என் மலர்
நீங்கள் தேடியது "Arjun Munda"
- பழங்குடியின வளர்ச்சிக்காக, இளைஞர்களுக்கு திறன் பயிற்சி அளிக்கும் திட்டம்.
- பழங்குடியின மக்களின் வாழ்வாதாரத்தை வலுப்படுத்த நடவடிக்கை.
பழங்குடியின சமுதாயத்தின் வளர்ச்சிக்காக, திறன் பயிற்சி அளிக்கும் கிராமின் உத்யாமி திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் 2வது கட்டத்தை ஜார்க்கண்ட் மாநில தலைநகர் ராஞ்சியில் மத்திய பழங்குடியினர் நலத்துறை மந்திரி அர்ஜுன் முண்டா நேற்று தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் பேசிய அர்ஜுன் முண்டா, பழங்குடியின மக்களின் நீடித்த வாழ்வாதாரத்தை வலுப்படுத்துவதே இத்திட்டத்தின் முழுமையான நோக்கம் என்றார். இத்திட்டத்தையும் சேர்த்து, பழங்குடியின பகுதிகளின் முன்னேற்றத்திற்காக, மத்திய அரசு ரூ.85,000 கோடி ஒதுக்கீடு செய்திருப்பதாக கூறினார்.
பழங்குடியின இளைஞர்கள் அதிக திறன் உடையவர்களாக உள்ள நிலையில், அந்தத் திறனை அவர்கள் சரியான முறையில், சரியான இடத்தில் பயன்படுத்தி, உரிய வாய்ப்புகளை ஏற்படுத்தித் தர வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.






