search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "archery stars"

    • சத்தான உணவு, கட்டுக்கோப்பான உடல் மற்றும் விளையாட்டின் முக்கியத்துவம் குறித்து விவாதம்.
    • கட்டுக் கோப்பான வாழ்க்கை முறை தான் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் சிறந்தது.

    ராஞ்சி:

    சாம்பியனுடன் சந்திப்பு நிகழ்ச்சி ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில், நேற்று தொடங்கி வைக்கப்பட்டது. இதை தொடங்கி வைத்த இந்தியாவின் சிறந்த வில்வித்தை வீரர்களான தீபிகா குமாரி மற்றும் அதானு தாஸ் ஆகியோர் 75 பள்ளிகளைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட மாணவர்களுடன் கலந்துரையாடினர்.

    இந்த கலந்துரையாடலின் போது, சத்தான உணவு, கட்டுக்கோப்பான உடல் மற்றும் விளையாட்டின் முக்கியத்துவம் குறித்து விவாதிக்கப்பட்டது. அப்போது பேசிய தீபிகா குமாரி, தற்போதைய நவீன வாழ்க்கையில் பெரும்பாலான மக்களிடம் பரவி உள்ள உணவு முறைகள், உடல் ஆரோக்கியத்திற்கு அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது என்றார். 


    ஆரோக்கியமான உணவு மற்றும் கட்டுக் கோப்பான வாழ்க்கை முறை தான் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் சிறந்தது என்றார். இது குறித்து இளைய தலைமுறையினருக்கு எடுத்துக்கூற வேண்டும் என்று மாணவ மாணவிகளுடன் கலந்துரையாடுமாறும் விளையாட்டு வீரர்களை பிரதமர் கேட்டுக் கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

    தமது குழந்தை பருவத்தில் பச்சை காய்கறிகள், சாலட்டுகளை தமது வழக்கமான உணவாக உட்கொண்டதாகவும் தீபிகா குமாரி தெரிவித்தார். சாம்பியனுடன் சந்திப்பு நிகழ்ச்சியின் பலன்கள் வரும் ஆண்டுகளில் தெரிய வரும் என்று வில்வித்தை வீரர் அதானு தாஸ் கூறினார்.

    ×