என் மலர்tooltip icon

    ஜம்மு காஷ்மீர்

    • உளவுத்துறை தகவலைத் தொடர்ந்து பாதுகாப்புப் படையினர் பயங்கரவாதிகளை மடக்கிப் பிடித்தனர்.
    • இந்திய ராணுவப் படையினர் பாகிஸ்தானை உன்னிப்பாக கண்காணித்து வருகின்றன.

    ஜம்மு-காஷ்மீரின் சோபியானில் பாதுகாப்புப் படையினருக்கும் 4 பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடைபெற்றதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த மோதல் முதலில் குல்காமில் தொடங்கி பின்னர் ஷோபியானில் உள்ள ஒரு காட்டுப் பகுதியில் நடைபெற்று வருகிறது.

    ராணுவம் மற்றும் துணை ராணுவப் படைகளின் பாதுகாப்புப் படையினர் சுமார் இரண்டு மணி நேரமாக பயங்கரவாதிகளுடன் சண்டையிட்டு வருகின்றனர். உளவுத்துறை தகவலைத் தொடர்ந்து பாதுகாப்புப் படையினர் பயங்கரவாதிகளை மடக்கிப் பிடித்தனர்.

    பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து ஆபரேஷன் சிந்தூரை இந்தியா நடத்தியது. இதனை தொடர்ந்து இந்திய எல்லை பகுதிகளில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. இதற்கு இந்தியாவும் தக்க பதிலடி கொடுத்தது. இதனை தொடர்ந்து உலக நாடுகள் சண்டையை நிறுத்துவது தொடர்பாக இந்தியா மற்றும் பாகிஸ்தானை வலியுறுத்தி வந்தன.

    அதன்படி இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான மோதல் நிறுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. இருப்பினும் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது.

    இதனிடையே, பிரதமர் மோடி நேற்று நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில், இந்தியாவின் மீது பயங்கரவாதத் தாக்குதல் நடந்தால், அதற்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என்று உறுதிப்பட தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    எதிர்நாட்டின் பயங்கரவாத தாக்குதலை எதிர்த்து நடத்திய தாக்குதல் நிறுத்தப்பட்ட நிலையில் இந்திய ராணுவப் படையினர் பாகிஸ்தானை உன்னிப்பாக கண்காணித்து வருகின்றன.

    • பாகிஸ்தான் அத்துமீறியதால் எல்லைப் பகுதிகளில் வசித்த மக்கள் தங்கள் வீடுகளைவிட்டு வெளியேறினர்.
    • பூஞ்ச் நகரம் 80 சதவீதம் முதல் 90 சதவீதம் வரை காலியாக உள்ளது.

    காஷ்மீரின் பஹல்காமில் கடந்த மாதம் 22-ந் தேதி பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் சுற்றுலா பயணிகள் உள்பட 26 பேர் கொல்லப்பட்டனர்.

    இதற்கு பதிலடியாக, 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில், இந்திய ராணுவம் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. அதற்கு பதிலடியாக பாகிஸ்தான் ராணுவம் சிறு பீரங்கிகளால் தாக்குதல் நடத்தியது. தொடர்ந்து இந்தியா மீது டிரோன் மற்றும் ஏவுகணை தாக்குதலையும் நடத்தியது.

    பின்னர், சண்டை நிறுத்தத்தை இருநாடுகளும் அறிவித்த நிலையிலும், எல்லைப் பகுதிகளில் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது.

    இதனால், ஜம்மு காஷ்மீர் எல்லையோர பகுதிகளில் இருந்த மக்கள் பாதுகாப்பு கருதி வீட்டைவிட்டு வெளியேறினர்.

    பாகிஸ்தான் அத்துமீறியதால் எல்லைப் பகுதிகளில் வசித்த மக்கள் தங்கள் வீடுகளைவிட்டு வெளியேறினர்.

    பாகிஸ்தான் தாக்குதல்களால் வீடுகளை விட்டு வெளியேறிய மக்கள் தற்போது வீடு திரும்பலாம் என ஜம்மு- காஷ்மீர் முதல்வர் தெரிவித்துள்ளார்.

    இந்தியா- பாகிஸ்தான் இடையே சண்டை நிறுத்தம் ஏற்பட்டு இருக்கும் சூழலில், உமர் அப்துல்லா அறிவித்துள்ளார்.

    மேலும் அவர், "பாகிஸ்தானின் அத்துமீறல் போர் போன்ற சூழ்நிலையை உருவாக்கியது. பூஞ்ச் நகரம் 80 சதவீதம் முதல் 90 சதவீதம் வரை காலியாக உள்ளது.

    இந்நிலையில், பாகிஸ்தான் தாக்குதல்களால் வீடுகளை விட்டு வெளியேறிய மக்கள் தற்போது திரும்பி வரலாம்" என குறிப்பிட்டுள்ளார்.

    • ஊடுருவியவர்களை பிடிக்க தேடுதல் பணிகள் நடந்து வருகின்றன
    • ட்ரோன் மற்றும் பீரங்கித் தாக்குதல்களை பாகிஸ்தான் ராணுவம் நடத்தி வருகிறது.

    ஜம்முவில் உள்ள நக்ரோட்டா ராணுவ மையத்தில் மர்ம நபருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் இந்திய வீரர் ஒருவர் காயமடைந்ததாக ராணுவம் தெரிவித்துள்ளது.

    ஒயிட் நைட் கார்ப்ஸ் ராணுவ பிரிவு வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "சுற்றுவட்டாரத்தில் சந்தேகத்திற்கிடமான நடமாட்டத்தைக் கண்டறிந்ததும், நக்ரோட்டா ராணுவ மையத்தில் வீரர்கள் எச்சரிக்கை அழைப்பு விடுக்கப்பட்டது.

    இது சந்தேக நபருடன் சிறிது நேரம் துப்பாக்கிச் சண்டைக்கு வழிவகுத்தது. சென்ட்ரி வீரர் ஒருவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. ஊடுருவியவர்களை பிடிக்க தேடுதல் பணிகள் நடந்து வருகின்றன" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சண்டை நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்ட போதிலும் நக்ரோட்டா உட்பட, எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு மற்றும் சர்வதேச எல்லையில் பல பகுதிகளில் ட்ரோன் மற்றும் பீரங்கித் தாக்குதல்களை பாகிஸ்தான் ராணுவம் நடத்தி வருகிறது.  

    • எல்லைப் பாதுகாப்புப் படை வீரர் முகமது இம்தேயாஸ் உயிரிழந்தார்.
    • ஜம்மு காஷ்மீர், குஜராத், பஞ்சாப், ராஜஸ்தான், அரியானாவில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

    பாகிஸ்தான் இந்தியா இடையே நிலவிய மோதல் இன்று மாலை சண்டை நிறுத்த ஒப்பந்தம் மூலம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. ஆனால் ஒப்பந்தத்தை மீறி ஜம்மு காஷ்மீர் பகுதிகள் மீது பாகிஸ்தான் ராணுவம் டிரோன் தாக்குதல் நடத்தி வருகிறது.

    இந்நிலையில் ஜம்முவில் எல்லைக்கோடு பகுதியில் பாகிஸ்தான் அத்துமீறி நடத்திய தாக்குதலில் ஒரு எல்லை பாதுகாப்பு படை (பிஎஸ்எஃப்) வீரர் கொல்லப்பட்டார். மேலும் ஏழு பேர் காயமடைந்தனர்.

    ஆர் எஸ் புரா செக்டாரில் நடந்த இந்த தாக்குதல் சம்பவத்தில் எல்லைப் பாதுகாப்புப் படை வீரர் முகமது இம்தேயாஸ் உயிரிழந்தார். மேலும் காயமடைந்த 7 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இதனிடையே பாதுகாப்பு காரணம் கருதி, ஜம்மு காஷ்மீர், குஜராத், பஞ்சாப், ராஜஸ்தான், அரியானா ஆகிய மாநிலங்களின் சில இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

    • எல்லை மாநிலங்களின் பல்வேறு பகுதிகளில் "பிளாக் அவுட் (இருளில் மூழ்கிய பகுதிகள்)" செய்யப்பட்டுள்ளது.
    • சண்டை நிறுத்தம் அமலுக்கு வந்த நிலையில், பாகிஸ்தான் மீண்டும் தாக்குதல் நடத்தி வருவதால் அதிர்ச்சி.

    சண்டை நிறுத்த ஒப்பந்தத்தை மீறி ஜம்மு காஷ்மீரின் பல்வேறு பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது.

    உதம்பூர், அக்னூர், பூஞ்ச், ராஜோரி, ஜம்மு, ஆர்.எஸ்.புரா, கத்துவா உள்ளிட்ட பகுதிகளில் பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

    சண்டை நிறுத்தத்தை மீறி பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் எல்லை மாநிலங்களின் பல்வேறு பகுதிகளில் "பிளாக் அவுட் (இருளில் மூழ்கிய பகுதிகள்)" செய்யப்பட்டுள்ளது.

    அதன்படி, ராஜஸ்தான், பஞ்சாப், குஜராத் ஆகிய மாநிலங்களிலும் டிரோன் தாக்குதல் நடந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

    இதனால், ராஜஸ்தான் மாநிலத்தின் பார்மர், ஜெய்சல்மார், பஞ்சாப் மாநிலத்தின் ஃபெரோஸ்பூர், ஜம்முவின் உதம்பூர், ஸ்ரீநகர் உள்ளிட்ட பகுதிகள் இருளில் மூழ்கியுள்ளன.

    மேலும், குஜராத்தின் கட்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்துவதாக அம்மாநிலத்தின் உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். தாக்குதல் எதிரொலியால், கட்ச் மாவட்டத்தில் மின் வினியோகம் முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையே, பாகிஸ்தானின் தாக்குதலுக்கு எதிர் தாக்குதல் நடத்த எல்லை பாதுகாப்பு படைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இந்தியாவுடனான சண்டை நிறுத்தம் அமலுக்கு வந்த நிலையில், பாகிஸ்தான் மீண்டும் தாக்குதல் நடத்தி வருவதால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

    • உதம்பூரில் பாகிஸ்தான் ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதல் நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
    • பாகிஸ்தான் டீரோன்களை இந்திய வான் பாதுகாப்பு அமைப்பு இடைமறித்து தாக்கி அழித்து வருவதாக தகவல்.

    இந்தியா- பாகிஸ்தான் இடையே சண்டை நிறுத்தம் ஒப்பந்தத்தை மீறி எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் தாக்குதலை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

    ஜம்மு காஷ்மீரின் உதம்பூரில் பாகிஸ்தான் ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதல் நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

    உதம்பூரில் பாகிஸ்தான் டீரோன்களை இந்திய வான் பாதுகாப்பு அமைப்பு இடைமறித்து தாக்கி அழித்து வருவதாக கூறப்படுகிறது.

    ஜம்மு செக்டாரில் உள்ள எல்லைக்கட்டுப்பாடு கோடு பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

    ஜம்மு, உதம்பூர், அக்னூர், நெளஷேரா, ராஜௌரி, ஆர்.எஸ்.புரா உள்ளிட்ட பகுதிகளில் பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடைபெறுவதாக கூறப்பட்டுள்ளது.

    இதற்கிடையே, ஸ்ரீநகரின் பல்வேறு இடங்களிலும் வெடிச் சத்தம் கேட்டதை காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா உறுதி செய்துள்ளார்.

    இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில்," போர் நிறுத்த ஒப்பந்தம் என்ன ஆனது? ஸ்ரீநகரின் பல்வேறு இடங்களிலும் வெடிச் சத்தம் கேட்டது" என்று குறிப்பிட்டுள்ளார்.

    • இந்தியா- பாகிஸ்தான் இடையில் போர் மூளும் சூழ்நிலை ஏற்பட்டது.
    • இந்தியா மற்றும் பாகிஸ்தான் சண்டை நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டன.

    பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மேற்கொண்டு பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்ப காஷ்மீரில் உள்ள 9 பயங்கரவாத முகாம்களை அழித்தது. இதனால் இந்தியா மீது பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது. இந்தியாவும் பதிலடி கொடுத்தது.

    இந்தியா- பாகிஸ்தான் இடையில் போர் மூளும் சூழ்நிலை ஏற்பட்டது. இந்தியா- பாகிஸ்தான் இடையிலான பதற்றத்தை தணிக்க அமெரிக்கா தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வந்தது.

    இந்த நிலையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் சண்டை நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டுள்ளன. இது உடனடியாக அமலுக்கு வருகிறது என டொனால்டு டிரம்ப் தெரிவித்தார்.

    பின்னர், இருநாடுகளும் சண்டையை கைவிடுவதாக ஒப்புதல் அளித்து அறிவித்தன.

    இந்நிலையில், தாக்குதல் நிறுத்த அறிவுப்புக்கு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா வரவேற்றுள்ளார்.

    இதுகுறித்து அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    இந்தியா- பாகிஸ்தான் இடையேயான தாக்குதல் நிறுத்த முடிவை வரவேற்கிறேன். இந்த முடிவு 2 அல்லது 3 நாட்களுக்கு முன்பு வந்திருந்தால், உயிரிழப்புகள், பொருட் சேதங்கள் ஏற்பட்டிருக்காது.

    மக்களை இயல்பு நிலைக்கு திருப்புவது ஜம்மு காஷ்மீர் அரசின் கடமை.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • பதற்றத்தை பயன்படுத்தி எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது.
    • ஏற்கனவே இரண்டு வீரர்கள் வீர மரணம் அடைந்துள்ள நிலையில் 8 வீரர்கள் தற்போது காயம் அடைந்துள்ளனர்.

    இந்தியா- பாகிஸ்தான் இடையில் போர் பதற்றம் நிலவி வருகிறது. இந்தியா- பாகிஸ்தான் எல்லையில் உள்ள இந்திய நகரங்கள் மீது பாகிஸ்தான் டிரோன் மற்றும் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்திவரும் நிலையில், இருநாட்டு எல்லையில் கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தி வருகின்றனர்.

    இன்று ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் ஜம்முவில் உள்ள ஆர்.எஸ். புரா செக்டாரில் இந்திய எல்லை பாதுகாப்பு படையினருக்கு எதிராக பாகிஸ்தான் கடும் துப்பாக்கிச்சூடு நடத்தியது. இதில் 8 வீரர்கள் காயம் அடைந்தனர். அவர்கள் அருகில் உள்ள ராணுவ மருத்துவம முகாமுக்கு சிகிச்சைக்கான கொண்டு செல்லப்பட்டனர்.

    இந்தியா-பாகிஸ்தான் சர்வதேச எல்லை சுமார் 2000 கி.மீ. நீளம் கொண்டதாகும். இந்த எல்லையில் எல்லை பாதுகாப்புப்படை வீரர்கள் கண்காணித்து வருகின்றனர்.

    • இந்தியாவில் பல இடங்களில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது
    • ஜம்மு காஷ்மீரில் மட்டும் பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் 19 பேர் கொல்லப்பட்டனர்.

    காஷ்மீரில் பஹல்காம் சுற்றுலா தலத்தில் 26 பேரை பயங்கரவாதிகள் சுட்டுக்கொன்றனர். இதனையடுத்து பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை இந்தியா தாக்கி அழித்தது.

    இதனையடுத்து இந்தியாவில் பல இடங்களில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் இன்று நடத்திய தாக்குதலில் அரசு அதிகாரி உள்பட 5 பேர் உயிரிழந்தனர். கடந்த 4 நாட்களில் ஜம்மு காஷ்மீரில் மட்டும் பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் 19 பேர் கொல்லப்பட்டனர்.

    இந்நிலையில், ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் நடத்திய தாக்குதலால் உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி அளிக்கப்படும் என்று ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா அறிவித்துள்ளார். 

    • பாகிஸ்தான் நேற்று பாலிஸ்டிக் ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்தியுள்ளது.
    • இந்தியா பதிலடி கொடுத்த நிலையில் போர் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது.

    இந்தியா-பாகிஸ்தான் இடையில் போர் பதற்றம் நிலவி வருகிறது. நேற்றிரவு பாகிஸ்தான் பாலிஸ்டிக் ஏவுகணையை பயன்படுத்தி இந்தியாவின் தலைநகரான டெல்லியை தாக்க முயற்சி செய்துள்ளது. இந்திய ராணுவம் இந்த முயற்சியை முறியடித்ததுடன், பாகிஸ்தானை நோக்கி பாலிஸ்டிக் ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்தியது. பாகிஸ்தானின் 6 விமான தளங்களை தாக்கியதாக இந்தியா தெரிவித்துள்ளது.

    இந்த நிலையில் ஜம்மு-காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வரான மெகபூபா முஃப்தி, இரு நாடுகளுக்கு இடையிலான போர் பதற்றத்தை தணிக்க முதல் படியை இந்தியா எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக மெகபூபா முஃப்தி கூறுகையில் "துணைக் கண்டத்தில் இந்தியா தனது தலைமை பங்கை ஏற்றுக்கொண்டு, பதற்றத்தைக் குறைப்பதற்கான முதல் படியை எடுக்க வேண்டும்.

    இந்தியா நிமிர்ந்து நின்று, உண்மையான பலம் அதன் மென்மையான சக்தியிலும், அமைதிக்கான அர்ப்பணிப்பிலும் உள்ளது. அணு ஆயுதங்களில் அல்ல என்பதை நிரூபிக்க வேண்டிய தருணம் இது" எனத் தெரிவித்துள்ளார்.

    இந்தியா- பாகிஸ்தான் இடையே போர் பதற்றத்தை தணிக்க அமெரிக்கா தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வருகிறது.

    • ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் டிரோன் மூலம் தாக்குதல் நடத்த முயற்சி செய்தது.
    • இந்தியாவின் 14 நகரங்களைக் குறிவைத்து பாகிஸ்தான் 26 டிரோன் தாக்குதலை நடத்தியது.

    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீர் முதல் குஜராத் வரையிலான எல்லை ஒட்டிய பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவம் நேற்று டிரோன்களை வீசி தாக்குதல் நடத்தியது. இதனை இந்திய ராணுவம் உடனடியாக தாக்கிஅழித்தது.

    முன் எச்சரிக்கை நடவடிக்கையாக அரியானாவின் அம்பாலா, பஞ்சகுலா, பஞ்சாப்பின் பிரோஸ்பூர், ராஜஸ்தானின் ஜெய்சால்மர், காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டன. காஷ்மீரில் வான் பாதுகாப்பு கவசம் செயல்படுத்தப்பட்டது.

    இந்நிலையில், இந்தியாவின் 14 நகரங்களைக் குறிவைத்து பாகிஸ்தான் 26 டிரோன் தாக்குதலை நடத்தியுள்ளது. இந்த டிரோன்கள் இந்திய வான் பாதுகாப்பு மையம் மூலம் தடுத்து அழிக்கப்பட்டன.

    பதான்கோட், அக்னூர், பாராமுல்லா, அவந்தி நகர், அவந்திபோரா, பெரோஸ்பூர் உள்ளிட்ட 14 நகரங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்த முயற்சி செய்தது. இதையடுத்து, சைரன் ஒலிக்கப்பட்டு மக்கள் பாதுகாப்பான இடம் நோக்கி செல்ல அறிவுறுத்தப்பட்டனர்.

    பெரோஸ்பூரில் வீசப்பட்ட டிரோன் தாக்கியதில் அங்கிருந்த வீடுகள் தீப்பற்றின. இதில் காயமடைந்த 3 பேரை ராணுவத்தினர் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    பாகிஸ்தான் தாக்குதலை சமாளிக்கும் வகையில் இந்திய ராணுவம் முழு வீச்சில் செயல்பட்டு வருகிறது.

    • ஜம்மு காஷ்மீரின் உரி பகுதியில் உள்ள எல்லையோர குடியிருப்புகளை குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதல்.
    • தாக்குதலின்போது துப்பாக்கிச் சூடு மற்றும் வெடிச்சத்தங்கள் கேட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

    காஷ்மீரில் பஹல்காம் சுற்றுலா தலத்தில் 26 பேரை சுட்டுக்கொன்ற பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகளை வேட்டையாடும் அதிரடி நடவடிக்கையை கடந்த புதன்கிழமை இந்தியா தொடங்கியது.

    இந்நிலையில், ஜம்மு காஷ்மீரின் உரி பகுதியில் இன்று மாலை பாகிஸ்தான் மீண்டும் அத்துமீறி தாக்குதலை தொடங்கியுள்ளது.

    அதன்படி, ஜம்மு காஷ்மீரின் உரி பகுதியில் உள்ள எல்லையோர குடியிருப்புகளை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது.

    அந்த பகுதிகளில் தாக்குதலின்போது துப்பாக்கிச் சூடு மற்றும் வெடிச்சத்தங்கள் கேட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. தாக்குதல் தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

    இந்நிலையில், ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா இதுகுறித்து தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    ஜம்மு நகரம் முழுவதும் இப்போது இருளில் மூழ்கியுள்ளது. நகரம் முழுவதும் சைரன்கள் சத்தம் கேட்கின்றன. நான் இருக்கும் இடத்திலிருந்து அவ்வப்போது குண்டுவெடிப்பு சத்தங்கள், கனரக பீரங்கி சத்தங்கள் கேட்கின்றன.

    ஜம்முவிலும் அதைச் சுற்றியுள்ள மக்களும் தயவுசெய்து வெளியில் வராதீர்கள். அடுத்த சில மணிநேரங்களுக்கு வீட்டிலேயே இருங்கள் அல்லது நீங்கள் வசதியாக தங்கக்கூடிய அருகிலுள்ள இடத்தில் இருங்கள் என்று வேண்டுகோள் விடுக்கிறேன்.

    வதந்திகளைப் புறக்கணிக்கவும். ஆதாரமற்ற அல்லது சரிபார்க்கப்படாத கதைகளைப் பரப்ப வேண்டாம். இதை நாம் ஒன்றாகக் கடந்து செல்வோம்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    ×