என் மலர்
இந்தியா

ரூ.40 ஆயிரம் மதிப்பில் புதிய டி.வி. வாங்கியவருக்கு அதிர்ச்சி
- நண்பர் அண்மையில் வாங்கிய புதிய டி.வி.யை அந்த நிறுவனத்தின் பணியாளர் சேதப்படுத்தி விட்டார்.
- பதிவு வைரலானதை தொடர்ந்து பயனர்கள் பலரும் ஏராளமான கருத்துக்களை பதிவிட்டனர்.
அரியானா மாநிலம் குருகிராம் பகுதியை சேர்ந்த ஒரு நிறுவனம் தயாரித்த ரூ.40 ஆயிரம் மதிப்பிலான எல்.இ.டி. டி.வி. ஒன்றை ஆகாஷ்ஜெய்னி என்ற வாடிக்கையாளர் வாங்கி இருந்தார். அவர் அந்த டி.வி.யை பொருத்துவதற்கு வாடிக்கையாளர் சேவை மைய உதவியை தொடர்பு கொண்டு பேசினார். அதன் அடிப்படையில் நிறுவனத்தில் இருந்து வந்த பணியாளர் டி.வி.யை பொருத்தும் போது அதனை சேதப்படுத்தி விட்டார்.
இதுகுறித்து ஆகாஷ்ஜெய்னி சேவை மையத்தை தொடர்பு கொண்டு பேசிய போது, ரூ.40 ஆயிரம் மதிப்புள்ள டி.வி.க்கு வெறும் ரூ.10 ஆயிரம் மட்டுமே இழப்பீடாக கொடுக்க முடியும் என்று கூறியுள்ளனர். இதைக்கேட்டு ஆகாஷ்ஜெய்னி அதிர்ச்சி அடைந்தார். இதுதொடர்பாக அவரது நண்பர் திவ்யான்ஷூ தேம்பி, என்பவர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், எனது நண்பர் அண்மையில் வாங்கிய புதிய டி.வி.யை அந்த நிறுவனத்தின் பணியாளர் சேதப்படுத்தி விட்டார்.
ரூ.40 ஆயிரம் மதிப்புள்ள டி.வி.க்கு இழப்பீடாக ரூ.10 ஆயிரம் மட்டுமே வழங்க முடியும் என நீங்கள் கூறுவது நகைச்சுவையாக இல்லையா? முழுத்தொகையும் இழப்பீடாக வழங்க வேண்டும் என பதிவிட்டிருந்தார். அவரது இந்த பதிவு வைரலானதை தொடர்ந்து பயனர்கள் பலரும் ஏராளமான கருத்துக்களை பதிவிட்டனர். இதைத்தொடர்ந்து சம்பந்தப்பட்ட நிறுவனம் இழப்பீடு தொகையை ரூ.20 ஆயிரமாக வழங்குவதாக அறிவித்துள்ளது.






