என் மலர்tooltip icon

    கேரளா

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நடிகர் சித்திக் மீது புகார் கூறிய நடிகையிடம் திருவனந்தபுரத்தில் வாக்குமூலம் பெறப்பட்டது.
    • பாலியல் புகார்கள் தொடர்பாக நடிகர் சித்திக், இயக்குனர் ரஞ்சித் உள்ளிட்டோர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.

    திருவனந்தபுரம்:

    மலையாள திரையுலகில் நடிகைகள் மற்றும் பெண் கலைஞர்கள் அனுபவித்து வரும் பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து விசாரணை நடத்திய ஓய்வு பெற்ற நீதிபதி ஹேமா கமிஷனின் அறிக்கை கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியானது.

    அதில் மலையாள திரையுலகில் நடிகைகள் மற்றும் பெண் கலைஞர்கள் அனுபவித்த பாலியல் துன்புறுத்தல்கள் வெட்டவெளிச்சத்துக்கு வந்தது. மேலும் பல நடிகைகள் தங்களுக்கு நடந்த பாலியல் துன்புறுத்தல்கள் குறித்த தகவல்களை வெளிப்படையாக கூறி வருகின்றனர்.

    அவர்கள் மலையாள நடிகர்கள், தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் உள்ளிட்டோருக்கு எதிராக பரபரப்பு குற்றச்சாட்டுகளை கூறினர். அதன்பேரில் விசாரணை நடத்த டி.ஐ.ஜி. அஜிதா பீகம், போலீஸ் சூப்பிரண்டுகள் பூங்குழலி, மெரின், ஐஸ்வர்யா ஆகியோர் அடங்கிய சிறப்பு விசாரணை குழுவை கேரள அரசு நியமித்தது.

    அந்த குழுவினர் நேரடி விசாரணையை தொடங்கி உள்ளனர். அவர்களிடம் நடிகர்கள் உள்ளிட்டோர் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை கூறிய நடிகைகள் ரகசிய வாக்குமூலம் அளித்து வருகின்றனர். திருவனந்தபுரம், கொச்சி, எர்ணாகுளம், கொல்லம் நகரங்களுக்கு சிறப்பு விசாரணை குழுவினர் நேரில் சென்று நடிகைகளிடம் வாக்குமூலங்களை பதிவு செய்தனர்.

    நடிகர் சித்திக் மீது புகார் கூறிய நடிகையிடம் திருவனந்தபுரத்தில் வாக்குமூலம் பெறப்பட்டது. நடிகர் ஜெயசூர்யா மீது புகார் கூறிய 2 நடிகைகளிடமும் போலீசார் வாக்குமூலம் பெற்றனர். அந்த வாக்குமூலங்களில் அவர்கள் பரபரப்பு தகவல்களை வெளியிட்டு இருக்கிறார்கள்.

    ஒரு நடிகை அளித்த வாக்குமூலத்தில், "என்னை பிரபல நடிகர் கழிவறைக்குள் தள்ளி பாலியல் துன்புறுத்தல் செய்தார். அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டார். அதன்பேரில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் பணியில் சிறப்பு விசாரணை குழு ஈடுபட்டு வருகிறது.

    பாலியல் புகார்கள் தொடர்பாக நடிகர் சித்திக், இயக்குனர் ரஞ்சித் உள்ளிட்டோர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. அவர் கள் மீது மேலும் பல நடிகை கள் புகார் தெரிவித்து வருகின்றனர். நடிகர் சித்திக் மீது 376 மற்றும் 506 சட்டப்பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன.

    கேரளாவில் இரண்டாவது முறை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு எம்.எல்.ஏ.வாக இருக்கும் நடிகர் முகேஷ் மீது கொச்சியை சேர்ந்த கவர்ச்சி நடிகை மினு பாலியல் புகார் கூறியிருக்கிறார். இதனால் அவருக்கு எதிராக பெண்கள் அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்கள் எம்.எல்.ஏ. பதவியில் இருந்து முகேஷ் ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி, அவரது வீட்டை நேற்று 2-வது நாளாக முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.

    இந்நிலையில் பாலியல் புகார் குறித்து நடிகரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு எம்.எல்.ஏ.வுமான நடிகர் முகேஷ் கேரள முதல்வர் பினராயி விஜயனிடம் விளக்கம் அளித்துள்ளார்.

    நடிகைகள் தன் மீது பொய் பாலியல் குற்றச்சாட்டுகளை சுமத்துவதோடு தன்னை மிரட்டியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

    நடிகை தன்னை பணம் கேட்டு மிரட்டியதற்கான வாட்ஸ் அப் பதிவுகள் உள்ளதாக கேரள முதல்வரிடம் அவர் விளக்கம் அளித்துள்ளார்.

    • 125 ஆண்டுகள் பழமையானது முல்லைப் பெரியாறு அணை.
    • தமிழகத்துக்கும் கேரளத்துக்கும் இடையே மாறுபட்ட கருத்துகள் நிலவி வருகின்றன.

    கோழிக்கோடு:

    கேரள மாநிலம் இடுக்கியில் அமைந்துள்ள 125 ஆண்டுகள் பழமையான முல்லைப் பெரியாறு அணை தொடா்பாக தமிழகத்துக்கும் கேரளத்துக்கும் இடையே மாறுபட்ட கருத்துகள் நிலவி வருகின்றன.

    இதுதொடா்பாக கோழிக்கோடில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் ஸ்ரீதரன் பேசியதாவது:

    முல்லைப் பெரியாறு அணை குறித்த தகவல்களை விக்கிபீடியாவில் படித்தேன். அப்போதுதான் அது கேரளத்தில் இருப்பதும் அதிலிருந்து தமிழகத்துக்கு தண்ணீா் வழங்கப்படுவதையும் தெரிந்து கொண்டேன்.

    முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு தொடா்பாக பல்வேறு தவறான புரிதல்கள் உள்ளன. ஆனால் ஒவ்வொரு 120 மீட்டருக்கும் பாதுகாப்பு தூண்களை அமைத்தும் சிறிய வாய்க்கால்களைக் கட்டமைத்து தண்ணீரை சேமிப்பதாலும் அடுத்த 50 ஆண்டுகளுக்கு அணையை பாதுகாப்பாக வைத்திருக்க முடியும்.

    எனவே, அங்கு புதிய அணை கட்டுவதைவிட ஏற்கெனவே உள்ள அணையை முறையாக பராமரிப்பதே போதுமானதாக இருக்கும் என்றாா்.

    முன்னதாக, பாராளுமன்றத்தில் அண்மையில் இந்த விவகாரத்தை எழுப்பிய இடுக்கி தொகுதி காங்கிரஸ் எம்.பி. டீன் குரியகோஸ், முல்லைப் பெரியாறு அணை 'தண்ணீா் வெடிகுண்டு' போல் உள்ளது என்று குறிப்பிட்டாா்.

    அதேபோல், முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு குறித்து கவலை தெரிவித்த மத்திய இணைய மந்திரி சுரேஷ் கோபி அணை உடைந்தால் யாா் பொறுப்பு? என கேள்வி எழுப்பி இருந்தாா். ஆனால் அணை பாதுகாப்பாக இருப்பதாக கேரள முதல்வா் பினராயி விஜயன் தெரிவித்திருந்தாா்.

    2021 கேரள பேரவைத் தோ்தலில் பா.ஜ.க. சாா்பில் போட்டியிட்ட ஸ்ரீதரன் தோல்வி அடைந்து, அரசியலை விட்டே விலகினார்.

    • முகேஷ் எம்.எல்.ஏ. மீது ஜாமீனில் வெளியே வர முடியாத பிரிவின் கீழ் போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.
    • இடதுசாரி முன்னணி பெண்களுக்கு ஆதரவாக உள்ளது என்றார்.

    மலையாள திரையுலகில் நடிகைகள் மற்றும் பெண் கலைஞர்கள் அனுபவித்து வரும் பாலியல் துன்புறுத்தல்கள் குறித்த ஓய்வு பெற்ற நீதிபதி ஹேமா கமிஷனின் அறிக்கை கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியானது.

    அதில் மலையாள திரை உலகில் நடிகைகள் மற்றும் பெண் கலைஞர்கள் அனுபவித்த பாலியல் துன்புறுத்தல்கள் வெட்டவெளிச்சத்துக்கு வந்தது. மேலும் பல நடிகைகள் தங்களுக்கு நடந்த பாலியல் துன்புறுத்தல்கள் குறித்த தகவல்களை வெளிப்படையாக கூறி வருகின்றனர்.

    அதன்பேரில் விசாரணை நடத்த டி.ஐ.ஜி. அஜிதா பீகம், போலீஸ் சூப்பிரண்டுகள் பூங்குழலி, மெரின், ஐஸ்வர்யா ஆகியோர் அடங்கிய சிறப்பு விசாரணை குழுவை கேரள அரசு நியமித்தது. அந்த குழுவினர் நேரடி விசாரணையை தொடங்கி உள்ளனர். அவர்களிடம் நடிகர்கள் உள்ளிட்டோர் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை கூறிய நடிகைகள் ரகசிய வாக்குமூலம் அளித்து வருகின்றனர்.

    இந்த நிலையில், எம்.எல்.ஏ.வாக இருக்கும் நடிகர் முகேஷ் மீது கொச்சியை சேர்ந்த கவர்ச்சி நடிகை மினு பாலியல் புகார் கூறியிருக்கிறார். இதனால் அவருக்கு எதிராக பெண்கள் அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்கள் எம்.எல்.ஏ. பதவியில் இருந்து முகேஷ் ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி, அவரது வீட்டை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதையடுத்து, கவர்ச்சி நடிகை புகாரின் பேரில் முகேஷ் எம்.எல்.ஏ. மீது ஜாமீனில் வெளியே வர முடியாத பிரிவின் கீழ் போலீசார் வழக்கு பதிந்துள்ளனர். அவர் மீது பாலியல் பலாத்கார வழக்கு பதியப்பட்டுள்ளது.

    இந்நிலையில், முகேஷ் மீது பாலியல் பலாத்கார வழக்கு பதிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து எம்.எல்.ஏ. பதவியில் நீடிக்க சட்டரீதியாகவோ தார்மீக தகுதியோ அவருக்கு இல்லை என்று சிபிஐ தலைவர் ஆனி ராஜா கூறியுள்ளார்.

    மேலும் ஆனி ராஜா கூறியதாவது:- "ஹேமா கமிஷனின் கண்டுபிடிப்புகள் மற்றும் பரிந்துரைகளை அடுத்து, திரைப்படத்துறையில் பெண்களுக்கு பாதுகாப்பான மற்றும் பாதுகாப்பான பணிச்சூழலை உறுதி செய்வதற்கு மாநில அரசின் முயற்சிகளுக்கு இது துணைபுரியும்".

    தற்போது முகேஷ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதால், அந்தப் பதவியில் நீடிக்க அவருக்கு தார்மீக அல்லது சட்டப்பூர்வ தகுதி இல்லை. எனவே அவர் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.

    முகேஷ் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்யாவிட்டால், மாநில அரசின் நேர்மையான முயற்சிகள் தடைபடும். இது மாநில அரசின் இமேஜையும் பாதிக்கும். இடதுசாரி முன்னணி பெண்களுக்கு ஆதரவாக உள்ளது என்றார்.

    • நடிகைகள் ரகசிய வாக்குமூலம் அளித்து வருகின்றனர்.
    • பெண்கள் அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    திருவனந்தபுரம்:

    மலையாள திரையுலகில் நடிகைகள் மற்றும் பெண் கலைஞர்கள் அனுபவித்து வரும் பாலியல் துன்புறுத் தல்கள் குறித்து விசாரணை நடத்திய ஓய்வு பெற்ற நீதிபதி ஹேமா கமிஷனின் அறிக்கை கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியானது.

    அதில் மலையாள திரை உலகில் நடிகைகள் மற்றும் பெண் கலைஞர்கள் அனுபவித்த பாலியல் துன்புறுத்தல்கள் வெட்டவெளிச்சத்துக்கு வந்தது.

    மேலும் பல நடிகைகள் தங்களுக்கு நடந்த பாலியல் துன்புறுத்தல்கள் குறித்த தகவல்களை வெளிப்படையாக கூறி வருகின்றனர்.

    அவர்கள் மலையாள நடிகர்கள், தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் உள்ளிட்டோருக்கு எதிராக பரபரப்பு குற்றச்சாட்டுகளை கூறினர்.

    அதன்பேரில் விசாரணை நடத்த டி.ஐ.ஜி. அஜிதா பீகம், போலீஸ் சூப்பிரண்டுகள் பூங்குழலி, மெரின், ஐஸ்வர்யா ஆகியோர் அடங்கிய சிறப்பு விசாரணை குழுவை கேரள அரசு நியமித்தது.

    அந்த குழுவினர் நேரடி விசாரணையை தொடங்கி உள்ளனர். அவர்களிடம் நடிகர்கள் உள்ளிட்டோர் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை கூறிய நடிகைகள் ரகசிய வாக்குமூலம் அளித்து வருகின்றனர்.

    அதன்பேரில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் பணியில் சிறப்பு விசாரணை குழு ஈடுபட்டு வருகிறது.

    பாலியல் புகார்கள் தொடர்பாக நடிகர் சித்திக், இயக்குனர் ரஞ்சித் உள்ளிட்டோர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. அவர்கள் மேல் மேலும் பல நடிகைகள் புகார் தெரிவித்து வருகின்றனர்.

    எம்.எல்.ஏ.வாக இருக்கும் நடிகர் முகேஷ் மீது கொச்சியை சேர்ந்த கவர்ச்சி நடிகை மினு பாலியல் புகார் கூறியிருக்கிறார். இதனால் அவருக்கு எதிராக பெண்கள் அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    அவர்கள் எம்.எல்.ஏ. பதவியில் இருந்து முகேஷ் ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி, அவரது வீட்டை நேற்று 2-வது நாளாக முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.

    மேலும் அந்த கோரிக்கையை வலியுறுத்தி பெண்கள் அமைப்புகளை சேர்ந்த 100 பெண்கள் கூட்டறிக்கை வெளியிட்டிருக்கின்றனர். அவர் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்யாவிட்டால், அந்த பதவியில் இருந்து அவரை நீக்கவேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளனர்.

    இந்நிலையில் கவர்ச்சி நடிகை புகாரின் பேரில் முகேஷ் எம்.எல்.ஏ. மீது ஜாமீனில் வெளியே வர முடியாத பிரிவின் கீழ் போலீசார் வழக்கு பதிந்துள்ளனர். அவர் மீது பாலியல் பலாத்கார வழக்கு பதியப்பட்டுள்ளது.

    முகேஷை தவிர நடிகையின் புகாரின் பேரில் நடிகர் மணியன்பிள்ளை ராஜூ, முன்னாள் பொதுச் செயலாளர் ஏவலபாபு ஆகியோர் மீதும் போலீசார் வழக்கு பதிந்துள்ளனர். 

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மலையாள சினிமா நடிகைகள் பலர் நடிகர்கள் மீது பாலியல் குற்றசாட்டு சுமத்தியுள்ளனர்.
    • பல நடிகர்கள் மீது கூறப்பட்டுள்ளதால் மலையாள நடிகர்கள் சங்கம் (AMMA) கலைக்கப்பட்டுள்ளது.

    மலையாள சினிமா துறையில் பாலியல் துன்புறுத்தல் நடைபெறுவதாக நீதிபதி ஹேமா அறிக்கை வெளிப்படுத்தியிருந்தது. அதிலிருந்து மலையாள சினிமா நடிகைகள் தங்களுக்கும் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெற்றதாக புகார் அளிக்க தொடங்கியுள்ளனர்.

    இதுவரை பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டு தொடர்பாக இதுவரை 17 வழக்குகள் பதியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாலியல் துன்புறுத்தல் பல நடிகர்கள் மீது கூறப்பட்டுள்ளதால் மலையாள நடிகர்கள் சங்கம் (AMMA) கலைக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், மலையாள சினிமாவில் பெண்களுக்கு மட்டும் இன்றி ஆண்களுக்கும் பாலியல் தொல்லை ஏற்பட்டுள்ளது என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

    படத்தில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி இயக்குநர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக இளம் நடிகர் நவஜீத் நாராயணன் புகார் அளித்துள்ளார்.

    இந்த புகார் தொடர்பாக பேசிய அவர், "எனக்கு நன்றாக தெரிந்த இயக்குநர் ஒருவர் சினிமாவில் நடிக்க வாய்ப்பு கொடுத்தால் எனக்கு என்ன கிடைக்கும் என்று என்னிடம் கேட்டார். பிறகு என்னிடம் அவர் தகாத முறையில் நடந்து கொண்டார். நான் அவர் முகத்தில் அறைந்து விட்டு கிளம்பி விட்டேன்" என்று தெரிவித்தார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • கார் வாங்க வேண்டும் என்றால் மிட்டுசுபிஷி [Mitsubishi] ஷோரூமுக்கு செல்லுங்கள்
    • ரோல்ஸ் ராயல்ஸ் காரை வாங்க வேண்டும் என்று அன்றைய தினம் தீர்மானம் செய்ததாக தெரிவித்தார்.

    கேரள மாநிலம் திருச்சூரை மையமாகக் கொண்டு இயங்கி வரும் பிரபல தங்க நகை நிறுவனமான ஜோய் ஆலுக்காஸ் நிறுவனத்தின் சேர்மேன் ஜோய் ஆலுக்காஸ் ரோல்ஸ்  ராய்ஸ்  கார் ஷோரூமில் தனக்கு நேர்ந்த அவமானம் குறித்து மனம் திறந்துள்ளார். தான் ஒரு சமயம் துபாயில் உள்ள ரோல்ஸ்  ராய்ஸ்  ஷோரூமில் கார் வாங்கலாம் என்று சென்றதாகவும் அப்போது அங்குள்ள ஊழியர்கள் தன்னை உள்ளே அனுமதிக்க மறுத்துவிட்டனர் என்று தெரிவித்தார்.

    நான் கார் பார்க்க வந்தேன் என்று ஜோய் ஆலுக்காஸ் தெரிவித்துள்ளார். ஆனால் அதற்கு அந்த ஊழியர்கள், நீங்கள் கார் வாங்க வேண்டும் என்றால் மிட்டுசுபிஷி [Mitsubishi] ஷோரூமுக்கு செல்லுங்கள் அங்கு [வேண்டுமானால்] நீங்கள் கார் வாங்கலாம் என்று தெரிவித்துள்ளனர். இதனால் தான் அவமானப்படுத்தப்பட்டதாக உணர்ந்த ஜோய் ஆலுக்காஸ் தான் அதே ரோல்ஸ்  ராய்ஸ்  காரை வாங்க வேண்டும் என்று அன்றைய தினம் தீர்மானம் செய்ததாக தெரிவித்தார்.

    அதன்படி விலையுயர்ந்த கார் கலெக்ஷன்களை தன்வசம் வைத்துள்ள ஜோய் ஆலுக்காஸ் கடந்த மார்ச் மாதம் ரூ.6 கோடி மதிப்புள்ள ரோல்ஸ்  ராய்ஸ் கல்லினன் Rolls-Royce Cullinan காரை வாங்கியுள்ளார். அவரிடம் ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட்டும் (Rolls Royce Ghost) உள்ளது குறிபிடத்தக்கது. 67 வயதான ஆலுக்காஸ், 4.4 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் இந்தியாவின் 50வது பணக்காரர் ஆக உள்ளார் . 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நீதிபதி ஹேமா அறிக்கை பாலியல் துன்புறுத்தலை வெளிப்படுத்தியது.
    • அதனைத் தொடர்ந்து நடிகைகள் தொடர்ந்து புகார் அளித்து வருகின்றனர்.

    மலையாள சினிமா துறையில் பாலியல் துன்புறுத்தல் நடைபெறுவதாக நீதிபதி ஹேமா அறிக்கை வெளிப்படுத்தியிருந்தது. அதிலிருந்து மலையாள சினிமா நடிகைகள் தங்களுக்கும் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெற்றதாக புகார் அளிக்க தொடங்கியுள்ளனர்.

    இப்படி பல நடிகைகள், சினமாத்துறையைச் சேர்ந்தவர்கள் புகார் கூற ஆரம்பித்ததால் மலையாள சினிமா துறை அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது. சினிமா நட்சத்திரங்கள் பொது வெளியில் புகார் கூறியபோதிலும், காவல் நிலையத்தில் அதிகாரப்பூர்வமாக புகார் அளிக்கவில்லை.

    இதனால் MeToo-வை எதிர்கொள்ள கேரள மாநில அரசால் சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. விசாரணைக் குழுவிடம் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்கப்படலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டு தொடர்பாக இதுவரை 17 வழக்குகள் பதியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தற்போது சோனியா மலிஹார் என்ற நடிகை 2013-ம் ஆண்டு சினிமா செட்டில் வைத்து பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானேன் எனத் தெரிவித்துள்ளார். மேலும், எனது புகார் தொடர்பாக மீடியாக்கள் நடிகர் ஜெயசூர்யாவை தொடர்பு படுத்தக் கூடாது எனவும் வலியுறுத்தியுள்ளார்.

    பாலியல் துன்புறுத்தல் பல நடிகர்கள் மீது கூறப்பட்டுள்ளதால் மலையாள நடிகர்கள் சங்கம் (AMMA) கலைக்கப்பட்டுள்ளது. இந்த 17 புகார் தொடர்பாக பலர் நடிகர்கள், தயாரிப்பாளர்கள் மற்றும் சினிமாத்துறையை சேர்ந்தவர்களிம் போலீசார் விசாரணை நடத்தப்படலாம் எனத் தெரிகிறது.

    முன்னதாக நடிகை மினு முனீர் நடிகர்கள் எம். முகேஷ், ஜெயசூர்யா, மணியன்பிள்ளை ராஜூ, எடவேலா பாபு ஆகியோர் மீது துன்புறுத்தல் புகார் கூறியிருந்தார். இந்த நிலையில் அவருக்கு மிரட்டல் செய்தி அனுப்பப்பட்டுள்ளது. சமூக வலைத்தளம் மூலம் வந்த மிரட்டல் மெசேஜ்-யை ஸ்கிரீன்ஷாட் எடுத்து பகிர்ந்துள்ளார்.

     நடிகை மினு முனீர் நடிகர்கள் முகேஷ், ஜெயசூர்யா மற்றும் மணியன்பிள்ளை ராஜூ, பாபு ஆகியோர் மீது குற்றம்சாட்டியிருந்தார்.

    நான் படப்பிடிப்பு தளத்தில் கழிவறைக்கு சென்றிருந்தேன். அங்கிருந்து வெளியேறியபோது, எனக்கு பின்னால் இருந்து ஜெயசூர்யா என்னை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தார். எனது அனுமதி இல்லாமல் முத்தம் கொடுத்ததால் நான் அதிர்ச்சி அடைந்து அங்கிருந்து சென்று விட்டேன்.

    நடிகர் சங்க முன்னாள் செயலாளர் செயலாளர் பாபு, அம்மா உறுப்பினர் அட்டை பெறுவதற்கு உதவி செய்வதாகக் கூறி அவர் வசிக்கும் வீட்டிற்கு அழைத்தார். அப்போது உடல் தொடர்பான துன்புறுத்தலுக்கு ஆளானேன்.

    நடிகரும், சிபிஎம் (CPM) எம்.எல்.ஏ.-வுமான நடிகர் முகேஷ், அவருடைய ஆசைக்கு இணைங்க மறுத்ததால் நடிகர் சங்க உறுப்பினர் அட்டை வழங்க மறுத்துவிட்டார்" எனக் குற்றம் சாட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சித்திக் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதற்கான ஆதாரம் உள்ளது.
    • ரேவதி சம்மத் அளித்த புகாரின் பேரில் நடவடிக்கை.

    மலையாள சினிமாவில் பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் அத்துமீறல்கள் குறித்த ஹேமா கமிஷன் அறிக்கை வெளியானது முதல், பல்வேறு விவாதங்கள் எழுந்தன.

    பின்னர் முதன்முறையாக பெயர் குறிப்பிட்டு மேற்கு வங்க நடிகை ஸ்ரீலேகா மித்திரா பாலியல் தொல்லை புகார் கூறினார். மலையாள சினிமாவில் நடிக்க வந்த தன்னை பாலியல் ரீதியாக அணுகினார் என்று சினிமா அகாடமி தலைவர் ரஞ்சித்-மீது புகார் கூறியிருந்தார்.

    இந்த புகாரை அடுத்து சினிமா அகாடமி தலைவர் பதவியில் இருந்து ரஞ்சித் ராஜினாமா செய்தார்.

    அதன் பிறகு மேலும் ஒரு மலையாள நடிகை, நடிகர் சித்திக் ஹோட்டலில் வைத்து அத்துமீறியதாக புகார் கூறினார். இதைத்தொடர்ந்து நடிகர் சித்திக் மலையாள சினிமா அசோசியேசன் பொதுச்செயலாளர் பதவியை ராஜினாமா செய்தார்.

    ஹேமா கமிஷன் அறிக்கையைத் தொடர்ந்து குற்றச்சாட்டுகளும், ராஜினாமாக்களும், விமர்சனங்களும் தொடர்ந்து வந்துகொண்டே இருந்தன.

    சில தினங்களுக்கு முன்பு நடிகர் சித்திக் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதற்கான ஆதாரம் உள்ளது என்று ரேவதி சம்பத் கூறி இருந்தார். அதில் சித்திக் ரேவதி சம்மத்திடம் பேஸ்புக், மெசஞ்சர் மற்றும் வாட்ஸ் அப்பில் பேசியதாகவும் படம் குறித்து பேசுவதற்கு ஹோட்டலுக்கு அழைத்ததாகவும் புகார் அளித்தார்.

    இந்த நிலையில் நடிகை ரேவதி சம்பத் அளித்த பாலியல் புகாரின் பேரில் கேரள போலீசார் சித்திக் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு செய்துள்ளனர். 

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • அந்த வழியே வந்த மற்றொரு வாகனம் மீதும் கார் மோதியது.
    • டெஸ்ட் டிரைவுக்கு எடுத்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    கேரளா மாநிலம் கொச்சியில் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவன கார் மாடல்கள் விபத்தில் சிக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. விலிங்டன் ஐலேண்ட் சாலையில் உள்ள கேந்திரிய வித்யாலயா மைதானத்திற்கு முன் இந்த விபத்து அரங்கேறியது.

    விபத்தில் சிக்கிய இரு கார்களும் மெர்சிடிஸ் பென்ஸ் பிரான்டின் விலை உயர்ந்த AMG மாடல்கள் ஆகும். அதிவேகத்தில் சீறிப்பாயும் திறன் கொண்ட இந்த மாடல்கள் கட்டுப்பாட்டை இழந்து விபத்தில் சிக்கின. இந்த விபத்தின் போது, அந்த வழியே வந்த மற்றொரு வாகனம் மீதும் கார் மோதியுள்ளது.

    சம்பவத்தின் போது மெர்சிடிஸ் பென்ஸ் AMG GT 63 S E காரை பெண் ஒருவர் அருகாமையில் உள்ள ரெயில்வே கேட் பகுதியில் இருந்து வந்து கொண்டிருந்தது. சற்று வேகமாக வந்து கொண்டிருந்த கார் அங்கிருந்த பழைய ரெயில்வே தண்டாவள பகுதியின் மீது ஏறி தரையில் இருந்து மேலெழுந்து பிறகு கீழே இறங்கியது.

    காரை ஓட்டி வந்த பெண், அதனை கட்டுப்படுத்த தவறியதை அடுத்து அந்த வழியே வந்து கொண்டிருந்த வாகனம் ஒன்றின் மீது மோதியது. பிறகு அந்த பெண் காரை திருப்ப முயன்றார். அப்போது கார் திடீரென வலதுபுறம் திரும்பிய போது, எதிரே வந்த மற்றொரு மெர்சிடிஸ் பென்ஸ் கார் மாடலான SL55 மீது மோதியது. இந்த SL55 காரை, ஓட்டி வந்த நபர் அதனை டெஸ்ட் டிரைவுக்கு எடுத்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    விபத்தில் மெர்சிடிஸ் பென்ஸ் GT 63 S E முன்பகுதி முழுமையாக சேதமடைந்தது. எதிரே வந்த SL55 முன்புற சக்கரம் மிக மோசமாக சேதமடைந்தது. விபத்தை ஏற்படுத்திய பெண் ஓட்டுநர் பலத்த காயங்களோடு அருகாமையில் இருந்த தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும், விபத்தில் சிக்கிய இரண்டு கார்களையும் கைப்பற்றி காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.

    விபத்தில் சிக்கிய மெர்சிடிஸி பென்ஸ் GT 63 S E விலை இந்தியாவில் ரூ. 3 கோடியே 30 லட்சம் ஆகும். இதே போன்று SL55 மாடலின் விலை ரூ. 2 கோடியே 44 லட்சம் ஆகும். இரு கார்களும் ஆடம்பர வசதிகள் நிறைந்த பெர்ஃபார்மன்ஸ் ரக மாடல்கள் ஆகும்.

    • சினிமா துறையின் மீதான பொதுமக்களின் பார்வையை தவறாக வழி நடத்துகிறீர்கள்.
    • நீங்கள் நீதிமன்றமா? நீதிமன்றம் முடிவு செய்யும். நீதிமன்றம் முடிவு செய்யட்டும்.

    2017-ம் ஆண்டு நடிகை தாக்கப்பட்ட வழக்கை தொடர்ந்து நீதிபதி ஹேமா தலைமையில் கேரள மாநில அரசு ஒரு குழு அமைத்தது. இந்த குழு சமர்பித்த அறிக்கை மலையாளம் சினிமா துறையில் பெண்கள் துன்புறுத்தப்படுவதை வெளிப்படுத்தியது.

    அதனைத் தொடர்ந்து பெரும்பாலான நடிகைகள் தாங்களும் பாலியல் தொந்தரவுக்கு உள்ளானதாக நடிகர்கள், டைரக்டர்களுக்கு எதிராக அடுத்தடுத்து புகார் தெரிவித்து வரும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக மாலையான சீனிமாவின் மூத்த நடிகரும், மத்திய தலைவருமான சுரேஷ் கோபியிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

    அதற்கு அவர் பதில் அளித்து பேசியதாவது:-

    நான் புரிந்து கொண்டது வகையில் இது எல்லாம் உங்களுக்கான தீனி மாதிரி. இதை பயன்படுத்தி உங்களால் பணம் சம்பாதிக்க முடியும். அதில் எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் இந்த பிரச்சனைகள் நீதிமன்றத்தின் முன் உள்ளன.

    நீங்கள் (ஊடகங்கள்) உங்களுடைய சொந்த ஆதாயங்களுக்காக மக்களை ஒருவருக்கொருவர் சண்டையிட வைப்பது மட்டுமல்லாமல், சினிமா துறையின் மீதான பொதுமக்களின் பார்வையையும் தவறாக வழி நடத்துகிறீர்கள்.

    புகார்கள் தற்போது குற்றச்சாட்டு வடிவில் உள்ளன. நீங்கள் மக்களுக்கு என்ன சொல்கிறீர்கள்? நீங்கள் நீதிமன்றமா? நீதிமன்றம் முடிவு செய்யும். நீதிமன்றம் முடிவு செய்யட்டும்.

    இவ்வாறு சுரேஷ் கோபி தெரிவித்துள்ளார்.

    • நிலச்சரிவில் 400-க்கும் மேற்பட்டோர் பலி.
    • மக்களின் வாழ்வாதாரத்துக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் கடந்த மாதம் 30-ந்தேதி கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் முண்டகை, மேப்பாடி கிராமங்கள் மண்ணுக்குள் புதைந்தும், வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டும் பாதிப்புக்குள்ளாயின.

    இந்த நிலச்சரிவில் 400-க்கும் மேற்பட்டோர் பலியாகி விட்டனர். இன்னும் சிலர் மாயமாகி விட்டனர். அவர்களை தேடும் பணி தொடர்ந்து வரும் நிலையில், பேரிடர் பாதிப்பு பகுதிகளை மத்திய நிபுணர் குழு பார்வையிட்டு ஆய்வு செய்து வருகிறது.

    நிலச்சரிவால் பாதிக்கப் பட்ட பகுதிகளில் பிந்தைய தேவை மதிப்பீடுகள் குழு விரிவான மற்றும் அறிவியல் பூர்வமாக ஆய்வு செய்து வருகிறது.

    இந்த குழு சேதத்தை கணக்கிடும் போது பழைய அளவுகோல்களை பயன்படுத்தாமல், உண்மையான இழப்பை மதிப்பிட வேண்டும். மக்களின் வாழ்வாதாரத்துக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று அந்தக் குழுவிடம் கேரள அரசு வலியுறுத்தி உள்ளது.

    இதற்கிடையில் அங்கு மறுவாழ்வுக்கு ரூ.2 ஆயிரம் கோடியும், இழப்பீடாக ரூ.1200 கோடியும் கேட்டு மத்திய அரசுக்கு கேரள அரசு கோரிக்கை விடுத்துள்ளது.

    இது குறித்து பிரதமர் மோடியிடம் விளக்க அவரை சந்திக்க கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் டெல்லி சென்றுள்ளார். அவர் இன்று பகல் பிரதமர் மோடியை சந்திக்கிறார். அப்போது வயநாட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து எடுத்துரைப்பார் என்று கருதப்படுகிறது.

    வயநாடு நிலச்சரிவை எல்-3 வகை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும், அதிகபட்ச உதவி அளிக்க வேண்டும் என்று பினராயி விஜயன், பிரதமர் மோடியிடம் கோரிக்கை விடுப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

    • நடிகர் சித்திக்கை திரைத்துறையில் இருந்து நீக்க வேண்டும் என்றும் நடிகை ரேவதி சம்பத் வலியுறுத்தியுள்ளார்.
    • நடிகர் ரியாஸ்கான் மீது மலையாள நடிகை ரேவடிதி சம்பத் பாலியல் குற்றச்சாட்டு விடுத்துள்ளார்.

    மலையாள திரைப்படக் கலைஞர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் நடிகர் சித்திக் உள்ளிட்ட மேலும் சிலர் மீது பாலியல் புகார்கள் எழுந்துள்ளதால் மலையாள சினிமா உலகை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.

    சித்திக் மீது புகார் கூறிய நடிகை ரேவதி சம்பத், ஒரு திரைப்பட திட்டம் பற்றி விவாதிக்கும் வகையில் சித்திக் தன்னை ஒரு ஓட்டல் அறைக்கு அழைத்தார். அப்போது எனக்கு 21 வயது. அங்கு அவர் பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்தார்.

    கடந்த 2019-ம் ஆண்டே இந்த குற்றச்சாட்டை கூறியதாகவும், அப்போது யாரும் அதனை கண்டு கொள்ளவில்லை. நடிகர் சித்திக்கை திரைத்துறையில் இருந்து நீக்க வேண்டும் என்றும் நடிகை ரேவதி சம்பத் வலியுறுத்தியுள்ளார்.

    இதைதொடர்ந்து, நடிகர் ரியாஸ்கான் மீது மலையாள நடிகை ரேவடிதி சம்பத் பாலியல் குற்றச்சாட்டு விடுத்துள்ளார். நடிகர் ரியாஸ் கான், செல்போனில் தொடர்பு கொண்டு பாலியல் தொல்லை அளித்ததாகவும், தன்னை தகாத உறவுக்கு அழைத்ததுடன், தோழிகளை ஏற்பாடு செய்து தருமாறு கேட்டதாகவும் பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார்.

    இந்நிலையில் மேலும் ஒரு மலையாள நடிகை பிரபல நடிகர் மீது பாலியல் புகார் தெரிவித்துள்ளார்.

    பிரபல மலையாள நடிகரும், எம்எல்ஏவுமான முகேஷ், இடைவேளை பாபு, ஜெயசூர்யா, மணியன் ஆகிய 4 பேர் மீது மலையாள நடிகை மினு முனீர் என்பவர் பாலியல் புகார் தெரவித்துள்ளார்.

    தொடர் பாலியல் புகார்களை அடுத்து, கேரள அரசு சார்பில் ஐ.ஜி தலைமையில் குழு அமைத்து உத்தரவிட்டது. இந்நிலையில், நடிகைகளிடம் இருந்து பாலியல் புகார்கள் வந்த வண்ணம் உள்ளது. 

    ×