ஒருதலை காதல்: பிளஸ்-2 மாணவியை எரித்துக்கொன்ற வாலிபர்

பிளஸ்-2 மாணவி எரித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பதற்றத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. தற்போது 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஒருதலை காதல்: பிளஸ்-2 மாணவியை எரித்துக்கொன்ற வாலிபர்
Published on

ராஞ்சி:

ஜார்க்கண்ட் மாநிலம் தும்சா மாவட்டத்தில் உள்ள பள்ளியில் படித்து வரும் பிளஸ்-2 மாணவியை ஜார்க்கண்ட் வாலிபர் ஷாருக் என்பவர் ஒருதலையாக காதலித்து வந்தார். இந்த காதலை ஏற்க மாணவி மறுத்து விட்டார்.

இதனால் ஆத்திரம் அடைந்த ஷாருக் சம்பவத்தன்று மாணவி மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்தார். தீ மளமளவென உடல் முழுவதும் பரவியதால் மாணவி அலறினார்.

உடல் கருகிய நிலையில் அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

இதுபற்றி அறிந்த மாணவியின் உறவினர்கள் ஆத்திரம் அடைந்தனர். சம்பந்தப்பட்ட வாலிபர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி தும்ஷா நகரில் மாணவியின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போலீசார் அங்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இச்சம்பவம் தொடர்பாக ஷாருக்கை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பிளஸ்-2 மாணவி எரித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பதற்றத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. அந்த பகுதியில் தற்போது 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com