என் மலர்tooltip icon

    அரியானா

    • இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது.
    • பொது இடங்களில் அனைவரும் மாஸ்க் அணியவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    சண்டிகர்:

    இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இன்று புதிதாக 640 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. கொரோனாவால் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 2,997 ஆக உயர்ந்துள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    கடந்த 24 மணி நேரத்தில் கேரளாவில் அதிகபட்சமாக 265 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. ஒருவர் உயிரிழந்துள்ளார். 

    இதற்கிடையே, அதிகரித்து வரும் கொரோனா பரவலை கருத்தில் கொண்டு கேரளா உள்பட நாட்டின் பல்வேறு மாநிலங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கி உள்ளன.

    இந்நிலையில், பொது இடங்களில் இனி அனைவரும் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும் என சண்டிகர் நிர்வாகம் மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

    • லாரன்ஸ் பிஷ்னோய் மீது கொலை, ஆள்கடத்தல், போதைப் பொருள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.
    • ரவுடி லாரன்ஸ் தற்போது திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

    பஞ்சாப் பாடகர் சித்து மூசேவாலா கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படுபவர் பஞ்சாபை சேர்ந்த லாரன்ஸ் பிஷ்னோய். இவர் மீது கொலை, ஆள்கடத்தல், போதைப் பொருள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.

    ரவுடி லாரன்ஸ் தற்போது திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். லரன்ஷ் பிஷ்னோய் மற்றும் கூட்டாளிகள் மீது என்.ஐ.ஏ. வழக்குப்பதிவு செய்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

    இந்த நிலையில் லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலுக்கு எதிரான சட்ட விரோத பண பரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத்துறை இன்று அதிரடி சோதனை நடத்தியது.

    அரியானா, ராஜஸ்தானில் உள்ளிட்ட 12 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையின் போது பல்வேறு ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது.

    • எதிர் வீட்டில் இருந்த பெண் துடைப்பக்கட்டையுடன் ஓடிவந்தார்.
    • குத்துச்சண்டை வீரர் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்.

    அரியானா மாநிலத்தின் பிவானி மாவட்டத்தில் வைக்கப்பட்டு இருந்த சி.சி.டி.வி. கேமராவில் பதிவான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வைரல் வீடியோவின் படி, தெருவொன்றில் நின்று கொண்டிருந்த நபரை நோக்கி இரண்டு இருசக்கர வாகனங்களில் வந்த இருவர் சரமாரியாக சுடும் பகீர் காட்சிகள் இடம்பெற்று உள்ளன.

    தான் துப்பாக்கியால் சுடப்படுவதை உணர்ந்ததும், தெருவில் நின்று கொண்டிருந்த நபர் அருகில் இருந்த வீட்டிற்குள் ஓடிச் செல்கிறார். துப்பாக்கியால் சுடும் சத்தத்தை கேட்டதும் எதிர் வீட்டில் இருந்த பெண் கையில் துடைப்பக்கட்டையுடன் வேகமாக ஓடிவந்தார்.

    துப்பாக்கி வைத்திருந்தவர்களிடம் ஓடிவந்த பெண், அவர்களை நோக்கி துடைப்பக்கட்டையை வீசினார். இதை கண்ட மர்ம நபர்கள் துப்பாக்கியை எடுத்துக் கொண்டு அங்கிருந்து கிளம்பி சென்றனர். இந்த சம்பவத்தில் துப்பாக்கியால் சுடப்பட்ட நபரின் பெயர் ஹரிகிருஷ்ணன் என்றும் இவர் குத்துச்சண்டை வீரர் ரவி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர் என்றும் தெரியவந்துள்ளது.

    இவருக்கும் லாரன்ஸ் பிஷ்னோய் என்ற ரவுடிக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. தற்போது ஹரிகிருஷ்ணன் ஜாமின் பெற்று சிறையில் இருந்து வெளியே வந்திருக்கிறார். மர்ம நபர்கள் சுட்டதில் ஹரிகிருஷ்ணன் உடலில் நான்கு தோட்டாக்கள் பாய்ந்துள்ளது. இந்த சம்பவத்தில் துப்பாக்கி சூடு நடத்திய இருவர் மற்றும் அவர்களை இருசக்கர வாகனத்தில் அழைத்து சென்ற இருவரையும் போலீசார் சி.சி.டி.வி. வீடியோ காட்சிகளை கொண்டு தேடி வருகின்றனர். 

    • பல்வேறு கிராமங்களில் இருந்து ராஜஸ்தானின் கோகமெடிக்கு பக்தர்கள் சென்று கொண்டிருந்த போது விபத்து ஏற்பட்டது
    • டிராக்டரின் கொக்கி அறுந்து விழுந்து விபத்துக்குள்ளானதாக போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

    சண்டிகர்:

    பஞ்சாபிலிருந்து ராஜஸ்தானில் உள்ள கோவிலுக்கு பக்தர்களை ஏற்றிச் சென்ற டிராக்டர், அரியானா மாநிலம் சிர்சாவில் உள்ள கிராமம் அருகே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 2 குழந்தைகள் உட்பட 4 பேர் உயிரிழந்தனர். மேலும் 18 பேர் காயமடைந்தனர்.

    டிராக்டரின் கொக்கி அறுந்து விழுந்து விபத்துக்குள்ளானதாக போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

    பஞ்சாப் மாநிலம் பாட்டியாலா மாவட்டத்தில் உள்ள பட்ரான் அருகே உள்ள பல்வேறு கிராமங்களில் இருந்து ராஜஸ்தானின் கோகமெடிக்கு பக்தர்கள் சென்று கொண்டிருந்த போது விபத்து ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

    • மொத்தம் ரூ.20 லட்சம் மதிப்புள்ள நோட்டுகளால் தயாரான பண மாலையை கண்ட பயனர்கள் பலரும் பிரமித்தனர்.
    • வீடியோ 15 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளையும், 3.19 லட்சத்திற்கும் மேற்பட்ட விருப்பங்களையும் பெற்றுள்ளது.

    திருமணத்தின் போது ஆடம்பரமாக செலவு செய்து விருந்தினர்களை உபசரிப்பதை பார்த்திருப்போம். ஆனால் இணையத்தில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில் மணமகன் ஒருவர் திருமணத்திற்காக 500 ரூபாய் நோட்டுகளை கொண்ட மாலையை அணிந்த புகைப்படம் பயனர்கள் மத்தியில் பல கேள்விகளை ஏற்படுத்தியுள்ளது.

    இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட அந்த வீடியோ அரியானாவில் உள்ள குரேஷிபூர் பகுதியில் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அப்பகுதியை சேர்ந்த ஒருவருக்கு திருமண ஏற்பாடுகள் நடைபெற்ற நிலையில் மணமகன் அணிவதற்காக 500 ரூபாய் நோட்டுகளை கொண்டு மிகப்பெரிய மாலை தயார் செய்துள்ளனர்.

    மொத்தம் ரூ.20 லட்சம் மதிப்புள்ள நோட்டுகளால் தயாரான அந்த பண மாலையை கண்ட பயனர்கள் பலரும் பிரமித்தனர். இந்த வீடியோ 15 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளையும், 3.19 லட்சத்திற்கும் மேற்பட்ட விருப்பங்களையும் பெற்றுள்ளது. அதனை பார்த்த பயனர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். நாங்கள் இதுபற்றி வருமான வரித்துறைக்கு தெரிவிப்போம் என ஒரு பயனரும், இதை அணிந்து கொண்டு மாப்பிள்ளை எப்படி நடப்பார் என மற்றொரு பயனரும் பதிவிட்டுள்ளனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அரியானாவில் கள்ளச்சாராயம் குடித்து பலியானோர் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்தது.
    • பல இடங்களில் சோதனை செய்து, முக்கியமான ஆதாரங்களை சேகரித்தனர்.

    சண்டிகர்:

    அரியானா மாநிலம் யமுனா நகர் மாவட்டத்தில் கடந்த 3 நாட்களில் கள்ளச்சாராயம் குடித்த 6 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். அவர்களின் இறப்புக்கு கள்ளச்சாராயம்தான் காரணமா, அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து விசாரணை நடைபெறுகிறது.

    இதுகுறித்து மாவட்ட எஸ்.பி. கங்காராம் புனியா கூறுகையில், கள்ளச்சாராயம் குடித்த 6 பேர் உயிரிழந்ததாக வந்த தகவலின்பேரில் எங்கள் அதிகாரிகள் அந்த இடத்திற்கு விரைந்து சென்றார்கள். இறந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் மருத்துவரிடம், விவரத்தைக் கேட்டு அறிந்தோம். கள்ளச்சாராய விற்பனை தொடர்பாக சிலரை கைது செய்து விசாரித்து வருகிறோம். கள்ளச்சாராயம் தொடர்பாக பல இடங்களில் சோதனை செய்து, முக்கியமான ஆதாரங்களைச் சேகரித்துள்ளோம்.

    இந்த வழக்கில் தொடர்புடையவர்கள் மீது 308, 302, 120-B போன்ற பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இறந்தவர்களின் வீடுகளில் காலியான மது பாட்டில்கள் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளன என தெரிவித்தார்.

    இந்நிலையில், அரியானாவில் கள்ளச்சாராயம் குடித்து பலியானோர் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • பாதிக்கப்பட்ட மாணவிகள் பயந்து போய் நடந்த சம்பவம் பற்றி வெளியே கூறாமல் இருந்துள்ளனர்.
    • போலீசார் பள்ளி முதல்வர் மீது போக்சோ உள்ளிட்ட 4 சட்டப்பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்.

    சண்டிகர்:

    அரியானா மாநிலம் ஜிந்த் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளி ஒன்று இயங்கி வருகிறது.

    இந்த பள்ளியில் ஏராளமான மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் 56 வயதான பள்ளி முதல்வர், மாணவிகளை தனது அறைக்கு அழைத்து சென்று மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

    மேலும் தனது ஆசைக்கு இணங்காவிட்டால் செய்முறை தேர்வில் தோல்வி அடைய செய்து விடுவேன் என மாணவிகளை மிரட்டி அவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

    அதோடு, இதுபற்றி வெளியே கூறினாலும் உங்களை பெயிலாக்கி விடுவேன் என மிரட்டி உள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட மாணவிகள் பயந்து போய் நடந்த சம்பவம் பற்றி வெளியே கூறாமல் இருந்துள்ளனர்.

    இதனையும் தனக்கு சாதகமாக்கி கொண்ட பள்ளி முதல்வர் ஏராளமான மாணவிகளுக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த மாணவிகள் சிலர் இதுபற்றி தேசிய மற்றும் மாநில மகளிர் ஆணையத்திற்கு கடிதம் மூலம் புகார் தெரிவித்துள்ளனர். இதையடுத்து மாநில மகளிர் ஆணையம் விசாரணையை தொடங்கியது.

    பின்னர் சம்பவம் தொடர்பாக விசாரித்து நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு பரிந்துரை செய்ததது. இதைத்தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் பள்ளி முதல்வரின் பாலியல் தொல்லைகள் அம்பலமானது.

    பின்னர் போலீசார் பள்ளி முதல்வர் மீது போக்சோ உள்ளிட்ட 4 சட்டப்பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். இதையறிந்த அவர் தலைமறைவானார். அவரை பிடிக்க தனிப்படைகள் அமைத்து தேடிய போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இது தொடர்பாக மாநில மகளிர் ஆணைய தலைவி ரேணு பாட்டியா கூறியதாவது:-

    60 மாணவிகளிடம் இருந்து எங்களுக்கு புகார் வந்தது. இதில் 50 மாணவிகள் பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட்டுள்ளனர். 10 மாணவிகள் பள்ளி முதல்வரின் தவறான நடத்தை பற்றி எங்களுக்கு தெரியும் என்று கூறியுள்ளனர். இதுபற்றி விசாரணை நடத்தி வருகிறோம் என்றார்.

    • தேர்ந்தெடுத்த ஊழியர்கள் தொடங்கிய காலத்திலிருந்தே பணியாற்றுகிறார்கள்
    • என் பணியாளர்கள் எனக்கு ஊழியர்கள் அல்ல; நட்சத்திரங்கள் என்றார் பாடியா

    அரியானாவின் பஞ்ச்குலா (Panchkula) நகரில் உள்ள பிரபல மருந்து தயாரிப்பு நிறுவனம், மிட்ஸ்கார்ட் (MitsKart). அதன் நிறுவனர் எம்.கே. பாடியா (M.K. Bhatiya).

    தீபாவளி நெருங்கும் நேரத்தில் தனது ஊழியர்களுக்கு சிறப்பாக பரிசளித்து அவர்களை மகிழ்விக்க நினைத்தார் பாடியா. இதற்காக பணியாளர்களில் 12 பேரை தேர்வு செய்தார். அதில் 3 வருடங்களுக்கு முன் "ஆஃபீஸ் பாய்" (office boy) எனப்படும் கடைநிலை ஊழியராக சேர்ந்தவரும் ஒருவர். நிறுவனத்தை தொடங்கிய காலத்திலிருந்தே இவர்கள் அனைவரும் பாடியாவின் நிறுவனத்தில் பணியாற்றுகிறார்கள்.

    இவர்களை மகிழ்விக்க நினைத்த பாடியா, தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் ஒவ்வொருவருக்கும் டாடா பன்ச் (Tata Punch) காரை பரிசளித்தார். இந்த டாடா பன்ச் காரின் ஆரம்ப மாடலின் விலை ரூ.6.50 லட்சம் என்பது குறிப்பிடத்தக்கது.



    "என்னை பொறுத்தவரை என் பணியாளர்கள் வெறும் ஊழியர்கள் அல்ல; அவர்கள்தான் நிறுவனத்தின் நட்சத்திரங்கள். கடுமையாக உழைத்து, நிறுவனத்திற்கு விசுவாசமாக இருக்கும் பணியாளர்கள் எங்கிருந்தாலும் தங்கள் கனவுகளை சுலபமாக நிறைவேற்றி கொள்ளலாம்" என அவர்களுக்கு பரிசளிப்பது குறித்து பாடியா கூறினார்.

    பாடியா பரிசாக காரை வழங்கும் வீடீயோக்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

    • ஆயுதங்களுடன் வீட்டிற்குள் நுழைந்த கும்பல், குடும்பத்தினரை கட்டிப் போட்டது
    • பணம் மற்றும் நகைகளையும் கொள்ளையடித்து சென்றது

    அரியானா மாநிலம் பானிபட்டில், திடீரென நான்கு பேர் கொண்ட கும்பல் ஆயுதங்கள், கத்திகள், வெட்டக்கூடிய கூர்மையான பெருட்கள் ஆகியவற்றுடன் ஒரு வீட்டிற்குள் நுழைந்துள்ளது.

    வீட்டிற்குள் நுழைந்த அந்த கும்பல் பெண்களை தவிர்த்து மற்ற குடும்ப உறுப்பினர்களின் கைகளை கட்டி, சத்தம் போட்டால் கொலை செய்துவிடுவதாக மிரட்டியுள்ளனர். இதனால் பயந்துபோன அவர்கள் சத்தம் போடவில்லை. பின்னர் அந்த வீட்டில் இருந்த மூன்று பெண்களையும், அவர்கள் கண்முன்னே கற்பழித்துள்ளனர். அதன்பின் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து விட்டு அந்த கும்பல் தப்பித்து ஓடியுள்ளது.

    இந்த சம்பவம் நடைபெற்ற இடத்தில் இருந்து அருகில் உள்ள மற்றொரு இடத்திலும் கொள்ளை சம்பவம் நடைபெற்றுள்ளது. கணவன் மனைவி வசித்து வந்த வீட்டில் நுழைந்த கும்பல், கணவரை கடத்த முயன்றுள்ளது. அப்போது உடல்நலம் சரியில்லாத மனைவி, தனது கணவரை காப்பாற்ற முயன்றுள்ளார். இந்த சம்பவத்தில் கும்பலால் அந்த பெண் தாக்கப்பட்டுள்ளார். இதில் காயம் அடைந்த அந்த பெண் உயிரிழந்துள்ளார். மேலும், கடத்தப்பட்ட அவரது கணவரிடம் இருந்து பணம் மற்றும் செல்போன் பறிக்கப்பட்டுள்ளது.

    இரண்டு சம்பவத்திலும் ஒரே கும்பல் செயல்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இரண்டு சம்பவங்களும் ஒரே கிராமத்தில் நடைபெற்றுள்ள நிலையில், போலீசார் குற்றவாளிகளை தீவிரமாக தேடிவருகின்றனர். ஆனால், இச்சம்பவத்தில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.

    • ஜூலை 31-ந்தேதி நடைபெற்ற ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் மீது கல்வீச்சு
    • மோதல் ஏற்பட்டு பின்னர் வன்முறையாக வெடித்து ஆறு பேர் உயிரிழந்தனர்

    அரியானா மாநிலம் நூ மாவட்டத்தில் கடந்த ஜூலை மாதம் 31-ந்தேதி விஷ்வ இந்து பரிசத் சார்பில் ஊர்வலம் நடைபெற்றது. இந்த ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் மீது சிலர் கல்வீசி தாக்குதல் நடத்தினர். இதனால் மோதல் வெடித்து, பின்னர் வன்முறையாக மாறியது. இதில் ஆறு பேர் உயிரிழந்தனர்.

    இந்த வன்முறை தொடர்பாக வழக்குப்பதிவு செய்து, வன்முறைக்கு காரணமானவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த வகையில் வன்முறை தொடர்பாக காங்கிரஸ் எம்.எல்.ஏ. மம்மான் கான் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்றிரவு போலீசார் அவரை கைது செய்துள்ளனர்.

    வன்முறை தொடர்பான எஃப்.ஐ.ஆர்.-ல் அவரது பெயர் இடம் பெற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

    மம்மான் கான் பெரோஸ்புர் ஜிர்கா தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர். இந்த தகவலை சீனியர் காங்கிரஸ் எம்.எல்.ஏ. அப்டாப் அகமது உறுதி செய்துள்ளார்.

    • உணவு சேவையை தனியார் அமைப்பான சொடெக்ஸோ நிர்வகிக்கிறது
    • "நான் இங்கு இனிமேல் உணவு உண்ண மாட்டேன்" என ஒருவர் உரக்க கூறுகிறார்

    இந்தியாவின் வடக்கில் உள்ள மாநிலம் அரியானா. இங்குள்ள தொழில்துறையில் பிரசித்தி பெற்ற பல்வேறு உற்பத்தி சாலைகளை உள்ளடக்கிய மாவட்டம் சோனிபெட். இங்கு புகழ் பெற்ற ஓ.பி. ஜிண்டால் குளோபல் எனும் தனியார் நிகர்நிலை பல்கலைக்கழகம் உள்ளது.

    2009-ல், இந்தியாவின் பிரபலமான தொழிலதிபரான நவீன் ஜிண்டால், தனது தந்தையான ஓ.பி. ஜிண்டால் நினைவாக சேவை நோக்கில் இந்த கல்வி நிறுவனத்தை தொடங்கினார். இந்த பல்கலைகழகத்தில் 12 கல்வி நிறுவனங்கள் மூலமாக சட்டக்கல்வி, கலை, அறிவியல், வணிக மேலாண்மை உட்பட பல்வேறு துறைகளில் 45 கல்வி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

    பல்வேறு மாநிலங்களில் இருந்தும், உலகின் பல்வேறு நாடுளிலிருந்தும் இங்கேயே தங்கி மாணவர்கள் பயின்று வருகின்றனர். அங்கேயே தங்கி கல்வி பயிலும் மாணவர்களின் உணவு சேவையை தனியார் அமைப்பான சொடெக்சோ நிர்வகித்து வருகிறது.

    இந்நிலையில் இந்த விடுதி மாணவர்களுக்கான உணவு தயாரிக்கும் கூடத்தில் எடுக்கப்பட்டதாக ஒரு வீடியோ வைரலாகி இருக்கிறது.

    அதில், ஒரு மிக பெரிய அண்டாவில் மிக அதிகமான அளவில் வேக வைத்த உருளைக்கிழங்குகளை கைகளாலோ, இயந்திரங்களாலோ பிசைவதற்கு பதிலாக ஒரு அரை டிராயர், தொப்பி மற்றும் சட்டை அணிந்த பணியாளர் கால்களாலேயே நசுக்குகிறார்.

    இந்த வீடியோவின் பின்னணியில், "நான் இங்கு இனிமேல் உணவு உண்ண மாட்டேன்" என ஒருவர் உரக்க கூறுவதும் கேட்கிறது.

    இந்த சுகாதாரமற்ற செயலை வீடியோவில் கண்ட அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.

    இச்செயலை எதிர்க்கும் வகையில் பல்கலைக்கழக மாணவர்கள் அனைவரும் வெளிநடப்பு செய்து அங்கு உணவு உண்ண மறுத்தனர்.


    இதனையடுத்து பலகலைக்கழக நிர்வாகம், இந்த சம்பவம் குறித்த சொடெக்சோ நிறுவனத்திடம் விளக்கம் கேட்டிருக்கிறது.

    • நூவில் ஏற்கனவே நடைபெற்ற வன்முறையில் 6 பேர் பலி
    • பள்ளிகள், வங்கிகள் மூடல், வாகனங்கள் கடும் சோதனைக்குப்பின் அனுமதி

    அரியானா மாநிலம் "நூ"-வில் இன்று இந்து அமைப்பினர் ஷோப யாத்திரை மேற்கொள்வதாக அறிவித்தனர். இதற்கு "நூ" நிர்வாகம் அனுமதி மறுத்த போதிலும் யாத்திரை நடைபெறும் என அறிவித்துள்ளது. இதற்கிடையே ஜி20 மாநாட்டின் ஷெர்பா குரூப் கூட்டம் "நூ"-வில் செப்டம்ர் 3-ந்தேதி முதல் 7-ந்தேதி வரை நடைபெற இருக்கிறது. இதனால் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டும் வகையில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

    பாதுகாப்பு பணியில் 1,900 அரியானா மாநில போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். போலீசார் 23 கம்பெனி துணை ராணுவம் வரவழைக்கப்பட்டுள்ளது.

    முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, வெளியாட்கள் "நூ" பகுதிக்குள் நுழைய தடைவிதிக்கப்பட்டுள்ளது. கல்வி நிறுவனங்கள், வங்கிகள் மூடப்பட்டுள்ளன. செல்போன் இணையதளம், மொத்தமாக எஸ்.எம்.எஸ். அனுப்ப தடைவிதிக்கப்பட்டுள்ளது. பொது இடத்தில் நான்கு பேருக்கு மேல் கூடுவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.

    குர்கானில் உள்ள சோனா சுங்கச்சாவடியில் வாகனங்கள் கடும் சோதனைக்கு உள்ளாக்கப்படுகின்றன. ஒவ்வொரு வாகனங்களும் நிறுத்தப்பட்டு, சோதனை செய்யப்பட்ட பிறகே அனுமதிக்கப்படுகிறது.

    இஸ்லாமியர்கள் அதிகமாக வசிக்கும் "நூ" பகுதியில் கடந்த ஜூலை 31-ந்தேதி விஷ்வ இந்து பரிஷத் நடத்தி ஊர்வலத்தின்போது, வன்முறை ஏற்பட்டது. இதில் ஆறு பேர் உயிரிழந்தனர். இதனால் ஊர்வலம் பாதிலேயே நிறுத்தப்பட்டது. இந்த ஊர்வலத்தை தொடர்வதாக கிராபசபை பஞ்சாயத்தில் முடிவு எடுக்கப்பட்டு, இன்று ஊர்வலத்தை தொடர் முடிவு செய்யப்பட்டது.

    ×