்களும் மிக அவசியமான ஒன்றாகும்.

    புதுச்சேரி:

    காரைக்கால் மக்கள் நலக்கழகம் செயலாளர் பக்கிரி சாமி, இது குறித்து, மாவட்ட கலெக்டர் குலோத்துங்க னுக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:- காரைக்கால் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற 'ஸ்வதேஷ் தர்ஷன்' ஆலோசனை க்கூட்டத்தில், காரைக்கால் பகுதியில் மேற்கொள்ளப்படவுள்ள பல்வேறு திட்டங்கள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. இத்திட்டத்தில், முதற்கட்டமாக ரூ.70 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாக அறிந்தோம்.

    குறிப்பாக இத்திட்ட த்தில் காரைக்கால் வணிகம் பெருகுவதற்கும், காரைக்கால் நகரில் உள்ள ஆன்மீக தலங்களுக்கு வெளியூர் மக்கள் எளிதில் வந்து செல்வதற்கு வசதியாக, வாகன நிறுத்துமிடம் அமைப்பது குறித்தும், காரைக்கால் நகரப்பகுதியில் கழிப்பிடம் மற்றும் கழிவுநீர் கால்வாய் அமைப்பது குறித்தும் குறிப்பிடப்படவில்லை. மேற்கண்ட 3 திட்டங்களும் மிக அவசியமான ஒன்றாகும். குறிப்பாக, காரைக்கால் நகர் பகுதிக்கு வரும் பலர், தங்கள் வாகனங்களை நிறுத்த இடமில்லாமல், மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். பலர், மக்கள் நடமாடும் பகுதிகளில் வாகனங்களை நிறுத்தி செல்வதால், போக்கு வரத்துக்கு இடையூறும், விபத்துகளும் ஏற்படுகின்றது. இதை தவிர்க்க, காரைக்கால் பழைய பஸ் நிலையம் பகுதி, கடந்த பல ஆண்டுகளாக உபயோகம் இன்றி இருப்பதால், அங்கு அடுக்குமாடி வாகன நிறுத்தம் இத்திட்டத்தின் கீழ் அமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். அதுபோல், காரைக்கால் நகரப்பகுதியில் கழிப்பிடம் மற்றும் கழிவுநீர் கால்வாய் அமைப்பது குறித்தும் ஆலோசிக்க வேண்டும். இவ்வாறு அந்த கோரிக்கை மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நம் நாட்டுக்கு தனி கலாச்சாரம், பண்பாடு உள்ளது.
    • 2047-ல் உலகுக்கே இந்தியா தலைமை வகிக்கும் பெருமை பெறும்.

    புதுச்சேரி:

    புதுவை அரசின் கலை பண்பாட்டுத்துறை சார்பில் என் மண் என் தேசம் நிகழ்ச்சி கடற்கரை சாலை காந்தி திடலில் நடந்தது.

    கவர்னர் தமிழிசை நிகழ்ச்சியை தொடங்கி வைத்து தேசிய ஒருமைப்பாட்டு உறுதிமொழியை வாசித்தார். விழாவில் பங்கேற்றோர் உறுதிமொழி ஏற்றனர். கவர்னர் தமிழிசை, முதலமைச்சர் ரங்கசாமி, அமைச்சர்கள், மாநிலத்தின் பல பகுதியிலிருந்து கொண்டுவரப்பட்ட மண்ணை கொட்டி மரக்கன்றுகள் நட்டனர். விழாவில் கவர்னர் தமிழிசை பேசியதாவது:-

    நம் நாட்டுக்கு தனி கலாச்சாரம், பண்பாடு உள்ளது. சில ஆண்டுக்கு முன்பு பண்பாடு, கலாச்சாரம் பற்றி பேசினால் இந்து மதம் சார்ந்து பேசுவது போல கட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டது.

    2047-ல் உலகுக்கே இந்தியா தலைமை வகிக்கும் பெருமை பெறும். அதற்கேற்ப இந்தியா வளர்ச்சி பெற்று வருகிறது.

    புதுவையில் முதலமைச்சர் தலைமையில் சிறப்பான ஆட்சி நடக்கிறது. அதற்கு நான் உறுதுணையாக இருக்க தயக்கம் காட்டுவதில்லை. நாட்டில் நெசவாளர்கள் அதிகம் உள்ளனர். அரசு விழாக்களில் மரியாதை செலுத்தும்போது பொன்னாடைக்கு பதில் கதர் ஆடை அணிவிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • அக்கம்பக்கத்தினர் அங்கு வந்து திரண்டு வந்து செல்போன் திருட முயன்ற நபரை மடக்கி பிடித்தனர்.
    • அசோக்கை கைது செய்த போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு ஜெயிலில் அடைத்தனர்.

    புதுச்சேரி:

    அசாம் மாநிலத்தை சேர்ந்தவர் பிருந்தால் மண்டல். இவர் புதுச்சேரி சேதராப்பட்டில் வீடு வாடகை எடுத்து தங்கி, அதே பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகிறார்.

    இந்நிலையில் பிருந்தால் மண்டல் நேற்று மதியம் காற்றுக்காக வீட்டின் கதவை திறந்து வைத்து விட்டு தூங்கினார். அப்போது ஒரு மர்ம நபர் பிருந்தால் மண்டலின் செல்போனை திருட முயன்றார். சத்தம் கேட்டு கண்விழித்த பிருந்தால் மண்டல் இதை பார்த்து திடுக்கிட்டு கூச்சலிட்டார்.

    உடனே அக்கம்பக்கத்தினர் அங்கு வந்து திரண்டு வந்து செல்போன் திருட முயன்ற நபரை மடக்கி பிடித்தனர்.

    பின்னர் அந்த நபரை முட்டி போட வைத்து தர்ம அடி கொடுத்தனர். தொடர்ந்து, அந்த நபரை சேதராப்பட்டு போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

    போலீசார் விசாரணை செய்ததில் அவர், திண்டிவனம் சிங்கனூர் புது காலனி விநாயகர் கோவில் தெருவை சேர்ந்த அசோக் என்பதும், இவர் மீது சென்னை, விக்கிரவாண்டி மற்றும் வானூர் உள்ளிட்ட பகுதிகளில் செல்போன் திருட்டு வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரிய வந்தது.

    மேலும் அசோக் தான் வசிக்கும் பகுதி அருகே அவர் டிபன் கடை நடத்தி வருவதும், பண தேவைக்காக பகுதி நேரமாக இதுபோல் செல்போன் திருட்டில் ஈடுபட்டு வந்ததும் விசாரணையில் தெரியவந்தது.

    தொடர்ந்து அசோக்கை கைது செய்த போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு ஜெயிலில் அடைத்தனர்.

    இதற்கிடையே, செல்போன் திருடனை பொதுமக்கள் பிடித்து முட்டி போட வைத்து தர்ம அடி கொடுத்த வீடியோ காட்சி சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

    • நாடு முழுவதும் வந்தே பாரத் சிறப்பு அதிவேக ரெயில்களை மத்திய ரெயில்வே துறை இயக்கி வருகிறது.
    • புதுவை, சென்னை, திருப்பதி ஆகிய 3 நகரங்களை இந்த ரெயில் இணைக்கும்.

    புதுச்சேரி:

    புதுச்சேரிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்க பல்வேறு முயற்சிகளையும், திட்டங்களையும் அரசு மேற்கொண்டு வருகிறது.

    புதுச்சேரிக்கு ரெயில் மூலம் சுற்றுலா பயணிகளின் வருகையை அதிகரிக்கவும் பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது.

    சமீபத்தில் புதுவை ரெயில்நிலையத்தை மேம்படுத்தும் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி காணொலி மூலம் திறந்து வைத்தார்.

    இந்த திட்டத்தின் கீழ் புதுச்சேரி ரெயில்நிலையம் அழகுற மேம்படுத்தப்பட உள்ளது. நாடு முழுவதும் வந்தே பாரத் சிறப்பு அதிவேக ரெயில்களை மத்திய ரெயில்வே துறை இயக்கி வருகிறது.

    இந்த பட்டியலில் தற்போது புதுவையும் இடம்பெற்றுள்ளது. புதுவையிலிருந்து திருப்பதிக்கு வந்தே பாரத் ரெயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    புதுவை திருப்பதி இடையிலான 340 கிமீ தூரத்துக்கு வந்தே பாரத் ரெயில் சேவை தொடங்கப்பட உள்ளது.

    புதுவை, சென்னை, திருப்பதி ஆகிய 3 நகரங்களை இந்த ரெயில் இணைக்கும். இந்த ரெயில் புதுவை, விழுப்புரம் சந்திப்பு, மதுராந்தகம், சென்னை சென்ட்ரல், அரக்கோணம் ஆகிய இடங்களில் நின்று செல்லும்.

    புதுவை வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் என்ற பெயரில் இந்த ரெயில் சேவை தொடங்கப்பட உள்ளது. இந்த ரெயில்சேவை வரும் 2024-ம் ஆண்டு பிப்ரவரி முதல் தொடங்கப்படும் என கூறப்படுகிறது.

    ×