என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "terrible explosion"

    • உதம்பூரில் பாகிஸ்தான் ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதல் நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
    • பாகிஸ்தான் டீரோன்களை இந்திய வான் பாதுகாப்பு அமைப்பு இடைமறித்து தாக்கி அழித்து வருவதாக தகவல்.

    இந்தியா- பாகிஸ்தான் இடையே சண்டை நிறுத்தம் ஒப்பந்தத்தை மீறி எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் தாக்குதலை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

    ஜம்மு காஷ்மீரின் உதம்பூரில் பாகிஸ்தான் ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதல் நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

    உதம்பூரில் பாகிஸ்தான் டீரோன்களை இந்திய வான் பாதுகாப்பு அமைப்பு இடைமறித்து தாக்கி அழித்து வருவதாக கூறப்படுகிறது.

    ஜம்மு செக்டாரில் உள்ள எல்லைக்கட்டுப்பாடு கோடு பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

    ஜம்மு, உதம்பூர், அக்னூர், நெளஷேரா, ராஜௌரி, ஆர்.எஸ்.புரா உள்ளிட்ட பகுதிகளில் பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடைபெறுவதாக கூறப்பட்டுள்ளது.

    இதற்கிடையே, ஸ்ரீநகரின் பல்வேறு இடங்களிலும் வெடிச் சத்தம் கேட்டதை காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா உறுதி செய்துள்ளார்.

    இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில்," போர் நிறுத்த ஒப்பந்தம் என்ன ஆனது? ஸ்ரீநகரின் பல்வேறு இடங்களிலும் வெடிச் சத்தம் கேட்டது" என்று குறிப்பிட்டுள்ளார்.

    • பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்தில் அைற தரைமட்டமானது.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சிவகாசி

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள அனுப்பன்குளத்தை சேர்ந்தவர் ஆறுமுகசாமி. இவருக்கு அதே பகுதியில் சொந்தமாக பட்டாசு ஆலை உள்ளது.

    80-க்கும் மேற்பட்ட அறைகளை கொண்ட இந்த பட்டாசு ஆலைகளில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பெண்கள் உள்பட 50-க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர்.

    இன்று காலை வழக்கம் போல் ஊழியர்கள் பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். ஒரு அறையில் பட்டாசு தயாரிப்புக்கான மருந்து கலவை தயாரிக்கும் பணி நடந்தது.

    அப்போது மருந்துகள் உராய்வு ஏற்பட்டு திடீரென தீப்பிடித்தது. கண் இமைக்கும் நேரத்தில் தீ பரவி அங்கு அடுக்கி வைக்கப்பட்டிருந்த பட்டாசுகளில் பரவியது. இதனைத்தொடர்ந்து அதிக சத்தத்துடன் பட்டாசுகள் வெடித்தது. உடனே சுதாரித்துக் கொண்ட ஊழியர்கள் அங்கிருந்து வெளியேறினர்.

    பட்டாசு விபத்து குறித்து தகவல் அறிந்த சிவகாசி தீயணைப்பு நிலைய வீரர்கள் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர். 30 நிமிடங்களுக்கும் மேலாக தொடர்ந்து பட்டாசுகள் வெடித்துக் கொண்டே இருந்தன.

    பல மணி நேரம் போராடி தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இருப்பினும் இந்த விபத்தில் அந்த அறை தரைமட்ட மானது. அதிர்ஷ்டவசமாக உயிர்சேதம் ஏற்படவில்லை.

    இந்த சம்பவம் தொடர்பாக சிவகாசி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×