என் மலர்
இந்தியா

பாகிஸ்தான் மீண்டும் தாக்குதல்: பஞ்சாப், ராஜஸ்தான், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் "ப்ளாக் அவுட்"
- எல்லை மாநிலங்களின் பல்வேறு பகுதிகளில் "பிளாக் அவுட் (இருளில் மூழ்கிய பகுதிகள்)" செய்யப்பட்டுள்ளது.
- சண்டை நிறுத்தம் அமலுக்கு வந்த நிலையில், பாகிஸ்தான் மீண்டும் தாக்குதல் நடத்தி வருவதால் அதிர்ச்சி.
சண்டை நிறுத்த ஒப்பந்தத்தை மீறி ஜம்மு காஷ்மீரின் பல்வேறு பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது.
உதம்பூர், அக்னூர், பூஞ்ச், ராஜோரி, ஜம்மு, ஆர்.எஸ்.புரா, கத்துவா உள்ளிட்ட பகுதிகளில் பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
சண்டை நிறுத்தத்தை மீறி பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் எல்லை மாநிலங்களின் பல்வேறு பகுதிகளில் "பிளாக் அவுட் (இருளில் மூழ்கிய பகுதிகள்)" செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, ராஜஸ்தான், பஞ்சாப், குஜராத் ஆகிய மாநிலங்களிலும் டிரோன் தாக்குதல் நடந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனால், ராஜஸ்தான் மாநிலத்தின் பார்மர், ஜெய்சல்மார், பஞ்சாப் மாநிலத்தின் ஃபெரோஸ்பூர், ஜம்முவின் உதம்பூர், ஸ்ரீநகர் உள்ளிட்ட பகுதிகள் இருளில் மூழ்கியுள்ளன.
மேலும், குஜராத்தின் கட்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்துவதாக அம்மாநிலத்தின் உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். தாக்குதல் எதிரொலியால், கட்ச் மாவட்டத்தில் மின் வினியோகம் முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, பாகிஸ்தானின் தாக்குதலுக்கு எதிர் தாக்குதல் நடத்த எல்லை பாதுகாப்பு படைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவுடனான சண்டை நிறுத்தம் அமலுக்கு வந்த நிலையில், பாகிஸ்தான் மீண்டும் தாக்குதல் நடத்தி வருவதால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.






