என் மலர்tooltip icon

    இந்தியா

    அயோத்தியில் ராமர் கண்திறந்த நாளில் ஹனுமான் வேடமிட்டவர் மேடையிலேயே உயிரிழந்த சோகம்- வீடியோ
    X

    அயோத்தியில் ராமர் கண்திறந்த நாளில் ஹனுமான் வேடமிட்டவர் மேடையிலேயே உயிரிழந்த சோகம்- வீடியோ

    • ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
    • ஹரியானாவில் நடைபெற்ற ராமாயணம் நாடகத்தின்போது இந்த சோகமாக சம்பவம் நடைபெற்றுள்ளது.

    உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி பெரும்பாலான மாநிலங்களில் ராமாயாணம் நாடகம் நடத்தப்பட்டது. கிராமிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

    ஹரியானா மாநிலம் பிவானியில் ராமாயணம் நாடகம் நடத்தப்பட்டது. இந்த நாடகத்தில் ஹரிஷ் மேத்தா என்பவர் ஹனுமான் வேடம் ஏற்றிருந்தார். நாடகத்தின்படி அவர் பகவான் ராமரின் காலை தொட்டு வணங்க வேண்டும். அத்துடன் அவரது கதாபாத்திரம் முடிவடையும்.

    நாடகம் நடந்து கொண்டிருக்கும்போது திடீரென ஹரிஷ் மேத்தா திடீரென சரிந்து விழுந்தார். நாடகத்தை உன்னிப்பாக கவனித்து கொண்டிருந்தவர்கள் நாடகத்தின் ஒரு பகுதியாக அவர் கீழே விழுந்திருப்பதாக நினைத்தனர். ஒருசில நிமிடம் அப்படியே விழுந்து கிடந்ததால், அவருக்கு ஏதோ நிகழ்ந்துள்ளது எனத் தெரியவந்தது. இதனால் நாடகம் நடைபெற்ற பகுதி பரபரப்பானதாக மாறியது.

    உடனடியாக அவரை தூக்கிக்கொண்டு மருத்துவனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனையில் பரிசோதித்த மருத்துவவர்கள், ஹரிஷ் மேத்தா ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்தனர்.

    ராமர் கண்திறந்த நாளில், அவருக்கு உறுதுணையாக இருந்த ஹனுமானின் வேடம் ஏற்று நடித்த ஒருவர மரணம் அடைந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

    ஹரிஸ் மேத்தா மின்சாரத்துறையில் ஜூனியர் பொறியாளராக வேலைப்பார்த்து ஓய்வு பெற்றவர். அவர் ஒரு நாடக நடிகர். ஹனுமானாக கடந்த 25 வருடங்களாக வேடமிட்டு நடித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×