என் மலர்tooltip icon

    ஜம்மு காஷ்மீர்

    • பாகிஸ்தான் அலை அலையாக டிரோன்களை இந்தியாவுக்குள் அனுப்பியது.
    • இந்திய ராணுவம் பல்வேறு முன்எச்சரிக்கை ஏற்பாடுகளை செய்து வைத்திருந்தது.

    காஷ்மீரில் பஹல்காம் சுற்றுலா தலத்தில் 26 பேரை சுட்டுக்கொன்ற பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகளை வேட்டையாடும் அதிரடி நடவடிக்கையை கடந்த புதன்கிழமை இந்தியா தொடங்கியது.

    பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் தீவிரவாதிகளின் 9 முகாம்கள் ஏவுகணைகள் மூலம் தகர்க்கப்பட்டன. நூற்றுக்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் இதில் கொல்லப்பட்டதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

    தங்களது நாட்டுக்குள் இந்திய படைகள் வெற்றிகரமாக தாக்குதல் நடத்தியதால் கடும் அதிர்ச்சி அடைந்த பாகிஸ்தான் இந்தியா மீது பதில் தாக்குதல் நடத்தி வருகிறது.

    நேற்று இரவு 8.30 மணிக்கு இந்தியாவை சீண்டும் வகையில் பாகிஸ்தான் அலை அலையாக டிரோன்களை இந்தியாவுக்குள் அனுப்பியது.

    பாகிஸ்தான் இத்தகைய செயலில் ஈடுபடும் என்று ஏற்கனவே இந்திய ராணுவம் பல்வேறு முன்எச்சரிக்கை ஏற்பாடுகளை செய்து வைத்திருந்தது.

    இந்நிலையில், ஜம்மு காஷ்மீரின் உரி பகுதியில் மீண்டும் அத்துமீறி தாக்குதலை பாகிஸ்தான் ராணுவம் தொடங்கியுள்ளது.

    ஜம்மு காஷ்மீரின் உரி பகுதியில் உள்ள எல்லையோர குடியிருப்புகளை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது.

    அந்த பகுதிகளில் தாக்குதலின்போது துப்பாக்கிச் சூடு மற்றும் வெடிச்சத்தங்கள் கேட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. தாக்குதல் தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

    • பதுங்கு குழிகளிலும், பாதுகாப்பான இடங்களிலும் தஞ்சம் அடைந்துள்ளனர்.
    • இராணுவத் தலையீடு அல்ல, அரசியல் தலையீடு இருக்க வேண்டும்

    ஆபரேஷன் சிந்தூருக்குப் பிறகு, நேற்று இரவு முழுவதும் ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் பகுதிகளில் பாகிஸ்தான் இந்தியா மீது ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது. அவற்றை இந்திய ராணுவம் வெற்றிகரமாக முறியடித்தது. தொடர்ந்து தாக்குதல்கள் நிகழ்ந்து வரும் சூழலில் வட மாநிலங்களில் பதற்றமான சூழல் நிலவுகிறது.

    ஜம்மு விமான நிலையம் மீது நிகழ்த்தப்பட்ட டிரோன் தாக்குதல் முறியடிக்கப்பட்டது. வடக்கு காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தின் உரி பகுதியில் பாகிஸ்தான் நடத்திய எல்லை தாண்டிய ஷெல் தாக்குதலில் ஒரு பெண் கொல்லப்பட்டார்.

    மேலும் எல்லையோர பகுதிகளில் உள்ள மக்கள் பதுங்கு குழிகளிலும், பாதுகாப்பான இடங்களிலும் தஞ்சம் அடைந்துள்ளனர். பல்வேறு பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. 

    இந்நிலையில் இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான சூழ்நிலை காரணமாக, எல்லையில் உள்ள மக்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் வீடற்றவர்களாக மாறி வருவதாகவும், அவர்கள் அச்சத்தில் இருப்பதாகவும் மக்கள் ஜனநாயக கட்சி (பிடிபி) தலைவர் மெஹபூபா முப்தி கூறியுள்ளார்.

    இரு நாடுகளும் நிதானத்தைக் கடைப்பிடித்து, இந்த நிலைமையை தணிக்க வேண்டும். இரு தரப்பிலும் பொதுமக்கள் கொல்லப்படுகிறார்கள். குழந்தைகள் கொல்லப்படுகிறார்கள், பெண்கள் கொல்லப்படுகிறார்கள். பிரச்சனையை தீர்க்க இராணுவத் தலையீடு அல்ல, அரசியல் தலையீடு இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். மேலும் செய்தியாளர் சந்திப்பில் இதை பேசும் போது அவர் மனமுடைந்து கண்ணீர் சிந்தினார்.

    • இந்திய ராணுவம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.
    • பயங்கரவாதிகள் ஊடுருவலை தடுக்க எல்லையில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    ஸ்ரீநகர்:

    காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் பாகிஸ்தானுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தி பயங்கரவாத முகாம்களை அழித்தது.

    இதையடுத்து பாகிஸ்தான் இந்தியா மீது தாக்குதல் நடத்த முயற்சித்து வருகிறது. இதனை இந்திய ராணுவம் முறியடித்து வருகிறது. மேலும் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து அத்துமீறி தாக்குதலை நடத்தி வருகிறது. இதற்கு இந்தியா தகுந்த பதிலடி கொடுத்து வருகிறது.

    இந்தியா-பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழ்நிலை நிலவி வரும் நிலையில் பாகிஸ்தானில் இருந்து எல்லை வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவ பயங்கரவாதிகள் முயற்சித்து வருகிறார்கள்.

    அதை முறியடிக்க இந்திய ராணுவம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. நேற்று பஞ்சாப் மாநில எல்லையில் ஊடுருவ முயன்ற பாகிஸ்தானியரை எல்லை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர்.

    இந்த நிலையில் ஜம்முவில் எல்லையில் இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற 7 பாகிஸ்தான் பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். ஜம்மு-காஷ்மீர் எல்லையில் இந்தியா மீது பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் அதை பயன்படுத்தி எல்லையில் பயங்கரவாதிகள் ஊடுருவும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். இதில் ஜம்முவின் சம்பா பகுதியில் உள்ள எல்லையில் இருந்து இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற 7 பாகிஸ்தான் பயங்கரவாதிகளை எல்லை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர். பயங்கரவாதிகள் ஊடுருவலை தடுக்க எல்லையில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    • இந்திய ராணுவம் பெரும்பாலானவற்றை வெற்றிகரமாக அழித்தது.
    • வடக்கு காஷ்மீரின் உரி மற்றும் குப்வாரா பகுதிகளில் எல்லைப் பகுதிகள் தொடர் தாக்குதல் நடக்கிறது.

    ஆபரேஷன் சிந்தூரைத் தொடர்ந்து பஞ்சாப், ராஜஸ்தான், ஜம்மு காஷ்மீர் ஆகிய எல்லையோர இந்திய நகரங்கள் மீது நேற்று இரவு பாகிஸ்தான் ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதல் தாக்குதல் நடத்தியது.

    ஆபரேஷன் சிந்தூரைத் தொடர்ந்து பஞ்சாப், ராஜஸ்தான், ஜம்மு காஷ்மீர் ஆகிய எல்லையோர இந்திய  மாநிலங்கள் மீது நேற்று இரவு பாகிஸ்தான் ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதல் தாக்குதல் நடத்தியது. இந்திய ராணுவம் பெரும்பாலானவற்றை வெற்றிகரமாக அழித்தது.

    தாக்குதல்கள் தொடர்ந்து வரும் சூழலில் வடக்கு காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தின் உரி பகுதியில் பாகிஸ்தான் நடத்திய எல்லை தாண்டிய ஷெல் தாக்குதலில் ஒரு பெண் கொல்லப்பட்டார். மேலும் ஒருவர் காயமடைந்தார்.

    அதிகாரிகளின் கூற்றுப்படி, ரஸேர்வானியில் இருந்து பாரமுல்லா நோக்கிச் சென்ற வாகனம் மொஹுரா அருகே ஒரு ஷெல் தாக்குதலுக்கு உள்ளானது.

    இந்த சம்பவத்தில், ரஸேர்வானியை சேர்ந்த பஷீர் கானின் மனைவி நர்கீஸ் பேகம் உயிரிழந்தார். ரஸேர்வானியின் சேர்ந்த ஹஃபீசா என்ற மற்றொரு பெண் காயமடைந்து உடனடியாக சிகிச்சைக்காக பாரமுல்லாவில் உள்ள ஜிஎம்சி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

    கடந்த சில நாட்களாக வடக்கு காஷ்மீரின் உரி மற்றும் குப்வாரா பகுதிகளில் குடிமக்கள் இருப்பிடங்கள் உள்ள எல்லைப் பகுதிகள் மீது பாகிஸ்தான் தொடர்ந்து ஷெல் தாக்குதல் நடத்தி வருகிறது.

     

    • பாகிஸ்தான் நடத்திய டிரோன் தாக்குதலுக்கு இந்தியா தகுந்த பதிலடி கொடுத்தது.
    • ஜம்மு காஷ்மீரின் சம்பா பகுதியில் பயங்கரவாதிகள் ஊடுருவ முயன்றனர்.

    ஸ்ரீநகர்:

    பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மீது தாக்குதல் நடத்தியது. இதனால் நிலைகுலைந்த பாகிஸ்தான் காஷ்மீரில் தற்கொலைப்படை டிரோன்களை வீசி தாக்குதல் நடத்தியது.

    இந்தத் தாக்குதலுக்கு இந்தியாவும் தகுந்த பதிலடி கொடுத்தது.

    இந்நிலையில், நேற்று நள்ளிரவு 11.00 மணிக்கு ஜம்மு காஷ்மீரின் சம்பா பகுதியில் பயங்கரவாதிகள் ஊடுருவலைக் கண்டறிந்தனர்.

    எல்லைப் பாதுகாப்புப் படையினர் அவர்களை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியதால் அவர்கள் அங்கிருந்து தப்பிச்சென்றனர். இதைத் தொடர்ந்து அப்பகுதியில் பாதுகாப்பு பலப்பட்டுள்ளது.

    • ஜம்முவில் உள்ள அக்னூர் உள்ளிட்ட பகுதியில் சைரன் ஒலித்துக் கொண்டிருக்கிறது.
    • இந்திய வான் பாதுகாப்பு சிஸ்டம் டிரோன்களை இடைமறித்து தாக்குதல் நடத்தி வருகிறது.

    பஹல்காம் தாக்குலுக்கு இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மீது தாக்குதல் நடத்தியது. இதில் 9 பயங்கரவாதிகள் முகாம்கள் அழிக்கப்பட்டன.

    இதனைத்தொடர்ந்து LoC அருகே பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து துப்பாக்கிச்சூடு நடத்தியது. இன்று அதிகாலை டிரோன் மற்றும் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தியது. இதை இந்திய ராணுவம் இடைமறித்து வெற்றிகரமாக தாக்கி அழித்தது.

    அத்துடன் பாகிஸ்தானின் முக்கிய நகரங்களில் மீது சரமாரி டிரோன் தாக்குதல் நடத்தியது. இதில் லாகூர் பாதுகாப்பு சிஸ்டம் அழிக்கப்பட்டது.

    இந்த நிலையில் தற்போது பாகிஸ்தான் ஜம்மு விமான நிலையத்தை குறிவைத்து டிரோன் தாக்குதல் நடத்தி வருகிறது. அக்னூர், கிஸ்த்வார், சம்பா மற்றும் பல பகுதிகளில் சைரன் ஒலித்துக் கொண்டே இருக்கிறது.

    Blackout என அழைக்கப்படும், மின்சாரம் தடை செய்யப்பட்டு பல நகரங்கள் இருளில் மூழ்கியுள்ளன. இதனால் மக்கள் பீதி அடைந்துள்ளனர். பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் நகரும் இருளில் மூழ்கியுள்ளது.

    மேலும், LoC பகுதிகளில் பயங்கர துப்பாக்கிச்சூடு நடத்தி வருகிறது.

    • இந்த தாக்குதலில் 59 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்
    • போர் நிறுத்த விதிகளை மீறி எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதியில், தாக்குதல்

    பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக 'ஆபரேஷன் சிந்தூர்' தாக்குதலை இந்தியா நடத்தப்பட்டது. சுமார் 25 நிமிடங்கள் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது. இதனால் இந்தியா- பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

    இந்நிலையில், காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில் 13 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர் என்றும் 44 பேர் படுகாயம் அடைந்துள்ளனர் என்று இந்திய வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது.

    போர் நிறுத்த விதிகளை மீறி எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதியில், தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளதாக இந்திய வெளியுறவுத் துறை தெரிவிக்கப்பட்டுள்ளது

    • பாகிஸ்தான் ராணுவத்தினர் எல்லையில் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
    • இதற்கு எல்லைப் பாதுகாப்புப் படையினர் பதில் தாக்குதல் நடத்தினர்.

    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம் பஹல்காம் பகுதியில் கடந்த மாதம் 22-ம் தேதி பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் சுற்றுலா பயணிகள் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பின் கிளை அமைப்பான தி ரெசிஸ்டண்ட் பிரண்ட் அமைப்பு பொறுப்பேற்றது.

    இந்த தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா நேற்று அதிரடி தாக்குதல் நடத்தியது.

    பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. 9 இடங்களில் நடத்தப்பட்ட தாக்குதலில் பலர் உயிரிழந்ததாக பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது.

    இதற்கிடையே, எல்லையில் உள்ள இந்திய நிலைகள் மீது பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலுக்கு இந்தியாவும் பதிலடி கொடுத்து வருகிறது.

    இதற்கிடையே, ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில் தினேஷ் குமார் என்ற ராணுவ வீரர் வீர மரணமடைந்தார். எல்லைப் பாதுகாப்புப் படையினர் பதில் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில், பாகிஸ்தான் ராணுவத்தினர் இன்றும் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதில் சேத விவரங்கள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.

    • ராஜஸ்தானில் இந்தியப் படைகள் ஒரு பாகிஸ்தான் ரேஞ்சரையும் கைது செய்தனர்.
    • கிஸ்தான் உடனான எல்லைப் பகுதிகளில் தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனை இருக்கிறது.

    ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் பகுதியில் உள்ள கட்டுப்பாட்டுக் கோடு (எல்ஓசி) அருகே இன்று ஒரு பாகிஸ்தானியர் கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    20 வயதுடைய அந்த நபர், எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அப்பால் இருந்து இந்தப் பக்கத்திற்குள் நுழைந்த சிறிது நேரத்திலேயே ராணுவத்தினரால் கைது செய்யப்பட்டதாகத் தெரிவித்தனர்.

    கைது செய்யப்பட்ட பாகிஸ்தானியர் விசாரணைக்காகக் காவலில் எடுக்கப்பட்டார். முன்னதாக மே 3-4 இரவு, பஞ்சாபின் குருதாஸ்பூரில் இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற மற்றொரு பாகிஸ்தானியரை எல்லைப் பாதுகாப்புப் படை (BSF) கைது செய்தது.

    கடந்த சனிக்கிழமையன்று ராஜஸ்தானில் இந்தியப் படைகள் ஒரு பாகிஸ்தான் ரேஞ்சரையும் கைது செய்தன.

    ஏப்ரல் 22 அன்று 26 பேர் கொல்லப்பட்ட கொடிய பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு ஜம்மு காஷ்மீர் மற்றும் பாகிஸ்தான் உடனான எல்லைப் பகுதிகளில் தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனை இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. 

    • பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர்.
    • காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறலில் ஈடுபட்டு தாக்குதல் நடத்தி வருகிறது.

    ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் கடந்த 22-ந் தேதி பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டதன் எதிரொலியாக பாகிஸ்தான் மீது இந்தியா பல்வேறு கடும் நடவடிக்கைகளை மேற் கொண்டு வருகிறது.

    அதைத் தொடர்ந்து காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் நள்ளிரவில் அத்துமீறலில் ஈடுபட்டு தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு இந்தியா பதிலடி கொடுத்து வருகிறது.

    இந்நிலையில் பாகிஸ்தான் ராணுவத்தினர் தொடர்ந்து 12-வது நாளாக அத்துமீறி துப்பாக்கிச் சூடு நடத்தினர். நேற்று இரவு குப்வாரா, பாரமுல்லா, பூஞ்ச், ரஜவுரி, மெந்தர், நவுசாரா, சுந்தர்பானி மற்றும் அக்னூர் ஆகிய 8 பகுதிகளில், பாகிஸ்தான் ராணுவத்தினர் கடுமையான துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டனர். இதற்கு இந்திய ராணுவத்தினர் தகுந்த பதிலடி கொடுத்தனர்.

    பாகிஸ்தான் ராணுவத்தின் துப்பாக்கிச் சூட்டில் இந்தியத் தரப்பில் உயிரிழப்பு ஏற்பட்டதாக எந்த தகவல்களும் வெளியாகவில்லை.

    • இன்று காஷ்மீரிகள் உங்களுடன் இருக்கிறார்கள் என்பதை உள்துறை அமைச்சர் உணர வேண்டும்.
    • இன்று அவர்கள் தங்களைத் தாங்களே குணப்படுத்திக் கொள்ள விரும்புகிறார்கள்.

    ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பஹல்காம் அருகே பைசாரன் பள்ளத்தாக்கில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இதனைத் தொடர்ந்து ஜம்மு-காஷ்மீரில் பதுங்கியுள்ள பயங்கரவாதிகளை தேடும் பணியில் பாதுகாப்புப்படை வீரர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். இதற்கிடையே பாகிஸ்தான் மீது இந்தியா எந்த நேரத்திலும் தாக்குதல் நடத்தலாம் எனத் தெரிகிறது.

    இந்த நிலையில் பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கையில் அப்பாவி காஷ்மீர் மக்கள் துன்புறுத்தப்படவில்லை என்பதை உறுதி செய்ய வேண்டும் என ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முஃப்தி அமித் ஷாவிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

    இது தொடர்பாக மெகபூபா முஃப்தி கூறுகையில் "காஷ்மீரிகள் ரத்தக்களரிக்கு ஆதரவாக இல்லை என்பதைக் காட்டியுள்ளனர். மேலும் அவர்கள் நாட்டின் துயரத்தைப் பகிர்ந்து கொள்கிறார்கள். பயங்கரவாதச் செயலைச் செய்தவர்கள் மீது ஒரு முறை அல்ல, ஆயிரம் முறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்துறை அமைச்சருக்கு என்னுடைய வேண்டுகோள்.

    இருப்பினும், (பஹல்காம்) தாக்குதலுக்குப் பிறகு தனது ரத்தத்தைக் கொடுத்து ஒரு சுற்றுலாப் பயணியைத் தோளில் சுமந்து மருத்துவமனைக்குச் சென்ற காஷ்மீரியை விட்டுவிடுங்கள்.

    22ஆம் தேதி தாக்குதலுக்கு முன் அங்குள்ள (பைசாரன்) மக்கள் வாழ்வதற்கு வருவாய் ஈட்டி வந்தனர். அவர்கள் காவல் நிலையத்திற்கு காலையிலேயே அழைத்துச் செல்லப்பட்டனர். நாள் முழுவதும் உணவு வழங்கப்படாமல் மாலையில் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். என்னஇது?.

    இன்று காஷ்மீரிகள் உங்களுடன் இருக்கிறார்கள் என்பதை உள்துறை அமைச்சர் உணர வேண்டும். இன்று அவர்கள் தங்களைத் தாங்களே குணப்படுத்திக் கொள்ள விரும்புகிறார்கள். உங்கள் காயங்களையும் குணப்படுத்த விரும்புகிறார்கள். அவர்கள் மீது புதிய காயங்களை ஏற்படுத்துவதை நிறுத்துங்கள்" என்றார்.

    • பட்ரேரி சாஷ்மா அருகே விபத்து ஏற்பட்டது.
    • அமித் குமார், சுஜீத் குமார் மற்றும் மன் பகதூர் என அடையாளம் காணப்பட்டனர்.

    ஜம்மு காஷ்மீரில் ராணுவ வாகனம் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 3 வீரர்கள் உயிரிழந்தனர்.

    ஜம்மு-காஷ்மீரின் ராம்பன் மாவட்டத்தில் வீரர்களை ஏற்றிச் சென்ற ராணுவ வாகனம் சாலையை விட்டு விலகி 700 அடி ஆழமுள்ள பள்ளத்தில் விழுந்தது. இந்த சம்பவத்தில் மூன்று வீரர்கள் பலியாகினர்.

    இன்று காலை 11.30 மணியளவில் பட்ரேரி சாஷ்மா அருகே விபத்து ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ராணுவம், காவல்துறை, மாநில பேரிடர் மீட்புப் படை மற்றும் உள்ளூர் தன்னார்வலர்கள் இணைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். விபத்து நடந்த இடத்திலிருந்து 3 வீரர்களின் உடல்கள் மீட்கப்பட்டன.

    பலியானவர்கள் அமித் குமார், சுஜீத் குமார் மற்றும் மன் பகதூர் என அடையாளம் காணப்பட்டனர்.

    ×