என் மலர்tooltip icon

    கேரளா

    • குழுவினர் பாதிக்கப்பட்ட நடிகைகளிடம் விசாரணை நடத்தி வாக்கு மூலம் பெற்றனர்.
    • குற்றம் சாட்டப்பட்டவர்கள் கோர்ட்டுகளில் முன்ஜாமீன் பெற்றதால், அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

    திருவனந்தபுரம்:

    மலையாள திரையுலகில் நடிகைகள் மற்றும் பெண் கலைஞர்களுக்கு நடந்த பாலியல் துன்புறுத்தல்களை ஹேமா கமிட்டி அறிக்கை அம்பலப்படுத்தியது. அதன டிப்படையில் சம்பந்தப்பட்டவர்களின் மீது நடவடிக்கை எடுக்க சிறப்பு புலனாய்வு குழுவை கேரள அரசு அமைத்தது.

    அந்த குழுவினர் பாதிக்கப்பட்ட நடிகைகளிடம் விசாரணை நடத்தி வாக்கு மூலம் பெற்றனர். அதனடிப்படையில் மலையாள திரையுலகை சேர்ந்த பிரபல நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் சிலர் மீது பாலியல் வழக்கு பதியப்பட்டது. அதன்பேரில் கைது நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டது.

    இருந்தபோதிலும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் கோர்ட்டுகளில் முன்ஜாமீன் பெற்றதால், அவர்கள் விடுவிக்கப்பட்டனர். குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிரான வலுவான ஆதாரங்களை சேகரிக்கும் நடவடிக்கையில் சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

    இந்தநிலையில் நடிகரும், இயக்குனருமான பாலச்சந்திர மேனனின் மீது பாலியல் புகார் அளித்தநடிகை மீது கேரள சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிந்துள்ளனர். சமூக வலைதளங்களில் தன்னை பற்றி நடிகை அவதூறாக பேசியதாக போலீஸ் டி.ஜி.பி.யிடம் பாலச்சந்திர மேனன் புகார் தெரிவித்தார்.

    அதன் அடிப்படையில் நடிகையின் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. இந்த நடிகை பாலச்சந்திரமேனன், நடிகர்கள் ஜெயசூர்யா, இடைவேளை பாபு உள்ளிட்ட 7 பேர் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை கூறியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பதட்டம் ஏற்பட போலீசார் குவிக்கப்பட்டனர்.
    • மின்வெட்டுக்கு அதிகாரிகளின் அலட்சியம் தான் காரணமா? என விசாரிக்க தலைமை பொறியாளருக்கு உத்தரவிட்டார்.

    திருவனந்தபுரம்:

    திருவனந்தபுரம் ஸ்ரீஅவிட்டம் திருநாள் (எஸ்.ஏ.டி.) மருத்துவமனையில் 2 நாட்களுக்கு முன்பு திடீரென மின்தடை ஏற்பட்டது. 3 மணி நேரம் நீடித்த இந்த மின்வெட்டால் கர்ப்பிணி பெண்கள், பச்சிளம் குழந்தைகள் அவதிக்குள்ளானார்கள். அவர்களது உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பதட்டம் ஏற்பட போலீசார் குவிக்கப்பட்டனர்.

    இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்ட நிலையில், பொதுப்பணித்துறையின் மின் பிரிவைச் சேர்ந்த உதவி பொறியாளர் மற்றும் மேற்பார்வையாளரை சஸ்பெண்டு செய்து கேரள பொதுப்பணித்துறை மந்திரி முகமது ரியாஸ் உத்தரவிட்டார்.

    மேலும் மின்வெட்டுக்கு அதிகாரிகளின் அலட்சியம் தான் காரணமா? என விசாரிக்க தலைமை பொறியாளருக்கு உத்தரவிட்டார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மகாத்மா காந்தியின் திருவுருவப் படத்துக்கு கவர்னர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
    • கேரள கவர்னரின் துண்டில் பட்டு எரிந்த தீயை அருகிலிருந்தவர் உடனடியாக அணைத்தனர்.

    கேரள மாநிலம் பாலக்காட்டில் உள்ள சபரி ஆசிரமத்தின் நூற்றாண்டு விழாவில் அம்மாநில கவர்னர் ஆரிஃப் முகமது கான் கலந்து கொண்டார்.

    ஆசிரமத்தில் உள்ள மகாத்மா காந்தியின் திருவுருவப் படத்துக்கு கவர்னர் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அப்போது புகைப்படத்திற்கு அருகில் இருந்த விளக்கில் இருந்து கவர்னரின் துண்டில் தீப்பிடித்தது. இதை உடனடியாக கவனித்த அதிகாரிகள் தீயை அணைத்தனர்.

    பின்னர் பாதுகாப்புப் படையினர் விரைந்து வந்து கவர்னரை பாதுகாப்பாக அழைத்து சென்றனர். இச்சம்பத்தால் கவர்னருக்கு காயங்கள் எதுவும் ஏற்படவில்லை. பின்னர் நிகழ்வின் நிறைவு விழாவை அவர் தொடங்கி வைத்தார்.

    • 9 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
    • கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை மையம் தகவல்.

    திருவனந்தபுரம்:

    கேரளாவில் திருவனந்தபுரம், பத்தனம்திட்டா, கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி, கோழிக்கோடு, வயநாடு மற்றும் கண்ணூர், காசர்கோடு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    வருகிற 5-ந் தேதி வரை இடியுடன் கூடிய கனமழை இருக்கும் என்றும் 64.5 மி.மீட்டர் முதல் 115.5 மி.மீட்டர் வரை மழை இருக்கும் என்பதால் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 9 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

    • வயநாடு பொன்னாடை பகுதியில் 11.5 சென்ட் நிலத்தில் 1,500 சதுர அடியில் ஸ்ருதிக்கு புது வீடு கட்டப்பட உள்ளது.
    • வீடு கட்டும் பணியை கல்பெட்டா தொகுதி எம்.எல்.ஏ. சித்திக் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

    திருவனந்தபுரம்:

    கேரளா வயநாட்டில் கடந்த ஜூலை மாதம் 30-ந்தேதி கடும் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் சூரல்மலை, முண்டக்கை பகுதிகளில் இருந்த வீடுகள் உள்ளிட்ட அனைத்து கட்டிடங்களும் மண்ணுக்குள் புதைந்தும், இடிந்தும் சேதமடைந்தன.

    இந்த பயங்கர நிலச்சரிவில் 400-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் மாயமாகிவிட்டனர். அவரகளின் கதி என்ன என்றே தெரியாமல்போனது. உயிர் தப்பிய பலர் தங்களின் குடும்ப உறுப்பினர்களை இழந்துவிட்டனர். அவர்களில் ஒருவர் தான் சூரல்மலை பகுதியை சேர்ந்த ஸ்ருதி.

    இவர் நிலச்சரிவில் தனது குடும்பத்தினர் 9 பேரை பறிகொடுத்தார். அவர்களது குடும்பத்தில் ஸ்ருதி மட்டும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். உறவுகள் அனைத்தையும் இழந்து தவித்த அவருக்கு, அவருடைய வருங்கால கணவரான ஜென்சன்(24) ஆதரவாக இருந்து வந்தார்.

    தற்காலிக மறுவாழ்வு மையத்தில் தங்கியிருந்த அவரை, ஜென்சன் தினமும் சந்தித்து வந்தார். நிலச்சரிவு ஏற்படுவதற்கு முன்பே இவர்களுக்கு திருமண ஏற்பாட்டை இரு வீட்டினரும் செய்து வந்தனர். இந்த நிலையில் தான் நிலச்சரிவில் தனது பெற்றோர், சகோதரி உள்ளிட்ட குடும்பத்தினர் அனைவரையும் ஸ்ருதி பறி கொடுத்தார்.

    பெற்றோரை இழந்து தவிக்கும் ஸ்ருதிக்கு எப்போதும் ஆதரவாக இருப்பேன் என்று ஜென்சன் கூறியிருந்தார். அதன்படி ஏற்கனவே முடிவு செய்யப்பட்டது போன்று திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தனர். அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தபோது தான், இருவரும் சாலை விபத்தில் சிக்கினர். காரில் சென்றபோது, அவர்களின் மீது பஸ் மோதியது.

    இந்த விபத்தில் ஜென்சன் படுகாயமைந்தார். ஸ்ருதிக்கு காலில் எலும்புமுறிவு ஏற்பட்டது. அவர்கள் இருவரும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தனர். இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி ஜென்சன் பரிதாபமாக இறந்தார்.

    குடும்பத்தினர் அனைவரும் பலியாகிவிட்ட நிலையில், தன்னை தாங்க தூண் போன் ஒரு உறவு இருக்கிறது என்று ஜென்சனை நினைத்த நிலையில், அவரும் விபத்தில் பலியாகிவிட்டது ஸ்ருதியை மேலும் சோகத்தில் ஆழ்த்தியது. மீளாத் துயரில் ஆழ்ந்த அவரை எவ்வாறு தேற்றுவது என்பது கேள்விக்குறியானது.

    ஆஸ்பத்திரியில் ஜென்சன் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்ற போது ஸ்டெக்சரில் சென்று ஸ்ருதி பார்த்தது, பின்பு இறந்த பிறகு உடலை பார்த்து கண்ணீர்விட்டது போன்ற காட்சிகள் பார்த்த அனைவரையும் கண்கலங்க செய்தது. அவரது மறு வாழ்வுக்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று கேரள அரசு அறிவித்தது.

    மேலும் அவருக்கு உதவ பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் முன்வந்தனர். அதன் ஒரு பகுதியாக ஸ்ருதிக்கு புதிதாக வீடு கட்டிக்கொடுக்க திருச்சூர் சாலக்குடியை சேர்ந்த டெனிஷ் டேவிஸ், இனோக் ஜோசப் ஆன்டனி ஆகியோர் முன்வந்தனர். வீடு கட்டுவதற்கு செலவாகும் மொத்த தொகையான ரூ.35 லட்சத்தையும் தாங்களே தர அவர்கள் ஒப்புக்கொண்டனர்.

    இதையடுத்து ஸ்ருதிக்கு புதிய வீடு கட்டி கொடுப்பதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டன. வயநாடு பொன்னாடை பகுதியில் 11.5 சென்ட் நிலத்தில் 1,500 சதுர அடியில் ஸ்ருதிக்கு புது வீடு கட்டப்பட உள்ளது. அந்த வீடு கட்டும் பணியை கல்பெட்டா தொகுதி எம்.எல்.ஏ. சித்திக் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

    இதையடுத்து ஸ்ருதிக்கான புதிய வீடு கட்டும் பணி தொடங்கப்பட்டது. தனக்காக புதிய வீடு கட்டும் பணி தொடங்கியிருப்பதை அறிந்த ஸ்ருதி மகிழ்ச்சியடைந்தார். அதனை நேரில் பார்க்க விரும்பினார்.

    இதற்காக அவர் ஆஸ்பத்திரியில் இருந்து ஆம்புலன்சில் அழைத்துச் செல்லப்பட்டார். தனக்கு புதிய வீடு கட்டுவதை மகிழ்ச்சியுடன் பார்த்தார். பின்பு மீண்டும் தான் சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் திரும்பிச் சென்றார். 

    • மாணவி யாரிடமும் தெரிவிக்காமல் இருந்திருக்கிறார்.
    • 2 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது தனக்கு கவுன்சிலிங் அளித்தவரிடம் சப்-இன்ஸ்பெக்டர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்த தகவலை தெரிவித்துள்ளார்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தை சேர்ந்தவர் சந்திரசேகரன் (வயது50). இவர் திருச்சூர் மாவட்டம் இரிஞ்சாலக்குடா ரூரல் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருகிறார்.

    இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மாலா என்ற போலீஸ் நிலையத்தில் பணிபுரிந்தார். அப்போது 9-ம் வகுப்பு படித்த பள்ளி மாணவி ஒருவரை, சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் காரில் அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

    கொடுங்கல்லூர் பகுதியில் இந்த சம்பவம் நடந்திருக்கிறது. இதனை அந்த மாணவி யாரிடமும் தெரிவிக்காமல் இருந்திருக்கிறார். இந்தநிலையில் அந்த மாணவி, சம்பவம் நடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது தனக்கு கவுன்சிலிங் அளித்தவரிடம் சப்-இன்ஸ்பெக்டர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்த தகவலை தெரிவித்துள்ளார்.

    இதையடுத்து மாணவிக்கு கவுன்சிலிங் கொடுத்த ஆலோசகர், அதுபற்றி இரிஞ்சாலக்குடா மகளிர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் பற்றி விசாரணை நடத்தப்பட்டது.

    அப்போது அவர் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உறுதி செய்யப்பட்டதாக தெரிகிறது. இதையடுத்து அவரின் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதியப்பட்டது. அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகரனை கொடுங்கல்லூர் போலீசார் கைது செய்தனர்.

    • வயநாட்டில் வசிப்பவர்கள் வாழ்வாதாரத்தை கட்டமைக்கும் வகையில் கடன் வசூலிப்பதை தற்காலிகமாக நிறுத்தும் பஜாஜ்.
    • வயநாட்டில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு காப்பீட்டு தொகையை விரைவாக வழங்க நடவடிக்கை.

    கேரள மாநிலம் வயநாட்டில் கடும் மழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி நூற்றுக்கணக்கானோர் பலியானதோடு ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகள் மற்றும் உடமைகளை இழந்து வாழ்வாதாரம் இன்றி தவித்து வருகிறார்கள். இந்த நிலையில் அவர்களுக்கான நிவாரண நிதியாக 2 கோடி ரூபாயை பஜாஜ் பின்சர்வ் நிறுவனம் வழங்கியது.

    மேலும் அவர்கள் இயல்பு நிலைக்கு திரும்பும் வரையில் கடன் வசூலிப்பதை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக பஜாஜ் பைனான்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. இதேபோல் பஜாஜ் அலையன்ஸ் லைப் இன்சூரன்ஸ் மற்றும் பஜாஜ் அலையன்ஸ் ஜெனரல் இன்சூரன்ஸ் ஆகியவை வயநாட்டில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு காப்பீட்டு தொகையை விரைவாக வழங்க நடவடிக்கை எடுத்து வருகின்றன.

    வயநாடு நிலச்சரிவு நிவாரணத்திற்காக கேரள மாநில பேரிடர் நிவாரண நிதியில் ஆன்லைன் மூலம் 2 கோடி ரூபாயை பஜாஜ் நிறுவனம் வழங்கியது. அதனைத் தொடர்ந்து அம்மாநில முதல்வர் பினராயி விஜயனை பஜாஜ் பின்சர்வ் நிறுவனத்தின் தலைமைப் பொருளாதார நிபுணரும் கார்ப்பரேட் விவகாரங்கள் பிரிவு தலைவருமான என் சீனிவாச ராவ் மற்றும் பஜாஜ் அலையன்ஸ் லைப் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் சட்ட மற்றும் இணக்கப் பிரிவு மூத்த தலைவர் அனில் ஆகியோர் சந்தித்தனர்.

    • புகார் கூறிய நடிகையிடம் வாக்கு மூலம் பெறப்பட்டது.
    • சிறப்பு புலனாய்வு குழுவினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருவனந்தபுரம்:

    மலையாள திரையுலகில் நடிகைகள் மற்றும் பெண் கலைஞர்களுக்கு நடந்த பாலியல் துன்புறுத்தல்கள் ஓய்வுபெற்ற நீதிபதி ஹேமா கமிட்டியின் விசாரணை அறிக்கையில் அம்பலமானது. இதையடுத்து குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்களின் மீது நடவடிக்கை எடுக்க சிறப்பு புலனாய்வு குழுவை கேரள அரசு அமைத்தது.

    அந்த குழுவினர் பாதிக்கப்பட்ட நடிகை களிடம் விசாரணை நடத்தினர். அவர்கள் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் முகேஷ் எம்.எல்.ஏ., சித்திக், ஜெயபிரகாஷ் உள்ளிட்ட மலையாள திரையுலக பிரபல நடிகர்கள் மீது பாலியல் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

    மேலும் பிரபல இயக்குனர்களான ரஞ்சித், வி.கே.பிரகாஷ் உள்ளிட்டோர் மீதும் வழக்கு பதியப்பட்டது. பாலியல் குற்றச்சாட்டு கூறியிருக்கும் நடிகை களிடம் சிறப்பு புலனாய்வு குழுவினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் பாலியல் குற்றச்சாட்டு கூறிய நடிகைகள் மற்றும் பெண் கலைஞர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு வாக்குமூலம் பெறும் நடவடிக்கை தொடங்கப்பட்டு இருக்கிறது.

    அதன்படி பிரபல நடிகர் ஜெயசூர்யா மீது பாலியல் புகார் கூறிய நடிகையிடம் வாக்கு மூலம் பெறப்பட்டது.

    அவர் கோளஞ்சேரி முதலாவது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் வாக்குமூலம்அளித்தார். காலை 11.30 மணி முதல் மதியம் வரை அவரிடம் விசாரித்து வாக்குமூலம் பதிவு செய்யப் பட்டிருக் கிறது. நடிகையிடம் பூட்டிய அறையில் வைத்து மாஜிஸ் திரேட்டு வாக்குமூலம் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • கேரளாவில் விற்பனை செய்யப்படும் நெய் வகைகளின் தரம் குறித்து ஆய்வு செய்தனர்.
    • 3 வகை நெய் உற்பத்திக்கும், விற்பனைக்கும் தடை விதித்து மாநில உணவு பாதுகாப்பு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

    திருவனந்தபுரம்:

    திருப்பதி லட்டில் கலப்பட நெய் சேர்க்கப்படுவதாக எழுந்த புகாரை தொடர்ந்து கேரளாவில் விற்பனை செய்யப்படும் நெய் வகைகளின் தரம் குறித்து ஆய்வு செய்தனர்.

    இந்த நிலையில் கேரளாவில் விற்பனை செய்யப்பட்டு வந்த ஜோய்ஸ், மேன்மா, எஸ்.ஆர்.எஸ். ஆகிய நிறுவனத்தினர் நெய்யுடன் தாவர எண்ணெய், வனஸ்பதி ஆகியவை சேர்த்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதை தொடர்ந்து இந்த 3 வகை நெய் உற்பத்திக்கும், விற்பனைக்கும் தடை விதித்து மாநில உணவு பாதுகாப்பு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

    • சிறப்பு விசாரணை குழுவினர் முன்னிலையில் நடிகர் முகேஷ் கொச்சியில் உள்ள சிறப்பு புலனாய்வு பிரிவு அலுவலகத்தில் ஆஜரானார்.
    • நடிகர் சித்திக் முன் ஜாமீன் கேட்டு கேரள ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

    கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் ஆலுவா பகுதியை சேர்ந்த நடிகை, தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக நடிகரும், கொல்லம் எம்.எல்.ஏ.வுமான முகேஷ் மீது மரடு போலீசில் புகார் கொடுத்து இருந்தார். அதில், கடந்த 2009-ம் ஆண்டு நாடகமே உலகம் என்ற சினிமா படப்பிடிப்பு திருச்சூர் மாவட்டம் வடக்கஞ்சேரியில் நடந்தது. அங்குள்ள ஓட்டலில் நடிகர் முகேஷ் தங்கி இருந்தார்.

    அப்போது சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி என்னை அந்த ஓட்டலுக்கு வரவழைத்தார். அங்கு சென்ற எனக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது. இதேபோல் நடிகர் மணியன் பிள்ளை ராஜு உள்பட 6 பேர் மீது அந்த நடிகை புகார் தெரிவித்து இருந்தார்.

    அதன் பேரில் போலீசார் முகேஷ் மீது பெண்மையை அவமதித்தல், பாலியல் தொல்லை உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இதைத்தொடர்ந்து நடிகர் முகேஷ் முன் ஜாமீன் கோரி கேரள ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிபதிகள், நடிகையின் வாக்குமூலத்தில் உள்ள வேறுபாடுகளை சுட்டிக்காட்டி முகேசுக்கு முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டனர். அதோடு விசாரணை அதிகாரிகள் அழைக்கும்போது விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டு இருந்தது.

    இந்தநிலையில் நடிகைகள் மீதான பாலியல் புகார்களை விசாரிக்கும் சிறப்பு விசாரணை குழுவினர் முன்னிலையில் நடிகர் முகேஷ் நேற்று கொச்சியில் உள்ள சிறப்பு புலனாய்வு பிரிவு அலுவலகத்தில் ஆஜரானார். அவரிடம் பல்வேறு கேள்விகளை கேட்டு விசாரணை நடத்தி, வாக்குமூலம் பெறப்பட்டது.

    விசாரணைக்கு பின்னர் நடிகர் முகேஷை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

    இது கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இதேபோல் கடந்த 2016-ம் ஆண்டு சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி திருவனந்தபுரத்தில் உள்ள ஓட்டலுக்கு வரவழைத்து பாலியல் தொல்லை கொடுத்ததாக நடிகர் சித்திக் மீது திருவனந்தபுரம் மியூசியம் போலீசில் நடிகை புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்த வழக்கு சிறப்பு விசாரணை குழுவிடம் ஒப்படைக்கப்பட்டு, ஆதாரங்கள் திரட்டப்பட்டு வருகிறது.

    இதற்கிடையே நடிகர் சித்திக் முன் ஜாமீன் கேட்டு கேரள ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை தனி அமர்வு நீதிபதி டயஸ் விசாரித்தார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, காலதாமதம் ஆனதால் ஒரு வழக்கின் முக்கியத்துவம் குறைந்து விடாது என்று கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இதையடுத்து நடிகர் சித்திக் கைது செய்யப்படலாம் என்ற நிலையில், கொச்சியில் உள்ள அவரது 2 வீடுகளுக்கு சிறப்பு விசாரணை குழுவினர் விரைந்து சென்று தேடினர். அங்கு சித்திக் இல்லை. அவரது செல்போன் எண்கள் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது.

    தலைமறைவான நடிகர் சித்திக்கை கைது செய்ய போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். அவர் வெளிநாடு தப்பி செல்லாமல் இருக்க போலீசார் லுக் அவுட் நோட்டீஸ் வெளியிட்டு உள்ளனர்.

    நடிகை பாலியல் புகாரை தொடர்ந்து, மலையாள நடிகர் சங்கமான அம்மா அமைப்பின் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நடிகர் சித்திக் ராஜினாமா செய்தது குறிப்பிடத்தக்கது.

    • கடந்த மூன்று ஆண்டுகளாக நிர்வாண படத்தை வெளியிட்டு விடுவதாக மிரட்டி பாலியல பலாத்காரம்.
    • மனஅழுத்தம் அடைந்த நிலையில் தோழியிடம் சம்பவத்தை கூற, வழக்குப்பதிவு செய்து டியூசன் மைய உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

    கேரள மாநிலம் திருச்சூர் அருகே உள்ள வெள்ளாஞ்சிரா பகுதியை சேர்ந்தவர் சரத் (வயது 28). இவர் அந்த பகுதியில் 3 டியூசன் மையங்கள் நடத்தி வருகிறார். அதில் ஒரு மையத்தில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு பிளஸ்-1 மாணவி ஒருவர் கணித பாடத்திற்கு டியூசனுக்கு சேர்ந்தார்.

    அப்போது அந்த மாணவியை, அவருக்கு தெரியாமல் டியூசன் சென்டர் உரிமையாளரான ஆசிரியர் சரத் நிர்வாண வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்திருக்கிறார். அதனை காண்பித்து மிரட்டி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார். அத்துடன் அந்த மாணவியின் சமூக வலைத்தள பக்கத்தை கையாணடு வந்துள்ளார்.

    அந்த மாணவி தற்போது பி.டெக். படிக்கும் நிலையில், சரத்தின் டியூசன் சென்டரில் தொடர்ந்து படிக்கிறார். தன்னிடம் உள்ள நிர்வாண படங்களை காண்பித்து மிரட்டியபடி கடந்த 3 ஆண்டுகளாக மாணவியை ஆசிரியர் சரத் பாலியல் பலாத்காரம் செய்தபடி இருந்திருக்கிறார்.

    டியூசன் ஆசிரியர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்துவந்த தகவலை, அந்த மாணவி தனது தோழி ஒருவரிடம் தெரிவித்தார். தோழியின் அறிவுறுத்தலின் பேரில் டியூசன் ஆசிரியர் சரத் மீது பாதிக்கப்பட்ட மாணவி, ஆளூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    அதன்பிறகே டியூசன் ஆசிரியரால் மாணவி பாலியல் தொல்லைக்கு உள்ளாகிய தகவல் வெளிச்சத்துக்கு வந்தது. மாணவி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிந்து டியூசன் ஆசிரியர் சரத்தை போலீசார் கைது செய்தனர்.

    மாணவியின் ஆபாச படங்கள் உள்ளதா? என்று ஆசிரியரின் செல்போன் உள்ளிட்டவைகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். ஆசிரியர் சரத் இது போன்று வேறு மாணவிகளை பாலியல் பலாத்காரம் செய்தாரா? என்று போலீசார் விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    • கார் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி, அங்கிருந்த ஆற்றுக்குள் கவிழ்ந்தது.
    • விபத்து குறித்து தீயணைப்பு மற்றும் போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

    திருவனந்தபுரம்:

    மகாராஷ்டிர மாநிலத்தை சேர்ந்தவர்கள் ஜேம்ஸ் ஜார்ஜ்(வயது48), சைலி ராஜேந்திர சர்ஜே(27). இவர்கள் இருவரும் கடந்த சில நாட்களுக்கு முன்பு கேரள மாநிலத்துக்கு வந்திருக்கின்றனர்.

    அவர்கள் நேற்று இரவு கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம் குமரகோம் பகுதியில் இருந்து எர்ணாகுளத்துக்கு வாடகை காரில் சென்றனர். கைப்புழமுட்டு என்ற பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, அவர்களது கார் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி, அங்கிருந்த ஆற்றுக்குள் கவிழ்ந்தது.

    இதனால் அவர்களது கார் தண்ணீரில் மூழ்கியபடி இருந்தது. காருக்குள் இருந்தவர்கள் வெளியே வர முடியாமல் தவித்தனர். அவர்கள் தங்களை காப்பாற்றுமாறு கூக்குரலிட்டுள்ளனர். அவர்களது சத்தத்தை கேட்டு அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.

    ஆனால் அதற்குள் ஆற்றுக்குள் கார் முழுவதுமாக மூழ்கியது. உள்ளூர் மக்கள் ஆற்றுக்குள் இறங்கி காருக்குள் சிக்கியவர்களை காப்பாற்ற முயன்றனர். ஆனால் முடியவில்லை. இந்த விபத்து குறித்து தீயணைப்பு மற்றும் போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

    இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள், ஆற்றுக்குள் 20 அடி ஆழத்தில் மூழ்கிக் கிடந்த காரை மீட்டு வெளியே எடுத்தனர். காருக்குள் மயங்கிய நிலையில் கிடந்த ஜேம்ஸ் ஜார்ஜ், சைலி ராஜேந்திர சர்ஜே ஆகிய இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக கோட்டயம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    ஆனால் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே இருவரும் பரிதாபமாக இறந்தனர். இதையடுத்து இருவரது உடல்களையும் போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மகாராஷ்டிர மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பதால் தாங்கள் செல்ல வேண்டிய இடத்துக்கு கூகுள் மேப்பை பார்த்துபடி சென்றி ருக்கலாம் என்றும், அப்போது தவறான வழியை காட்டியதன் காரணமாக ஆற்றுக்குள் கார் விழுந்திருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.

    இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஜேம்ஸ் ஜார்ஜ் மற்றும் சைலி ராஜேந்திர சர்ஜே விபத்தில் பலியான தகவல் மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள அவர் களது குடும்பத்தினருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் கேரளா விரைந்துள்ளனர்.

    ×