என் மலர்
டெல்லி
- முதல் கட்டமாக 102 தொகுதிக்கும், 2-வது கட்டமாக 88 தொகுதிகளுக்கும் கடந்த மாதம் வாக்குப்பதிவு நடந்தது.
- மூன்றாம் கட்டமாக 93 தொகுதிகளுக்கு கடந்த 7-ம் தேதி தேர்தல் நடைபெற்றது.
புதுடெல்லி:
பாராளுமன்றத்துக்கு 7 கட்டமாக தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி முதல் கட்டமாக 102 தொகுதிகளுக்கு கடந்த மாதம் 19-ம் தேதியும், 2-ம் கட்டமாக 88 தொகுதிகளுக்கு கடந்த மாதம் 26-ம் தேதியும் வாக்குப்பதிவு நடந்தது.
மூன்றாம் கட்டமாக 93 தொகுதிகளுக்கு கடந்த 7-ம் தேதி தேர்தல் நடைபெற்றது.
இதற்கிடையே, 4-வது கட்டமாக 96 பாராளுமன்ற தொகுதிகளுக்கு இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. மாலை 6 மணிவரை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இன்று நடைபெறும் 4வது கட்ட தேர்தலில் 1717 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். காலையில் தொடங்கிய வாக்குப்பதிவு விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், மதியம் 1 மணி நிலவரப்படி 40.32 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இதேபோல், ஆந்திராவில் 40.26 சதவீதமும், ஒடிசாவில் 39.30 சதவீத வாக்குகளும் பதிவாகின.
- சி.பி.எஸ்.இ. பத்தாம் வகுப்பு தேர்வு பிப்ரவரி 15-ம் தேதி தொடங்கி மார்ச் 13-ம் தேதி வரை நடந்தது.
- நாடு முழுவதும் தேர்வெழுதிய மாணவர்களில் 93.60 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
புதுடெல்லி:
மத்திய கல்வி பாட வாரியம் (சி.பி.எஸ்.இ.) பத்தாம் வகுப்பு தேர்வு கடந்த பிப்ரவரி மாதம் 15-ம் தேதி தொடங்கி மார்ச் 13-ம் தேதி வரை நடைபெற்றது.
இந்த தேர்வை நாடு முழுவதும் 25,724 பள்ளி மாணவ-மாணவிகள் 7,603 மையங்களில் எழுதினார்கள். 22 லட்சத்து 38 ஆயிரத்து 827 மாணவர்கள் தேர்வு எழுதினார்கள்.
சி.பி.எஸ்.இ. பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு இன்று வெளியிடப்பட்டது. இதில் 20 லட்சத்து 95 ஆயிரத்து 467 மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி விகிதம் 93.60 சதவீதமாகும்.
கடந்த ஆண்டை விட 0.48 சதவீதம் தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது.
அகில இந்திய அளவில் சென்னை மண்டலம் தேர்ச்சி விகிதத்தில் 3-வது இடத்தில் உள்ளது. திருவனந்தபுரம் 99.75 சதவீதம் பெற்று முதலிடமும், விஜயவாடா 99.60 சதவீதத்துடன் 2-வது இடமும், சென்னை 99.30 சதவீதத்துடன் 3-வது இடமும் பெற்றுள்ளது.
- டெல்லி மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் ஆம் ஆத்மி ஆளும்கட்சியாக உள்ளது.
- கெஜ்ரிவாலின் தனி செயலாளர் தன்னை தாக்கியதாக ஆம் ஆத்மி பெண் எம்.பி குற்றம்சாட்டியுள்ளார்.
புதுடெல்லி:
டெல்லி மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் ஆளும்கட்சியாக உள்ள ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த மாநிலங்களவை பெண் எம்.பி. சுவாதி மலிவால்.
இந்நிலையில், டெல்லி முதல் மந்திரியும், ஆம் ஆத்மி கட்சித் தலைவமான அரவிந்த் கெஜ்ரிவாலின் தனி செயலாளர் பிபவ் குமார் தன்னை தாக்கியதாக சுவாதி மாலிவால் குற்றம் சாட்டியுள்ளார். இது டெல்லி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது கிடைத்துள்ள தகவலின்படி முதல் மந்திரி கெஜ்ரிவாலின் வீட்டில் வைத்து தன்னை பிபவ் தாக்கியதாக சுவாதி டெல்லி போலீசிடம் போன் செய்து முறையிட்டுள்ளார். இதையடுத்து, கெஜ்ரிவாலின் இல்லத்துக்கு விரைந்த போலீசார் இதுதொடர்பான விசாரணையை தொடங்கினர்.
சமீபத்தில் பிபவ் குமார், சட்டத்துக்குப் புறம்பான வகையில் கெஜ்ரிவாலின் பி.ஏ.வாக நியமிக்கப்பட்டுள்ளதாக டெல்லி லஞ்ச ஒழிப்புத் துறை குற்றம்சாட்டியிருந்தது. அதுமட்டுமின்றி, கடந்த 2007-ம் ஆண்டு அரசு அதிகாரியை வேலை செய்யவிடாமல் தடுத்து தாக்குதல் நடத்தியதாகவும் பிபவ் குமார் மீது குற்றச்சாட்டு உள்ளது.
டெல்லி முதல் மந்திரி கெஜ்ரிவால் நீண்ட போராட்டத்துக்கு பிறகு மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் ஜாமினில் வெளியே வந்துள்ள நிலையில் அவரது சொந்த கட்சி பெண் எம்.பி.யின் குற்றச்சாட்டு அக்கட்சிக்கு தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.
- பாராளுமன்றத்துக்கு 7 கட்டமாக தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
- 4-வது கட்டமாக 96 பாராளுமன்ற தொகுதிகளுக்கு இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.
புதுடெல்லி:
பாராளுமன்றத்துக்கு 7 கட்டமாக தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி முதல் கட்டமாக 102 தொகுதிகளுக்கு கடந்த மாதம் 19-ம் தேதியும், 2-ம் கட்டமாக 88 தொகுதிகளுக்கு கடந்த மாதம் 26-ம் தேதியும் வாக்குப்பதிவு நடந்தது.
மூன்றாம் கட்டமாக 93 தொகுதிகளுக்கு கடந்த 7-ம் தேதி தேர்தல் நடைபெற்றது.
இதற்கிடையே, 4-வது கட்டமாக 96 பாராளுமன்ற தொகுதிகளுக்கு இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. மாலை 6 மணிவரை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இன்று நடைபெறும் 4வது கட்ட தேர்தலில் 1717 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். காலையில் தொடங்கிய வாக்குப்பதிவு விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், காலை 11 மணி நிலவரப்படி 24.87 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதேபோல், ஆந்திராவில் 23 சதவீதமும், ஒடிசாவில் 23.28 சதவீத வாக்குகளும் பதிவாகின.
- காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.
- மாலை 6 மணிவரை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
புதுடெல்லி:
பாராளுமன்றத்துக்கு 7 கட்டமாக தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி முதல் கட்டமாக 102 தொகுதிகளுக்கு கடந்த மாதம் 19-ம் தேதியும், 2-ம் கட்டமாக 88 தொகுதிகளுக்கு கடந்த மாதம் 26-ம் தேதியும் வாக்குப்பதிவு நடந்தது.
மூன்றாம் கட்டமாக 93 தொகுதிகளுக்கு கடந்த 7-ம் தேதி தேர்தல் நடைபெற்றது.
இதற்கிடையே, 4-வது கட்டமாக 96 பாராளுமன்ற தொகுதிகளுக்கு இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. மாலை 6 மணிவரை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இன்று நடைபெறும் 4வது கட்ட தேர்தலில் 1717 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். காலையில் தொடங்கிய வாக்குப்பதிவு விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், காலை 9 மணி நிலவரப்படி 10.35 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இதேபோல், ஆந்திராவில் 9.21 சதவீதமும், ஒடிசாவில் 9.25 சதவீத வாக்குகளும் பதிவாகின.
- ஐ.பி.எல். புள்ளிப்பட்டியலில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் 18 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறது.
- மும்பை மற்றும் பஞ்சாப் அணிகள் நடப்பு தொடரில் இருந்து வெளியேறியுள்ளன.
புதுடெல்லி:
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. இதுவரை 62 லீக் ஆட்டங்கள் நடைபெற்றுள்ளன.
இந்நிலையில், ஐ.பி.எல். புள்ளிப்பட்டியலில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி 18 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறது.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 16 புள்ளிகளுடன் 2வது இடத்தில் உள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 14 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்துக்கு முன்னேறியுள்ளது. சன்ரைசர்ஸ் ஐதராபாத் 14 புள்ளிகள் பெற்று 4-வது இடத்தில் உள்ளது.
பெங்களூரு, டெல்லி, லக்னோ அணிகள் தலா 12 புள்ளிகள் பெற்று 5, 6, 7-வது இடங்களில் உள்ளன.
குஜராத் டைட்டன்ஸ் அணி 10 புள்ளிகளுடன் 8-வது இடத்தில் உள்ளது.
பஞ்சாப் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் தலா 4 வெற்றியுடன் 8 புள்ளிகள் பெற்று நடப்பு தொடரில் இருந்து வெளியேறின.
- காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணிவரை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
- இன்று நடைபெறும் 4வது கட்ட தேர்தலில் 1717 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
புதுடெல்லி:
பாராளுமன்றத்துக்கு 7 கட்டமாக தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி முதல் கட்டமாக 102 தொகுதிகளுக்கு கடந்த மாதம் 19-ம் தேதியும், 2-ம் கட்டமாக 88 தொகுதிகளுக்கு கடந்த மாதம் 26-ம் தேதியும் வாக்குப்பதிவு நடந்தது.
மூன்றாம் கட்டமாக 93 தொகுதிகளுக்கு கடந்த 7-ம் தேதி தேர்தல் நடைபெற்றது.
இந்நிலையில், நான்காவது கட்டமாக 96 பாராளுமன்ற தொகுதிகளுக்கு இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. மாலை 6 மணிவரை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
இன்று நடைபெறும் 4வது கட்ட தேர்தலில் 1717 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். காலையில் தொடங்கிய வாக்குப்பதிவு விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது.
- இரண்டு மருத்துவமனைகளில் இருந்து புகார்கள் வந்ததாக டெல்லி தீயணைப்பு துறை அறிவிப்பு.
- மின்னஞ்சலை ஆய்வு செய்து வரும் போலீசார் மேற்கொண்டு விசாரணை.
டெல்லியின் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் (ஐஜிஐ) மற்றும் இரண்டு அரசு மருத்துவமனைகளுக்கு இன்று மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
வெடிகுண்டு மிரட்டல் குறித்து புராரி மற்றும் மங்கோல்புரியில் உள்ள இரண்டு மருத்துவமனைகளில் இருந்து புகார்கள் வந்ததாக டெல்லி தீயணைப்பு துறை தெரிவித்துள்ளது. மேலும், ஐஜிஐ விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சலும் வந்துள்ளது.
டெல்லியில் உள்ள மங்கோல்புரியில் உள்ள புராரி அரசு மருத்துவமனை மற்றும் சஞ்சய் காந்தி மருத்துவமனை ஆகியவற்றிலிருந்து தங்களுக்கு அழைப்பு வந்ததாக அந்தத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த விவகாரம் தொடர்பாக மின்னஞ்சலை ஆய்வு செய்து வரும் போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
- தேர்தல் அறிக்கையில் பெண்களுக்கு அளித்த வாக்குறுதிகளையும் வீடியோவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆண்டுதோறும் மே மாதம் 2-வது ஞாயிற்றுக்கிழமை அன்னையர் தினம்கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் மே மாதத்தின் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமையான இன்று அன்னையர் தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.
இந்நிலையில், அன்னையர் தினத்தை முன்னிட்டு ராகுல் காந்தி தனது பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், காங்கிரஸ் தலைவர் தனது பாரத் ஜோடோ யாத்திரையின் போது தனது தாய் சோனியா காந்தி மற்றும் பல பெண்களுடன் தனது உரையாடல்கள் கொண்ட வீடியோவைப் பகிர்ந்துள்ளார்.
அந்த பதிவில்," அன்னை என்பது வார்த்தைகளுக்கு அப்பாற்பட்ட ஒரு உணர்வு -- பாசம், தியாகம், பொறுமை மற்றும் வலிமை. அன்னையர் தினமான இன்று, அனைத்து தாய் சக்திக்கும் வணக்கம் செலுத்துகிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ஏழை குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு ஆண்டுதோறும் ரூ. ஒரு லட்சம் வழங்குவதை நோக்கமாகக் கொண்ட மகாலக்ஷ்மி திட்டம் மற்றும் மத்திய அரசு வேலைகளில் 50 சதவீத இடஒதுக்கீடு போன்றவற்றை காங்கிரஸ் தனது மக்களவை தேர்தல் அறிக்கையில் பெண்களுக்கு அளித்த வாக்குறுதிகளையும் வீடியோவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- 75 வயதை பூர்த்தி அடைந்தவர் அரசியலில் இருந்து ஓய்வு பெற வேண்டும் என்ற எந்த விதிமுறையும் பாஜகவில் இல்லை - அமித் ஷா
- '75 வயது நிறைந்தவர்களுக்கு எந்தப் பொறுப்பும் கொடுக்கப்படாது' என 5 வருடங்களுக்கு முன் அமித் ஷா பேசியக் காணொளியை ஆம் ஆத்மி பகிர்ந்துள்ளது
புதுடெல்லி:
டெல்லி அரசின் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறையால் கடந்த மார்ச் மாதம் 21-ந்தேதி கைதான அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜூன் 1-ந்தேதி வரை நிபந்தனைகளுடன் கூடிய இடைக்கால ஜாமினை நேற்று சுப்ரீம் கோர்ட் வழங்கியது.
இதையடுத்து ஜெயிலில் இருந்து விடுதலையான கெஜ்ரிவால் ஆம் ஆத்மி அலுவலகத்தில் கெஜ்ரிவால் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது, 'பாஜக கட்சி விதிப்படி 75 வயதைப் பூர்த்தி செய்த ஒருவர், அக்கட்சியிலிருந்து ஓய்வு பெற வேண்டும். அப்படி இருக்க மோடி 75 வயதை அடைய இன்னும் 2 ஆண்டுகளே உள்ள நிலையில், யாரை முன்னிறுத்தி ஓட்டு கேட்கிறது பாஜக? அமித்ஷாவைப் பிரதமர் ஆக்க ஓட்டு கேட்கிறார்களா?
இந்தியா கூட்டணிக்கு யார் பிரதமர் என பாஜகவைச் சேர்ந்தவர்கள் கேட்கிறார்கள். நான் அவர்களிடம் கேட்கிறேன், உங்கள் பிரதமர் வேட்பாளர் யார்?"
பிரதமர் மோடி விரைவில் அரசியலில் இருந்து ஓய்வுபெற உள்ளார். மோடி ஓய்வு பெற்றார் அவரது உத்தரவாதத்தை பூர்த்தி செய்யப்போவது யார்?" என கேள்வி எழுப்பினார்.
இதனையடுத்து கெஜ்ரிவாலின் குற்றச்சாட்டுக்கு பதில் அளித்த உள்துறை அமைச்சர் அமித் ஷா, "75 வயதை பூர்த்தி அடைந்தவர் அரசியலில் இருந்து ஓய்வு பெற வேண்டும் என்ற எந்த விதிமுறையும் பாஜகவில் இல்லை. ஆகவே பாஜக வென்றால் மோடியே 5 ஆண்டுகள் பிரதமர் பதவியில் நீடிப்பார்" என்று தெரிவித்தார்.
இந்நிலையில் '75 வயது நிறைந்தவர்களுக்கு எந்தப் பொறுப்பும் கொடுக்கப்படாது' என ஐந்து வருடங்களுக்கு முன் அமித் ஷா பேசியக் காணொளியை ஆம் ஆத்மி கட்சி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
அதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய கெஜ்ரிவால், "75 வயது நிறைந்தவர்களுக்கு எந்தப் பொறுப்பும் கொடுக்கப்படாது என்று பிரதமர் மோடி வகுத்த விதியை அவரே பின்பற்றமாட்டார் என்று நான் நினைக்கவில்லை. பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானியை ஓய்வு பெறச் செய்த விதியை பின்பற்ற மாட்டேன் என்று மோடி கூறமாட்டார். அத்வானிக்காக தான் இந்த விதி உருவாக்கப்பட்டது. இந்த விதி எனக்குப் பொருந்தாது என்று பிரதமர் சொல்லட்டும். பிரதமர் மோடி இதைச் சொல்வார் என்று நான் நினைக்கவில்லை" என்று பேசியுள்ளார்.
- காங்கிரஸுக்கு பணம் கிடைத்தது என்று கூறிய பிரதமர் மோடியின் கருத்து.
- பிரதமர் மோடியின் கருத்துக்கு முன்னாள் காங்கிரஸ் தலைவர் பதிலளித்தார்.
பிரதமர் நரேந்திர மோடியை குறிவைத்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, "டெம்போவில் கோடீஸ்வரர்களிடமிருந்து" பெற்ற நோட்டுகளை பாஜக எண்ணிக்கொண்டிருக்கும் நிலையில், சமத்துவத்தை உறுதிசெய்ய காங்கிரஸ் கட்சி சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தும் என்று கூறினார்.
அதானி மற்றும் அம்பானியிடம் இருந்து டெம்போக்களில் காங்கிரஸுக்கு பணம் கிடைத்தது என்று கூறிய பிரதமர் மோடியின் கருத்துக்கு முன்னாள் காங்கிரஸ் தலைவர் பதிலளித்தார்.
இதுதொடர்பாக ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
கடந்த 10 ஆண்டுகளாக அவர்கள் கோட்டீஸ்வரர்களிடம் இருந்து பெற்ற 'நோட்டுகளை' எண்ணுகிறார்கள். நாங்கள் 'சாதிக் கணக்கெடுப்பு' மூலம் நாட்டை எக்ஸ்ரே செய்வோம். ஒவ்வொரு பிரிவினருக்கும் சமமான பங்களிப்பை உறுதி செய்வோம்.
அதானியும் அம்பானியும் கறுப்புப் பணத்தை அனுப்பினார்களா என்பது குறித்து சிபிஐ அல்லது இடி விசாரணைக்கு பிரதமர் உத்தரவிட வேண்டும்" என்றார்.
சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு விவகாரம் தொடர்பாக அரசை எதிர்க்கும் கட்சி விளம்பரத்தையும் அவர் பகிர்ந்துள்ளார்.
சமூக- பொருளாதார மக்கள்தொகை கணக்கெடுப்பு குறித்த தனது கருத்தைப் பகிர்ந்து கொள்ளுமாறு பிரதமரிடம் காங்கிரஸ் கேட்டுக் கொண்டுள்ளது.
ஜாதிகள் மற்றும் துணை ஜாதிகள் மற்றும் அவர்களின் சமூக-பொருளாதார நிலைமைகளை கணக்கிடுவதற்காக நாடு தழுவிய சமூக-பொருளாதார மற்றும் ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவதாக காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் அறிக்கையில் உறுதியளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால், 24 மணி நேரம் மின்சாரம், இலவச கல்வி , மருத்துவம் வழங்கப்படும்.
- நகரங்களில் கூட தற்போது மின்வெட்டு உள்ளது.அதை நாங்கள் விரைவில் சரி செய்வோம்.
ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த சில மாதங்களுக்கு முன் மதுபான ஊழல் தொடர்பான பணமோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில் டெல்லியில் மே 25- ந் தேதி நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலை யொட்டி அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு தற்போது சுப்ரீம் கோர்ட்டு ஜூன் 1 வரை இடைக்கால ஜாமீன் வழங்கி உள்ளது. ஜூன் 2-ந் தேதி அவர் மீண்டும் சிறைக்குத் திரும்ப வேண்டும்.டெல்லியில் மே 25- ந் தேதி நடைபெற உள்ள தேர்தலை யொட்டி தேர்தல் பிரச்சார பணிகளில் கெஜ்ரிவால் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 11 மணிக்கு அவரது எம்எல்ஏக்களை சந்தித்து பேசினார். மேலும் தேர்தல் வியூகம் குறித்து ஆலோசித்தார். அப்போது கெஜ்ரிவால் 10 தேர்தல் வாக்குறுதிகளை அளித்தார். அதில் அவர் கூறியதாவது :-
* இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால், அனைவருக்கும் 24 மணி நேரமும் மின்சாரம் மற்றும் இலவச கல்வி மற்றும் மருத்துவம் வழங்கப்படும்.
* டெல்லி மற்றும் பஞ்சாபில், நாங்கள் மாற்றத்தை கொண்டு வர முடியும் என்பதை நிரூபித்துள்ளோம். மேலும் நாடு முழுவதும் அவ்வாறு செய்ய நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்.
* 2022 -க்குள் விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பாக்க பிரதமர் மோடி தவறி விட்டார். 2022 -க்குள் ஒவ்வொரு வீட்டிற்கும் 24×7 மின்சாரம் வழங்கப்படும் என மோடி உத்தரவாதம் அளித்தார். நாட்டின் அனைத்துப் பகுதிகளையும் விடுங்கள். நகரங்களில் கூட தற்போது மின்வெட்டு உள்ளது.அதை நாங்கள் விரைவில் சரி செய்வோம்.

* 2022 க்குள். சபர்மதிக்கும் மும்பைக்கும் இடையே புல்லட் ரெயில் இயக்கப்படும் என்று மோடி உத்தரவாதம் அளித்தது எதுவும் இதுவரை நடக்க வில்லை.விரைவில் நாங்கள் ஏற்பாடு செய்வோம்.
* சீனா நமது நாட்டு நிலத்தை ஆக்கிரமித்துள்ளது. ஆனால் மத்திய அரசு எங்கள் நிலத்திற்குள் யாரும் வரவில்லை, எதுவும் நடக்கவில்லை என்று அது கூறுகிறது. அதை விரைவில் மீட்போம்.

* நாட்டின் சுகாதாரத் துறையில் மிகுந்த கவனம் செலுத்துவோம். நாட்டு மக்கள் ஆரோக்கியமாக இருந்தால் நாடு முன்னேறும். 140 கோடி மக்கள் முன்னேற்றத்திற்கு உதவுவோம்.
* நாடு முழுவதும் உள்ள 10 லட்சம் பள்ளிகளில் 18 கோடி குழந்தைகள் படிக்கிறார்கள்.அவர்களுக்கு எதிர்காலம் இல்லை. டெல்லியிலும், பஞ்சாபிலும், மாற்றத்தை கொண்டு வர முடியும் என்பதை நிரூபித்துள்ளோம், அதை நாடு முழுவதும் செயல்படுத்துவோம் என்றார்.






