என் மலர்
இந்தியா

பாகிஸ்தான் அத்துமீறலால் வெளியேறிய மக்கள்- வீடு திரும்பலாம் என உமர் அப்துல்லா அறிவிப்பு
- பாகிஸ்தான் அத்துமீறியதால் எல்லைப் பகுதிகளில் வசித்த மக்கள் தங்கள் வீடுகளைவிட்டு வெளியேறினர்.
- பூஞ்ச் நகரம் 80 சதவீதம் முதல் 90 சதவீதம் வரை காலியாக உள்ளது.
காஷ்மீரின் பஹல்காமில் கடந்த மாதம் 22-ந் தேதி பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் சுற்றுலா பயணிகள் உள்பட 26 பேர் கொல்லப்பட்டனர்.
இதற்கு பதிலடியாக, 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில், இந்திய ராணுவம் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. அதற்கு பதிலடியாக பாகிஸ்தான் ராணுவம் சிறு பீரங்கிகளால் தாக்குதல் நடத்தியது. தொடர்ந்து இந்தியா மீது டிரோன் மற்றும் ஏவுகணை தாக்குதலையும் நடத்தியது.
பின்னர், சண்டை நிறுத்தத்தை இருநாடுகளும் அறிவித்த நிலையிலும், எல்லைப் பகுதிகளில் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது.
இதனால், ஜம்மு காஷ்மீர் எல்லையோர பகுதிகளில் இருந்த மக்கள் பாதுகாப்பு கருதி வீட்டைவிட்டு வெளியேறினர்.
பாகிஸ்தான் அத்துமீறியதால் எல்லைப் பகுதிகளில் வசித்த மக்கள் தங்கள் வீடுகளைவிட்டு வெளியேறினர்.
பாகிஸ்தான் தாக்குதல்களால் வீடுகளை விட்டு வெளியேறிய மக்கள் தற்போது வீடு திரும்பலாம் என ஜம்மு- காஷ்மீர் முதல்வர் தெரிவித்துள்ளார்.
இந்தியா- பாகிஸ்தான் இடையே சண்டை நிறுத்தம் ஏற்பட்டு இருக்கும் சூழலில், உமர் அப்துல்லா அறிவித்துள்ளார்.
மேலும் அவர், "பாகிஸ்தானின் அத்துமீறல் போர் போன்ற சூழ்நிலையை உருவாக்கியது. பூஞ்ச் நகரம் 80 சதவீதம் முதல் 90 சதவீதம் வரை காலியாக உள்ளது.
இந்நிலையில், பாகிஸ்தான் தாக்குதல்களால் வீடுகளை விட்டு வெளியேறிய மக்கள் தற்போது திரும்பி வரலாம்" என குறிப்பிட்டுள்ளார்.