என் மலர்tooltip icon

    ஜம்மு காஷ்மீர்

    • பட்ரேரி சாஷ்மா அருகே விபத்து ஏற்பட்டது.
    • அமித் குமார், சுஜீத் குமார் மற்றும் மன் பகதூர் என அடையாளம் காணப்பட்டனர்.

    ஜம்மு காஷ்மீரில் ராணுவ வாகனம் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 3 வீரர்கள் உயிரிழந்தனர்.

    ஜம்மு-காஷ்மீரின் ராம்பன் மாவட்டத்தில் வீரர்களை ஏற்றிச் சென்ற ராணுவ வாகனம் சாலையை விட்டு விலகி 700 அடி ஆழமுள்ள பள்ளத்தில் விழுந்தது. இந்த சம்பவத்தில் மூன்று வீரர்கள் பலியாகினர்.

    இன்று காலை 11.30 மணியளவில் பட்ரேரி சாஷ்மா அருகே விபத்து ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ராணுவம், காவல்துறை, மாநில பேரிடர் மீட்புப் படை மற்றும் உள்ளூர் தன்னார்வலர்கள் இணைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். விபத்து நடந்த இடத்திலிருந்து 3 வீரர்களின் உடல்கள் மீட்கப்பட்டன.

    பலியானவர்கள் அமித் குமார், சுஜீத் குமார் மற்றும் மன் பகதூர் என அடையாளம் காணப்பட்டனர்.

    • பயங்கரவாதத்துடனான தொடர்பின் காரணமாகவே பாகிஸ்தான் கடுமையாக பாதிக்கப்பட்டது.
    • பயங்கரவாதம் எங்கள் நாட்டின் துரதிர்ஷ்டமான வரலாறு.

    பாகிஸ்தான் ராணுவ அமைச்சர் கவாஜா ஆசிப், சமீபத்தில் அளித்த பேட்டியில் பயங்கரவாத அமைப்புகளுடன் பாகிஸ்தானுக்கு தொடர்பு இருந்தது என்றும், நிதி உதவி அளித்ததையும் ஒப்புக்கொண்டார்.

    இந்த நிலையில், முன்னாள் வெளியுறவு துறை அமைச்சரும், பெனாசிர் பூட்டோவின் மகனுமான பிலாவல் பூட்டோ அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    பாகிஸ்தான் கடந்த காலத்தில் பயங்கரவாதிகளுடன் தொடர்பு வைத்திருந்தது என்பதில் ரகசியம் எதுவும் கிடையாது. அந்த தொடர்பின் காரணமாகவே பாகிஸ்தான் கடுமையாக பாதிக்கப்பட்டது.

    அப்படி பாதிக்கப்பட்டதால் நாங்கள் பாடங்களை கற்றுக் கொண்டோம். இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண சீர்திருத்தமும் செய்தோம். பயங்கரவாதம் எங்கள் நாட்டின் துரதிர்ஷ்டமான வரலாறு.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஏப்ரல் 29 ஆம் தேதிக்குள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்றும் இந்தியா கடந்த வாரம் அறிவித்தது.
    • ஷமீமாவும் அவரது கணவரும் மே 2023 இல் டெல்லியில் ஜனாதிபதி திரௌபதி முர்முவிடமிருந்து அதைப் பெற்றனர்.

    பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து சிறப்பு பிரிவுகளின் கீழ் சிலரைத் தவிர, பாகிஸ்தானியர்களுக்கு வழங்கப்பட்ட அனைத்து விசாக்களும் ஏப்ரல் 27 அன்று ரத்து செய்யப்படும் என்றும், அவர்கள் ஏப்ரல் 29 ஆம் தேதிக்குள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்றும் இந்தியா கடந்த வாரம் அறிவித்தது.

    இந்நிலையில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் (CRPF) ஜவானை மணந்த பாகிஸ்தானிய பெண்ணான மினல் கான் நாடு கடத்தப்படுகிறார்.

    ஜம்முவிலிருந்து தனது சொந்த நாட்டிற்கு செல்ல அவர் திருப்பி அனுப்பப்பட்டதாக அதிகாரிகள் இன்று தெரிவித்தனர்.

    கரோட்டாவில் தனது கணவர் முனீர் கான் மற்றும் குழந்தைகளுடன் மினல் கான் வாழ்ந்து வந்தார். இந்நிலையில் ஜம்முவிலிருந்து வாகா எல்லைக்கு அவர் அனுப்பி வைக்கப்பட்டார்.

    நாடு கடத்தப்படுவது குறித்து பேசிய மினல் கான், கணவன் மற்றும் குழந்தைகளிடம் இருந்து தன்னை பிரிக்க வேண்டாம் அரசாங்கத்தை வலியுறுத்தினார். மேலும் தாக்குதலில் அப்பாவிகள் காட்டுமிராண்டித்தனமாக கொல்லப்பட்டதை நாங்கள் கண்டிக்கிறோம். அவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

    மற்றோரு புறம் ஜம்மு காஷ்மீரில் இருந்து நாடு கடத்தப்பட்டவர்களில், கான்ஸ்டபிள் முதாசிர் அகமது ஷேக்கின் தாயார் ஷமீமா அக்தரும் ஒருவர்.

    கான்ஸ்டபிள் முதாசிர் அகமது, மே 2022 இல் ஜம்மு காஷ்மீர் காவல்துறையின் இரகசியக் குழுவின் ஒரு நடவடிக்கையில் பயங்கரவாதிகளை எதிர்கொள்ளும் போது கொல்லப்பட்டார்.

    முதாசிருக்கு மரணத்திற்குப் பின் சௌர்ய சக்ரா விருது வழங்கப்பட்டது, ஷமீமாவும் அவரது கணவரும் மே 2023 இல் டெல்லியில் ஜனாதிபதி திரௌபதி முர்முவிடமிருந்து அதைப் பெற்றனர்.

    இந்நிலையில் பாகிஸ்தானியர் என்ற காரணத்தால் ஷமீமா அக்தரும் நாடுகடத்தப்படுகிறார். ஷமீமா அக்தர் காஷ்மீரில் 45 ஆண்டுகள் வாழ்ந்தவர் ஆவார். இவர்களை போல பலர் நாட்டை விட்டு வெளியேற கட்டாயப்படுத்தப்பட்டு வருவது கவலை அளிப்பதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.  

    • மக்கள் நம்முடன் இருக்கும்போது பயங்கரவாதம் முடிவுக்கு வரும்.
    • பயங்கரவாதத்திற்கு எதிரான மக்களின் கோபத்தை கருத்தில் கொண்டு, நாம் சரியான நடவடிக்கைகளை எடுத்தால் இது அதன் முடிவுக்கு ஆரம்பம்.

    ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த தாக்குதலுக்கு நாடும் முழுவரும் இருந்து கடுமையான கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு பயங்கரவாத தாக்குதலுக்கு எதிராக பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தங்களது கோபத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

    ஸ்ரீநகரின் ஜாமியா மசூதி வெள்ளிக்கிழமை தொழுகைக்கு முன் முதல் முறையாக இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் பயங்கரவாதத்திற்கு எதிரான மக்களின் போராட்டத்தை வலுப்படுத்துவோம் என ஜம்மு-காஷ்மீர் மாநில முதல்வர் உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக உமர்அப்துல்லா கூறியதாவது:-

    மக்கள் நம்முடன் இருக்கும்போது பயங்கரவாதம் முடிவுக்கு வரும். பயங்கரவாதத்திற்கு எதிரான மக்களின் கோபத்தை கருத்தில் கொண்டு, நாம் சரியான நடவடிக்கைகளை எடுத்தால் இது அதன் முடிவுக்கு ஆரம்பம்.

    மக்களை அந்நியப்படுத்தும் எந்த நடவடிக்கையையும் நாம் எடுக்கக்கூடாது. துப்பாக்கியால் பயங்கரவாதத்தை நாம் கட்டுப்படுத்த முடியாது. ஆனால் மக்கள் நம்முடன் இருந்தால் தீவிரவாதத்தை முடிவுக்குக் கொண்டுவர முடியும். அந்த நேரம் வந்துவிட்டது என்று நான் நினைக்கிறேன்

    ஜம்மு-காஷ்மீர் முழுவதும் முன்னெப்போதும் இல்லாத மற்றும் தன்னிச்சையான போராட்டங்களை நடைபெற்று வருகிறது. ஸ்ரீநகரின் ஜாமியா மசூதியில் வெள்ளிக்கிழமை தொழுகைக்கு முன் முதல்முறையாக இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

    அதன் அர்த்தத்தை நாம் புரிந்து கொள்ள முடியும். இந்த மாற்றத்தை வலுப்படுத்த முயற்சிப்போம்.

    இவ்வாறு உமர் அப்துல்லா கூறினார்.

    • தொடர்ந்து வெள்ளி, சனிக்கிழமைகளிலும் இரவில் பாகிஸ்தான் ராணுவத்தினர் சுட்டனர்.
    • கடந்த 3 நாட்களை விட நேற்று அவர்களது துப்பாக்கி சூடு சற்று அதிகமாக இருந்தது.

    பஹல்காம் சுற்றுலா தலத்தில் பயங்கரவாதிகள் 27 சுற்றுலா பயணிகளை சுட்டுக் கொன்றதை தொடர்ந்து பாகிஸ்தான் மீது இந்தியா எந்த நேரத்திலும் தாக்குதல் நடத்தலாம் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

    இதனால் பாகிஸ்தான் இந்திய எல்லை நெடுக போர் விமானங்களையும், ராணுவ வீரர்களையும் குவித்து வருகிறது.

    இதற்கிடையே சர்வதேச எல்லைக்கோடு கட்டுப்பாட்டு பகுதியில் கடந்த வியாழக்கிழமை இரவு பாகிஸ்தான் வீரர்கள் ஆங்காங்கே துப்பாக்கியால் சுட்டனர். அவர்களுக்கு இந்தியா தரப்பில் தகுந்த பதிலடி கொடுக்கப்பட்டது. தொடர்ந்து வெள்ளி, சனிக்கிழமைகளிலும் இரவில் பாகிஸ்தான் ராணுவத்தினர் சுட்டனர்.

    பயம் காரணமாக பாகிஸ்தான் வீரர்கள் இவ்வாறு நடந்து கொள்வதாக கூறப்படுகிறது. அவர்கள் சுமார் 700 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள எல்லையில் இந்திய நிலைகள் மீது குறி வைத்து துப்பாக்கியால் சுடுகிறார்கள்.

    நேற்று இரவு 4-வது நாளாக பாகிஸ்தான் ராணுவத்தினர் எல்லையில் துப்பாக்கி சூடு நடத்தினார்கள். கடந்த 3 நாட்களை விட நேற்று அவர்களது துப்பாக்கி சூடு சற்று அதிகமாக இருந்தது.

    குறிப்பாக பூஞ்ச், குப்பு வாரா மாவட்டங்களில் பாகிஸ்தான் வீரர்களின் அத்துமீறல் நேற்று இரவு அதிகமாக இருந்தது. இன்று அதிகாலை வரை அந்த அத்துமீறல் நீடித்தது.

    இந்தியா தரப்பில் அவர்களுக்கு உடனுக்குடன் பதிலடி கொடுக்கப்பட்டது. இந்திய தரப்பில் எந்த சேதமும் இல்லை என்று பாதுகாப்பு படையினர் அறிவித்துள்ளனர்.

    • மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் உயிரிழந்தார்.
    • கடந்த நான்கு நாட்களில், 2,000 க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

    ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் 45 வயது சமூக ஆர்வலர் ஒருவர் மீது பயங்கரவாதிகள்  என சந்தேகிக்கப்படுபவர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் அவர் காயமடைந்தார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் உயிரிழந்தார்.

    நேற்று (சனிக்கிழமை) இரவு கண்டி காஸில் வசித்து வந்த சமூக ஆர்வலர் குலாம் ரசூல் மாக்ரேயின் வீட்டிற்குள் பயங்கரவாதிகள் நுழைந்து அவரை சுட்டுக் கொன்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ரசூலைக் கொன்ற பயங்கரவாதிகளைக் கண்டுபிடிக்க பாதுகாப்புப் படையினர் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

    பஹல்காமில் 26 பேர் கொல்லப்பட்ட தாக்குதலுக்குப் பிறகு, காஷ்மீர் பள்ளத்தாக்கில் பயங்கரவாதிகளுக்கு எதிராக பாதுகாப்புப் படையினர் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

    பலர் கைது செய்யப்பட்டுள்ளனர் மற்றும் பயங்கரவாத ஆதரவாளர்கள் என்று கூறப்படும் வீடுகள் சோதனை செய்யப்பட்டுள்ளன. கடந்த நான்கு நாட்களில், 2,000 க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். 

    • பஹல்காம் தாக்குதல் சம்பவத்தில் பயங்கரவாதிகளுக்கு உள்ளூரை சேர்ந்த 15 பேர் உதவி செய்தது தெரியவந்தது.
    • பாண்டி போரா மாவட்டத்தில் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பை சேர்ந்த ஜமீல் அகமது வீடு உள்ளது.

    ஸ்ரீநகர்:

    காஷ்மீரில் அனந்தநாக் மாவட்டம் பஹல்காம் அருகே உள்ள பைசாரன் பள்ளத்தாக்கில் சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 போ் உயிரிழந்தனா்.

    இந்தத் தாக்குதலுக்கு பாகிஸ்தானில் செயல்படும் லஷ்கா்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பின் நிழல் அமைப்பான 'தி ரெசிஸ்டன்ஸ் பிரண்ட்' பொறுப்பு ஏற்றது.

    நாட்டையே உலுக்கிய இந்த தாக்குதலைத் தொடா்ந்து ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளை ஒடுக்கும் நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. பயங்கரவாதிகள், அவா்களின் கூட்டாளிகள் , ஆதரவாளா்களுக்கு எதிரான தேடுதல் வேட்டையை பாதுகாப்புப் படையினா் தீவிரப்படுத்தி உள்ளனா்.

    பயங்கரவாதிகளுக்கு உதவியதாக 100-க்கும் மேற்பட்டோரை பிடித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. பஹல்காம் போன்று மீண்டும் ஒரு தாக்குதல் நிகழாமல் தடுக்கும் நோக்கத்துடன் கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

    பாதுகாப்பு படையினரின் அதிரடி நடவடிக்கையாக முதலில் 2 பயங்கரவாதிகளின் வீடுகள் குண்டு வைத்து தகர்க்கப்பட்டன.

    அதை தொடர்ந்து தெற்கு காஷ்மீரில் மேலும் 3 பயங்கரவாதிகளின் வீடுகள் இடிக்கப்பட்டது. குப்வாரா மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் பயங்கரவாதிகளின் பதுங்குமிடத்தை பாதுகாப்பு படையினர் கண்டறிந்தனர். அங்கு மேற்கொள்ளப்பட்ட சோதனையில் ஏ.கே.47 ரக துப்பாக்கிகள், தோட்டாக்கள் மற்றும் பிற வெடி பொருட்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.

    இந்த நிலையில் மேலும் 4 பயங்கரவாதிகளின் வீடுகள் இடிக்கப்பட்டன. பாண்டி போரா, புல்வாமா, சோபியான் ஆகிய மாவட்டங்களில் பாதுகாப்பு படையினர் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு பயங்கரவாதிகளின் வீடுகளை தகர்த்தனர்.

    சோபியான் மாவட்டத்தில் உள்ள வாண்டினா பகுதியில் பயங்கரவாதி அத்னன் ஷபி வீடு உள்ளது. அவன் கடந்த ஆண்டு முதல் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு வந்தான். அவனது வீடு இடிக்கப்பட்டது. அதை தொடர்ந்து புல்வாமா மாவட்டத்தில் உள்ள அமீர் நசீர் என்ற பயங்கரவாதியின் வீடு தகர்க்கப்பட்டது.

    பாண்டி போரா மாவட்டத்தில் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பை சேர்ந்த ஜமீல் அகமது வீடு உள்ளது. 2016-ம் ஆண்டு முதல் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு வந்த அவனது வீட்டை பாதுகாப்பு படை வீரர்கள் இடித்து தரைமட்டமாக்கினார்கள்.

    பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியை சேர்ந்த பயங்கரவாதி பரூக் அகமது வீடு குப்வாரா மாவட்டம் கலாரசில் உள்ளது. அவனது வீட்டை அதிகாரிகள் குண்டு வைத்து தகர்த்தனர்.

    கடந்த 48 மணி நேரத்தில் 9 பயங்கரவாதிகளின் வீடுகள் தகர்க்கப்பட்டுள்ளன. ஸ்ரீநகரில் 60-க்கும் மேற்பட்ட இடங்களில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. சட்டவிரோத செயல்கள் தடுப்பு சட்டத்தின் கீழ் ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் கீழ் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

    பஹல்காம் தாக்குதல் சம்பவத்தில் பயங்கரவாதிகளுக்கு உள்ளூரை சேர்ந்த 15 பேர் உதவி செய்தது தெரியவந்தது. இதில் முக்கியமான 3 நபரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இதற்கிடையே பயங்கரவாதிகளின் அட்டூழியம் காஷ்மீரில் தொடர்கிறது. சமூக ஆர்வலர் அவர்கள் சுட்டுக்கொன்றனர்.

    குப்வாரா மாவட்டம் காந்திதாஸ் பகுதியை சேர்ந்தவர் குலாம் ரசூல். 45 வயதான அவர் சமூக ஆர்வலர் ஆவார். நள்ளிரவில் அவரது வீட்டை பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். குண்டு பாய்ந்து பலத்த காயம் அடைந்த அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

    சமூக ஆர்வலரை பயங்கரவாதிகள் சுட்டுக்கொன்றதற்கான காரணம் தெரியவில்லை. இதை தொடர்ந்து அந்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

    • குல்காம் காவல்துறை, ராணுவம் மற்றும் சிஆர்பிஎஃப் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
    • 25 ரவுண்ட் பிஸ்டல் வெடிமருந்துகள் மற்றும் இரண்டு பிஸ்டல் மேகஸின்கள்மீட்கப்பட்டன.

    26 பேர் உயிரிழந்த பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

    இந்நிலையில் ஒரு கூட்டு நடவடிக்கையில், குல்காம் காவல்துறை, ராணுவம் மற்றும் சிஆர்பிஎஃப் ஆகியவற்றுடன் இணைந்து, பயங்கரவாதிகளுடன் தொடர்புடையவர்களாகக் கருதப்படும் 2 பேரை செய்து, ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளைக் கைப்பற்றியது.

    கைமோவின் தோகர்போராவில் உள்ள மதல்ஹாமா சௌக்கில் சோதனைச் சாவடியில் நடத்தப்பட்ட சோதனையின் போது அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

    அவர்கள் கைமோவின் தோகர்போராவைச் சேர்ந்த பிலால் அகமது பட் மற்றும் முகமது இஸ்மாயில் பட் என அடையாளம் காணப்பட்ட நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

    அவர்கள் இருவரும் அவர்களிடம் இருந்து இரண்டு கைத்துப்பாக்கிகள், 25 ரவுண்ட் பிஸ்டல் வெடிமருந்துகள் மற்றும் இரண்டு பிஸ்டல் மேகஸின்கள் மீட்கப்பட்டன.

    தொடர்புடைய சட்டப் பிரிவுகளின் கீழ் கைமோ காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, மேலும் விசாரணை நடந்து வருகிறது. 

    • ஜம்மு-காஷ்மீர் எல்லையில் இந்திய ராணுவம் கடும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறது.
    • குப்வாரா மாவட்டத்தில் உள்ள காட்டுப்பகுதியில் இருந்து மறைவிடத்தை ராணுவம் அழித்தது.

    ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் பயங்கரவாதிகள் கொடூர தாக்குதல் நடத்தினர். இதில் சுற்றுலாப் பயணிகள் உள்பட 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பின்னால் பாகிஸ்தான் இருப்பதாக இந்தியா குற்றம்சாட்டியது. பாகிஸ்தான் உடனான அனைத்து உறவுகளையும் துண்டித்தது.

    இந்தியா சிந்தி நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்துள்ளது. பாகிஸ்தான் சிம்லா ஒப்பந்தத்தை சஸ்பெண்ட் செய்துள்ளது. இதற்கிடையே இந்தியா- பாகிஸ்தான் எல்லைக்கோட்டருகே பாகிஸ்தான் வீரர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதற்கு இந்திய வீரர்கள் பதிலடி கொடுக்க எல்லையில் போர் பதற்றம் நிலவி வருகிறது.

    ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளை தீவிரமாக தேடும் வேட்டையில் இந்திய ராணுவம் ஈடுபட்டு வருகிறது. பயங்கரவாதிகள் மறைவிடத்தை தாக்கி அழித்து வருகின்றன.

    அதனடிப்படையில் குப்வாரா மாவட்டத்தில் செடோரி நலா என்ற காட்டுப்பகுதியில் பயங்கரவாதிகளின் மறைவிடும் இருப்பதாக புலனாய்வுத்துறைக்கு தகவல் கிடைத்தது. புலனாய்வுத்துறை அளித்த தகவலின்படி மச்சில் முகாம் சிறப்பு செயல்பாட்டுக்குழு (SOG), இந்திய ராணுவத்தின் 12ஆவது சிக்லி (SIKHLI) குழுவுடன் இணைந்து பயங்கரவாதிகளின் மறைவிடத்தை கண்டுபிடித்து அழித்தது. மேலும், மறைவிடத்தில் இருந்து ஏ.கே.47 உள்ளிட்ட துப்பாக்கிகள் மற்றும் வெடிப்பொருட்களை கைப்பற்றினர்.

    • பாகிஸ்தான் கருத்துக்கு நான் அதிக முக்கியத்துவம் கொடுக்க விரும்பவில்லை.
    • என்ன நடந்ததோ அது துரதிருஷ்டவசமானது. இது நடந்திருக்கக் கூடாது.

    ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் பயங்கரவாதிகள் கொடூர தாக்குதல் நடத்தினர். இதில் சுற்றுலாப் பயணிகள் உள்பட 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பின்னால் பாகிஸ்தான் இருப்பதாக இந்தியா குற்றம்சாட்டியது. பாகிஸ்தான் உடனான அனைத்து உறவுகளையும் துண்டித்தது.

    குறிப்பாக இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்களை நாளைக்குள் வெளியேற காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளது. பஹல்காம் தாக்குதல் தொடர்பாக இந்தியா எங்கள் மீது பழி போடுகிறது. நாங்கள் நடுநிலையான விசாரணையில் பங்கேற்க தயார் என பாகிஸ்தான் பிரதமர் தெரிவித்திருந்தார்.

    இது தொடர்பாக ஜம்மு-காஷ்மீர் மாநில முதல்வர் உமர் அப்துல்லா கூறியதாவது:-

    முதலில் பஹல்காமில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என்பதை கூட அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. இந்த தாக்குதலுக்குப் பின்னால் இந்தியா இருப்பதாக பாகிஸ்தான் கூறியது. எங்களுக்கு எதிராக குற்றச்சாட்டுகளை முன்வைத்தவர்களுக்கு இப்போது அதைப்பற்றி எதுவும் சொல்வது கடினம். அவர்களின் கருத்துக்கு நான் அதிக முக்கியத்துவம் கொடுக்க விரும்பவில்லை. என்ன நடந்ததோ அது துரதிருஷ்டவசமானது. இது நடந்திருக்கக் கூடாது.

    இவ்வாறு உமர் அப்துல்லா தெரிவித்த்ளளார்.

    • இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
    • பயங்கரவாதிகளை தேடும் பணி தீவிரம் அடைந்துள்ளது.

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    இதைத்தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. உதம்பூர், பூஞ்ச், ரஜௌரி பகுதிகளில் பயங்கரவாதிகளை தேடும் பணி தீவிரம் அடைந்துள்ளது.

    இந்நிலையில், ஜம்மு-காஷ்மீரில் மலையேற்ற நடவடிக்கைகளுக்கு முற்றிலும் தடை விதிக்கப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

    • பஹல்காம் தாக்குதல் சம்பவத்தில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
    • இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    இதைத்தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில், ஜம்மு காஷ்மீரில் பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்ட லஷ்கர்-இ-தொய்பா அமைப்பை சேர்ந்த 5 பயங்கரவாதிகளின் வீடுகள் இடிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

    இதற்கிடையே காஷ்மீரில் முக்கிய வனப்பகுதிகளில் வீடு வீடாக சோதனை நடத்தும் பணிகள் தீவிரப்படுத்தப் பட்டுள்ளது. தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன் பலனாக லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகளுக்கு உதவியாக செயல்பட்ட 2 பேர் பிடி பட்டுள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ×