search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    சாலையில் கான்கிரீட் தடை, ஆணிகள்: விவசாயிகள் பேரணியை தடுக்க அரியானா அரசு நடவடிக்கை
    X

    சாலையில் கான்கிரீட் தடை, ஆணிகள்: விவசாயிகள் பேரணியை தடுக்க அரியானா அரசு நடவடிக்கை

    • விவசாயிகள் டெல்லி நோக்கி பேரணி செல்ல இருப்பதாக தகவல்.
    • 2020 பேரணியின்போது விவசாயிகள் டெல்லி செங்கோட்டையை நோக்கி சென்றதால் அசாதாரண சூழ்நிலை நிலவியது.

    அரியானா மாநிலத்தைச் சேர்ந்த விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி நோக்கி பேரணி நடத்த இருப்பதாக தெரிவித்துள்ளனர். இந்த பேரணி வருகிற செவ்வாய்க்கிழமை (நாளைமறுதினம்) நடக்கிறது.

    விவசாயிகள் பேரணி அரியானாவில் இருந்து பஞ்சாப் வழியாக டெல்லிக்கு செல்ல இருக்கிறது. இதனால் அரியானாவில் இருந்து விவசாயிகள் டிராக்டர்களில் பஞ்சாப் செல்ல முடியாத அளவிற்கு ஹரியானா அரசு சாலைகளில் தடைகளை ஏற்படுத்தி வருகிறது.

    சாலையின் குறுக்கே பெரிய கான்கிரீட் தடுப்பு கற்களை வைத்துள்ளனர். மேலும், கான்கிரீட் கலவை போட்டு சாலையை மறித்துள்ளனர். அத்துடன் பெரியபெரிய ஆணிகளை சாலையில் வைத்துள்ளனர். அத்துடன் பல அடுக்கு போலீஸ் பாதுகாப்பு குவிக்கப்பட்டுள்ளது. சிஆர்பிஎஃப் போலீசாரும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    இதுதொடர்பான வீடியோ காட்சிகள் இணைய தளத்தில் வைரலாகி வருகிறது. பல இடங்களில் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. இணையதள சேவை முடக்கப்பட்டுள்ளது. குரூப்பாக மெசேஜ் அனுப்ப தடைவிதிக்கப்பட்டுள்ளது.

    2020-ல் விவசாயிகள் மிகப்பெரிய போராட்டத்தை நடத்தினர். பஞ்சாப்- டெல்லி எல்லையில் உள்ள அம்பாலா இடத்தில் போலீஸ் தடுப்புகளை இடித்து தள்ளி டெல்லி நோக்கி புறப்பட்டனர். விவசாயிகள் சுமார் ஒரு வடத்திற்கு மேல் போராட்டம் நடத்திய நிலையில் மத்திய அரசு விவசாயிகள் தொடர்பான 3 சட்டத்தை திரும்பப் பெற்றது.

    ஷம்புவில் உள்ள அரியானா-பஞ்சாப் எல்லையில் வாகன போக்குவரத்திற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதுதான் அம்பாலா மற்றும் டெல்லிக்கு செல்லும் முக்கிய எல்லையாகும்.

    தங்களது விவசாய பொருட்களுக்கு குறைந்த பட்ச ஆதாய விலையை உறுதி வகையில் சட்டம் இயற்ற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 200-க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்கள் பேரணியில் ஈடுபடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    Next Story
    ×