என் மலர்
ஜார்கண்ட்
- சடலங்கள் பிரேதப் பரிசோதனைக்காக மேதினிராய் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
- பேரிடர் மேலாண்மை நிதியில் இருந்து இறந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.
ஜார்கண்ட் மாநிலம் பலாமு மாவட்டத்தில் மின்னல் தாக்கியதில் ஒரு பெண் உட்பட 2 பேர் உயிரிழந்துள்ளனர். பலியான பல்ராம் யாதவ் (56), மன்மதி தேவி (45) ஆகியோர் வயலில் கால்நடைகளை மேய்த்துக் கொண்டிருந்தபோது, இடி தாக்கியதில் அவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
சடலங்கள் பிரேதப் பரிசோதனைக்காக மேதினிராய் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
இந்நிலையில், பேரிடர் மேலாண்மை நிதியில் இருந்து இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று துணை ஆணையர் ஆஞ்சநேயுலு டோடே தெரிவித்தார்.
- நீதித்துறை உள்கட்டமைப்பு சுமை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.
- நீதித்துறை உட்கட்டமைப்பை மாற்றியமைக்க வேண்டும்.
ராஞ்சி :
ஜார்கண்ட் மாநிலம், ராஞ்சியில் நடந்த நீதிபதி சத்ய பிரதா சின்கா நினைவு சொற்பொழிவு நிகழ்ச்சியில் சுப்ரீம்கோர்ட்டு தலைமை நீதிபதி என்.வி.ரமணா கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
நான் தீவிர அரசியலில் சேர்வதில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தேன். ஆனால் விதி வேறாகி விட்டது. நான் கடினமாக உழைத்த ஒன்றை விட்டுவிடுவது என எடுத்த முடிவு எளிதான ஒன்று அல்ல.
காலியாக உள்ள நீதிபதிகளின் பணியிடங்களை நிரப்பாததும், நீதித்துறை கட்டமைப்பை மேம்படுத்தாததும்தான் நமது நாட்டில் கோர்ட்டுகளில் வழக்குகள் தேங்கிக்கிடப்பதன் காரணம் ஆகும்.
பல நேரங்களில் நான் இந்த பிரச்சினையை முன்னிலைப்படுத்தி இருக்கிறேன். நீதித்துறை உட்கட்டமைப்பை மாற்றியமைக்க வேண்டும் என்று வலுவாக கூறி வந்திருக்கிறேன்.
சமீப காலமாக நீதிபதிகள் தாக்குதலுக்கு ஆளாகிற சம்பவங்கள் அதிகரித்து வருவதை நாம் பார்க்கிறோம். குற்றவாளிகள் தண்டிக்கப்படுகிற இந்த சமூகத்தில்தான் எந்த பாதுகாப்பும் அல்லது பாதுகாப்பு உறுதியும் இல்லாமல் நீதிபதிகள் வாழ வேண்டியதிருக்கிறது.
அரசியல்வாதிகள், அதிகார வர்க்கத்தினர், போலீஸ் அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள் ஆகியோருக்கு போதுமான பாதுகாப்பு, அவர்கள் ஓய்வுபெற்ற பின்னர்கூட வழங்கப்படுகிறது. ஆனால் இத்தகைய பாதுகாப்பு நீதிபதிகளுக்கு அளிக்கப்படுவதில்லை.
இந்த நாட்டில் எதிர்கால நீதித்துறை எப்படி இருக்கப்போகிறது என்பது குறித்த எனது கவலைகளை பதிவு செய்யவும் நான் தவற மாட்டேன்.
நீதித்துறை உள்கட்டமைப்பு சுமை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. உள்கட்டமைப்பை மேம்படுத்துவதில் சில முட்டுக்கட்டைகள் இருக்கின்றன. இருந்தாலும், வருங்கால சவால்களுக்கு ஏற்ற வகையில் நீதித்துறையை தயார் படுத்துவதற்கென்று எந்த உறுதியான திட்டம் குறித்தும் நான் கேள்விப்படவில்லை.
நீதித்துறை மற்றும் நிர்வாகத்துறையின் ஒருங்கிணைந்த முயற்சிகளால்தான் நீதித்துறை உள்கட்டமைப்பு பிரச்சினைக்கு தீர்வு காண முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- சத்தான உணவு, கட்டுக்கோப்பான உடல் மற்றும் விளையாட்டின் முக்கியத்துவம் குறித்து விவாதம்.
- கட்டுக் கோப்பான வாழ்க்கை முறை தான் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் சிறந்தது.
ராஞ்சி:
சாம்பியனுடன் சந்திப்பு நிகழ்ச்சி ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில், நேற்று தொடங்கி வைக்கப்பட்டது. இதை தொடங்கி வைத்த இந்தியாவின் சிறந்த வில்வித்தை வீரர்களான தீபிகா குமாரி மற்றும் அதானு தாஸ் ஆகியோர் 75 பள்ளிகளைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட மாணவர்களுடன் கலந்துரையாடினர்.
இந்த கலந்துரையாடலின் போது, சத்தான உணவு, கட்டுக்கோப்பான உடல் மற்றும் விளையாட்டின் முக்கியத்துவம் குறித்து விவாதிக்கப்பட்டது. அப்போது பேசிய தீபிகா குமாரி, தற்போதைய நவீன வாழ்க்கையில் பெரும்பாலான மக்களிடம் பரவி உள்ள உணவு முறைகள், உடல் ஆரோக்கியத்திற்கு அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது என்றார்.

ஆரோக்கியமான உணவு மற்றும் கட்டுக் கோப்பான வாழ்க்கை முறை தான் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் சிறந்தது என்றார். இது குறித்து இளைய தலைமுறையினருக்கு எடுத்துக்கூற வேண்டும் என்று மாணவ மாணவிகளுடன் கலந்துரையாடுமாறும் விளையாட்டு வீரர்களை பிரதமர் கேட்டுக் கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தமது குழந்தை பருவத்தில் பச்சை காய்கறிகள், சாலட்டுகளை தமது வழக்கமான உணவாக உட்கொண்டதாகவும் தீபிகா குமாரி தெரிவித்தார். சாம்பியனுடன் சந்திப்பு நிகழ்ச்சியின் பலன்கள் வரும் ஆண்டுகளில் தெரிய வரும் என்று வில்வித்தை வீரர் அதானு தாஸ் கூறினார்.
- தியோகரில் நடந்த கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, குறுக்கு வழி அரசியல் நாட்டை அழித்து விடும் என்றார்.
- தியோகர் நகரில் ஜோதிர்லிங்கமும், சக்தீ பீடமும் உள்ளது என பிரதமர் மோடி தெரிவித்தார்.
தியோகர்:
ஜார்க்கண்ட் மாநிலம் தியோகர் நகரில் விமான நிலையம் மற்றும் வளர்ச்சி திட்டங்கள் என ரூ.16,800 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார்.
தியோகர் நகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:
குறுக்கு வழியில் அரசியல் செய்வது நாட்டை அழித்துவிடும். இந்தியாவில், பல குறுக்குவழிகள் உள்ளதால், குறுக்கு வழி அரசியலில் இருந்து தள்ளி நிற்கவேண்டும். நாட்டில் இந்த வகை அரசியல் மிகப்பெரிய சவாலாக மாறியுள்ளது.
குறுக்கு வழி அரசியல் மூலம் ஓட்டுக்களைப் பெறமுடியும். குறுக்கு வழியில் அரசியல் செய்பவர்கள் எப்போதும் விமான நிலையங்கள் அமைத்தது இல்லை. நவீன நெடுஞ்சாலைகள் அமைத்தது கிடையாது. எய்ம்ஸ் மருத்துவமனை அமைத்தது இல்லை. ஒவ்வொரு மாவட்டத்திலும் மருத்துவக் கல்லூரிகள் தொடங்க நடவடிக்கை எடுத்ததும் கிடையாது.
இந்தியா ஆன்மிகம், பக்தி மற்றும் யாத்திரை தலங்களின் பூமி. யாத்திரைகள் நம்மை சிறந்த தேசமாகவும், சமுதாயமாகவும் மாற்றியுள்ளது.
தியோகரில் ஜோதிர்லிங்கமும், சக்தீ பீடமும் உள்ளது. நீண்ட தூரங்களில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் தியோகர் நகருக்கு வருகின்றனர் என தெரிவித்தார்.
- தியோகர் விமான நிலையத்தில், 2500 மீட்டர் நீள ஓடுபாதை உள்ளது.
- விமான நிலையத்தில் இருந்து தியோகர்- கொல்கத்தா இண்டிகோ விமானத்தை பிரதமர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
ஜார்கண்ட் மாநிலம் தியோகர் மாவட்டத்தில் தியோகர் விமான நிலையத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார். 657 ஏக்கர் பரப்பளவில் 401 கோடி ரூபாய் செவில் தியோகர் விமான நிலையம் கட்டப்பட்டுள்ளது.
தியோகர் விமான நிலையத்திற்கு பிரதமர் மோடி 2018-ம் ஆண்டு மே மாதம் 25-ம் தேதி அடிக்கல் நாட்டினார். இந்த புதிய விமான நிலையத்தில் இருந்து தியோகர்- கொல்கத்தா இண்டிகோ விமானத்தை பிரதமர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
விமான நிலையத்தில், 2500 மீட்டர் நீள ஓடுபாதை உள்ளது. இது ஏர்பஸ் ஏ320 விமானங்கள் தரையிறங்குவதையும், புறப்படுவதையும் கையாளும்.
விமான நிலைய தொடக்க விழாவில் கலந்துக்கொண்ட சிவில் விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா கூறுகையில், "தியோகர் விமான நிலையம் வரும் நாட்களில் ராஞ்சி, பாட்னா மற்றும் டெல்லியுடன் இணைக்கப்படும்" என்றார்.
பின்னர் பிரதமர் நரேந்திர மோடி கூறியதாவது:-
ஜார்கண்ட் மட்டுமின்றி, இந்த திட்டங்கள் பீகார் மற்றும் மேற்கு வங்கத்தின் பல பகுதிகளுக்கும் பயனளிக்கும். தியோகர் விமான நிலையம் தங்களின் நீண்ட கால கனவு . அது இப்போது நிறைவேறியுள்ளது. இந்த திட்டங்கள் மக்களின் வாழ்க்கையை எளிதாக்கும். 16,800 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் மாநிலத்தின் இணைப்பு, சுற்றுலா மற்றும் வர்த்தக வாய்ப்புகளை மேம்படுத்தும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.
- இந்த சம்பவம் ஜூன் 29-ம்தேதி நடந்துள்ளது.
- வழக்குப்பதிவு செய்த போலீசார் கணவன் - மனைவியிடம் விசாரணை நடத்தினர்.
ராஞ்சி :
ஜார்க்கண்ட் மாநிலம் சிங்பம் மாவட்டம் பிரிகொரா கிராமத்தை சேர்ந்த உத்தம் மைத்தி (27). அவரது மனைவி அஞ்சனா மஹடொ (26). இந்த தம்பதிக்கு 4 வயதில் மகள் உள்ளார். 4 வயதான அந்த பெண் குழந்தையை அருகில் உள்ள ஆரம்ப பள்ளிக்கூடத்தில் பெற்றோர் சேர்த்துள்ளனர். ஆனால், குழந்தை சரியாக படிக்காமல் விளையாடுவதாக பெற்றோர் கருதியுள்ளனர்.
சரியாக பாடம் படிக்கும்படி கூறியும் குழந்தை படிக்காததால் ஆத்திரமடைந்த பெற்றோர் குழந்தையின் கைகளை கட்டி கடுமையாக தாக்கியுள்ளனர். இதில், குழந்தை மயக்கமடைந்துள்ளது. இதையடுத்து, அருகில் உள்ள மருத்துவமனைக்கு குழந்தையை கொண்டு சென்றுள்ளனர். ஆனால், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே குழந்தை உயிரிழந்துள்ளது.
இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் உயிரிழந்த குழந்தையை எடுத்துக்கொண்டு சல்கஞ்ச்ஹரி நகரில் இருந்து ரெயிலில் ஏறி ஹலுதி நகருக்கு சென்றுள்ளனர். அங்கு ரெயில் நிலையம் அருகே இருந்த முட்புதருக்குள் குழந்தையை வீசிவிட்டு தம்பதி வீட்டிற்கு வந்துள்ளனர். இந்த சம்பவம் ஜூன் 29-ம் தேதி நடந்த நிலையில் ஒரு வாரம் கழித்து தம்பதி தங்கள் வீட்டிற்கு வந்துள்ளனர்.
வீட்டிற்கு வந்த தம்பதியிடம் குழந்தை எங்கே என அக்கம்பக்கத்தினர் கேட்டுள்ளனர். அதற்கு இருவரும் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளனர். இதனால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் இது குறித்து போலீசில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் கடந்த செவ்வாய்கிழமை கணவன் - மனைவியிடம் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் சரியாக படிக்காததால் தங்கள் 4 வயது மகளை கடுமையாக தாக்கியது, அதில் குழந்தை உயிரிழந்ததையும் இருவரும் ஒப்புக்கொண்டனர். இதனை தொடர்ந்து கணவன் மனைவியை கைது செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஜார்க்கண்ட் மாநிலம் ஹரிப்பூர் என்ற இடத்தில் இனிப்பு கடை உள்ளது.
- இனிப்பு கடைக்குள் ஆசிட்டை வீசினார்.
ஹரிபூர்:
ஜார்க்கண்ட் மாநிலம் ஹரிப்பூர் என்ற இடத்தில் இனிப்பு கடை உள்ளது. இந்த கடைக்கு ஒருவர் இனிப்பு வாங்குவதற்காக வந்தார். அப்போது அவர் கடனுக்கு உணவு பொருட்கள் கேட்டார். ஆனால் உரிமையாளரோ முடியாது என மறுத்தார்.
இதனால் ஆத்திரம் அடைந்த அந்த நபர் வீட்டுக்கு சென்று ஆசிட் பாட்டில் எடுத்து வந்தார்.
பின்னர் அவர் இனிப்பு கடைக்குள் ஆசிட்டை வீசினார். இதில் கடையில் இருந்த 7 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் சிசிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக கடை உரிமையாளர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- ஜார்க்கண்ட்டில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது
- பாட்னாவில் பாதுகாப்பு படையினர் தீவிர ரோந்து பணிகளை மேற்கொண்டனர்.
அக்னிபாத் திட்டத்தின் கீழ் ராணுவத்திற்கு இளைஞர்கள் தேர்வு செய்யப்படும் மத்திய அரசின் கொள்கைக்கு எதிராக காங்கிரஸ் உள்பட பல அமைப்புகள் சார்பில் இன்று பாரத் பந்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
பீகார், ஜார்க்கண்ட், பஞ்சாப் மாநிலங்களில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெறுவதையொட்டி சம்பந்தப்பட்ட மாநிலங்களில் கண்காணிப்பு மற்றும் ரோந்து பணிகளில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.
ஜார்க்கண்ட்டில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கஜார்க்கண்ட்டில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதுப்பட்டுள்ளது. மேலும் 9 மற்றும் 11 ஆம் வகுப்புகளுக்கு இன்று நடைபெற இருந்த தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.
பள்ளி மாணவர்கள், குறிப்பாக பேருந்தில் பயணம் செய்பவர்கள், எந்த ஒரு பிரச்சனையையும் எதிர்கொள்வதை நாங்கள் விரும்பவில்லை என்று அம்மாநில பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறை செயலாளர் ராஜேஷ் குமார் சர்மா தெரிவித்துள்ளார். ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகளுக்கான புதிய தேதிகள் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாரத் பந்த்தையொட்டி அசாம்பாவிதங்களை தவிர்க்கும் வகையில் பீகார் மாநிலம் பாட்னாவில் பாதுகாப்பு படையினர் தீவிர ரோந்து பணிகளை மேற்கொண்டனர். ஜெய்ப்பூரில் நேற்று மாலை 6 மணி முதல் ஆகஸ்ட் 18 ஆம் தேதி நள்ளிரவு வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை கூடுதல் ஆணையர் அஜய்பால் லம்பா, தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்காள மாநிலத்தில் பாரத் பந்த் காரணமாக ஹவுரா ஸ்டேஷன், ஹவுரா பாலம், சந்த்ராகாச்சி சந்திப்பு, ஷாலிமார் ரயில் நிலையம் மற்றும் ஹவுரா உள்பட பல இடங்களில் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
- ஜாம்ஷெட்பூரில் உள்ள பகுன்ஹட்டு பகுதியை சேர்ந்த ஜானி குவைத் (30) என்ற நபர் தனது நண்பர்களுடன் விளையாட சென்றிருந்தார்.
- சம்பவத்தை தொடர்ந்து பூங்காவிற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
ஜார்கண்ட் மாநிலம் கிழக்கு சிங்பூம் மாவட்டத்தில் நீர் பொழுதுபோக்கு பூங்கா உள்ளது. இங்கு ஜம்ஷெட்பூரில் உள்ள பகுன்ஹட்டு பகுதியை சேர்ந்த ஜானி குவைத் (30) என்ற நபர் தனது நண்பர்களுடன் விளையாட சென்றிருந்தார்.
அப்போது பூங்காவில் படகு சறுக்கி விழுந்ததில் ஜானி குவைத் உயிரிழந்தார்.
இதுகுறித்து போலீசார் கூறுகையில், " பொழுதுபோக்கு சவாரியின் நீர் சறுக்கும் படகு ஜானியின் தலையில் மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவரை அங்குள்ள நர்சிங் ஹோமுக்கு கொண்டு செல்லப்பட்டர். ஆனால் அங்கிருந்து காட்சிலா சதார் மருத்துவமனைக்கு பரிந்துரைத்தனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் ஜானி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்" என்று கூறினர்.
சம்பவத்தை தொடர்ந்து பூங்காவிற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. நீர் பொழுதுபோக்கு பூங்காவின் மேலாளரை விசாரணைக்காக காவலில் எடுத்துள்ளோம். அதை இயக்குவதற்கான சரியான ஆவணத்தைக் கூட நீர் பூங்கா ஆணையத்தால் சமர்ப்பிக்க முடியவில்லை என்று தெரிவித்தார்.
- ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள மெயின் ரோட்டில் ஏராளமானவர்கள் குவிந்து நுபுர் சர்மாவை கைது செய்யக்கோரி கோஷமிட்டனர்.
- 9 மாநிலங்களில் மிகப்பெரிய அளவில் மக்கள் திரண்டு வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ராஞ்சி:
நபிகள் நாயகம் குறித்து சர்ச்சையான கருத்தை பா.ஜனதாவை சேர்ந்த நுபுர் சர்மா, நவீன் குமார் ஜிண்டால் ஆகியோர் தெரிவித்து இருந்தனர். இதையடுத்து அவர்கள் மீது பா.ஜனதா நடவடிக்கை எடுத்தது. நவீன்குமார் ஜிண்டால் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். நுபுர் சர்மா 'சஸ்பெண்டு' செய்யப்பட்டார்.
இவர்கள் இருவரும் தெரிவித்த கருத்துகளுக்காக மத்திய அரசுக்கு இஸ்லாமிய நாடுகள் கண்டனம் தெரிவித்தன. இந்த நிலையில் சர்ச்சை கருத்து தெரிவித்த நுபுர்சர்மா, ஜிண்டால் ஆகிய இருவரையும் கைது செய்ய கோரி நாடு முழுவதும் நேற்று முஸ்லிம்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். டெல்லி, ஜூம்மா மசூதியில் வெள்ளிக்கிழமை தொழுகையை முடித்து கொண்டு வெளியே வந்தவர்கள் நுபுர்சர்மாவுக்கும், டெல்லி போலீசாருக்கும் எதிராக கோஷமிட்டனர்.
பெரும்பாலான மாநிலங்களில் அமைதியான முறையில் போராட்டம் நடந்தது. சில மாநிலங்களில் நடந்த போராட்டம் வன்முறையாக மாறியது. ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள மெயின் ரோட்டில் ஏராளமானவர்கள் குவிந்து நுபுர் சர்மாவை கைது செய்யக்கோரி கோஷமிட்டனர். அதிக அளவில் மக்கள் திரண்டதால் போலீஸ் பாதுகாப்பு அதிகமாக போடப்பட்டது இருந்தது.
மேலும் அந்த பகுதியில் கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தன. ராஞ்சியில் பல இடங்களிலும் போராட்டம் நடந்தது. போராட்டத்தில் பங்கேற்றவகளில் சிலர் கல்வீச்சில் ஈடுபட்டனர். இதில் போலீசார் காயம் அடைந்தனர். இதையடுத்து போலீசார் கூட்டத்தை கலைக்க தடியடி நடத்தினார்கள்.
மேலும் போலீசார் துப்பாக்கியால் சுட்டும் அவர்களை அப்புறப்படுத்த முயன்றனர். போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 2 பேர் குண்டு பாய்ந்து பலியானார்கள்.
குண்டு காயம் அடைந்த 2 பேர் அங்குள்ள ராஜேந்திரா இன்ஸ்டிடியூட் மருத்துவ அறிவியல் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் அவர்கள் வழியிலேயே இறந்துவிட்டனர்.
ராஞ்சி போலீஸ் கமிஷனர் அனுஷ்மான் குமார் துப்பாக்கி சூட்டில் 2 பேர் பலியானதை உறுதிப்படுத்தினார். இந்த சம்பவத்தில் 12 பேர் காயம் அடைந்தனர். கலவரத்தில் ஈடுபட்ட 8 பேரும், 4 போலீசாரும் காயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். வன்முறையில் ஈடுபட்டவர்கள் முதலில் அடையாளம் காணப்பட்டு விசாரணை நடத்தி கைது செய்யப்படுவார்கள் என்று உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
அங்கு பல இடங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இண்டர்நெட் சேவையும் முடக்கப்பட்டுள்ளது.
உத்தரபிரதேச மாநிலத்தில் லக்னோ, பிரயாக்ராஜ், சஹாரன்பூர், மொரதாபாத், ராம்பூர் நகரங்களில் பேராட்டக்காரர்கள் கல்வீச்சில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி கலவரத்தில் ஈடுபட்டவர்களை விரட்டி அடித்தனர்.
இந்த வன்முறையில் வாகனங்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டன. உத்தரபிரதேசத்தில் நடந்த போராட்டம் தொடர்பாக 227 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். அடையாளம் தெரியாத 5 ஆயிரம் பேர் மீது பிரயாக்ராஜ் போலீசார் எப்.ஐ.ஆர். பதிவு செய்துள்ளனர்.
மராட்டிய மாநிலத்தில் பல்வேறு நகரங்களில் முஸ்லிம்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். நவி மும்பையில் நடந்த கண்டன பேரணியில் ஆயிரம் பெண்கள் உள்பட 3 ஆயிரம் பேர் பங்கேற்றனர். போராட்டம் அமைதியாக நடந்தது. குஜராத்தில் அகமதாபாத், வதோதரா உள்ளிட்ட நகரங்களில் போராட்டம் நடந்தது. முஸ்லிம்கள் அதிகம் உள்ள பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டன.
9 மாநிலங்களில் மிகப்பெரிய அளவில் மக்கள் திரண்டு வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- கடந்த 2009-ஆம் ஆண்டு ஜார்க்கண்ட் சட்டமன்ற தோ்தலின்போது, அவர் தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக கூறப்படுகிறது.
- இந்த வழக்கு தொடர்பாக பாலாமு மாவட்ட நீதிமன்றத்தில் நேற்று லாலு பிரசாத் ஆஜரானார்.
மேதினி நகா்:
கடந்த 2009-ஆம் ஆண்டு ஜார்க்கண்ட் சட்டமன்ற தோ்தலின்போது, லாலு பிரசாத் யாதவ் பாலாமு மாவட்டத்துக்கு ஹெலிகாப்டரில் சென்று மேற்கொண்டார். அவர் சென்ற ஹெலிகாப்டர் மேதினிநகரில் உள்ள ஹெலிபேடுக்கு பதிலாக கார்வா பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் தரையிறக்கப்பட்டது.
இந்த விவகாரத்தில், அவர் தேர்தல் நடத்தை விதிமீறல் செய்ததாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக பாலாமு மாவட்ட நீதிமன்றத்தில் நேற்று லாலு பிரசாத் ஆஜரானார். அப்போது அவர், தான் தோ்தல் நடத்தை விதிகளை மீறியதை அவா் ஒப்புக்கொண்டு, மன்னிப்பு கேட்டார்.
இதையடுத்து, அவரது மன்னிப்பை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம், லாலு பிரசாத்துக்கு ரூ.6,000 அபராதம் விதித்து உத்தரவிட்டது.
அந்த அபராதத்தை லாலு செலுத்தியதைத் தொடா்ந்து, வழக்கு முடித்துவைக்கப்பட்டது.
- சம்பவத்திற்குப் பிறகு வளாகத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது என்று பலமு துணை ஆணையர் சசிரஞ்சன் தெரிவித்தார்.
- சம்பவத்தால் யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை என்றும் குறிப்பிடத்தக்க சேதம் எதுவும் ஏற்படவில்லை.
ஜார்கண்ட் மாநிலம் பலாமு மாவட்டத்தில் ராஷ்டிர ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ் தங்கியிருந்த வீட்டின் அறையில் இருந்த மின்விசிரியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
லாலு பிரசாத் யாதவ் இன்று காலை 8 மணியளவில் தனது அறையில் காலை உணவை சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது தளத்தில் பொருத்தப்பட்டிருந்த மின்விசிறியில் திடீரென தீப்பிடித்தது. இதுகுறித்து உடனடியாக தகவல் தெரியவந்ததை அடுத்து அவரது உதவியாளர்கள் லாலு பிரசாத் யாதவை அழைத்துச் சென்றனர். பின்னர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
குறைந்த மின் அழுத்தம் காரணமாக தீ விபத்து ஏற்பட்டது என்றும் சம்பவத்திற்குப் பிறகு வளாகத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது என்று பலமு துணை ஆணையர் சசிரஞ்சன் தெரிவித்தார்.
இந்த சம்பவத்தால் யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை என்றும் குறிப்பிடத்தக்க சேதம் எதுவும் ஏற்படவில்லை என்றும் அவர் கூறினார். மேலும், குறைந்த மின் அழுத்தம் சரி செய்யப்பட்டு தீப்பிடித்த மின்விசிறி அகற்றப்பட்டது என்றும் தெரிவிக்கப்பட்டது.






