என் மலர்
கேரளா
- விபத்தில் கார் அப்பளம் போல் நொறுங்கியது.
- எதிர்பாராதவிதமாக காரும் பஸ்சும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் சபரிமலைக்கு தினமும் ஏராளமானோர் பஸ், வேன் மற்றும் கார்களில் வந்து ஐயப்பனை தரிசனம் செய்து செல்கின்றனர்.
நேற்று மகாராஷ்டிரா மாநிலம் பதிவு எண் கொண்ட ஒரு காரில் சிலர் சபரிமலை தரிசனம் முடிந்து திரும்பிக் கொண்டிருந்தனர். நள்ளிரவு 11.30 மணி அளவில் கொல்லம் அருகே உள்ள சடையமங்கலம் நெட்டேதாரா பகுதியில் கார் வந்தது.
அப்போது எதிரே சுற்றுலா பஸ் வந்தது. எதிர்பாராதவிதமாக காரும் பஸ்சும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் கார் அப்பளம் போல் நொறுங்கியது. அதில் வந்தவர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கி கூச்சலிட்டனர்.

இதனை கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு விரைந்து வந்து மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். இருப்பினும் காருக்குள்ளேயே 2 பேர் பிணமாகி விட்டனர். மேலும் 2 குழந்தைகள் உள்பட 3 பேர் பலத்த காயத்துடன் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
விபத்து குறித்து போலீசார் நடத்திய முதல்கட்ட விசாரணையில் பலியான 2 பேரும் நெல்லை மாவட்டம் ராதாபுரத்தை சேர்ந்த சரவணன் மற்றும் சண்முகராஜா என தெரியவந்தது. இது தொடர்பாக போலீசார் மேல் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கார் தவறான திசையில் சென்றதே விபத்துக்கு காரணம் என கூறப்படுகிறது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- இந்த வைரஸ் பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது என சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
- இந்தியாவிலேயே கேரள மாநில மக்கள் அதிகளவில் வெளிநாடுகளில் வசிக்கிறார்கள்.
திருவனந்தபுரம்:
சீனாவில் எச்.எம்.பி.வி. என்னும் வைரஸ் தொற்று வேகமாகப் பரவி வருவதாகவும், ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சமூக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து அதிகாரப்பூர்வமான எந்த ஒரு அறிவிப்பும் இல்லை.
ஆனாலும் இந்த வைரஸ் பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது என சீன நாட்டு சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கொரோனா பெருந்தொற்றின் தாக்கத்தில் இருந்து உலக நாடுகள் விடுபட்டுள்ள நிலையில், மீண்டும் ஒரு தொற்று பரவலா என உலக நாடுகள் இந்த விவகாரத்தை உன்னிப்பாக கவனிக்கத் தொடங்கியுள்ளன.
இந்நிலையில், இந்தியாவிலேயே கேரள மாநில மக்கள்தான் அதிகளவில் வெளிநாடுகளில் வசிக்கிறார்கள். எனவே சீனாவில் பரவும் எச்.எம்.பி.வி. தொற்று குறித்து அந்த மாநில அரசு தீவிரமாக கண்காணிக்கத் தொடங்கியுள்ளது.
இதுதொடர்பாக கேரள மாநில சுகாதாரத்துறை மந்திரி வீணா ஜார்ஜ் பேஸ்புக் செய்தியில், சீனாவில் கண்டறியப்பட்ட வைரஸ் தொற்றுநோயாக மாறக்கூடிய அல்லது மற்ற பகுதிகளுக்கு வேகமாகப் பரவக்கூடியதாக இதுவரை எந்த தகவலும் இல்லை.
உலகின் அனைத்துப் பகுதிகளிலும் மலையாளிகள் இருப்பதால் சீனா உள்பட வெளிநாட்டவர்கள் அடிக்கடி மாநிலத்திற்கு வருவதால், கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
நாங்கள் சீனாவில் நிலைமையை கண்காணித்து வருகிறோம். இருப்பினும் மக்கள், குறிப்பாக கர்ப்பிணிப் பெண்கள், குழந்தைகள், முதியோர்கள் கூடுதல் விழிப்புடன் இருக்கவேண்டும். பொது இடங்களில் முகக்கவசம் அணியவேண்டும் என பதிவிட்டுள்ளார்.
- நடந்து முடிந்த மண்டல சீசனில் மொத்தம் 32 லட்சத்து 49 ஆயிரத்து 756 பக்தர்கள் சாமி தரிசனம் செய்திருந்தனர்.
- அரவணை விற்பனை மூலம் ரூ.124 கோடியே 2 லட்சத்து 30 ஆயிரத்து 950-ம், காணிக்கை மூலம் ரூ.80 கோடியே 25 லட்சத்து 74 ஆயிரத்து 567-ம் கிடைத்துள்ளது.
சபரிமலை:
சபரிமலையில் திருவிதாங்கூர் தேவஸ்தான தலைவர் பிரசாந்த் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடப்பு 2024-2025 மண்டல, மகரவிளக்கு சீசனை முன்னிட்டு கடந்த நவம்பர் மாதம் 15-ந் தேதி கோவில் நடை திறக்கப்பட்டது. மறுநாள் முதல் (கார்த்திகை-1) வழக்கமான பூஜை நடந்து வந்தது. 41 நாட்கள் நடைபெற்று வந்த பூஜையின் சிகரமாக கடந்த 26-ந் தேதி மண்டல பூஜையுடன் நிறைவு பெற்றது.
இதனை தொடர்ந்து 3 நாட்களுக்கு பிறகு மகரவிளக்கு பூஜைக்காக 30-ந் தேதி மாலையில் திறக்கப்பட்டது. 31-ந் தேதி முதல் வழக்கமான பூஜை நடந்து வருகிறது.
நடந்து முடிந்த மண்டல சீசனில் மொத்தம் 32 லட்சத்து 49 ஆயிரத்து 756 பக்தர்கள் சாமி தரிசனம் செய்திருந்தனர். மண்டல சீசனில் 41 நாட்களில் மொத்த வருமானம் ரூ.297 கோடியே 6 லட்சத்து 67 ஆயிரத்து 679 ஆகும். கடந்த ஆண்டை விட கூடுதலாக 4 லட்சத்து 7 ஆயிரத்து 309 பக்தர்கள் சாமி தரிசனம் செய்திருந்த நிலையில், மண்டல சீசனில் கடந்த ஆண்டை விட ரூ.82 கோடியே 23 லட்சத்து 79 ஆயிரத்து 781 கூடுதல் வருமானம் கிடைத்துள்ளது. இதில் அரவணை விற்பனை மூலம் ரூ.124 கோடியே 2 லட்சத்து 30 ஆயிரத்து 950-ம், காணிக்கை மூலம் ரூ.80 கோடியே 25 லட்சத்து 74 ஆயிரத்து 567-ம் கிடைத்துள்ளது. கடந்த ஆண்டை விட காணிக்கை மூலம் ரூ.13 கோடியே 28 லட்சத்து 45 ஆயிரத்து 705 கூடுதலாக வந்துள்ளது.
அதே போல் அரவணை விற்பனை மூலம் கடந்த ஆண்டை விட ரூ.22 கோடியே 6 லட்சத்து 59 ஆயிரத்து 540 கூடுதலாக கிடைத்துள்ளது.
மகர விளக்கை முன்னிட்டு தரிசனத்திற்கான ஆன்லைன் முன்பதிவு நிறைவடைந்த போதிலும் உடனடி தரிசன முன்பதிவு அடிப்படையில் தரிசனத்திற்கு வரும் அனைத்து பக்தர்களுக்கும் வாய்ப்பு அளிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- பேக்கரிக்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த அவர்களது காரை ஒரு நபர் திருடிக்கொண்டு சென்றார்.
- காரில் இருந்து சிறுமி இறக்கி விடப்பட்டதை அங்கு நின்ற சிலர் பார்த்து சிறுமியிடம் விசாரித்தனர்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் குன்னமங்கலம் பகுதியை சேர்ந்த ஒரு தம்பதி தங்களது 10 வயது மகளுடன் காரில் சென்றனர். வளைகுடா நாட்டில் வசித்து வந்த அவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் கேரளா வந்திருந்தனர்.
இவர்களது மற்றொரு குழந்தை குட்டியாடியில் உள்ள பெண்ணின் தாய் வீட்டில் வளர்ந்து வருகிறது. அந்த குழந்தையை பார்ப்பதற்காக தம்பதியினர் தங்களது 10 வயது மகளுடன் காரில் சென்றனர். அப்போது பேக்கரியில் ஷாப்பிங் செய்வதற்காக குட்டியாடியில் ஒரு இடத்தில் காரை சாலையோரமாக நிறுத்தினர்.
அப்போது அந்த தம்பதியரின் மகள் தூங்கிக் கொண்டிருந்தாள். இதனால் காரில் ஏ.சி.யை போட்டு வைத்துவிட்டு, மகளை காருக்குள்ளேயே விட்டு விட்டு கணவன்-மனைவி இருவரும் பேக்கரிக்கு சென்றனர். அவர்கள் பேக்கரியில் மும்முரமாக பொருட்களை வாங்கிக் கொண்டிருந்தனர்.
அப்போது பேக்கரிக்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த அவர்களது காரை ஒரு நபர் திருடிக்கொண்டு சென்றார். குழந்தை தூங்குவதை அந்த நபர் கவனிக்காமல் காரை வேகமாக எடுத்துச் சென்று விட்டார். இந்நிலையில் கடையில் பொருட்களை வாங்கிவிட்டு வெளியே வந்த தம்பதி, தங்களது கார் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
காருக்குள் தங்களின் மகள் இருக்கிறாள் என்று கூறி கதறி துடித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அந்த பகுதியில் நின்றவர்கள் கூறிய தகவலின் அடிப்படையில், அவர்களது கார் சென்ற சாலையில் பொதுமக்கள் சிலர் உதவியுடன் மற்றொரு வாகனத்தில் பின்தொடர்ந்து சென்றனர். செல்லும் வழியில் தங்களது காரின் அடையாளத்தை கூறி கேட்டபடி தொடர்ந்து சென்றனர்.
இந்தநிலையில் தம்பதியரின் காரை திருடிச் சென்ற நபர், சுமார் 2 மணி நேரத்திற்கு பிறகு காருக்குள் குழந்தை தூங்குவதை பார்த்தார். இதனால் அதிர்ச்சியடைந்த அவர், அந்த குழந்தையை நடுவழியில் இறக்கிவிட்டு காரை எடுத்துக் கொண்டு புறப்பட்டார்.
நடுவழியில் இறக்கி விடப்பட்ட சிறுமி என்ன நடந்தது என்று தெரியாமல் தவித்தபடி அழுது கொண்டே நின்றாள். காரில் இருந்து சிறுமி இறக்கி விடப்பட்டதை அங்கு நின்ற சிலர் பார்த்து சிறுமியிடம் விசாரித்தனர். அப்போது தனது பெற்றோர் மற்றும் ஊர் பற்றிய விவரங்களை சிறுமி தெரிவித்தாள்.
இந்தநிலையில் கார் மற்றும் குழந்தையை தேடி வந்த தம்பதியர் சிறுமி தவித்து நின்ற இடத்துக்கு வந்துவிட்டனர். அவர்கள் தங்களது மகள் கிடைத்ததை நினைத்து மகிழ்ச்சியடைந்தனர். அதே நேரத்தில் காரை திருடிச் சென்ற நபரை பிடிப்பதற்காக, தம்பதிக்கு உதவியவர்கள் தங்களது வாகனத்தில் அதே சாலையில் வேகமாக சென்றனர்.
அப்போது தம்பதியரின் காரை திருடிச் சென்ற நபரை சிறிது தூரத்தில் மடக்கி பிடித்தனர். இது குறித்து போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இத்துக்கு வந்து காரை திருடிச் சென்ற நபரை பிடித்து கைது செய்தனர்.
அவர் சாகுத் அருகே உள்ள ஆசாரிபரம் என்ற பகுதியை சேர்ந்த விஜீஷ் (வயது41) என்பது விசாரணையில் தெரியவந்தது. மேலும் அவர் குடிபோதையில் இருந்துள்ளார். இதனால் தான் குழந்தை படுத்து தூங்கியதை கவனிக்காமலேயே காரை திருடிக் கொண்டு சென்றிருக்கிறார்.
மேலும் குடிபோதையில் இருந்ததால் காரை மெதுவாகவே ஓட்டிச் சென்றுள்ளார். இதனால் தான் பின் தொடர்ந்து வந்த பொது மக்களிடமே சிக்கிக் கொண்டார். கைது செய்யப்பட்டுள்ள விஜீசிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- அண்டை மாநிலமான கேரளாவில் தமிழகத்திற்கு சரிசமமாக அதிக ரசிகர்கள் இருக்கிறார்கள்.
- நடிகர் விஜய்யை நேரில் சந்திக்க வேண்டும் என்பது இவரது நீண்டநாள் ஆசையாக இருந்து வருகிறது.
திருவனந்தபுரம்:
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் நடிகர் விஜய். தனது அதிரடி நடிப்பின் மூலம் சிறு குழந்தைகள், இளைஞர்கள், மாணவ-மாணவிகள், நடுத்தர வயதினர், வயதானவர்கள் என அனைத்து தரப்பினரின் மனம் கவர்ந்த இவருக்கு தமிழகம் மட்டு மின்றி பல மாநிலங்களில் ரசிகர்கள் இருக்கிறார்கள்.
அதிலும் அண்டை மாநிலமான கேரளாவில் தமிழகத்திற்கு சரிசமமாக அதிக ரசிகர்கள் இருக்கிறார்கள்.
இதனை அவர்கள் ஒவ்வொரு விஜய் படமும் வெளியாகும்போதும் வெளிக்காட்டுவதை பார்க்க முடியும்.
சமீபத்தில் வெளியான "தி கோட்" படத்தின் முதல் காட்சி கேரள மாநிலத்தில் அதிகாலையில் வெளியானது. படம் வெளியான அனைத்து தியேட்டர்களிலும் முதல் காட்சியை காண ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டனர். படத்தை பார்த்து திரும்பிய ரசிகர்கள் ஆரவாரம் செய்து ஆச்சரியப்படுத்தினர்.
இந்தநிலையில் கேரளாவை சேர்ந்த விஜய் ரசிகர் ஒருவர், அவரை சந்திப்பதற்காக கேரளாவில் இருந்து சென்னைக்கு நடை பயணத்தை தொடங்கி இருக்கிறார். பாலக்காடு மாவட்டம் மங்கலம் அணை பகுதியை சேர்ந்தவர் உன்னி கண்ணன். 33 வயதான இவர் நடிகர் விஜயின் தீவிர ரசிகர் ஆவார்.
நடிகர் விஜய்யை நேரில் சந்திக்க வேண்டும் என்பது இவரது நீண்டநாள் ஆசையாக இருந்து வருகிறது. இதற்காக அவர் தற்போது சென்னைக்கு நடைபயணம் மேற்கொண்டுள்ளார். வாலிபர் உன்னி கண்ணன் தனது நடை பயணத்தை புத்தாண்டு தினத்தில் தனது வீட்டில் இருந்து அதிகாலை 5.30 மணிக்கு தொடங்கினார்.
கழுத்திலும், கையிலும் நடிகர் விஜய் படம் அடங்கிய சுவரொட்டியுடன் நடை பயணம் மேற்கொண்டுள்ளார். வாலிபர் உன்னி கண்ணன், நடிகர் விஜய்யை பல முறை நேரில் சந்திக்க முயற்சி செய்திருக்கிறார். ஆனால் இதுவரை அவரை சந்திக்க முடியாமல் போனது.
இதனால் நடிகர் விஜய்யை எப்படியாவது நேரில் சந்தித்து விட வேண்டும் என்பது அவரது ஆசையாக இருந்து வருகிறது. தனது ஆசையை நிறைவேற்ற நடை பயணத்தை தொடங்கியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். நடிகர் விஜய்யை நேரில் சந்தித்து நெருக்கமாக நின்று புகைப் படம் எடுத்துக் கொள்ளலாம் என்ற நம்பிக்கையில் சென்னையை நோக்கி நடை பயணம் மேற் கொண்டிருக்கிறார்.
திருவனந்தபுரம்:
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் நடிகர் விஜய். தனது அதிரடி நடிப்பின் மூலம் சிறு குழந்தைகள், இளைஞர்கள், மாணவ-மாணவிகள், நடுத்தர வயதினர், வயதானவர்கள் என அனைத்து தரப்பினரின் மனம் கவர்ந்த இவருக்கு தமிழகம் மட்டுமின்றி பல மாநிலங்களில் ரசிகர்கள் இருக்கிறார்கள்.
அதிலும் அண்டை மாநிலமான கேரளாவில் தமிழகத்திற்கு சரிசமமாக அதிக ரசிகர்கள் இருக்கிறார்கள். இதனை அவர்கள் ஒவ்வொரு விஜய் படமும் வெளியாகும்போதும் வெளிக்காட்டுவதை பார்க்க முடியும்.
சமீபத்தில் வெளியான "தி கோட்" படத்தின் முதல் காட்சி கேரள மாநிலத்தில் அதிகாலையில் வெளியானது. படம் வெளியான அனைத்து தியேட்டர்களிலும் முதல் காட்சியை காண ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டனர். படத்தை பார்த்து திரும்பிய ரசிகர்கள் ஆரவாரம் செய்து ஆச்சரியப்படுத்தினர்.
இந்தநிலையில் கேர ளாவை சேர்ந்த விஜய் ரசிகர் ஒருவர், அவரை சந்திப்பதற்காக கேரளாவில் இருந்து சென்னைக்கு நடை பயணத்தை தொடங்கி இருக்கிறார்.
பாலக்காடு மாவட்டம் மங்கலம் அணை பகுதியை சேர்ந்தவர் உன்னி கண்ணன். 33 வயதான இவர் நடிகர் விஜயின் தீவிர ரசிகர் ஆவார்.
நடிகர் விஜய்யை நேரில் சந்திக்க வேண்டும் என்பது இவரது நீண்டநாள் ஆசையாக இருந்து வருகிறது. இதற்காக அவர் தற்போது சென்னைக்கு நடைபயணம் மேற்கொண்டுள்ளார்.
வாலிபர் உன்னி கண்ணன் தனது நடை பயணத்தை புத்தாண்டு தினத்தில் தனது வீட்டில் இருந்து அதிகாலை 5.30 மணிக்கு தொடங்கினார்.
கழுத்திலும், கையிலும் நடிகர் விஜய் படம் அடங்கிய சுவரொட்டியுடன் நடை பயணம் மேற்கொண்டுள்ளார். வாலிபர் உன்னி கண்ணன், நடிகர் விஜய்யை பல முறை நேரில் சந்திக்க முயற்சி செய்திருக்கிறார். ஆனால் இதுவரை அவரை சந்திக்க முடியாமல் போனது.
இதனால் நடிகர் விஜய்யை எப்படியாவது நேரில் சந்தித்து விட வேண்டும் என்பது அவரது ஆசையாக இருந்து வருகிறது. தனது ஆசையை நிறைவேற்ற நடை பயணத்தை தொடங்கியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
நடிகர் விஜய்யை நேரில் சந்தித்து நெருக்கமாக நின்று புகைப்படம் எடுத்துக் கொள்ளலாம் என்ற நம்பிக்கையில் சென்னையை நோக்கி நடைபயணம் மேற்கொண்டிருக்கிறார்.
- சபரிமலையில் சர்வதேச கிரீன் பீல்டு விமான நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
- 352 குடும்பங்கள் நேரடியாக பாதிக்கப்படும் என்பதால் அவர்களுக்கு மாற்று இடம் வழங்கி மறுவாழ்வுக்கு நடவடிக்கை வேண்டும்.
திருவனந்தபுரம்:
சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு ஆண்டுதோறும் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கிறார்கள். இதனால் சபரிமலையில் விமான நிலையம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்டநாட்களாக எழுந்தது.
இதையடுத்து சபரிமலையில் சர்வதேச கிரீன் பீல்டு விமான நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விமான நிலையம் சபரிமலை, எரிமேலி தெற்கு மற்றும் மணிமாலை ஆகிய நகரங்களுக்கு இடையே அமைய உள்ளது.
கேரள மாநிலத்தின் 5-வது சர்வதேச விமான நிலையமாக உருவாக இருக்கும் இந்த விமான நிலையம் அமைப்பதற்கான ஆரம்ப கட்ட பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. அதற்கான நிலத்தை கையகப்படுத்தும் பணி விரைவில் தொடங்கப்பட இருக்கிறது.

சபரிமலை விமான நிலைய திட்டத்துக்கு மொத்தம் 1,039.879 ஹெக்டேர் நிலம் தேவைப்படுகிறது. இந்த நிலங்கள் மணிமலை மற்றும் எரிமேலி தெற்கு ஆகிய பகுதிகளில் கையகப்படுத்தப்பட உள்ளது. அங்குள்ள 352 குடும்பங்கள் நேரடியாக பாதிக்கப்படும் என்பதால் அவர்களுக்கு மாற்று இடம் வழங்கி மறுவாழ்வுக்கு நடவடிக்கை வேண்டும்.
விமான நிலையம் அமைப்பதற்காக வெட்டப்பட வேண்டிய மரங்கள் மற்றும் மாற்றப்பட வேண்டிய வீடுகள் உள்ளிட்ட விவரங்கள் கணக்கிடப்பட்டுள்ளன. விமான நிலையம் அமைக்க மொத்தம் 3.4 லட்சம் மரங்கள் வெட்டப்படுகின்றன. அவற்றில் ரப்பர் மரங்கள் 3.3 லட்சம், தேக்கு மரங்கள் 2 ஆயிரத்து 492, காட்டுப்பலா மரங்கள் 2 ஆயிரத்து 247, பலா மரங்கள் 1131, மகோகனி மரங்கள் 828, மா மரங்கள் 184 ஆகும்.
அது மட்டுமின்றி சில கோவில்கள், தேவாலயங்கள், மசூதிகளும் பாதிக்கப்படுகின்றன. அவற்றுக்கும் மாற்று ஏற்பாடு செய்யப்பட இருக்கிறது. இந்த தகவல்கள் சபரிமலை சர்வதேச கிரீன்பீல்டு விமான நிலைய திட்டம் தொடர்பாக கோட்டயம் மாவட்ட நிர்வாகம் வெளியிட்டிருக்கும் சமூக தாக்க மதிப்பீட்டு ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- கேரள மாநில கவர்னர் ஆரீப்முகமதுகான் பீகார் மாநிலத்துக்கு மாற்றப்பட்டார்.
- கேரள ஐகோர்ட்டு தலைமை நீதிபதி நிதின் ஜம்தார் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
திருவனந்தபுரம்:
கேரள மாநில கவர்னராக இருந்த ஆரீப்முகமதுகான், பீகார் மாநில கவர்னராக மாற்றப்பட்டார். கேரள கவர்னராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரை ஜனாதிபதி திரவுபதி முர்மு நியமித்தார்.
இதனை தொடர்ந்து அவர் இன்று பதவியேற்றுக் கொண்டார். கேரளத்தின் 23-வது கவர்னராக பதவியேற்ற ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகருக்கு, கேரள ஐகோர்ட்டு தலைமை நீதிபதி நிதின் ஜம்தார் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
விழாவில் கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் மற்றும் மந்திரிகள், அரசியல் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
- உடனடி முன்பதிவு அடிப்படையில் சன்னிதானத்துக்கு வரக்கூடிய பக்தர்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்தை தாண்டுகிறது.
- இன்று சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
திருவனந்தபுரம்:
மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை கடந்த மாதம் (டிசம்பர்) 30-ந்தேதி திறக்கப்பட்டது. இதையடுத்து ஐயப்பனுக்கு மாலையணிந்து விரதம் மேற்கொண்டு வரும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு வந்தவண்ணம் உள்ளனர்.
பக்தர்களை அனுமதிக்கும் விஷயத்தில் மண்டல பூஜையை போன்றே கடைபிடிக்கப்படுகிறது. மெய் நிகர் வரிசை (ஆன்லைன் முன்பதிவு) மூலமாக 70 ஆயிரம் பேரையும், உடனடி முன்பதிவு மூலமாக 10 ஆயிரம் பேரையும் அனுமதிக்க தேவசம்போர்டு முடிவு செய்துள்ளது.
அதன்படி தினமும் ஆன்லைனில் முன்பதிவு செய்த 70 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். மேலும் உடனடி முன்பதிவு அடிப்படையில் தினமும் 10 ஆயிரம் பக்தர்களை அனுமதிக்க முடிவு செய்திருந்தாலும், அதற்கு மேல் பக்தர்கள் வருகிறார்கள்.
அவர்களும் சன்னிதானத்துக்கு அனுமதிக்கப்படுகிறார்கள். விடுமுறை நாட்களில் உடனடி முன்பதிவு அடிப்படையில் சன்னிதானத்துக்கு வரக்கூடிய பக்தர்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்தை தாண்டுகிறது.
இந்தநிலையில் மகர விளக்கு பூஜை காலத்தில் வருகிற 16-ந்தேதி வரை சாமி தரிசனத்துக்கான ஆன்லைன் முன்பதிவு முடிவடைந்துவிட்டது. 17 முதல் 19-ந்தேதிக்கான முன்பதிவு நடந்து வருகிறது. ஆன்லைன் முன்பதிவு முடிந்துவிட்டதால் உடனடி முன்பதிவு மூலமாக சாமி தரிசனம் செய்ய அதிகளவில் பக்தர்கள் வருகிறார்கள்.
இதனால் இன்று சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. சன்னிதானம், பம்பை, நிலக்கல் ஆகிய இடங்களில் பக்தர்கள் கூட்டம் மிகவும் அதிகமாக காணப்பட்டது. பக்தர்கள் அதிகளவில் வருவதால், அதற்கு தகுந்தாற்போல் பதினெட்டாம் படியில் பக்தர்களை போலீசார் வேகமாக அனுப்பினர்.
- பள்ளி வேனில் 15க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயணம் செய்தனர்.
- 15 மாணவ, மாணவிகள் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கேரள மாநிலம், கண்ணூர் அருகே பள்ளி வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த வேனில் 15க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயணம் செய்தனர்.
இந்நிலையில், வளகை என்ற இடத்தில் இறக்கத்தில் வந்தபோது வேன் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையோர தடுப்பில் மோதி உருண்டு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் சிறுமி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும், 15 மாணவ, மாணவிகள் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கண்பவர்களை பதைபதைக்க வைக்கும் இந்த விபத்தின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
- ஸ்ரீ நாராயண குரு சங்கத்தில் யாத்திரை மாநாடு நடைபெற்றது.
- சனாதன தர்மம் என்பது சாதி அடிப்படையிலான சமூக அமைப்பே தவிர வேறொன்றும் இல்லை.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் வர்க்கலா நகராட்சியில் உள்ள சிவகிரியில் ஸ்ரீ நாரா யண குரு மடம் உள்ளது. இங்கு ஸ்ரீ நாராயண சங்கத்தின் தலைமையகம் இருக்கிறது. இந்த சங்கத்தில் யாத்திரை மாநாடு நடைபெற்றது.
இந்த மாநாட்டில் கேரள மாநில முதல்-மந்திரி பினராயி விஜயன் கலந்து கொண்டு யாத்திரையை தொடங்கிவைத்தார். அந்த விழாவில் அவர் பேசிய தாவது:-
சனாதன தர்மம் என்பது சாதி அடிப்படையிலான சமூக அமைப்பே தவிர வேறொன்றும் இல்லை. நாராயண குரு சனாதன தர்மத்தின் பேச்சாளராகவோ அல்லது பயிற்சி செய்பவராகவோ இல்லை. ஆனால் அதை புனரமைத்து புதிய யுகத்திற்கு ஏற்ற தர்மத்தை பிடகடனப்படுத்திய ஒரு துறவி.
நாராயண குரு பரிந்துரைத்த புதிய யுகமான மனித நேய தர்மம் காலத்துடன் நிற்கிறது. சனாதன தர்மத்தின் கட்டமைப்பில் குருவை நிலைநிறுத்த முயற்சிப்பது துறவியை அவம திக்கும் செயலாகும். வர்ணாஸ்ரம தர்மம் என்பது சனாதன தர்மமத்திற்கு ஒத்ததாகவோ அல்லது ஒருங்கிணைந்த பகுதியாகவோ உள்ளது.
நாராயண குருவின் துறவு வாழ்க்கை முழு சாதுர்வர்ண அமைப்பையும் கேள்விக்குறியாக்கியது மற்றும் மீறியது. சமூக சீர்திருத்தவாதியான ஸ்ரீ நாராயண குருவை வெறும் மதத் தலைவராகவோ அல்லது ஒரு மத துறவியாகவோ குறைத்து மதிப்பிடும் முயற்சிகள் உணரப்பட வேண்டும்.
குருவுக்கு மதமும் இல்லை, ஜாதியும் இல்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும். யாரேனும் ஒரு குருவை சாதி அல்லது மதத்தின் எல்லைக்குள் கொண்டுவர முயன்றால், அவரை அதற்கு மேல் அவமதிக்க முடியாது.
இதுபோன்ற முயற்சிகளுக்கு எதிராக மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். அப்படி நடக்க விடக்கூாது. இதுபோன்ற தவறான விளக்கங்களை பொறுத்துக் கொள்ள முடியாது என்று உறுதியாக கூறமுடியும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்தநிலையில் முதல்-மந்திரி பினராயி விஜயனின் கருத்துக்கு பா.ஜ.க. தரப்பில் கடுமை எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் தனது கருத்துக்களின் மூலம் சிவகிரியில் உள்ள சனாதன தர்மத்தையும், ஸ்ரீ நாராயணகுருவின் ஆதரவாளர்களையும் அவமதித்து விட்டார் என்று குற்றம் சாட்டியுள்ளனர்.
"சிவகிரி மாநாட்டில் பினராயி விஜயன் பேசியது சனாதன தர்மத்தை வெறுக்க வேண்டும் என்பது தான். அவரது கருத்து சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும் என்று உதயநிதி ஸ்டாலின் கூறியதன் தொடர்ச்சியே" என்று பா.ஜ.க. மூத்த தலைவர் முரளீதரன் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், "பினராயி விஜயனின் ஆட்சியில் கேரளாவில் இந்து சமூகம் மிகப்பெரிய சவாலை எதிர்கொண்டது. நாராயண குருவை சனாதன தர்மத்தின் எதிரியாக சித்தரிக்கும் கம்யூனிஸ்டு கட்சியின் பிரசாரத்தை கேரள மக்கள் நிராகரிப்பார்கள்" என்றும் கூறினார்.
- மண்டல பூஜை நாட்கள் நெருங்க, நெருங்க பக்தர்களின் கூட்டம் அதிகரித்து வந்தது.
- மகரவிளக்கு சீசன் தொடங்கியதையடுத்து சபரிமலைக்கு ஏராளமான பக்தர்கள் வருகிறார்கள்.
திருவனந்தபுரம்:
சபரிமலை ஐயப்பன் கோவிலில் கடந்த மாதம் 26-ந் தேதி மண்டல பூஜை நடைபெற்று முடிந்தது. மண்டல சீசனில் 41 நாட்களில் 32.49 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்தனர். நடப்பு சீசனையொட்டி ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் தினசரி 70 ஆயிரம் பக்தர்களுக்கும், உடனடி தரிசன முன்பதிவின் படி தினசரி 10 ஆயிரம் பக்தர்களுக்கும் தரிசன அனுமதி அளிக்கப்பட்டது.
இந்தநிலையில் மண்டல பூஜை நாட்கள் நெருங்க, நெருங்க பக்தர்களின் கூட்டம் அதிகரித்து வந்தது. இதையடுத்து உடனடி தரிசன முன்பதிவு மூலம் கூடுதல் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். இதனால் கடந்த மண்டல சீசனில் ஒரே நாளில் அதிகப்படியாக 1 லட்சத்து 6 ஆயிரம் பக்தர்கள் வரை சிரமம் இன்றி தரிசனம் செய்தனர்.
இந்தநிலையில் மகரவிளக்கு சீசன் தொடங்கியதையடுத்து சபரிமலைக்கு ஏராளமான பக்தர்கள் வருகிறார்கள். இன்று (புதன்கிழமை) ஆங்கில புத்தாண்டு பிறப்பையொட்டி சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அலை மோதுகிறது. புத்தாண்டின் முதல் நாள் தரிசனத்திற்காக பம்பை முதல் சன்னிதானம் வரை நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்தனர்.
மகர விளக்கு பூஜை வருகிற 14-ந் தேதி நடைபெற உள்ள நிலையில் 15-ந் தேதி வரை ஆன்லைன் முன்பதிவு நிறைவடைந்துள்ளது. இந்தநிலையில் உடனடி தரிசன முன்பதிவின்படி தரிசனத்திற்கு வரும் அனைத்து பக்தர்களுக்கும் தரிசன அனுமதி வழங்கப்படும் என்றும் அதற்கு ஏதுவாக பம்பையில் உடனடி தரிசன முன்பதிவுக்கான கவுண்ட்டர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு இருப்பதாகவும் திருவிதாங்கூர் தேவஸ்தான அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.






