என் மலர்tooltip icon

    டெல்லி

    • தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா டெல்லியில் நடைபெறுகிறது.
    • சிறந்த தமிழ் படமாக பொன்னியின் செல்வன் பாகம் 1 படம் தேர்வாகி உள்ளது.

    புதுடெல்லி:

    தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா டெல்லியில் நடைபெறுகிறது.

    இதில் மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் பாகம் 1 தேசிய விருதுகளைப் பெற்றுள்ளது.

    சிறந்த தமிழ் படமாக பொன்னியின் செல்வன் பாகம் 1 படம் தேர்வாகி உள்ளது.

    சிறந்த பின்னணி இசைக்கு விருதுக்கு ஏ.ஆர்.ரகுமான் இப்படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

    சிறந்த ஒலிப்பதிவு மற்றும் சிறந்த ஒளிப்பதிவு என மொத்தம் 4 விருதுகளை அள்ளியுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும். 

    • மல்யுத்தத்தில் அமன் ஷெராவத் வெண்கல பத்தக்கம் வென்றார்.
    • வடக்கு ரெயில்வே சிறப்புப் பணி அதிகாரியாக பதவி உயர்வு.

    புதுடெல்லி:

    பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் ஆண்களுக்கான மல்யுத்தத்தில் 57 கிலோ எடைபிரிவு பிரீஸ்டைல் பிரிவில் இந்தியாவின் அமன் ஷெராவத் வெண்கலப்பத்தக்கத்தை வென்றார்.

    இந்த நிலையில் அமன் ஷெராவத்திற்கு வடக்கு ரெயில்வேயில் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

    வடக்கு ரெயில்வே தலை மையகத்தில் நடைபெற்ற கூட்டத்தில், ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற அமன் ஷெரா வத்துக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது. இதுகுறித்து இந்த கூட்டத்தில் அவருக்கு பதவி உயர்வு வழங்கி அறிவிக்கப்பட்டது.

    இதுகுறித்து தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி ஹிமான்ஷு உபாத்யாய் கூறும்போது, அமன் ஷெராவத், பாரீஸ் ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்று தேசத்திற்கு மகத்தான பெருமையையும் புகழையும் கொண்டு வந்துள்ளார்.

    அவரது அர்ப்பணிப்பு, கடின உழைப்பு மற்றும் விடாமுயற்சி மில்லியன் கணக்கானவர்களுக்கு உத்வேகம் அளித்துள்ளது. அவருக்கு வடக்கு ரெயில்வே சிறப்புப் பணி அதிகாரியாக பதவி உயர்வு அளிக்கப்பட்டு உள்ளது என்றார்.

    இதேபோல் துப்பாக்கி சுடுதலில் 50 மீட்டர் ரைபிள் 3 நிலை போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்தியாவின் ஸ்வப்னில் குசேலேவுக்கு இந்திய ரெயில்வேயின் பயணச் சீட்டு பரிசோதகரில் இருந்து சிறப்புப் பணி அதிகாரியாக இரட்டைப் பதவி உயர்வு அளிக்கப் பட்டது.

    • அதிகாரிகளுக்கு தேர்தல் பணி பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
    • தேர்தல் நடத்தை விதிகள் இன்று முதல் அமலுக்கு வருகின்றன.

    புதுடெல்லி:

    மராட்டிய மாநில சட்ட சபையின் 5 ஆண்டு பதவி காலம் வருகிற நவம்பர் மாதம் 26-ந்தேதி நிறைவு பெற உள்ளது. அதுபோல அரியானா மாநில சட்டசபை யின் 5 ஆண்டு கால பதவி காலம் நவம்பர் 3-ந்தேதி நிறைவு பெறுகிறது.

    ஜார்க்கண்ட் மாநில சட்டசபையின் பதவி காலம் அடுத்த ஆண்டு (2025) ஜனவரி மாதம் 5-ந்தேதி முடிய உள்ளது. காஷ்மீர் மாநிலத்தில் சட்டசபை தேர்தலை நடத்த கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

    மராட்டியம், அரியானா, ஜார்க்கண்ட், காஷ்மீர் ஆகிய 4 மாநிலங்களிலும் செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதம் தேர்தல் நடத்த தலைமை தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. இதற்கான பணிகளை தலைமை தேர்தல் ஆணையம் கடந்த மாதம் முதல் செய்ய தொடங்கியது.

    இதனால் இந்த 4 மாநிலங்களிலும் அரசியல் கட்சி தலைவர்களும், அதிகாரிகளும் சுறுசுறுப்பு அடைந்துள்ளனர். முதல் கட்டமாக இந்த 4 மாநி லங்களிலும் நீண்ட நாட்களாக ஒரே இடத்தில் பணிபுரிந்து வரும் அரசு உயர் அதிகாரிகளை மாற்றம் செய்யும் பணி நடந்தது.

    இதையடுத்து தலைமை தேர்தல் ஆணையம் 4 மாநிலங்களிலும் அரசியல் சூழ்நிலையை ஆய்வு செய்தது. அதோடு வாக்காளர் பட்டியல் தயாரிப்பு பணியை தீவிரப்படுத்தியது. அடுத்த கட்டமாக அதிகாரிகளுக்கு தேர்தல் பணி பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

    ஓட்டுப்பதிவை எப்போது நடத்தலாம் என்பதற்கான ஆலோசனை கூட்டங்கள் பல்வேறு கட்டங்களாக நடைபெற்றன. இதற்காக தலைமை தேர்தல் ஆணைய அதிகாரிகள் 4 மாநிலங்களுக்கும் சென்று வந்தனர்.

    குறிப்பாக காஷ்மீரில் பாதுகாபபு ஏற்பாடுகள் பற்றி கடந்த சில தினங்களாக தீவிர ஆய்வு செய்யப்பட்டது. நேற்று முன்தினம் இந்த பணிகள் அனைத்தும் நிறைவு பெற்றன.

    இதையடுத்து 4 மாநில சட்டசபை தேர்தல் தேதி அட்டவணையை இன்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் 3 மணிக்கு தலைமை தேர்தல் ஆணையம் வெளியிடுகிறது. இதனால் இந்த 4 மாநிலங்களிலும் தேர்தல் நடத்தை விதிகள் இன்று முதல் உடனடியாக அமலுக்கு வருகின்றன.

    இதையடுத்து 4 மாநிலங்களிலும் அரசியல் கட்சிகள் வேட்பாளர் தேர்வை நடத்த தொடங்கி உள்ளன.

    இந்த 4 மாநிலங்களில் அரியானாவில் பா.ஜ.க. ஆட்சி உள்ளது. மராட்டி யத்தில் பா.ஜ.க.-சிவசேனா (ஷிண்டே அணி) கூட்டணி ஆட்சி உள்ளது. அங்கு மீண்டும் ஆட்சியை கைப்பற்ற உத்தவ் தாக்கரே காங்கிரசுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார். ஆனால் இதுவரை இறுதி முடிவு எடுக்கப்பட வில்லை.

    ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஹேமந்த் சோரன் தலைமையிலான ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா ஆட்சி நடந்து வருகிறது. அங்கு காங்கிரசும், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவும் மீண்டும் கூட்டணி அமைத்து போட்டியிட உள்ளன.

    காஷ்மீரில் யூனியன் பிரதேச கவர்னர் மூலம் ஆட்சி நடந்து வருகிறது. இந்த 4 மாநிலங்களில் அரியானாவில் ஆட்சியை கைப்பற்ற காங்கிரஸ் மிக மிக தீவிரமாக உள்ளது. அங்கு தேர்தல் பிரசாரம் இப்போதே களை கட்ட தொடங்கி உள்ளது. அந்த மாநிலத்தில் ஆம் ஆத்மியுடன் கூட்டணி அமைக்க போகிறேன் என்று காங்கிரஸ் அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

    • முன்னாள் பிரதமர் வாஜ்பாய் நினைவிடத்தில் தலைவர்கள் மரியாதை செலுத்தினர்.
    • அடல் பிகாரி வாஜ்பாய் இந்தியாவுக்கு மூன்று முறை பிரதமராக இருந்துள்ளார்.

    இந்தியாவின் முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய். மூன்று முறை இந்திய பிரதமராக பதவி வகித்து இருக்கும் வாஜ்பாய் ஆகஸ்ட் 16, 2018 அன்று உயிரிழந்தார்.

    இவரது நினைவு நாளை ஒட்டி டெல்லியில் உள்ள "சைதவ் அடல்" நினைவிடத்தில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு பிரதமர் மோடி, குடியரசு தலைவர் திரவுபதி முர்மு ஆகியோர் மரியாதை செலுத்தினர்.



    இவர்கள் தவிர மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மத்திய அமைச்சர்கள் ஜே.பி. நட்டா, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா மற்றும் பலர் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.



    மேலும் வாஜ்பாயின் வளர்ப்பு மகள் நமிதா கௌல் பட்டாச்சார்யாவும் வாஜ்பாய் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். மத்திய அமைச்சர் அமித் ஷா முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு மரியாதை செலுத்தினார்.


    அடல் பிகாரி வாஜ்பாய் கடந்த 1996 ஆம் ஆண்டு 13 நாட்களும், 1998 முதல் 1999 வரையிலான காலகட்டத்தில் 13 மாதங்களும், 1999 முதல் 2004ம் ஆண்டுகள் என மொத்தம் மூன்று முறை இந்திய பிரதமராக பதவி வகித்துள்ளார். இந்தியாவின் மிகவும் உயர்ந்த விருதுகளில் ஒன்றான பாரத ரத்னா விருது பெற்றுள்ளார்.

    • இந்திய வரலாற்றில் எந்த பிரதமரின் சுதந்திர தின உரையை ஒப்பிட்டாலும், இதுதான் மிக நீண்ட உரை.
    • கடந்த 1947-ம் ஆண்டு நேரு 72 நிமிடங்களும், 1997-ம் ஆண்டு குஜ்ரால் 71 நிமிடங்களும் உரையாற்றியது நீண்ட நேர உரையாக இருந்தன.

    புதுடெல்லி:

    பிரதமர் மோடி நேற்று டெல்லி செங்கோட்டையில் ஆற்றிய சுதந்திர தின உரைதான், அவரது சுதந்திர தின உரைகளிலேயே மிக நீளமானது. 98 நிமிட நேரம் அவரது உரை நீடித்தது. இந்திய வரலாற்றில் எந்த பிரதமரின் சுதந்திர தின உரையை ஒப்பிட்டாலும், இதுதான் மிக நீண்ட உரை ஆகும். இது ஒரு சாதனையாக பார்க்கப்படுகிறது.

    பிரதமர் மோடி, கடந்த 2014-ம் ஆண்டு முதல்முறையாக டெல்லி செங்கோட்டையில் தேசியக்கொடி ஏற்றியபோது, 65 நிமிடம் உரையாற்றினார்.

    2015-ம் ஆண்டு 88 நிமிடங்களும், 2016-ம் ஆண்டு 96 நிமிடங்களும், 2017-ம் ஆண்டு 56 நிமிடங்களும், 2018-ம் ஆண்டு 83 நிமிடங்களும், 2019-ம் ஆண்டு 92 நிமிடங்களும், 2020-ம் ஆண்டு 90 நிமிடங்களும், 2021-ம் ஆண்டு 88 நிமிடங்களும், 2022-ம் ஆண்டு 74 நிமிடங்களும், 2023-ம் ஆண்டு 90 நிமிடங்களும் அவரது சுதந்திர தின உரை நீடித்தது.

    இதற்கு முன்பு, அவரது நீண்ட உரை 2016-ம் ஆண்டு ஆற்றிய உரையாகவும், மிக குறைந்த நேர உரை 2017-ம் ஆண்டு ஆற்றிய உரையாகவும் இருந்தது.

    பிரதமர் மோடிக்கு முன்பு, கடந்த 1947-ம் ஆண்டு நேரு 72 நிமிடங்களும், 1997-ம் ஆண்டு குஜ்ரால் 71 நிமிடங்களும் உரையாற்றியது நீண்ட நேர உரையாக இருந்தன.

    கடந்த 1954-ம் ஆண்டு நேரு 14 நிமிடங்களும், 1966-ம் ஆண்டு இந்திரா காந்தி 14 நிமிடங்களும் பேசியது, குறைந்த நேர சுதந்திர தின உரைகளாக உள்ளன.

    கடந்த 2012-ம் ஆண்டு மன்மோகன்சிங்கின் சுதந்திர தின உரை 32 நிமிடங்களிலும், 2002-ம் ஆண்டு வாஜ்பாயின் சுதந்திர தின உரை 25 நிமிடங்களிலும் முடிவடைந்தன.

    • பிரதமரின் இந்த பயணத்தில் பல்வேறு நிகழ்வுகளுக்கு ஏற்பாடாகி வருகிறது.
    • கடந்த 2014-ம் ஆண்டு மடிசன் சதுக்கத்தில் நடந்த பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றி இருந்தார்.

    நியூயார்க்:

    ஐ.நா. பொதுச்சபை கூட்டம் அடுத்த மாதம் (செப்டம்பர்) 24-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை நியூயார்க்கில் நடக்கிறது. இதில் பிரதமர் மோடி 26-ந்தேதி பிற்பகல் உரை நிகழ்த்துகிறார்.

    இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி அடுத்த மாதம் அமெரிக்கா செல்கிறார். பிரதமரின் இந்த பயணத்தில் பல்வேறு நிகழ்வுகளுக்கு ஏற்பாடாகி வருகிறது.

    இதில் முக்கியமாக நியூயார்க் லாங் தீவில் உள்ள நசாவு கொலிசிய மைதானத்தில் செப்டம்பர் 22-ந்தேதி பிரமாண்ட பொதுக்கூட்டம் நடக்கிறது.

    ஆயிரக்கணக்கான இந்திய வம்சாவளியினர் பங்கேற்கும் இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி சிறப்புரையாற்றுகிறார். இதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடந்து வருகிறது.

    கடந்த 2014-ம் ஆண்டு மடிசன் சதுக்கத்தில் நடந்த பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் அவர் உரையாற்றி இருந்தார். அதன்பின்னர் சுமார் 10 ஆண்டுகளுக்குப்பின் இந்த பிரமாண்ட கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    அமெரிக்காவில் நவம்பர் 5-ந்தேதி ஜனாதிபதி தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், பிரதமர் மோடியின் இந்த பிரமாண்ட பொதுக்கூட்டம் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

    • மணிப்பூரில் உண்மையான சுதந்திரம் மழுப்பலாக உள்ள அவலநிலையை பற்றி சிந்திக்கவேண்டும்.
    • மணிப்பூருக்கு வந்து இங்கு என்ன நடக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள முயற்சிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    வன்முறையால் பாதிக்கப்பட்ட மணிப்பூருக்குச் சென்று அங்குள்ள மோதலுக்கு அமைதியான முறையில் தீர்வு காண மத்திய, மாநில அரசுகள் செயல்பட வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மீண்டும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    மேலும், ராகுல் காந்தி, "நான் இன்று டெல்லியில் வசிக்கும் மணிப்பூரைச் சேர்ந்த மக்களை சந்தித்தேன். தங்கள் மாநிலத்தில் ஏற்பட்ட மோதல்கள், போராட்டங்களை என்னிடம் பகிர்ந்து கொண்டனர்.

    நாம் சுதந்திர தினத்தை கொண்டாடும்போது மணிப்பூரில் உண்மையான சுதந்திரம் மழுப்பலாக உள்ள அவலநிலையை பற்றி சிந்திக்கவேண்டும்" எனவும் அவர் பேசியுள்ளார்.

    இதுகுறித்து ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் கூறுகையில், " அன்பானவர்களிடமிருந்து பிரிந்திருப்பதன் வலி மற்றும் மோதல்கள் தங்கள் சமூகங்களில் உடல் மற்றும் மனரீதியாக பாதிக்கப்பட்டது" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

    மேலும், "மணிப்பூரில் உள்ள எங்கள் சகோதர சகோதரிகள் சகித்துக்கொண்டிருக்கும் கடுமையான உண்மை இதுதான்- நிலையான அச்சத்தின் நிலை.

    நாம் சுதந்திர தினத்தை கொண்டாடும் போது, உண்மையான சுதந்திரம் மழுப்பலாக இருக்கும் மணிப்பூரின் அவல நிலையைப் பற்றி சிந்திப்போம். மணிப்பூருக்குச் சென்று, விரைவில் அமைதியான முறையில் தீர்வு காண மத்திய மற்றும் மாநில அரசுகள் செயல்படுமாறு பிரதமரை மீண்டும் ஒருமுறை கேட்டுக்கொள்கிறேன்.

    பிரதமர் நீண்ட காலத்திற்கு முன்பே அந்த மாநிலத்திற்குச் சென்றிருக்க வேண்டும். அவர் மணிப்பூருக்குச் செல்வது முக்கியம். மணிப்பூருக்கு வந்து இங்கு என்ன நடக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள முயற்சிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    மணிப்பூர் மக்கள், அனேகமாக முழு நாட்டு மக்களும், பிரதமர் மாநிலத்திற்குச் சென்று பாதிக்கப்பட்டவர்களின் துயரங்களைக் கேட்க வேண்டும் என்று விரும்புகிறார்கள்.

    அது மக்களுக்கு ஆறுதல் அளிக்கும். நிலைமையை மேம்படுத்தும். எதையும் ஆதரிக்க காங்கிரஸ் தயாராக உள்ளது" என்று கூறியுள்ளார்.

    • வங்கதேசத்தின் முன்னேற்றத்திற்கு இந்தியா எப்போதும் நலம் விரும்பியாக இருக்கும்.
    • வங்கதேசத்தில் நிலைமை விரைவில் சீராகும் என நம்புகிறோம் என்றார் பிரதமர் மோடி.

    புதுடெல்லி:

    நாட்டின் 78-வது சுதந்திர தினத்தையொட்டி டெல்லி செங்கோட்டையில் 11-வது முறையாக தேசியக் கொடியை ஏற்றினார் பிரதமர் நரேந்திர மோடி. அப்போது அவர் நாட்டு மக்களிடம் பேசியதாவது:

    வங்கதேசத்தில் உள்ள இந்துக்கள் மற்றும் சிறுபான்மையினரின் பாதுகாப்பு குறித்து 140 கோடி இந்தியர்கள் கவலைப்படுகிறார்கள்.

    வங்கதேசத்தின் முன்னேற்றத்திற்கு இந்தியா எப்போதும் நலம் விரும்பியாக இருக்கும். வங்கதேசத்தில் நிலைமை விரைவில் சீராகும் என நம்புகிறோம்.

    வங்கதேசத்தில் உள்ள இந்துக்கள் மற்றும் சிறுபான்மையினர் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும் என இந்தியர்கள் விரும்புகின்றனர் என தெரிவித்தார்.

    • பாரீஸ் ஒலிம்பிக்கில் இந்திய அணி ஒரு வெள்ளி, 5 வெண்கலம் என 6 பதக்கங்களை வென்றது.
    • ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றவர்கள் பிரதமர் மோடியை இன்று சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

    புதுடெல்லி:

    பிரான்ஸ் தலைநகர் பாரீசில் 33-வது ஒலிம்பிக் போட்டி நடைபெற்றது. இதில் இந்தியா சார்பில் 100-க்கு மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். இதில் ஒரு வெள்ளி, 5 வெண்கலம் என 6 பதக்கங்களை இந்தியா வென்றது.

    இந்நிலையில், ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றவர்கள் தலைநகர் டெல்லியில் பிரதமர் மோடியை இன்று சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

    அப்போது ஒவ்வொரு வீரரும் பிரதமர் மோடியுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

    துப்பாக்கிச் சுடுதலில் தனிநபர் மற்றும் கலப்பு இரட்டையர் பிரிவு என 2 வெண்கலம் வென்ற மனு பாக்கர், பிரதமர் மோடிக்கு ஏர் பிஸ்டலை பரிசாக அளித்தார்.


    மேலும், வெண்கலம் வென்ற ஹாக்கி வீரர்கள் அனைவரும் கையெழுத்திட்ட ஜெர்சி மற்றும் ஹாக்கி மட்டையை பிரதமர் மோடிக்கு பரிசாக அளித்தனர்.

    அதன்பின், வீரர், வீராங்கனைகளுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார். அப்போது ஒலிம்பிக் போட்டி அனுபவங்களை அவர்களிடம் கேட்டறிந்தார்.

    இந்தச் சந்திப்பில் ஈட்டி எறிதலில் வெள்ளி வென்ற நீரஜ் சோப்ரா மற்றும் பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து ஆகியோர் பங்கேற்கவில்லை.

    • டி20 உலகக் கோப்பையில் 100 சதவீதம் வெற்றி பெற்ற முதல் கேப்டன் ரோகித் சர்மா.
    • அதிவேகமாக 3,500 ரன்களை கடந்த முதல் வீரர் விராட் கோலி.

    புதுடெல்லி:

    டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய கேப்டன் ரோகித் சர்மா மற்றும் நட்சத்திர வீரரான விராட் கோலி ஆகியோர் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தனர். இருவரின் ஓய்வு அறிவிப்பு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

    டி20 கிரிக்கெட்டில் அதிக போட்டிகளில் விளையாடியுள்ள ரோகித் சர்மா, டி20 கிரிக்கெட்டில் 50 வெற்றிகளைப் பெற்ற ஒரே கேப்டன் என்ற சாதனையை படைத்தார்.

    டி20 கிரிக்கெட்டில் அதிக சதங்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் மேக்ஸ்வெலுடன் முதலிடத்தைப் பகிர்ந்துள்ள ரோகித் சர்மா, டி20 உலகக் கோப்பை தொடரின் அனைத்துப் போட்டிகளிலும் வெற்றிபெற்று கோப்பை வென்ற முதல் கேப்டன் என்ற பெருமையைப் பெற்றார். டி20 கிரிக்கெட்டில் 200 சிக்சர்களை விளாசிய முதல் வீரர் என்ற பெருமையையும் ரோகித் சர்மா பெற்றார்.

    இதேபோல், சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக அரை சதம் அடித்த வீரர்கள் பட்டியலில் பாபர் அசாமுடன் முதலிடத்தை பகிர்ந்துள்ள விராட் கோலி டி20 போட்டிகளில் அதிக முறை ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருது பெற்றுள்ளார்.

    இந்நிலையில், ஓய்வை அறிவித்த நிலையிலும் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலியின் மவுசு இன்னும் குறையவில்லை.

    சமீபத்தில் ஐசிசி வெளியிட்ட டி20 தரவரிசைப் பட்டியலில் ரோகித் சர்மா 45வது இடத்திலும், விராட் கோலி 52வது இடத்திலும் நீடிக்கின்றனர்.

    ஓய்வு அறிவித்த வீரர்களின் பெயர் பட்டியலில் இருந்து நீக்கப்படும் நிலையில், இவர்களது சாதனைகளால் தரவரிசையில் இன்றும் இடம்பிடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • கல்வியறிவின்மை, வறுமை, வேலையின்மை மற்றும் நோய்களைத் தோற்கடிக்க சுதந்திரம் கிடைத்தது.
    • ஜனநாயகம் எந்த சக்தியாலும் பலவீனப்படுத்த முடியாத அளவுக்கு வலிமையானது.

    சுதந்திர தினமான இன்று டெல்லி உள்துறை அமைச்சர் கைலாஷ் கெலாட் சத்ரசல் மைதானத்தில் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.

    பின்னர் அவர் பேசியதாவது:-

    தேசியக் கொடியின் கீழ் நின்று, அரவிந்த் கெஜ்ரிவால் ஒரு நவீன சுதந்திரப் போராட்ட வீரர் என்று நான் பெருமையுடன் சொல்ல முடியும். ஏனென்றால், அவர் சிறைக்குச் சென்று டெல்லி மக்களுக்காக பாடுபடுவதற்கான தண்டனையை ஏற்றுக்கொண்டுள்ளார்.

    ஆனால் எதிர்ப்புக்கு முன்னால் அவர் பணிந்தோ அல்லது உடைந்தோ போகவில்லை.

    தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சரை சிறையில் அடைக்க வேண்டும் என்பதற்காக நாட்டுக்கு சுதந்திரம் கிடைக்கவில்லை. கல்வியறிவின்மை, வறுமை, வேலையின்மை மற்றும் நோய்களைத் தோற்கடிக்க இது கிடைத்தது.

    டெல்லியில் உள்ள மக்களுக்கு தரமான கல்வி, சுகாதாரம், இலவச மின்சாரம் மற்றும் உலகத்தரம் வாய்ந்த போக்குவரத்து வசதிகளை வழங்குவதன் மூலம், இந்த நோய்களிலிருந்து நாட்டை விடுவிக்கும் முயற்சியை கெஜ்ரிவால் தொடங்கினார்.

    கலால் கொள்கை வழக்கில் கெஜ்ரிவால் கடந்த மார்ச் 21ம் தேதி கைது செய்யப்பட்டு தற்போது திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

    இந்தியாவின் ஜனநாயகம் எந்த சக்தியாலும் பலவீனப்படுத்த முடியாத அளவுக்கு வலிமையானது, முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவை சிறையில் இருந்து விடுவித்தது ஓர் உறுதியான உதாரணம்.

    ஆம் ஆத்மி தலைமையிலான டெல்லி அரசு, கெஜ்ரிவால் விரும்புவது போல் பெண்களுக்கு இலவச மின்சாரம், கல்வி, சுகாதாரம் மற்றும் பேருந்து பயணங்களைத் தொடர்ந்து அளிக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • டி20 உலகக் கோப்பைக்கு பிறகு இந்திய அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டது.
    • வங்கதேசம் அணிக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாடுகிறது.

    புதுடெல்லி:

    டி20 உலகக் கோப்பை தொடருக்கு பின் இந்திய அணி ஜிம்பாப்வேவுக்கு எதிராக டி20 தொடர் மற்றும் இலங்கை அணிக்கு எதிராக டி20 மற்றும் ஒருநாள் தொடர் ஆகியவற்றில் விளையாடியது. இந்த இரு தொடர்களிலும் நட்சத்திர பந்து வீச்சாளர் பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டது.

    இதையடுத்து, பும்ரா தனது குடும்பத்தினருடன் நேரம் செலவிட்டார்.

    இதற்கிடையே, வங்கதேசம் அணிக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாடுகிறது. செப்டம்பர் 19-ம் தேதி முதல் டெஸ்டும், செப்டம்பர் 27-ம் தேதி 2வது டெஸ்ட்டும் நடைபெற உள்ளது.

    இந்நிலையில், வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் பும்ராவுக்கு ஓய்வை நீட்டிக்க பி.சி.சி.ஐ. முடிவுசெய்துள்ளதாக தகவல் வெளியாகியது.

    இந்த ஆண்டு இறுதியில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட பார்டர்-கவாஸ்கர் டிராபி தொடரில் இந்திய அணி விளையாடவுள்ளது. இந்த தொடருக்காகவே அவருக்கு ஓய்வு அளிக்கப்படுவதாக தகவல் வெளியாகியது.

    பும்ராவுக்கு பதிலாக இந்திய அணியில் இருந்து இடதுகை வேகப்பந்து வீச்சாளர் ஒருவரை தயார் செய்ய இந்திய அணி முடிவெடுத்துள்ளது.

    இதில் அர்ஷ்தீப் சிங், கலீல் அகமது மற்றும் யாஷ் தயாள் ஆகியோர் அந்தப் பட்டியலில் உள்ளனர். உள்ளூர் போட்டியான துலீப் டிராபியில் விளையாட இவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×